Followers

Friday, March 19, 2010

ருத்ரன் என்ற பழுத்த பழம்

தலைப்பு சொல்ல வினாடிகள் கூட எடுத்துக் கொள்ள வில்லை.தலைப்பை தொட்டதும் தொடர்கிறேன்.இரண்டு,மூன்று வருடங்கள் பதிவுலகை வலம் வந்தும்,அவ்வப்போது சில பின்னூட்டங்களும் கூட அங்கே இங்கேயென்று இவர் பற்றி தெரியாமலே(இன்னும் தெரியாமலே)கருத்துக்களின் அடிப்படையில்.

விவாதங்களால் தர்க்கம் செய்ய இயலாத போது ஒன்று முகமிலிகளாகவோ அல்லது தமது நம்பிக்கைகள் சிதைக்கப்படும் கோபத்தின் வெளிப்பாடாகவோ சிலருக்கு எழுத்துக்கள் எண்ணங்களின் பொது உலக வெளிப்பாடாக பதிவு செய்யப்படுகிறது.

விளையாட்டு பிள்ளைகள் என்ற எண்ணத்திலோ பதிவுலகின் சில நேரத்து எழுத்து சண்டைகளின் காரணமாகவோ சிலர் பதிவுலகம் உற்றுக் கவனிக்கப்படுகிறது என்று சொந்த முதுகை தட்டிக் கொண்டாலும் இன்னும் பதிவுலகம் தமிழ் நேசிக்கும் வாசகர்களை பரந்து செல்லவில்லை என்றே தூர தேசத்திலிருந்து என்னால் கணிக்க முடிகிறது.

இந்த நிலையிலும் மருத்துவர் ருத்ரன் போன்ற எழுத்துக்களின் சொந்தக்காரர்கள் பதிவுலகில் வலம் வருவது மகிழ்ச்சியைத் த்ருகிறது.நாகரீகமான எழுத்துக்களை முன் வைத்தும் இவர் மீது அவ்வப்போது எறியப்படும் சொற்கற்களின் மூலங்கள் என்ன?

எம்.எஃப்.ஹுசைன் கத்தார் இந்திய தூதரகத்தில் இந்திய கடவுச்சீட்டை திருப்பி தந்த நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் இப்பொழுது தங்கள் கருத்துக்களை விட கோபங்களை அதிகம் வெளிப்படுத்துகிறார்கள்.அவர் ஓவியம் வரைந்ததை விட கத்தார் குடிமகனாகி விட்டது மனரீதியாக பலரையும் விமர்சன மேடைக்கு அழைத்து வருகிறது.

இதன் துவக்கமாக எனது பார்வையில் பட்ட எம்.எஃப்.ஹுசைன் இடுகைகளில் ருத்ரனின் ஓவியப் பார்வையே காணக்கிடைத்தது.அதனைத் தொடர்ந்து அவருடைய தளத்திலோ அல்லது அவரவர் தளங்களிலோ காணக்கிடைக்கும் முதிர்ச்சி இல்லா ருத்ரனின் எதிர்வினைக்காரர்களின் கோபம் தர்க்கம் என்பதை கடந்து முகமிலிகளாக வலம் வருகிறார்கள்.

இந்து பாரம்பரியம் காக்கிற முகமூடி போட்டிருப்பவர்களின் முகத்திரை விலக்கிப் பார்த்தால் அய்யோ பாவம் எனத் தெரிகிறது.இஸ்லாமிய பத்வாக்காரர்களுக்கு நிகரான இந்து சொல் பத்வாக்காரர்களும் இருக்கிறார்கள் என்பதை

Feel free, Mr Husain. Go paint Qatari leaders

என்ற சோ ராமசாமியின் டெக்கான் ஹெரால்ட் தலைப்பு வாசகங்கள் சொல்கிறது.உங்கள் கோபம் ஓவியமா?ஹுசைனின் கத்தார் குடியுரிமையா? தமிழகத்தின் சிறந்த அரசியல் விமர்சகர் என்ற துக்ளக் வட்டத்துக்குள் நீங்கள் அழகாகவே தெரிகிறீர்கள்.ஆனால் ஹிந்துத்வா முகம் வேண்டாமே வளைகுடா வட்டத்துக்கு.அது நீண்ட எதிர்கால பின் விளைவுகளை உருவாக்கும்.

மீண்டும் ருத்ரனின் பார்வைக்கு வருவோம்.

