Followers

Monday, March 22, 2010

பிளாக்குறது தப்பா!

சலுன் கடைல தினத்தந்தி படிச்சோமா,போண்டா தின்னுகிட்டே எதுத்தாப்புல இருக்குற பொட்டிகடைல மாலைமுரசு நாலுவரி செய்தி படிச்சோமா,பஸ்ல போறப்ப அந்தக் குமுதத்த கொஞ்சம் குடுக்கிறீங்களா?ஊர் லைப்ரரியில படிக்க முடியாத அளவு பக்கங்களுடன் இருக்கும் கதைப் புஸ்தகத்தையெல்லாம் படிச்சு திருஞ்சுகிட்டுருந்ததுக,ராணி,குங்குமம்,ஆனந்த விகடன்னு தொடர்கதைய வெட்டி,வெட்டி பைண்டிங் செஞ்ச கிறுக்குகள்,லெட்டர் டு தி எடிட்டர்,இன்ன பிற(?)படிப்பாளிக,பார்வையாளர்களுக்கெல்லாம் வந்த வாழ்வப் பாரேன்!

மொக்கையுங்குது,கவிஜப் பாடுது,தொழிலு நுட்பத்துல இது புதுசுங்கோ சொல்லுது,வேலையிருக்குது போறீயா விசாரிக்குது,சமையல் செய்து பாரேன் ரெசூபி சொல்லுது, இன்னுங் கொஞ்சம் மேல படியேறி காஞ்சிபுர மடத்தப் பத்தி பேசுது,ஹுசைன் ஓவியம் பார்க்காதவங்களையெல்லாம் இந்த கண்றாவியப் பாருங்களேன் சொல்றது,சன் டி.வியும்,அல்லக்கை நக்கீரனும் ஏதோ ஒரு நாள் ரேட்டு பேசி வியாபாரம் செஞ்சா அதையே புடிச்சிகிட்டு தெரியாத ராஜசேகரனுக்கு காவியுடை போட்டு இவந்தான் அவன் பிலிம் காட்டறது.

என்னமோ போனா போகட்டும்ன்னு விட்டுட்டோம்.சொல் எடுத்து மூஞ்சிகளை முகமூடி போட்டுகிட்டு கிழிக்கிறது,போட்டும்,போடாமயும்,க(ற்)ருப்புக்கே களங்கம் விளைவிக்கிறதுன்னு அடிச்ச லூட்டிகளையெல்லாம் நாங்க வந்து ஏதாவது கேட்டமா?ஆனா கட்சி கோட்பாட்டை குலைக்கிறது,மக்கள் நல்லா இருக்கட்டுமேன்னு அஞ்சும்,பத்தும் கொடுத்தா அதப்பத்தி பொரணி பேசுறது,தலிவரு உங்களுக்கெல்லாம் எத்தன செஞ்சிருப்பாரு அதையெல்லாம் விட்டுட்டு ஒரு தொண்டரடிப் பொடியாள்வார் சொன்ன மாதிரி ஏதோ கட்டிக் காப்பத்துன கட்சி,குடும்பம் சிதைந்து போகக்கூடாதேன்னு நினச்சு எதிர்க்கட்சிக செய்யுற சூழ்ச்சிகளையெல்லாம் தாங்க முடியாம இலங்கைப் பிரச்சினையில குட்டைய கலக்குனா மீன் எப்படி பிடிக்கறன்னு பார்க்கிறேன்னு விட்ட ஒரு சின்ன விசயத்தையெல்லாம் பெருசு பண்ணி ஊதி விடறது,நெருப்பு இருக்குதான்னு பார்க்கறது இதெல்லாம் இல்லாம பின்னுட்டம் போடற பேர்வழிகள்ன்னு கூடி கூடி கும்மியடிக்கிறது.

மக்கள் ரேசன் அரிசி சமைச்சு சாப்பிட்டாங்களா,வேலைக்குப் போனங்களா களைச்சு வீட்டுக்கு வந்தா அவங்க பாட்டுக்கு சீரியல் பார்த்தாங்களா,சினிமா பார்த்தாங்களான்னு இருக்குற ஓட்டுப் போடற அப்பாவி ஜனங்களுக்கெல்லாம் இல்லாத அக்கறை உங்களுக்கெல்லாம் என்னய்யா வந்தது?பிளாக்கு!அதென்னய்யா பிளாக்கு?பிளாக்கிங்கிறதே கருப்புத்தான்யா!அதையெல்லாம்தான் பாரபட்ச மில்லாம எல்லாக் கட்சிக் கொடியிலயும் வச்சிருக்கிறோமே.இதுவும் பத்தாதுன்னு கவியரசர் வைரமுத்துவ கூப்பிட்டு கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலருன்னு பாட்டு வேற எழுதி பரிசெல்லாம் குடுத்திருக்கிறோமே?அப்புறமென்னய்யா நீங்க எல்லாம் வந்து புதுசா தாளிக்கிறீங்க?

