Followers

Monday, March 22, 2010

fish n chips ம் டக்கீலா வேதாளமும்.

அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் வித்தியாசம் என்னன்னா சந்தைபடுத்தும் நுட்பம்.நண்பர் விஜயராகவன் முன்பு வெளிநாடு போகும் போது அடிக்கடி லண்டனில் டேரா போடுவது வழக்கம்.அப்படி டேராவில ஒரு முறை ஒரு டை வாங்கி வந்து கொடுத்தார்(நம்மூர்ல ஒரு நல்ல ரேபான் கிளாஸ் இருந்தா வாங்கி வாயேன்னு சொல்ற மாதிரி).இந்த டைல என்ன விசேடமின்னா கழுத்த சுருக்கு போட்டு தொங்க விடவேண்டிய அவசியமில்ல.டை தொண்டைக்குழி கிட்ட ஒரு கிளிப் இருக்குது.கிளிப்பை வாயத் திறக்க சொல்லி ஒரு அமுக்கு அமுக்கினா டை கட்டுற வேலை முடிஞ்சது.ஆனா மூணு முடிச்சு டை சந்தைப்படுத்தலில் முந்திகிச்சு.
அமெரிக்கா KFCயை நல்லா சந்தைப் படுத்திடுச்சு.ம்!KFC சாப்பிட்டு பெப்சி குடிச்சேன்.ரொம்ப குண்டாயிட்டேன்,கொலாஸ்ட்ரல் அதிகமாயிடுச்சுன்னு கோர்ட் கேஸ் இருக்குது.ஆனா இந்த மாதிரி சண்டையெல்லாம் பிரிட்டிஷ்காரங்க fish n chipsன்னு ஒரு மெனு வச்சிருக்காங்க,அதுக்கு வரல.இது KFCக்கு ஒரு மாற்று எனலாம்.ஆனால் சந்தைப்படுத்தலில் பின் தங்கிடுச்சு.KFC ரெசிபி தங்கமலை ரகசியமாமே?உண்மையாவா?ஆனால் fish n chips (இனி இதை சுருக்கமா FNC ன்னு KFCக்கு போட்டியா வச்சுக்குவோம்.)அப்படியெல்லாம் ரகசியமானதல்ல.ஏன்னா அது எப்படி செய்றதுன்னு சொல்லப் போறேன்.மீன் பொறிக்கறது எல்லாருக்கும் தெரியும்.ஆனால் மீனுக்கு மேக்கப் போடும் பேட்டர் என்னன்னு யாருக்காவது தெரியுமா?அது மைதா மாவு,முட்டை,குருமிளகு பவுடர்,பூண்டு கொழ,கொழன்னு அரைச்சது,உப்பு,
மேக் இட் ஸ்பைசிங்கிறவங்களுக்கு மிளகாய் தூள்,மஞ்சள் தூள்.இதையெல்லாம் பஜ்ஜி சுடறதுக்கு மாவு செய்யற பதத்துல மீனை முக்கி எடுத்து சூடான வாணலி எண்ணையில் வறுத்து எடுக்க வேண்டும்.இதற்கு முன் அதே எண்ணெயில் உருளைக்கிழங்கு வறுத்து எடுத்து விடுவது நல்லது.

இன்னொன்னு finger chips.நிறைய பேர் நினைக்கிற மாதிரி சுண்டு விரல் அளவுக்கு உருளக்கிழங்கு வெட்டி வறுத்தெடுப்பதல்ல.மீனையே சுண்டு விரல் அளவுக்கு வெட்டி வறுத்த ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து வறுப்பது.

இதுக்கு இரண்டு அல்லக்கைகள்.ஒண்ணு தக்காளி கேட்ச் அப்!மற்றது மயோனைஸ்.இது என்னன்னா முட்டையோட வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து ஒரு கைல விஸ்க்க இன்னொரு கைல மெல்ல மெல்ல எண்ணையிட்டு தயிர் மாதிரி கட்டிப்படுத்துவது.தயிர்ப்பதம் ஐஸ்ல வெச்ச பட்டர் மாதிரி ஆயிடுச்சுன்னா கொஞ்சம் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் விட்டு மிருதுவாக்குவது.சென்னையில்,மீன் கிடைக்கிற வேலாங்கண்ணி,சுற்றுலா விவேகானந்தர் பாறை,பாண்டிச்சேரி மற்றும் உல்லாசப்பயண இடங்களில் FNC மீன்கடை ஸ்பெஷல் கடை திறக்கலாம்.

