Followers

Wednesday, March 17, 2010

கோபி கிருஷ்ணன்

இந்த இடுகை ஒரு நாள் எழுதி கொஞ்சம் மேய்ந்து ஆராய்ந்து விரிவாக்கம் செய்யலாமேங்கிற நினைப்பில் கிடப்புல போட்டது.அதற்குள்ள சாரு நிவேதிதாவுக்கு வைரஸ் காய்ச்சல் வந்து அவரது எழுத்தெல்லாம் காணமப் போய் கூடவே ராஜசேகரன் மாதிரி ஆட்களும் காணமப் போகிற அளவுக்கு வந்து விட்டது.அதற்கும் முன்பு ஒரு நாள்.....

தமிழ் மணம் மேய்ந்து விட்டு அங்குமிங்கும் சுற்றிவிட்டு ஒன்றும் தேறாத காரணத்தாலும், வாசிக்கும் நேரம் இருந்த காரணத்தாலும்,கட்டுடைப்பு எழுத்தின் மீது பேராவல் இல்லாது போனாலும் சாருவின் கோணல் பக்கங்களில் போய் உட்கார்ந்து கொண்டேன்.மனுசன் எங்கே யதார்த்தப்படுகிறார்,எங்கே ரீல் விடுகிறார் அல்லது கனவு(பென்டசியை) கையாளுகிறார்,எங்கே தன்னை முன்னிறுத்தும் சுய எழுத்துக்கு தாவுகிறார்,எங்கே உண்மைக்கு திரும்ப வருகிறார் எது உண்மை எது பொய் என்ற குழப்பமான புரிதலிடனூடே கட்டுடைப்புக்களை முதலில் கையாண்டது தானும்,கோபி கிருஷ்ணனும்தான் என்று கோபி கிருஷ்ணன் பற்றி (கோபி கிருஷ்ணனும் நானும் வரம்பு மீறிய பிரதிகளும்) சொல்லிய வரிகளும்(யாரங்கே?இன்னுமா சாருவ நம்புறீங்கன்னு முணுமுணுக்கிறது:) அதனைத் தொடர்ந்த ஜ்யோவரம் சுந்தருக்கான இணைப்பும் வாசிப்பின் ஒரு புதிய அனுபவத்தை தந்தது.

ஜ்யோவரம் சுந்தருக்கான தொடுப்புக்கள்:


1. http://jyovramsundar.blogspot.com/2009/04/1.html


2. http://jyovramsundar.blogspot.com/2009/04/2.html

3. http://jyovramsundar.blogspot.com/2009/04/3.html


4. http://jyovramsundar.blogspot.com/2009/04/blog-post_21.html


இவை வாசிப்பின் வேகத்தை கூட்டியது.யூமா வாசுகியின் மழை என்ற இதழுக்காக கோபி கிருஷ்ணனை நேர்காணல் கண்டதை வழக்கமான நேர்காணல் கேள்வி பதில் நடையில் இல்லாமல் ஒரு சுயசரிதை வாழ்வின் துவக்கம் முதல் ஒரு நடுத்தர வயதுக்காரனுக்கான வாழ்வின் அனுபவமாய் தன்கதை சொல்லி முடிந்திருந்தது.

வாழ்வின் இளமையும், கூச்ச சுபாவ வளர்ப்பும்,கல்லூரிக் காலங்களும்,பட்டப் படிப்பில் பொருளாதாரம்,ஆங்கில இலக்கியம்,உளவியல் மூன்றில் உளவியலைத் தேர்ந்தெடுத்தலும் அதனைத் தொடர்ந்த சமூக உளவியல் தேடுதலும்,காதல் வயப்படுதலும்,வேலையில் நிலையாமை,சோகங்கள்,வடுக்கள்,மன அழுத்தம்,குடும்ப வாழ்வின் சிக்கல்கள் என்று சராசரி போராட்டங்களுக்கும் அப்பால் கோபால கிருஷ்ணன் எழுத்தின் மீது கொண்ட தாகம் மனதை கட்டிப் போட்டு விடுகிறது.அதிலும் மனச்சிதைவு ஏற்பட்டவர்களுடன் பேசும் நேர்காணல் குறிப்புக்கள் மனவியல் சார்ந்து ஆய்பவர்களுக்கு உதவும்.

கோபி கிருஷ்ணன் வார்த்தை தேடலில் கைவிரலுக்குள் எண்ணி விடும்படியாக கண்ணுக்கு சிக்கியவர்கள் ஜ்யோவரம் சுந்தர் தவிர்த்து (கோபி கிருஷ்ணனின் இணையம் சார்ந்த நேர்காணல் வாசிப்பு அவருக்குரியது) அய்யனார்,சாரு,திண்ணை,ராமகிருஷ்ணன்,உயிர்மை,சொல்வனம்
என தேடலின் தூரம் அதிகமானது.