(தஞ்சை பெரிய கோயிலில் சிலையின் கலையம்சத்தின் அழகில் மயங்கி வாங்கி வந்தது.சுருக்கப்படுவதற்கு முன் அதன் முழு தோற்றத்தின் 100% அடோபின் நோக்கில் கேமிராவின் பிரமிப்பு இன்னும் நீள்கிறது.)

ருத்ரனின் ஸரஸ்வதி மீண்டும் நமஸ்துப்யம் இடுகையை படித்ததால் கிளிக்கியது.

32 comments:

Thekkikattan|தெகா said...

ராஜ நட,

அவசியமான பதிவு!

//இந்த நிலையிலும் மருத்துவர் ருத்ரன் போன்ற எழுத்துக்களின் சொந்தக்காரர்கள் பதிவுலகில் வலம் வருவது மகிழ்ச்சியைத் த்ருகிறது.//

மகிச்சியோடு, மருத்துவர். ருத்ரனின் வலையுலக இருப்பு நாம் கலந்து கொள்ளும் சமகாலத்தில் வாய்க்கப் பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விசயமென்றும் நான் கருதுகிறேன்.

அது போன்ற எழுத்துக்களை வாசிக்கும் பொழுது எது போன்ற எண்ண அலைகளை நம் மனதினுள் விதைத்துச் செல்கிறது, அதற்குப் பின்னால் எத்தனை உழைப்பும், வாசிப்பும், உலக பிரவேசிப்பும் இருந்திருக்கக் கூடும்? அதெப்படி இத்தினிக்கூண்டு வயசையும், படிப்பறிவையும், உலகறிவையும் வைத்துக் கொண்டு மிக எளிதாக விமர்சிக்க எத்தனம் வருகிறது - என்னைப் பொருத்த மட்டில் அங்குதான் இந்த conditioned thinking inculcated from their childhood is popping up because there is no சுய சிந்திப்பு வளர்ச்சி.

//அல்லது அவரவர் தளங்களிலோ காணக்கிடைக்கும் முதிர்ச்சி இல்லா ருத்ரனின் எதிர்வினைக்காரர்களின் கோபம் தர்க்கம் என்பதை கடந்து முகமிலிகளாக வலம் வருகிறார்கள்.

இந்து பாரம்பரியம் காக்கிற முகமூடி போட்டிருப்பவர்களின் முகத்திரை விலக்கிப் பார்த்தால் அய்யோ பாவம் எனத் தெரிகிறது.இஸ்லாமிய பத்வாக்காரர்களுக்கு நிகரான...//

அதே! அதே!!

அக்கினிச் சித்தன் said...

// தமிழகத்தின் சிறந்த அரசியல் விமர்சகர் என்ற துக்ளக் வட்டத்துக்குள் நீங்கள் அழகாகவே தெரிகிறீர்கள்.//
ஏனுங்க தமிழர்களைக் குட்டிச் சுவராக்கும் சோவுக்கு இப்படிச் சாமரம் வீசுறதைவிட நீங்க மருத்துவர் ருத்ரன் சொல்றது தப்புன்னே எழுதியிருக்கலாமுங்க! நல்லாயிருங்க!

Thekkikattan|தெகா said...

அக்கினிச் சித்தன் said...
// தமிழகத்தின் சிறந்த அரசியல் விமர்சகர் என்ற துக்ளக் வட்டத்துக்குள் நீங்கள் அழகாகவே தெரிகிறீர்கள்.// ............ அக்கினிச் சித்தன் --- ராஜ நட, அத sarcasticகா சொல்லியிருக்கிற மாதிரிதானே இருக்கு ???!!

பழமைபேசி said...

க்கும்.... எனக்கு இதைப் புரிஞ்சுக்க பின்புலம் இல்லீங்கோ... எதோ சொல்லியிருக்கீங்கன்னு மட்டும் புரியுது!

அக்கினிச் சித்தன் said...

தெகா, நீங்க ரொம்ப நல்லவருங்க! இல்லன்னா பத்திரிகையாளரு போர்வையில தில்லுமுல்லு பண்ணுற (கிட்டத்தட்ட நம்ம Fox News மாதிரி) சோவைக்கூட நல்ல விதமாப் பாக்குறதுக்கு உங்கள மாதிரி நல்ல மனசு எனக்கு இல்லீங்களே :))

ராஜ நடராஜன் said...

