மதார் என்ற சுவர் என்ஞினியர் (அப்படித்தான் எண்டாஸ்கோபிங்கிற அவங்க பதிவுல சொல்றாங்க:))
ஒரு சாதாரண வயிற்று வலி எண்டாஸ்கோப் வரை கொண்டு போய் விட்டு விட்டதென்று சொன்னதுனால இடுகைக்கு ஒரு விசயம் கிடைச்சது.ஒவ்வொரு கடையா போய் சிரிப்பான் மட்டும் போடாம மாங்கு மாங்குன்னு இடுகைக்கு இணையா குண்டு குண்டா பின்னூட்டம் போடறதால நம்ம கடை வியாபாரம் போணியாகறதில்ல.அதனால பின்னூட்டத்துல சொல்ல வேண்டிய இத்துணுண்டு செய்திய இங்கே பார்க்கலாம்:)
சாதாரண இரண்டு நாள் மூக்குச் சளி,இருமல்,காய்ச்சல்ன்னா ஏதோ கஷாயம் குடிச்சோம்,சித்த வைத்தியம் பார்த்தோம்,இங்கிலிஷ் மருந்து சாப்பிட்டோம்ன்னு மூணாவது நாள் உடல் தனது சொந்த வேலையை திரும்ப செய்ய ஆரம்பிச்சுடுது.எப்படின்னா மூளை தனியா சிங்கம் மாதிரி சிலுத்துகிட்டாலும்,உழைப்பாளிகள் மாதிரி ஒண்ணா வேலை செய்யற உடல் ரொம்ப புத்திசாலிங்க.
சரி விசயத்துக்கு வருவோம்!நீண்ட நாள் உடல்,மனம் பிரச்சினைன்னா மருத்துவர்கள் உதவி மட்டுமேஇங்கே சிபாரிசு செய்யப்படுகிறது இங்கே.ஆனால் இதுவரைக்கும் பெரிசா ஒண்ணும் பிரச்சினைகள் இல்லீங்க அதுனால இனிமேலும் உடல் சுகாதார பிரச்சினைகள் எதுவும் வரக்கூடாதுன்னு நினைக்கிறவங்க மட்டும் இங்கே வரிசையா நில்லுங்க.கோயம்புத்தூரு வைத்தியரு வனாந்தரம் போயும் இலவச வைத்தியம் பார்க்கிறாரு:)மூணு சீட்டு,ரெயில்ல சோப்பு டப்பா டுபாக்கூர் சூர்யா மாதிரியெல்லாம் இல்லாட்டியும் மருத்துவ ரிசல்ட் கேரண்டிங்ண்ணா!
காலை எழுந்தவுடன் படிப்புங்கிறதெல்லாம் இலக்கணப்பிழை.காலை எழுந்தவுடன் வயிற்றக் கழுவும் ஜல,மல வேலை.பல் துலக்கல்.எளிய யோகாசனப்பயிற்சி,குளியல்.அப்புறம் வயிறு போதும்ன்னு சொல்லும் வரை தண்ணீர்.அப்புறம்தான் படிக்கிறது,அடுப்பாங்கரை,காபி,சமையல்,கொட்டிக்கிறது எல்லாம்.இப்பவெல்லாம் இந்தியாவில் சர்க்கரையும்,இதய நோயும் அதிக மாமே!இங்கேயும் ஒண்ணும் குறைச்சலில்லை.அரபுகள் வீட்டுல சமைக்கிறாங்களோ இல்லையோ KFC,மெக்டொனால்ட் குடியிருப்பும் பெப்சி உறுஞ்சலுக்கும் குறைச்சலே இல்லை.அப்புறம் காரும் வீடும் ஏ.சி.