ஓசுல இடத்தக் கொடுத்தா அதுக்கு வேற பட்டா போட்டு படமெல்லாம் போட்டு வெச்சுகிட்டு என் கடைக்கு வாங்க!இந்தக் கடைக்கு வாங்க,அந்தக் கடைக்கு போங்கன்னு எலிய கடிக்க விடறது!இதையெல்லாம் யார் கொடுத்தா?பேட்டை அண்ணாச்சி அமெரிக்காதானே கொடுத்தாரு?அவரு சொல்றதத்தானே நாங்க கேட்கிறோம்?நேத்து கூடப் பாரு இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தைய நிருபமா ராவ் கிட்ட சொல்லி ஹில்லாரி காதுல போட்டுட்டமில்ல?நீங்க எல்லாம் சொல்றதுனாலதானய்யா சிதம்பரம் மறுபடியும் மும்பாய்க்கு வந்தீங்கன்னா இனி திரும்ப அடிப்போம்ன்னு அறிக்கை விடறாரு.

எங்க பேச்சைக் கேட்பான்னுதான் ராஜபக்சேவுக்கு உதவினோம்,அந்தாளு என்னடான்னா இந்தியாவுக்கும் பெப்பே,தமிழ் நாட்டுக்காரனுக்கும் பெப்பேன்னு சீனாக்காரன்கூட போய் சேர்ந்துகிட்டான்.நாட்டு ரகசியமெல்லாமா போய் பிளாக்குல சொல்றது?அதுதானே நிருபமா ராவ அனுப்பி பேச்சு வார்த்தை நடத்துறோமே அப்புறம் என்ன?இப்பவெல்லாம் நாங்க சேர் எடுத்து அடிச்சிக்கிறதில்லை தெரியுமா?காமிரா இருக்குற பயத்துல மெச்சூர்டு ஆகிட்டோமில்ல!எங்களை எங்க வேலைய செய்ய விடுங்கய்யா! வேணுமுன்னா கொடியப் புடிச்சிகிட்டு போராட்டம் நடத்த அனுமதி தருகிறோம்.அப்பப்ப ஏதாவது கோசங்கள் எழுப்புங்க!பஞ்சம் பொழக்கப் போனவங்க லீவு,காசு வசதியப் பொறுத்து வந்து ஒழிக!ஒழிக சொல்லுங்க.வேண்டாமுன்னா சொல்றோம்?

இல்ல ஊர் ஊருக்கு தினத்தந்தி,குங்குமம்,குமுதம்,விகடன் படிக்கிறத விட்டுட்டு நாடு நாடா சுத்தறதுமில்லாம அப்பாவியா இருக்குற எங்க புள்ளைகளையும் கெடுக்கறது.அமெரிக்காவுல இப்படியாக்கும்,லண்டன்ல இப்படியாக்கும்,சிங்கப்பூர்ல அப்படியாக்கும்,துபாய்ல இப்படியும்,அப்படியுமாக்கும்ன்னு பிளாக்குதான் எழுதுவீங்கன்னு நினைச்சா இனிமேல் இன்னுமொரு இணைய புதிய சட்டம் வரைஞ்சிட வேண்டியதுதான்.அமைச்சர் பூங்கோதைகிட்ட சொல்லியிருக்குது.வருது உங்களுக்கெல்லாம் ஆப்பு.

இல்ல!அமெரிக்காவுல இணையம் பயன்படுத்தலும் தங்கள் கருத்தை சொல்றதும் மனித உரிமைகளில் ஒன்றுன்னு தீர்மானம் போட்டிருக்காங்க.எங்களுக்கும் மனுச உரிம வேணுமுன்னு கேட்டீங்கன்னா மவனே,தோ!நேரா சீனாக்காரன்கிட்ட புடிச்சுக் கொடுத்துடுவோம்.ஏன்னா அவன்கிட்டத்தான் கூகிளே கிடையாதே?அப்புறம் எப்படி பிளாக்குவீங்க அப்புறம் எப்புடி பின்னால பின்னால சுத்துவீங்க? ஏம்ப்பா தெரியாமத்தான் கேட்கிறோம்,மத்த மாநிலத்து பசங்க எல்லாம் உங்க மாதிரியா ஒண்ணா சேர்ந்து கும்மியடிக்கிறாங்க?அது யாருப்பா!தமிழ்மணம்?தங்கிலீஷ்?உங்கனாலதான்யா இந்த அப்பாவி பசங்க கெட்டுப்போறாங்க.

14 comments:

வானம்பாடிகள் said...