//அது போன்ற எழுத்துக்களை வாசிக்கும் பொழுது எது போன்ற எண்ண அலைகளை நம் மனதினுள் விதைத்துச் செல்கிறது, அதற்குப் பின்னால் எத்தனை உழைப்பும், வாசிப்பும், உலக பிரவேசிப்பும் இருந்திருக்கக் கூடும்? அதெப்படி இத்தினிக்கூண்டு வயசையும், படிப்பறிவையும், உலகறிவையும் வைத்துக் கொண்டு மிக எளிதாக விமர்சிக்க எத்தனம் வருகிறது - என்னைப் பொருத்த மட்டில் அங்குதான் இந்த conditioned thinking inculcated from their childhood is popping up because there is no சுய சிந்திப்பு வளர்ச்சி.//

தெகா!ஒரே பொருளுக்கான விசயத்தை அலசும் போது அதற்கான பல நோக்குப் பார்வைகள் வருவது பதிவுகளின் சிறப்பு.தனது தர்க்கங்களுக்கு ஆக்கம் செய்ய எதிர் வாதம் செய்வது புரிதலுக்கு வழி வகுக்கும்.மாறாக நேராக ஒற்றை மொழியில் தாவி ஒருவர் பதிவிடுவதும் அதற்கும் மேலாக முகமூடி போட்டுக் கொண்டு சிலர் பின்னூட்டமிடுவதும் அதை பதிவர் அங்கீகரிப்பதும் மனவருத்தத்தை அளிக்கிறது.

நல்ல எழுத்தை மட்டும் அடையாளம் கொள்வோம் என்ற எண்ணத்தில் இந்த இடுகை.

ராஜ நடராஜன் said...

//ஏனுங்க தமிழர்களைக் குட்டிச் சுவராக்கும் சோவுக்கு இப்படிச் சாமரம் வீசுறதைவிட நீங்க மருத்துவர் ருத்ரன் சொல்றது தப்புன்னே எழுதியிருக்கலாமுங்க! நல்லாயிருங்க!//

இது யாரு அக்கினி சித்தன்?வருகிறேன் என்ன என்ன சித்து வேலைகள் உங்க கடையில் நடக்கிறதென்று பார்க்க:)

சோ மீது நமக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் நீண்டகாலமாக அரசியல் களத்தை அவதானிப்பவர்.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் இருக்குமென்று தலிவரே கூப்பிட்டுப் பேசுவது மாதிரியான ஒரு பார்வை.

கூடவே அவரது தொடர் அரசியல் விமர்சனங்களில் மக்கள் மனதை பிரதிபலித்தவை எத்தனை என்பதை உங்கள் பார்வைக்கு விட்டு விடுகிறேன்.

ராஜ நடராஜன் said...

//க்கும்.... எனக்கு இதைப் புரிஞ்சுக்க பின்புலம் இல்லீங்கோ... எதோ சொல்லியிருக்கீங்கன்னு மட்டும் புரியுது!//

வாங்க பழமைண்ணா!ரொம்ப நாளக்கப்புறம் வந்து சங்கமமாயிட்டீங்க மறுபடியும்.உங்க கடைக்கும் அப்பப்ப அல்ல எப்பவும் வர்றதுதான்.சில நேரங்களில் பின்னூட்டமிட இயலுவதில்லை.

யாரயும் மனம் புண்படுத்த வேண்டாமே என்பதை விட நல்ல எழுத்துக்கள் பக்கம் பார்வை செலுத்துவோம் என்பது மட்டுமே இடுகையின் நோக்கம்.

ராஜ நடராஜன் said...

//தெகா, நீங்க ரொம்ப நல்லவருங்க! இல்லன்னா பத்திரிகையாளரு போர்வையில தில்லுமுல்லு பண்ணுற (கிட்டத்தட்ட நம்ம Fox News மாதிரி) சோவைக்கூட நல்ல விதமாப் பாக்குறதுக்கு உங்கள மாதிரி நல்ல மனசு எனக்கு இல்லீங்களே :))//

அக்கினி சித்தன் எனக்கு சிரமம் வைக்காமல் நூல் விட்டிருக்கீங்க!

(கிட்டத்தட்ட நம்ம Fox News மாதிரி)

விசயத்துக்கு வந்துட்டீங்க.பார்த்தீங்களா!Fox News எப்படின்னு தெரிஞ்சும் ஒபாமா நேர்காணல் தருவதில்லையா?