நாம் மட்டும் குறைஞ்சா போயிட்டோம்?கோழிக்கறி வச்சாலும் சரி,பருப்பு கடைஞ்சாலும் சரி சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடிக்கிறதுக்கு பதில் பெப்சி குடிக்கும் மச்சினிகளும்,நாத்தனார்களும் கூட அதிகமாயிட்டாங்க.ரைம் சொல்லும் குழந்தைகளும் கூட பெத்சி!பெத்சி ன்னு
அடம் பிடிக்குதுகள்.வடம் பிடிக்கும் புலம் பெயர் தமிழர் குழந்தைகளும் ஊர் குளிருதுன்னு தண்ணீர் குடிக்க முடியாமல் இதனை தொடர்வார்கள் என்றே நினைக்கிறேன்.எப்படியோ பெத்சி சர்க்கரைநோய் காவலன் என்பது தெரியாமலேயே உலகபானம் பெயரைப் பெற்று விட்டது.ஹி...ஹி...இஃகி!இஃகி கீ!சரக்கடிச்சாலும் சரக்குக்குள்ளும் பெப்சி ஊத்து மாமே:)
(ஷ்!அப்பாடா! எத்தனை தடவைதான் மருத்துவம் நாட்டாமை பார்க்கிறதுன்னு தெரியல.போன வருடமே மருத்துவம் பார்க்கலையோ மருத்துவம் ன்னு சொல்லி கூவியாச்சு.அப்படியிருந்தும் நாட்டாமை வேலை பார்க்கறதலேயும்,சொம்பு தூக்குறதுலயும் ஒரு கிக் இருக்கத்தான் செய்யுது தலீவீர்களா!டாபிக்கு எங்கேயோ கிராஸ் ஆகுதே!!)
இப்போதைக்கு என்னோட மருத்துவ புதுக்கண்டு பிடிப்பு என்னன்னா நம்ம தல தெகா கடையில யோகாசன பயிற்சி முறைன்னு நல்ல அழகான படம் போட்டிருக்கார்.அவருக்கு பின்னூட்டம் போட்டீங்கன்னா எளிய யோகா விளக்கவுரை PDF தருவார்.பயனுள்ள எளிய விளக்கவுரை.
படம்ன்னு சொன்னதால இவ்வளவு தூரம் வந்துட்டுதால கொஞ்சம் பிலிம் காட்டாலாமுன்னும் ஆசை வந்துருச்சு.முன்னாடி தலிவர் அதுசரி வச்சிருக்கிற டக்கீலா அடிச்சுகிட்டு விக்ரமாதித்தன்கிட்ட சொல்ற வேதாளம் கதைகளுக்குப் போட்டியா சுட்ட,சுடும் படப்பழக்கம் இன்னும் போகலை.உண்ணும் உணவுப்பொருட்களின் சர்க்கரை விகிதாச்சாரம் பத்தி சின்னதா பிலிம் காட்டிடலாம் இப்ப....
இந்தப் படம் மாதிரி FCI,ISI( நல்லா பேர் வச்சாங்கய்யா)போன்றவங்க இட்லி,தோசை.உப்புமா,வடை சாம்பார்,கோழி பிரியாணி,முட்டை பொராட்டா,மீன் வறுவல்,பருப்பு,காய்கறிப் பொறியல்.ரசம்,மோர்,தயிர்,டீ,காபி,சரக்கோட சைட் டிஸ்க்கெல்லாம் எவ்வளவு கொழுப்பு?கார்போ ஹைட்ரேட்,புரோட்டின் ஊட்டச் சத்து,உப்பு,மிளகாய்,கால்சியம்ன்னு பரிசோதனை செஞ்சுட்டா இருக்குற வரைக்கும் நமக்கு பயன்படுகிறதோ இல்லையோ குறைந்த பட்சம் தொலைக்காட்சி விளம்பரம் தயாரிக்க பயன்படும்.பின்னாடி தலைமுறைக்கும் பழக்கதோசத்துல சாப்பிடும் பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் அல்சர் வராமலோ,கொலாஸ்ட்ரல் வராமலோ இருக்கும்.ஆமா!சின்னதா ஒரு சந்தேகம்.அப்பவெல்லாம் விவசாயமெல்லாம் இருக்குமில்ல?இல்ல கிணறு வெட்டாம அணைய மறிச்சே எல்லாம் ஆவியாப் போகிடுமா?இப்பவே இமயமலை உருகுதாம்!
15 comments:
ஆஹா என்னா இன்னைக்கு இந்த கலக்கு கலக்கிட்டீங்க. :))
//ஆஹா என்னா இன்னைக்கு இந்த கலக்கு கலக்கிட்டீங்க. :))//
இன்னைக்கு பாஸ்க்கு உடம்பு சரியில்ல:)Just kidding!
