ஒரு திரைப்படத்தின் வெற்றியில் பலருக்கும் பங்கு இருந்தும் உழைப்புக்கான பலனை அனுபவிக்காத ஜீவன்கள் என்றே உதவி இயக்குநர்களை சொல்லலாம்.துண்டு போட்டும் நின்று கொண்டே உழைக்கும் உழைப்பாளிகள் இவர்கள்.பெரும் எதிர்காலக் கனவுகளுடன் சினிமா துறையில் நுழைந்து முகமறியாமல் டைட்டில்களில் மட்டுமே பெயர்களை பதியவைத்து விட்டு காணாமல் போன துணை இயக்குநர்களின் பெயர்ப்பட்டியல் மட்டுமே தமிழக திரையுலக வரலாற்றில் அதிகம் இருக்கும் என துறை சாராதவர்களும் கூட உறுதியாக நம்பலாம்.
ரிஸ்க் இல்லை என்பதாலோ என்னவோ துணை இயக்குநரும் இயக்கிப் பார்க்கட்டுமென்று திரைப்பட பாடல் காட்சிகளை மட்டும் இயக்க சொல்லி சில இயக்குநர்கள் அனுமதிப்பதுண்டு என எங்கோ படித்த நினைவு.முண்டியடித்து டைட்டில்களினிடையே தெரிந்த உதவி இயக்குநர் பெயர் பட்டியலில் போராடி ஜெயித்த இயக்குநர்களும் உண்டு.கல்லூரிக்காலங்களில் அறிவுஜீவித்தனமாக கல்லூரி சாலைகளிலும் தரமணியின் மழை காலத்து நீரில் காமிரா,கையசைப்பு,நடன அசைவுகள் எனத் திரிந்த நடிப்புக்கல்லூரி காமிராமேன்,இயக்குநர்,நடிகை என ஒரு சில முகங்கள் தங்கள் அடையாளங்களைக் காண்பித்துக் கொண்டாலூம் அங்கேயும் காணாமல் போனவர்கள் பட்டியல் ஏராளம்.
பொருளாதார ரீதியாக தங்கள் வாழ்வை வளமாக்க முடியாமல் அடையாளமில்லாமல் போகும் துணை இயக்குநர்களுக்கும் கூடவே இயக்குநர்களுக்கும் தமிழக திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மூலமாக வழங்கும் புதிய திட்டத்தை கடந்த வாரம் தமிழக அரசு வெளியிட்டுள்ளது வரவேற்க தக்கது.வடுவாகிப் போன பெரும் காயத்திற்கெல்லாம் மருத்துவம் பார்த்திருந்தால் தமிழக முதல்வர் கலைஞரை சரித்திரம் சரிக்க முடியாமல் எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்கும்.ம்!பெருமூச்சு மட்டுமே மிஞ்சுகிறது.வேதனைகளின் வலிக்குமிடையில் தற்காலிக நிவாரண மருந்து மாதிரி உதவி இயக்குநர்கள் திட்டம்,கடந்த சனியன்று நிகழ்ந்த சட்டமன்ற திறப்பு விழா போன்ற திட்டங்களுக்கு கலைஞருக்கு குட்டலின் ஊடே பாராட்டவும் செய்யலாம்..
4 comments:
கடை ரெம்ப நாளைக்கு அப்புறமா வழக்கம் போல செயல் படுது போல இருக்கு
//கடை ரெம்ப நாளைக்கு அப்புறமா வழக்கம் போல செயல் படுது போல இருக்கு//
வேற ஒண்ணுமில்ல!சின்னதா பெர்க்கின்சன் பெக்:)
திரை உலகில் தான் வர்க்க பேதம் உச்ச கட்டம்
//திரை உலகில் தான் வர்க்க பேதம் உச்ச கட்டம்//
சரிதான் இல்ல?யோசிக்க வச்சிட்டீங்க!
பூர்ஷ்வாக்களும்,உழைப்பாளிகளும்!
Post a Comment