நாத்திகவாதிகள் குரல் ஓங்கி எழும்புகிறதோ இல்லையோ மகிழ்ச்சியின் அடையாளமாக பெரியார்தாசன் அப்துல்லாவாகிப் போனதில் பெரியார்தாசனுக்கு காசு செலவில்லாமல் ஏகப்பட்ட விளம்பரங்கள் இஸ்லாமிய மதநம்பிக்கையாளர்களிடமிருந்து.
பேராசிரியனாக,கற்றாய்ந்தவனாக,பாரதி ராஜா துணையால் நடிப்புக்கலையில் ஈடுபாடு கொண்டவனாக பெண்சிசுக் கொலைக்கெதிரான கருத்துகளுக்கு கிடைக்காத,நாத்திக சார்பு எண்ணங்கள் கொண்டு வாழ்ந்த காலங்களில் கிடைக்காத பெருமையாக நித்தியானந்த சாதனையாக ஒரே நாளில் அப்துல்லாவாகிப் போனதில் பெருமை.இதில் வருத்தப்படவோ,பெருமைப்படவோ எதுவுமில்லை.பன்முகப் பார்வை கொண்ட ஒரு தனிமனிதனின் இன்னுமொரு பரிணாம வளர்ச்சியென்றே இதனை கருதவேண்டும்.ஒரு மனிதனின் வாழ்நாளின் பெரும் நாட்களில் கிடைக்காத ஞானோதயம் ஒரே நாளில் ஒரு பெயர் மாற்றத்தால் வந்து விடப்போவதில்லை.
சுயசிந்தனை என்பது எண்ணங்களின் வேர்களின் ஆழத்தை தூசி தட்டிப்பார்த்தாலும் இரத்தநாளங்களில் எங்கேயாவது வாழ்ந்த வாழ்க்கையின் நாட்களின் சுக,துக்கங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்.பெரியார்தாசனுக்கு.நாத்திக எண்ணங்களிலிருந்து தாவியது போல் இஸ்லாத்தின் பிடிப்பும் ஒரு நாள் இல்லாமல் வேறு ஒரு இஸம் சிறந்ததென்று மாறினாலும் அப்போதும் வருத்தப்படுவதற்கும் பெருமைப் படவும் எதுவுமில்லை.தலாய் லாமா சொல்வது போல் மதம்,உணவு போன்றவை தனி மனிதனோடு கூட நடைபோட்டு வருபவை.நீ எதுவாக இருக்கிறாயோ அதுவாக இருப்பது எளிது.சிந்தனை மாற்றங்களுக்கு கருத்து சுதந்திரம் இருப்பதால் சுயமாக ஒருவன் சிந்தித்து எடூக்கும் முடிவுகளுக்கு அவனே பொறுப்பு.மாறாக ஆட்டுமந்தைக் கூட்டமாக மதமாற்றம் என்பதில் மட்டுமே கருத்து மாற்றங்கள்.
மதவாதிகளுக்கு மதத்தில் சுகமில்லை.நாத்திகனுக்கும் தேடலில் வினா தெரியாத கேள்விகளாய் மதம் என்ற பாஸ்போர்ட்..எனவே எங்கோ எதுவோ ஒரு வெற்றிடம் மனிதனை மையம் கொள்கிறது.நாத்திக மதவாதிகளின் பெயர்ப் பட்டியல் மிகநீளம்.ஆனால் ஒன்று கூட நினைவுக்கு வரவில்லை.பெரியார் என்ற பெயர்ச்சொல்லால் தாசன் இப்போதைக்கு நினைவுக்கு.....
11 comments:
மதத்திற்கும் அப்பால் நிலமும்,நிலம் சார்ந்த குணங்களுமே யதார்த்தமானவையும் ஆழ்மனதின் ஆழத்தில் வேரூன்றியவை.அதிலும் சிறிய வயதில் வரித்துக்கொள்ளும்,இயல்பாய் தோன்றும் குணங்களே வளரும் போது வந்தடைகிறது.சொன்னது நானல்ல!சிக்மெண்ட் ஃப்ராய்ட்.
கி.ரா. கோபல்லபுரத்து மக்கள்ள கலியைப்பத்தி ஒரு கதை சொல்லுவார். அதுதான் கவனம் வருகிறது:)
பெரியாரியல் என்ற பொரியலை உண்டு வளர்ந்த தாசனின் பரிணாம வளர் சிதை மாற்றம் தான் அவரின் மட(த)மாற்றம்.
//
rammy said...
பெரியாரியல் என்ற பொரியலை உண்டு வளர்ந்த தாசனின் பரிணாம வளர் சிதை மாற்றம் தான் அவரின் மட(த)மாற்றம்.
March 15, 2010 8:05 PM
//
repeatey!!!
இவர் ஏற்கனவே கொஞ்ச நாள் புத்த மதம் அப்படின்னு சொல்லிட்டு இருந்தாரு.
மனித மனம் சிக்கலானது, தேவைக்கேற்ப மாறுவது தவிர்க்கமுடியாது அவரவர் விருப்பம் அவ்வளவே.
//கி.ரா. கோபல்லபுரத்து மக்கள்ள கலியைப்பத்தி ஒரு கதை சொல்லுவார். அதுதான் கவனம் வருகிறது:)//
கதையும் சொல்லியிருந்தீங்கன்னா புன்முறுவல் புரிந்திருக்கும்.
//பெரியாரியல் என்ற பொரியலை உண்டு வளர்ந்த தாசனின் பரிணாம வளர் சிதை மாற்றம் தான் அவரின் மட(த)மாற்றம்.//
பெரியாரியல் கற்ற ஒரு முழு மனிதனையும் இது வரை காணக்கிடைக்கவில்லை.
//repeatey!!!//
அடிச்சு ஆடும் பின்னூட்டங்களுடன் வருவீர்களே,நேரக்குறைவா?வார்த்தைக் குறைவா:)
இன்னைக்கு ஒரு கடையும் தேறல.அதனால இன்னைக்கு உங்க கடையில டேரா.
//இவர் ஏற்கனவே கொஞ்ச நாள் புத்த மதம் அப்படின்னு சொல்லிட்டு இருந்தாரு.//
சொல்லவேயில்லை?அப்ப தாசனுக்கு இந்த ஊரு சூடு தாங்காது.
சேஷாசலம் கொள்கை மறந்து வருடங்கள் ஆகிவிட்டது!
இஸ்லாத்தில் இருந்து கொண்டே பெயரியல் பேரரசருக்கு சொம்பு தூக்கும் போது என்ன சொல்றாங்கன்னு பார்க்க ஆசை!
//சேஷாசலம் கொள்கை மறந்து வருடங்கள் ஆகிவிட்டது!//
தங்கள் அடையாளங்கள் என்ன என்பதை காட்டிக்கொண்ட சேஷாசலம்,ராஜசேகரனையெல்லாம் அப்படியே விளிக்கப் பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி வால்பையன்:)
Post a Comment