குறைந்த பட்சம் மாறுதலா ஒரு நாள் வீட்டில் செய்து பார்க்கலாம்.இப்படியெல்லாம் சமையல் பகுதியில் யாராவது சமையல் சொல்லிக் கொடுத்திருக்காங்களா?இருந்தால் நான் என்று முன்னாடி வந்து தைரியமாக நிற்கலாம்:)

நண்பர் சொன்ன இன்னொரு தகவல்.

டக்கீலாவெல்லாம் வேதாள பானமாயிடுச்சாம்.
(அமெரிக்காவுல கூட ஷகிலான்னு ஒரு பானம் இருக்கறதா ஜெண்டில்மேன் ஒருவர் சொல்கிறார்:)

பிரிட்டிஷ்காரர்கள் உடல் சுகாதார ஆர்வத்திலோ,கஞ்ச பிசினாரித்தனத்தாலோ பியர் மட்டுமே குடிக்கிறார்களாம்.
செர்ரி மற்றும் பிளடிமேரி பெண்களின் பானமாம்
பிராந்தில கார்ல்ஸ்பெக் தண்ணி கலந்து குடிக்கிற ஆளும்,பிளாக் லேபில பேரர் கண்ணுக்கு முன்னாடி காட்டிட்டு கிளாசுல ஊத்தினாலும் ட்ரவுசர் பாக்கெட்ல காசு வச்சிருக்கிற ஆளாம்.

அதுசரிண்ணே!லண்டனப் பற்றி கேள்விப்பட்டதுல எது மப்பு எது தப்பு,அது சரின்னு ஒரு பின்னூட்டம் போட்டிடீங்கன்னா வேதாளத்துக்கு புண்ணியமா போகும்.நன்றி.

15 comments:

நசரேயன் said...

//அமெரிக்காவுல கூட ஷகிலான்னு ஒரு பானம் இருக்கறதா ஜெண்டில்மேன் ஒருவர் சொல்கிறார்//

யாரு அது ?

கபீஷ் said...

ஜெண்டில்மேன்னு சொல்றார் இல்ல.
அப்படீன்னா, துண்டு போடற யாரையும் இல்ல. நசரேயன் யூ டோண்ட் ஒர்ரி. உங்களப்பத்தி இல்ல :-):-)

பழமைபேசி said...

இலண்டன் சீமாட்டி என்ன சொல்றாக?

கபீஷ் said...

//இலண்டன் சீமாட்டி என்ன சொல்றாக?//
பருத்தியும்,புண்ணாக்கும் கொடுத்தா மாட்டுக்குப் பிடிக்கும்னு சொல்றாங்க

வானம்பாடிகள் said...

நசரேயன் said...

//அமெரிக்காவுல கூட ஷகிலான்னு ஒரு பானம் இருக்கறதா ஜெண்டில்மேன் ஒருவர் சொல்கிறார்//

யாரு அது ?//

ம்கும். ஜெண்டில்மேனையா அக்கறையா யாருன்னு கேக்க போறீரு. ஷகிலாவதானே?:)). சே! இதே தலைவருன்னா மீனு, வறுவலுன்னு கவுஜ போட்டிருப்பாரு:))

அது சரி said...

ஹூசேனு, சிக்கனு, ஃபிஷ் அன்ட் சிப்ஸுன்னு கலந்து கட்டி ஆல் ரவுண்டா அடிக்கிறீங்களே அண்ணே! :)))

ரெசிப்பி எல்லாம் கரெக்ட் தான்...ஆனா, ஃபிஷ் அன்ட் சிப்ஸ் எல்லா ஃபிஷ்ஷுலயும் செய்ய மாட்டாங்க...காட் (Cod) மட்டும் தான் யூஸ் பண்றது...மேட்டரு ஒண்ணும் பெரிசில்ல...ஜஸ்ட் நம்ம வாழைக்காய் பஜ்ஜி செய்ற மாதிரி தான்...வாழைக்காய்க்கு பதிலா ஃபிஷ்...அதே மாதிரி சூடா சாப்பிட்டா தான் நல்லாருக்கும்...இல்லாட்டி ஒரு மாதிரி கார்ட் போர்ட் அட்டை மாதிரி ஆயிடும்...:)))