பத்திரிகையாளர் போர்வை சோ போர்த்திக் கொண்டாலும் தமிழக அரசியலும் பல நேரங்களில் துக்ளக் கார்ட்டூன்கள் மாதிரி ஆகிவிடுவதும் உண்மைதானுங்களே!அந்த விமர்சனத்தில் நமக்கு ஆட்சேபனையில்லை.ஆனால் எனக்கு இன்னுமொரு இந்துத்வா முகமூடியும் வேண்டுமென்று வந்து அடம் பிடிப்பதில் உடன்பாடில்லை.

Anonymous said...

கவனத்துக்குரிய பதிவு.

// விளையாட்டு பிள்ளைகள் என்ற எண்ணத்திலோ பதிவுலகின் சில நேரத்து எழுத்து சண்டைகளின் காரணமாகவோ சிலர் பதிவுலகம் உற்றுக் கவனிக்கப்படுகிறது என்று சொந்த முதுகை தட்டிக் கொண்டாலும் இன்னும் பதிவுலகம் தமிழ் நேசிக்கும் வாசகர்களை பரந்து செல்லவில்லை என்றே தூர தேசத்திலிருந்து என்னால் கணிக்க முடிகிறது.//

மிகச் சரியான புரிதல்.

மிக்க நன்றி.

- Siravanan

ராஜ நடராஜன் said...

//கவனத்துக்குரிய பதிவு.

// விளையாட்டு பிள்ளைகள் என்ற எண்ணத்திலோ பதிவுலகின் சில நேரத்து எழுத்து சண்டைகளின் காரணமாகவோ சிலர் பதிவுலகம் உற்றுக் கவனிக்கப்படுகிறது என்று சொந்த முதுகை தட்டிக் கொண்டாலும் இன்னும் பதிவுலகம் தமிழ் நேசிக்கும் வாசகர்களை பரந்து செல்லவில்லை என்றே தூர தேசத்திலிருந்து என்னால் கணிக்க முடிகிறது.//

மிகச் சரியான புரிதல்.//

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் சிரவணன்.இந்தியா டுடே மாநாடு 2010ல் பார்த்தது உங்களை:)

ராஜ நடராஜன் said...

ஓ!யோசனையில நன்றி சொல்ல மறந்து விட்டேன் சிரவணன்.

ஜோதிஜி said...

தெளிவான நாகரிகமான வார்த்தைகள்.

Robin said...

//இன்னும் பதிவுலகம் தமிழ் நேசிக்கும் வாசகர்களை பரந்து செல்லவில்லை... // உண்மை. இன்னும் இணையத்தில் தமிழ் வாக்கியங்களை படிக்க முடியும் என்றே பலருக்கும் தெரியாது.

டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி போன்ற துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்பு தமிழ் பதிவுலகிற்கு அவசியம்.

கபீஷ் said...

சீரியஸ் பதிவா? :-):-)

ஒண்ணும் சொல்லத் தோணலை:-)

பழமை எஸ் ஆகிட்டார் புரியாத மாதிரி,
வந்தா விடாதீங்க.

ராஜ நடராஜன் said...

//தெளிவான நாகரிகமான வார்த்தைகள்.//

ஜோதிஜி!வரலாற்றை தொடுக்கும் உங்கள் அற்புத பணி வார்த்தைகளில் அடங்காதது.உங்கள் வருகை இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது.

ராஜ நடராஜன் said...

////இன்னும் பதிவுலகம் தமிழ் நேசிக்கும் வாசகர்களை பரந்து செல்லவில்லை... // உண்மை. இன்னும் இணையத்தில் தமிழ் வாக்கியங்களை படிக்க முடியும் என்றே பலருக்கும் தெரியாது.

வருகைக்கு நன்றி ராபின்.டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி போன்ற துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்பு தமிழ் பதிவுலகிற்கு அவசியம்.//

வாருங்கள் ராபின்.இருப்பதை படிக்கவே ஆட்கள் இல்லை.இதனிடையில் ஆயுதம் 12,மெய் 30,உயிர் மெய் 9 என்று 39ஆக புதிய தமிழ் வரப்போகுதாம்.

நிச்சயம் மருத்துவர் ருத்ரன்,ஷாலினி போன்றவர்களின் பங்களிப்பு பதிவுலகத்திற்கு முக்கியமானது.

தங்கள் பணிகளுக்கிடையிலும் நம்முடன் கலந்து கட்டும் மருத்துவர் புருனோ,தேவன்மாயம்,சுரேஷ்(பழனியிலிருந்து) போன்றவர்களும் நினைவில் வந்து போகிறார்கள்.

ராஜ நடராஜன் said...