கோபி கிருஷ்ணன் போன்ற பல முகங்களை முந்தைய மெட்ராஸின் அண்ணாசாலையின் நீண்ட இருபக்க வேக நடைகளிலும் பலரும் சந்தித்திருக்க கூடும்.முகவரி இல்லா முகங்களுக்குள்ளும் ஒவ்வொரு கதை இருந்திருக்கும்.ஆனால் யாருடைய கதைகளையும்,முகம் நோக்கி கதை தேடும் நேரமில்லா மெட்ராஸ் நல்ல சென்னை.கோடம்பாக்கத்தில் வெற்றி பெறாத கதைகள் எல்லாம் திரைக்கு வராமல் ஒருவன் எழுதிய எழுத்து மேன்சன்களிலோ அல்லது மனதின் அடித்தளத்திலேயே அமுங்கிப் போயிருக்கும்.

ஆனால் ஒருவன் எழுத்தின் முகவரி சொல்லியும் ஒவ்வொருவரின் வாழ்வாதார தேடலில் முகமிழந்து போன மனிதனாக கோபி கிருஷ்ணன்.எழுத்தாளர் ராமகிருஷ்ணன் போன்றவர்கள் ஏதோ தங்களால் இயன்ற பணத்தை சேகரித்து ஒரு சிறிய தொகையை கோபி கிருஷ்ணனின் இறுதிச் சடங்கு காலத்தில் அவரது குடும்பத்தார்க்கு தந்தார்கள் என அறிய முடிகிறது.அதற்கு பின் அந்தக் குடும்பம் என்னவாயிற்று என்பது கோபி கிருஷ்ணனின் குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த கதை.

கலையுலகம் வாழ்த்துவதற்காகவும்,தானும் கலைத்துறையைச் சார்ந்தவன் என்பதற்காகவும் திரைப்படத்துறைக்கு செய்யும் உதவிகள் அளவுக்கு இல்லா விட்டாலும் தானும் ஒரு எழுத்தாளன் என்ற வகையில் கோபி கிருஷ்ணன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் கருணாநிதி உதவினால் மகிழ்ச்சியாக இருக்கும்.

கோபி கிருஷ்ணனை அறியத் தந்த ஜ்யோவரம் சுந்தருக்கு நன்றி.

6 comments:

நந்தாகுமாரன் said...

//

கோபி கிருஷ்ணனை அறியத் தந்த ஜ்யோவரம் சுந்தருக்கு நன்றி

//

- உண்மை தான்

ராஜ நடராஜன் said...

நந்தா!பாலோ போட்டுகிட்டேன்.அடிக்கடி கண்ணுல படனும்.டீல் சரியா:)

அது சரி(18185106603874041862) said...

//
யூகி வாசுகியின் மழை என்ற இதழுக்காக கோபி கிருஷ்ணனை நேர்காணல் கண்டதை வழக்கமான நேர்காணல் கேள்வி பதில் நடையில் இல்லாமல் ஒரு சுயசரிதை வாழ்வின் துவக்கம் முதல் ஒரு நடுத்தர வயதுக்காரனுக்கான வாழ்வின் அனுபவமாய் தன்கதை சொல்லி முடிந்திருந்தது.
//

அண்ணே,

அது யூமா வாசுகி இல்ல?

vasu balaji said...

படிக்கணும். அறிமுகத்துக்கு உங்களுக்கு நன்றி

ராஜ நடராஜன் said...

//அண்ணே,

அது யூமா வாசுகி இல்ல?//

எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும்.

விவரமான ஆளாத்தான் இருக்குறீங்ண்ணா!

ராஜ நடராஜன் said...

//படிக்கணும். அறிமுகத்துக்கு உங்களுக்கு நன்றி//

சில நேரங்களில் பின்னூட்டங்கள் மட்டுமே சில விட்டதை நினைவு படுத்துகின்றன.குடு குடுப்பை வந்தப்பத்தான் கொண்டியாரக்கள்ளி 7 பாகம் முடிச்சேன்.தொடரும் போட்டு விட்டால் மனசுக்குள் ஒரு !ப்ச்!வந்து விடுகிறது.அதனால இப்ப உங்க கடைக்கு வருகிறேன் காய் வலி படிக்க.முற்றும் சொல்லிட்டீங்கதானே?