அப்புறம் டெக்கிலா குடிக்காம பியர் அடிக்கிறதுக்கு காரணம் ப்ராக்டிகல் பிரச்சினை...டெக்கீலா ஸ்ட்ராங் அல்கஹால்...அதுவுமில்லாம சிப் பண்ண முடியாது...நாக்கில படாது கப்புன்னு கல்ப்படிக்கிறது தான் டெக்கீலாவோட ஸ்பெஷாலிட்டி.....க்ளப்புக்கு ஈவ்னிங் ஆறு மணிக்கு போன மறுநாள் காலைல ரெண்டு மணிக்குத் தான் வெளிய வர்றாங்க...அவ்ளோ நேரம் டெக்கீலா குடிச்சா சிறு குடல், பெருங்குடல், கல்லீரல், கிட்னின்னு எல்லாம் சாராய அடுப்பு மாதிரி புகைஞ்சிடும்...அதுக்குத் தான் சேஃபா பியர் :)))

Imayavaramban said...

அமெரிக்கர்கள் வணிகர்கள். ஐரோப்பியர்கள் முதலாளிகள்.

Karthick
http://eluthuvathukarthick.wordpress.com/

கண்ணா.. said...

//Imayavaramban said...
அமெரிக்கர்கள் வணிகர்கள். ஐரோப்பியர்கள் முதலாளிகள்//

I too agree with him

nice post

ராஜ நடராஜன் said...

////அமெரிக்காவுல கூட ஷகிலான்னு ஒரு பானம் இருக்கறதா ஜெண்டில்மேன் ஒருவர் சொல்கிறார்//

யாரு அது ?//

கூட இருந்தவரத்தான் தேடிகிட்டு இருக்கிறேன்.கேட்டுச் சொல்றேன்:)

ராஜ நடராஜன் said...

//ஜெண்டில்மேன்னு சொல்றார் இல்ல.
அப்படீன்னா, துண்டு போடற யாரையும் இல்ல. நசரேயன் யூ டோண்ட் ஒர்ரி. உங்களப்பத்தி இல்ல :-):-)//

கபீஷ்!கூட்டாளிய கண்டுபிடிக்க முடியலையே:)அவரு பிளாக்குறாரா?

ராஜ நடராஜன் said...

//இலண்டன் சீமாட்டி என்ன சொல்றாக?//

ஏனுங்ண்ணா!உங்களுக்கு சீமான் மேல என்ன கோபம்?அல்லது
நீங்க தக்காளி மேரிய கேட்கிறீங்களா?
கபிஷ் வேற என்னமோ எடுத்துக்கொடுக்கிறாரு!

ராஜ நடராஜன் said...

//ம்கும். ஜெண்டில்மேனையா அக்கறையா யாருன்னு கேக்க போறீரு. ஷகிலாவதானே?:)). சே! இதே தலைவருன்னா மீனு, வறுவலுன்னு கவுஜ போட்டிருப்பாரு:))//

ஆமா!நீங்க நம்ம தலிவரு குடுகுடுப்பை கவிஜர சொல்றீங்களா?ஆனா!ஜெண்டில்மேனுக்கு ஒரு நல்ல பழக்கம்.எப்பவுமே எதிர் கவிஜக்கு எதிர் கவிஜதான்.

ராஜ நடராஜன் said...

//ஹூசேனு, சிக்கனு, ஃபிஷ் அன்ட் சிப்ஸுன்னு கலந்து கட்டி ஆல் ரவுண்டா அடிக்கிறீங்களே அண்ணே! :)))//

சில சமயம் கடைசி விக்கெட்டுக்கு வந்து பேட் பிடிக்கிற நம்ம பவுலர் மாதிரிங்ண்ணா!