//சீரியஸ் பதிவா? :-):-)

ஒண்ணும் சொல்லத் தோணலை:-)

பழமை எஸ் ஆகிட்டார் புரியாத மாதிரி,
வந்தா விடாதீங்க.//

மீள் வருகைக்கு நன்றி கபிஷ்.சீரியஸெல்லாம் ஒண்ணுமில்லிங்க.அதுக்குன்னு ஒரு துறை தனியாகவே தமிழ் மணத்துல இருக்குதுங்களே.அப்படி சீரியஸ்ன்னு இருந்திருந்தா பதிவுலக குத்தூசி,வால்பையன் போன்றவர்கள் கும்ம வேண்டிய இடத்துல கும்மாம உள்ளேன் ஐயா மட்டும் சொல்லிட்டு வந்திருக்க மாட்டாங்க.

கபீஷ் said...

//சீரியஸெல்லாம் ஒண்ணுமில்லிங்க//

சீரியஸ் இல்லேன்னதும், திரும்பவும் சீரியஸா வாசிச்சேன். உங்க பதிவு ஒரு பக்கச் சார்பா இருக்கு.(நடுநிலைமையை யார் கிட்டயும் எதிர்பார்க்க முடியாது:-)(Exceptions apply here:-)) இருந்தாலும் நேர்மை குறைவா இருக்கு. உங்க மத்த பல இடுகைகள் படிச்சதை ஒப்பிட்டு சொல்றேன்.

ராஜ நடராஜன் said...

//சீரியஸ் இல்லேன்னதும், திரும்பவும் சீரியஸா வாசிச்சேன். உங்க பதிவு ஒரு பக்கச் சார்பா இருக்கு.(நடுநிலைமையை யார் கிட்டயும் எதிர்பார்க்க முடியாது:-)(Exceptions apply here:-)) இருந்தாலும் நேர்மை குறைவா இருக்கு. உங்க மத்த பல இடுகைகள் படிச்சதை ஒப்பிட்டு சொல்றேன்.//

sarcastic apart,ஒரு பக்க சார்பு மாதிரி சில சமயம் வருவதற்கும் சாத்தியங்கள் உண்டு.எப்படின்னா கமல் தசாவதாரம் எடுத்த பிறகும்,உன்னைப்போல் ஒருவன் எடுத்த பிறகும் அவருக்கு ஒரு முகப் பூச்சுப் பூட்டப் பட்டதே அந்த மாதிரி.பார்வைகள் வேறுபடுவது இயல்பு.

ஒரு பொருளின் இரு வித தர்க்கங்களில் ஏதோ ஒரு பக்கம்தான் உண்மையிருக்க முடியும்.அதோடு தர்க்கம் நாகரிகமாக வெளிப்படும் போது அதன் சார்பாக பேசுவதால் ஒரு பக்க சார்பு வருவதை தவிர்க்க இயலவில்லை.

நீங்களும் என்னை மாதிரி இடுகைகள் மேயறதால இது சார்ந்த இடுகைகளை நோக்கும் போது ருத்ரனின் எழுத்தின் முதிர்ச்சிக்கு சரி சொல்வீர்கள்.

smart said...

//நாகரீகமான எழுத்துக்களை முன் வைத்தும் இவர் மீது அவ்வப்போது எறியப்படும் சொற்கற்களின் மூலங்கள் என்ன?//
நாகரீகமான எழுத்து அநாகரீகமான கருத்து

smart said...

///அவருடைய தளத்திலோ அல்லது அவரவர் தளங்களிலோ காணக்கிடைக்கும் முதிர்ச்சி இல்லா ருத்ரனின் எதிர்வினைக்காரர்களின் கோபம் தர்க்கம் என்பதை கடந்து முகமிலிகளாக வலம் வருகிறார்கள்.///

எதிர்வினைகாரர்களிடம் முதிர்ச்சியில்லையோ சரி முதிர்ச்சியான தர்க்கம் இங்கே உள்ளது பதில் அளிக்க சொல்லுங்கள்.
முதிர்ச்சியான தர்க்கம்

ராஜ நடராஜன் said...

வாங்க ஸ்மார்ட்!வரும் போதே கோபமா வருகிறீர்கள் போல தெரியுது:)

உங்கள் இணைப்பு முதிர்ச்சியான தர்க்கம்
dns_server_failure காட்டுது.மீண்டும் செயல்படுகிறதா பார்த்து கருத்து சொல்கிறேனே.தர்க்கம் உங்களுடையதுதானே?

ராஜ நடராஜன் said...