அதுக்காக உங்க ஓட்ட நீங்களே போடாம இருக்கறது தப்பு தல! அங்க போனா சஞ்சய் மூக்குல குத்துவன்ராரு. இங்க நீங்க மெரட்டுரீங்க. அப்பாவி ப்ளாக்கருங்க எங்க போறது..அவ்வ்வ்வ்:))

ராஜ நடராஜன் said...

//அதுக்காக உங்க ஓட்ட நீங்களே போடாம இருக்கறது தப்பு தல! அங்க போனா சஞ்சய் மூக்குல குத்துவன்ராரு. இங்க நீங்க மெரட்டுரீங்க. அப்பாவி ப்ளாக்கருங்க எங்க போறது..அவ்வ்வ்வ்:))//

நானே சஞ்சய் பரிந்துரைக்கு முந்திகிட்டதால வடை போச்சேன்னு கவலையில்ல இருக்கிறேன்:(

Thekkikattan|தெகா said...

mmmmm...

நசரேயன் said...

தப்பே இல்லை

கக்கு - மாணிக்கம் said...

அப்போ
"பிளாக்குறது" தப்பா தலீவா??

ஜீவன்பென்னி said...

அவ்வ்வ்வ்வ்வ்....

காபி பண்ணி ஒட்டியாச்சு.

ராஜ நடராஜன் said...
This comment has been removed by the author.
ராஜ நடராஜன் said...

இன்னொரு பதிவுக்கு சொல்ல வேண்டிய பதிலை இங்கே சொன்னதால் முதல் முறையாக ஒரு Delete.

ராஜ நடராஜன் said...

//mmmmm...//

Fish n Chips க்குதான் ம்ம்ம் கொட்டுறீங்களோன்னு நினச்சேன்:)

ராஜ நடராஜன் said...

//தப்பே இல்லை//

எது:)விளக்கமா சொல்லலாமில்ல!

ராஜ நடராஜன் said...

//அப்போ
"பிளாக்குறது" தப்பா தலீவா??//

நீங்க........யாரு வீட்ல யாரு காபி குடிக்கிறாங்கன்னு கண்டு பிடிக்கறவர்தானே:)கொஞ்சம் கவனமா பதில் சொல்லனும் போல இருக்குதே!

தப்ப தப்ப, தப்ப தப்பேயில்லைன்னும் சொல்லலாம்:)

ராஜ நடராஜன் said...

//அவ்வ்வ்வ்வ்வ்....

காபி பண்ணி ஒட்டியாச்சு.//

வாங்க!வாங்க!என்னமோ ஒட்டுங்க,ஆனா புதிய சட்டசபைல மட்டும் போஸ்டர் ஒட்டாதீங்க:)

Rathi said...

ஆஹா, அப்பா பூங்கோதை இணையத்துக்கும் இனி 'புதியதோர் விதி' செய்வாரா!!!!

ஏற்கனவே சிலசமயங்களில் ஆளில்லாத ரீக்கடை மாதிரி தோணுது. இனிமே வியாபாரம் படுத்திடுமோ. சேச்சே.... எப்படியும் 'Google' சாமி சும்மா விடுவாரா.

பிறகெப்படி Bandwidth ஐ கூட்டுவதாம்?? உள்ளூர் இணைய சேவை நடத்தும் நிறுவனங்கள் பிழைப்பதாம்?

ராஜ நடராஜன் said...

//ஆஹா, அப்பா பூங்கோதை இணையத்துக்கும் இனி 'புதியதோர் விதி' செய்வாரா!!!!

ஏற்கனவே சிலசமயங்களில் ஆளில்லாத ரீக்கடை மாதிரி தோணுது. இனிமே வியாபாரம் படுத்திடுமோ. சேச்சே.... எப்படியும் 'Google' சாமி சும்மா விடுவாரா.

பிறகெப்படி Bandwidth ஐ கூட்டுவதாம்?? உள்ளூர் இணைய சேவை நடத்தும் நிறுவனங்கள் பிழைப்பதாம்?//

ஓ!எகிப்திலிருந்து இங்கே ஓடியாந்தீட்டீங்களா:)

க்கும்!புதியதோர் விதி செஞ்சுட்டாலும்?அவங்க பிரச்சினைய தீர்க்கவே நேரமில்லாம கிடக்குறாங்க.

சரி அத விடுங்க!அது என்ன சிலசமயங்களில் ஆளில்லாத டீக்கடை மாதிரி?எப்பவுமே ஆளில்லாத டீக்கடைதான் நம்மளது:)

சில ஆளுக கட்டிடம் கட்டினதும் எதிர்காலத்துல வியாபாரம் பெருகுமுன்னு நாலு காலு நட்டி நாலு தென்னங்கீற்று போட்டு வச்சிடறதில்ல.இது அந்த மாதிரி எப்பயாவது வளர்ச்சி அடையும் போது ஆளுக வந்துடுவாங்க நம்பிக்கைதான்:)