எழுதறவங்க எழுத்துப் படிக்கிற சுகம் நம்ம கருத்த சொல்வதில் இல்லைங்க!
நல்லா சொன்னீங்க போங்க:-):-)
வாங்க!கபிஷ்!உங்களுக்கு ஹலோ சொல்லக்கூட விடாம அம்மணி சாப்பாடு ரெடி வற்புறுத்தல்.
ஆமா!எங்க போயிட்டீங்க?அடிக்கடி வலைப்பக்கம் பார்க்க முடியலையே!நம்ம கடை போணியாகலைன்னாலும் யாரு கடைல என்ன பலகாரம்ன்னு பார்த்திடுவோமில்ல.கூடவே பலகார ருசி பின்னூட்டக்காரர்களையும்.அதனால்தான் கேட்டேன்.
//சொல்லக்கூட விடாம அம்மணி சாப்பாடு ரெடி வற்புறுத்தல்.//
மிரட்டலின் பார்லிமெண்டரி வெர்சனா?
எல்லா வீட்லயும் உள்ளதுதான, புரிஞ்சுக்க முடியுது. மிரட்டுபவர்களுக்கும் தெரியும் மிரட்டப்படுவதன் வலி :-)
//ஆமா!எங்க போயிட்டீங்க?அடிக்கடி வலைப்பக்கம் பார்க்க முடியலை//
ரொம்ப வேலை, பிஸியா இருந்தேன்னு சொன்னா நம்பவா போறீங்க:-)
வலையில் நிறைய பஞ்சாயத்து போயிட்டுருக்குதுல்ல, அதான் எல்லாப் பக்கமும் போய் பொது அறிவை வளத்துக்கிட்டுருக்கேன்.:-):-)
//காலை எழுந்தவுடன் படிப்புங்கிறதெல்லாம் இலக்கணப்பிழை.காலை எழுந்தவுடன் வயிற்றக் கழுவும் ஜல,மல வேலை//
ராஜ நட, ஒன்றே சொன்னீங்க அதனையும் நன்றே சொன்னீக. மேற்படி விசயம் கரீகீட்டா நடந்தாவே நெறைய விசயம் தினசரி வாழ்க்கையில எல்லாம் சரியாப் போற மாதிரி பண்ணிக் காமிக்கும்... என்ன ஞான் சொல்றது ;-)
ஆமா, நம்ம கடைக்கு விளம்பரம் கொடுத்ததுதான் கொடுத்தீக, சரியா செய்ய வேண்டாம், வியாபாரம் கொஞ்சம் சூடு பிடிச்சிருக்கும்ல, அந்தப் பதிவோட லிங்கை 'தெகா'ன்னு சுட்டின எடத்தில தொடுத்திரணும் ... :))
நன்றி, நட!
பெத்சி :))
சர்க்கரை அளவு வச்சி நல்ல படம் காட்டி இருக்கீங்க..
நல்ல பதிவு.
@தெகா விளம்பர தட்டி வைக்கலைன்னு தெகாவுக்கு வருத்தம் வேறயா..:) பின்னூட்டத்தில் வைப்பீங்களே வைக்கலையா..?
//பெத்சி :))
சர்க்கரை அளவு வச்சி நல்ல படம் காட்டி இருக்கீங்க..
நல்ல பதிவு.
@தெகா விளம்பர தட்டி வைக்கலைன்னு தெகாவுக்கு வருத்தம் வேறயா..:) பின்னூட்டத்தில் வைப்பீங்களே வைக்கலையா..?//
இரண்டு சிரிப்பான் போட்டிங்களா முத்துலட்சுமி:)நீங்க இங்க வந்து சிரிச்சிட்டிருக்கீங்க!பக்கத்து கடைல என்ன சுடுறாங்கன்னு இரண்டு மணி நேரமா வேவு பார்த்துட்டு மெதுவா இப்ப கடையத் திறக்கிறேன்.
தெகாவுக்கு விளம்பரத்தட்டி வைக்கலாமுன்னுதான் பார்த்தேன்.அவர்கிட்ட சொல்லாம கொள்ளாம எப்படின்னுதான் தயக்கத்துல விட்டுட்டேன்.இப்பத்தான் கிரின் சிக்னல் காண்பிச்சுட்டார்ல!