ஸ்மார்ட்!நீங்கள் சுட்டிய முதிர்ச்சியின் தர்க்கம் தளத்தை கண்டேன்.அதிலுள்ள எழுத்துக்கள் நீங்கள் சுட்டிய தலைப்புக்கு எடை கூட்டுமா?அதில் இருந்த படங்களை பதிவர் கிரி அவர்களின் பதிவில் இதற்கு முன்பாகவே பார்த்தேன்.நிறைய பேரின் பார்வையில் படங்கள் ஓவியம் என்பதை விட இந்து கடவுள்களை கொச்சைப்படுத்துகிறார் ஹுசைன் என்ற ஆதங்கம் தெரிந்தது கிரிக்கு இட்ட பின்னூட்டங்கள் மூலம்.நானும் ஹுச்னின் ஓவியம் என்பதை விட அவை ஓவியக்கோடுகளாகவே தெரிகின்றன என்று பின்னூட்டமிட்டிருந்தேன்.பார்வைகள் வித்தியாசப் படுகின்றன.ஆனால் அவற்றை நாகரீகமாக வெளிப்படுத்தலாமே என்பதுதான் எனது வாதம்.

ஓவியங்களின் துவக்கம் எப்படி திரிபு கொண்டு அரசியலும்,மத சாயமும் ஒன்றிணைந்து திசை மாறிப் போனது என்பதை ஹிசைனின் பதிவில் சொல்லியுள்ளேன்.

ஹுசைனின் ஓவியங்களை தாக்குவதன் மூலம் பிரபலமடையப் போவது ஹுசைனின் ஓவியங்களே.மேலும் அறியாத மக்களிடையேயும்,எதிர் காலத்திலும் இந்துக் கடவுளுக்கான அங்கீகாரத்தை ஓவியத்தை எதிர்ப்பவர்கள் தங்களை அறியாமலேயே தருகிறார்கள்.

இன்னொரு சக ஓவியனாக மருத்துவர் ருத்ரன் அவர்களுக்கு இன்னொரு பார்வை இருக்க கூடும்.ஆனால் என்னைப் பொறுத்த வரையில் ஹுசைன் ஓவியம் வெறும் கோடுகளே.என்னை ஆகர்ஷிப்பவைகளின் வட்டத்துக்குள் வரவில்லை அவை.

உங்கள் தளத்தில் ஒரே பதிவு இட்டிருக்கிறீர்கள்.பதிவுகள் துவங்குகிறீர்களா அல்லது காரண காரியங்களுக்கான ஒரே இடுகையா எனத் தெரியவில்லை.இன்னும் நிறைய எழுதும் போது மீண்டும் சந்திப்போம்.நன்றி.

கபீஷ் said...

//இது சார்ந்த இடுகைகளை நோக்கும் போது ருத்ரனின் எழுத்தின் முதிர்ச்சிக்கு சரி சொல்வீர்கள்.
//

திரு.ருத்ரனின் எழுத்தின் முதிர்ச்சி பற்றி நோ கமெண்ட்ஸ். எழுதினா ஒரு பதிவாயிடும்.

நான் உங்கள் எழுத்தைப்பற்றி மட்டுமே சொன்னேன்.(ஹுசைன் விவகாரத்தில்) நாம நினைக்கறது சரி, தப்புன்னு தீர்மானம் பண்ணிட்டா அதப்பத்தி அடுத்தவங்க சொல்றதுல உண்மை இருக்கா இல்லியான்னு யோசிக்க மாட்டோம். தப்பு,சரி அப்படின்ற மதிப்பீட்டுல உங்கள் எழுத்தை உட்படுத்தி கமெண்ட் செய்யவில்லை. ஒரு பக்கச்சார்பா எழுதக்கூடாதுன்னும் இல்லியே. தோணுச்சு அவ்ளோதான். அதுவும்,உங்கள் எழுத்தில் ஓரளவு முதிர்ச்சி இருப்பதால்(அப்படி எனக்குத் தோணுது :-)) சொன்னேன்.

ராஜ நடராஜன் said...

கபிஷ்!தமிழக பட்ஜெட் போடறதுக்குன்னு கடைய திறந்தேன்.நீங்க நிற்கிறீங்க.

வாழ்விலும்,மனிதர்களிடத்திலும்,இணையத்திலும் கற்றுக்கொள்ள நிறைய இருக்குதுங்க.சில நேரங்களில் சார்பு நிலை வருவதை ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் இந்த இடுகைக்கான கருத்தை சொல்லி விட்ட எண்ணத்தில் விடுகதையின் விடையை சொல்லாமலே அடுத்த இடுகைக்கு எஸ்கேப்:)

Unknown said...