ரெசிபியிலயும் ஒண்ணு குறையுது.அது parsley கொஞ்சம் வெட்டிப் போடணும்.

ஓ!கார்ட்போர்டு மாதிரி ஆகறதால பிரபலமாகிலையோ.KFC காரனெல்லாம் Hot caseல் வச்சுக் கொடுக்கிறானே.கோழி மாதிரி எலும்பில்லாம மீன் Filletங்கிறதால வெரைச்சுகிடுது போல.

பிரிட்டிஷ்காரங்க கிட்ட ஒரு பழக்கம்.கோயம்புத்தூர்,ஊட்டி,வால்பாறை டீ எஸ்டேட் மாதிரி இடத்துல கூட வேலை முடிஞ்சதா க்ளப்புக்கு போயிட வேண்டியது.

இங்கே கோல்ஃப் கிளப்க்கு போட்டோ அசைன்மெண்டுக்கு ஒரு தடவை போனேன்.(Personal group photographs,not to be released)கோல்ஃப்,குதிரை,ஓய்வறை,ஸ்விம்மிங்க்,ரெஸ்டாரெண்ட்,போக்கர்,நம்ம முதல்வர் புது சட்டசபைய பார்வையிட சட்டசபைக்குள்ளேயே ஓடுறமாதிரியான வண்டி ஒரு 200-300ன்னு.காலை 8.00 மணிக்கு போய் இரவு 11.00 மணிக்கு திரும்பி வந்து இடுப்பு ஒடிச்சு விட்டுடாங்க.

பியருக்கான விளக்கம் மிக சரி.

ராஜ நடராஜன் said...

//அமெரிக்கர்கள் வணிகர்கள். ஐரோப்பியர்கள் முதலாளிகள்.//

நீங்க இமயவரம்பனா?கார்த்திக்கா?

இமயவரம்பனா இருந்தா நிறைய இடத்துக்குப் பட்டா போட்டு வச்சிருக்கீங்க:)பின்னால கடைல நல்லா வியாபாரமாகுமுன்னு.

கார்த்திக்ன்னா வரலாற்று தொடர் எழுதுவீங்க போல இருக்குது.அவகாசமா மெல்ல படிக்கிறேன்.

ஆமா!புத்த பிட்சுக்கள் அப்பவும் கல்லறைகள் மேல்தான் நின்னாங்களா:(

ராஜ நடராஜன் said...

//Imayavaramban said...
அமெரிக்கர்கள் வணிகர்கள். ஐரோப்பியர்கள் முதலாளிகள்//

I too agree with him

nice post
nice post//

கண்ணா அண்ணா!இது நல்லாயிருக்குதே:)

அய்யோ!அய்யோ!வரலாறு உல்ட்டா.
அமெரிக்கர்கள் இரண்டாம் உலக யுத்தம் முதற்கொண்டு முதலாளிகள். ஐரோப்பியர்கள் கோவா,டச்சு,டாமன் துவங்கி பாண்டிச்சேரி வந்து சென்னை,கல்கத்தா,பம்பாய் என கடற்படை நிறுவி எங்கள் சாம்ராஜ்யத்தில் சூரிய அஸ்தமனம் என்பதே இல்லை என்று சொன்ன வணிகர்கள்.

Fish N Chips முதற்கொண்டு அனைத்து ஐரோப்பிய உணவிற்கும் குருமிளகு தேவையான பொருள்.பலசரக்கு தேடியும்,கடல்வழி கண்டு பிடிப்பு,மற்றும் சாதனைகளுக்காக மட்டுமே வணிகம் செய்தவர்கள்.

லண்டன் சென்ற நண்பர் சொன்னது.பிரிட்டிஷ்காரர்கள் மிகவும் நல்லவர்கள்.நம்ம ஊர் காவல்துறை லத்தி வெச்சுகிட்டு ஒரு பிரச்சினையை அணுகினால் பிரிட்ட்ஷ்காரர்கள் கையை பின்னால் கட்டிகிட்டு பிரச்சினையை அணுகுகிறார்கள்.

அப்புறம் புலம் பெயர்ந்த தமிழர்களை அமெரிக்காவை விட ஐரோப்பிய நாடுகளே அதிகம் அரவணைக்கின்றன.