//ஆமா, நம்ம கடைக்கு விளம்பரம் கொடுத்ததுதான் கொடுத்தீக, சரியா செய்ய வேண்டாம், வியாபாரம் கொஞ்சம் சூடு பிடிச்சிருக்கும்ல, அந்தப் பதிவோட லிங்கை 'தெகா'ன்னு சுட்டின எடத்தில தொடுத்திரணும் ... :))
நன்றி, நட!//
தெகா!தலிவரே!சொல்லாம எப்படி கட் அவுட் வெக்கறதுன்னுதான் சுட்டதை சுட்டல.தலிவருக்கு இன்னொரு விழா எடுக்காமய போயிடுவோம்:)
//ரொம்ப வேலை, பிஸியா இருந்தேன்னு சொன்னா நம்பவா போறீங்க:-)
வலையில் நிறைய பஞ்சாயத்து போயிட்டுருக்குதுல்ல, அதான் எல்லாப் பக்கமும் போய் பொது அறிவை வளத்துக்கிட்டுருக்கேன்.:-):-)//
கபீஷ்!அப்ப என்ன மாதிரி போணியாகாத கடைன்னு சொல்லுங்க:)ஒரு நாளைக்கு 8மணி நேரம் 10 மணி நேரமுன்னு ஊர் மேயறதே பழக்கமா போயிடுச்சு.மக்கள் கடைல டேர போட்ட,ஆஹா பலகாரம் அருமைன்னு சொன்ன நேரத்துல குறைஞ்சது ஒரு 100 அல்வாவது கிண்டியிருக்கலாம்.
கம்யூனிஸ்ட்டுக கட்சிய வளத்துறேன்ன்னு வீட்ட கவனிக்காத மாதிரின்னு சொல்லுங்க:)
இதுல கட்சியும் கவனிச்சுகிட்டு மூணு வீட்டையும் கவனிச்ச்கிட்டது தலிவர்தான்னு ஒரு தொண்டர்ப்படை பொடியாள்வர் சொன்ன ஞானமொழி அறிவு கூட வளர்த்துகிட்டேனுங்க
//மிரட்டலின் பார்லிமெண்டரி வெர்சனா?
எல்லா வீட்லயும் உள்ளதுதான, புரிஞ்சுக்க முடியுது. மிரட்டுபவர்களுக்கும் தெரியும் மிரட்டப்படுவதன் வலி :-)//
அதையேன் கேட்குறீங்க!வாங்க சாப்பிடுங்க-முதல் குரல்
டமாரக் காதுல விழுந்தாதானே!ஹுசைன்,நித்யா,சேஷாசலம் ராவுத்தரானது,ஒபாமா என்ன சொன்னாரு,ஒசாமா எங்க ஒளிஞ்சிருந்து குண்டு போடுறாரு,கவிஜ,மொக்கை கதைன்னு எதுலயாவது காது ஒட்டுக் கேட்டுகிட்டு இருக்கும்.
ஒரு தடவ கூப்பிட்டா சாப்பிட வரத் தெரியாது? இரண்டாவது குரல் இன்னைக்கு குழம்பு காரம்ன்னு உண்ணாமலே கேட்கும்.
அப்பவும் இதோ வந்துடறேன்...
இப்ப வர்றீங்களா இல்லையா எப்ப பாரு கம்ப்யூட்டர டொக்கு,டொக்குன்னு தட்டிகிட்டு-மூணாவது குரலும் முழிக்கிற கண்ணும்.
இப்ப இன்னும் உங்களுக்கு நான் மறுமொழி சொல்லிகிட்டா.....................
//பின்னூட்டத்துல சொல்ல வேண்டிய இத்துணுண்டு செய்திய இங்கே பார்க்கலாம்:)//
கண்டிப்பா
//கண்டிப்பா//
ஜெண்டில்மேன் வாங்க:)
//தெகா!தலிவரே!சொல்லாம எப்படி கட் அவுட் வெக்கறதுன்னுதான் சுட்டதை சுட்டல.தலிவருக்கு இன்னொரு விழா எடுக்காமய போயிடுவோம்:)//
என்னது சொல்லவே இல்லை, எப்போ நான் தலிவரானேன், எப்போ எனக்கு விழா... ஃபோட்டோ செஷன் உண்டா விழாவில ;-)
Post a Comment