ராஜநடராஜன்,

ருத்ரன் பழுத்த பழம் அல்ல;அழுகிய பழம்.ஃபங்கஸ் அடர்ந்து வளர்ந்த அந்த மூஞ்சியைப் பார்த்தாலே தெரியவில்லையா.

smart said...

//பார்வைகள் வித்தியாசப் படுகின்றன.ஆனால் அவற்றை நாகரீகமாக வெளிப்படுத்தலாமே என்பதுதான் எனது வாதம்.//
இங்கே வன்முறையாளரை(ஹுசைன்) பார்த்து கேட்கவேண்டிய கேள்வி

ஒரு முதிர்ச்சியான வாதம்:
இங்கு நிர்வானத்தையோ, கலையோ எதிர்க்கவில்லை என வைத்துக்கொள்வோம்.

ஹுசைனே ஒருவரை அவமானப் படுத்தத்தான் அப்படி நிர்வாணமாக வரைந்தேன் என ஹிட்லர் பற்றிய பேட்டியில் கூறியுள்ளாரே! அப்போது யார் நாகரீகமாக நடக்க வேண்டும்? பதிலளிக்கவும்.

Dr.Rudhran said...

தொடர்ந்து பார்க்கவே இப்பின்னூட்டம்.
ஸ்மார்ட் இன்னும் எழுதி, மன்மோகன் மனைவி, கருணாநிதி பாட்டி படம் எல்லாம் கேட்கட்டும், நாகரீகமாக! ( இது வேண்டுமென்றெதான் எழுதினேன், குதிக்கும் போது தானே ஒப்பனைகள் அவிழும்!!)

எல்லாரும் எழுதுங்கள், அதுதான் முக்கியம். இதுதான் ஆரம்பம். என் இளமையில் இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற பொறாமை மீறி வாழ்த்துகள்.

ராஜ நடராஜன் said...

//ராஜநடராஜன்,

ருத்ரன் பழுத்த பழம் அல்ல;அழுகிய பழம்.ஃபங்கஸ் அடர்ந்து வளர்ந்த அந்த மூஞ்சியைப் பார்த்தாலே தெரியவில்லையா.//

வீர பாண்டியன்!உங்களுக்கு பங்கஸ் மாதிரி தெரிவது எனக்கு பெர்னாட்ஷா,பெரியார்,ஏன் திருவள்ளுவர் மூஞ்சி மாதிரி கூட தெரியுது.

எல்லாம் பார்ப்பவர்களின் பார்வையையும்,மனநிலை அதை விட வாழ்க்கையை கடந்து வந்த பாதைகளைப் பொறுத்து அமைகிறது.மீண்டும் ஒரு தோழமையான பின்னூட்டத்துடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

//இங்கே வன்முறையாளரை(ஹுசைன்) பார்த்து கேட்கவேண்டிய கேள்வி

ஒரு முதிர்ச்சியான வாதம்:
இங்கு நிர்வானத்தையோ, கலையோ எதிர்க்கவில்லை என வைத்துக்கொள்வோம்.

ஹுசைனே ஒருவரை அவமானப் படுத்தத்தான் அப்படி நிர்வாணமாக வரைந்தேன் என ஹிட்லர் பற்றிய பேட்டியில் கூறியுள்ளாரே! அப்போது யார் நாகரீகமாக நடக்க வேண்டும்? பதிலளிக்கவும்.//

ஸ்மார்ட்!விட மாட்டீங்க போல தெரியுதே:)நிர்வாணப் படுவதெல்லாம் அல்லது நிர்வாணப்படுத்த நினைப்பதெல்லாம் அசிங்கம் என்று கருதுகிறீர்களா?ஹிட்லரை நிர்வாணப்படுத்தி வரைவதால் மட்டுமே ஹிட்லரின் நிர்வாணம் உலக அளவில் படிந்து விடுமா?குழந்தைகளின் நிர்வாணம்,பெண்ணின் நிர்வாணம்,மனநிலை பிறழ்ந்த நிர்வாணம்,விளிம்பு நிலை நிர்வாணம்,கிரிக்கெட் மைதான நிர்வாணம்,கோவா போன்ற கடற்கரை நிர்வாணம் என்று எத்தனை விதமானவை.அனைத்தையும் ஒரே கோட்டுக்குள் கொண்டு வந்து விட முடியுமா?நீங்கள் எனது இடுகையான ஹிசைனின் தேச துறவறம் படித்தீர்களா?ஹுசைனின் வாழ்விற்கும்,புகழுக்கும் சோறு போட்ட ஓவியங்களை அவர் கொச்சைப்படுத்தினார் என்று எங்காவது யாரிடமாவது சொல்லியிருக்கிறாரா?பி.ஜே.பியின் காலத்து அரசியல் சூழல்,பம்பாய் குண்டுவெடிப்பு,இப்ராகிம் தாவூது,பாகிஸ்தான் இந்தியாவை மறைந்து தாக்கும் உத்தி போன்றவைகளில் விழைந்த கோபத்தின் வெளிப்பாட்டின் பலிகடா ஹுசைன்.தயவுசெய்து ஓவியனை ஓவியனாக பாருங்கள்.தொழுகை,ஈகை போன்றவைகளை வற்புறுத்தும் இஸ்லாமிடமிருந்து தீவிரவாத,தலிபானிஸ இஸ்லாமியத்தையும் அதற்கு துணை புரியும் இந்திய முஸ்லீம்களையும் தனிமைப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்.

ராஜ நடராஜன் said...

//தொடர்ந்து பார்க்கவே இப்பின்னூட்டம்.
ஸ்மார்ட் இன்னும் எழுதி, மன்மோகன் மனைவி, கருணாநிதி பாட்டி படம் எல்லாம் கேட்கட்டும், நாகரீகமாக! ( இது வேண்டுமென்றெதான் எழுதினேன், குதிக்கும் போது தானே ஒப்பனைகள் அவிழும்!!)

எல்லாரும் எழுதுங்கள், அதுதான் முக்கியம். இதுதான் ஆரம்பம். என் இளமையில் இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற பொறாமை மீறி வாழ்த்துகள்.//

மருத்துவர் ருத்ரன்!உங்கள் முதல் வருகைக்கு நன்றி.முதலாவதாக உங்கள் மீது எழும் விமர்சனங்களுக்கும்,கோபங்களுக்கும் காரணமென்ன என்பது எனக்கு இன்னும் புரியாத புதிர்.ஹுசைன் மீதான கோபம் உங்கள் மீது பாய்வது இன்று முளைத்த காளான் என நினைக்கிறேன்.ஆனால் இதற்கு முன்பும் கடந்த ஆண்டுகளில் உங்கள் மீது சிலர் சேறு பூச நினைப்பது ஏன் என்பதன் காரணத்தை நான் அறியேன்.இந்த இடுகை எழுதியதன் நோக்கம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பார்வை இருக்கும்.ஆனால் அதை நாகரீகமாக வெளியிடுங்கள் என்பதே.உதாரணத்திற்கு நேற்றைய வாசகர் பரிந்துரையில் இடம் பிடித்த பதிவுலகின் விமர்சன மேதாவிகள் என்ற புலவர் புலிகேசியின் இடுகையில் மொத்த விவாதமும் நன்றாக குறிப்பாக பதிவர் சிரவணன் விவாதம் செய்த விதம் சிறப்பாக இருந்தது.எதிர் வினை செய்யும் போதும் அந்த விதமான நாகரிகத்தை எழுத்தில் கொண்டு வரலாமே என்பதுதான் ஆதங்கம்.

அப்பா கொடுத்த சுதந்திரமோ என்னவோ இந்துத்வம் அதன் பிரிவுகள் தாண்டி,சி.எஸ்.ஐ கிறுஸ்தவ பள்ளியின் பிரார்த்தனைகாரனாக,பின் பெரியாரும் கவர அதே நேரத்தில் பிராமணியம் சொற்களை கடந்த நண்பர்கள்,இஸ்லாமியத்தின் நிறைகள் அதன் பிற்போக்குதனங்கள் அத்தனையும் கடந்து வந்த மனநிலையில் ஹுசைனின் ஓவியத்துக்குள் கடவுளையும்,நிர்வாணத்தையும் காணும் மனோநிலை எனக்கு வியப்பையே தருகிறது.

நீங்கள் விவாதம் எழட்டும் என நினைக்கிறீர்கள்.அதுவும் கூட ஸ்மார்ட் போன்றவர்களுக்கு முரணாகப் படுகிறது.ஹுசைன்!கத்தாருல என்னய்யா செய்து கொண்டிருக்கிறீர்கள் நாங்கள் மெனக்கெடும் நேரத்தில்:)