Followers

Friday, May 21, 2010

உயிர்

பரிணாம வளர்ச்சியே மனிதன் உருவானதுக்கு காரணமென்று ஒரு பக்கமும்,இறைவனே மனிதனை படைத்தான் என்று இன்னொரு பக்கமும் விவாதித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த இரண்டு கோட்பாடுகளுமே தவறானது,உயிரை செயற்கையாக உருவாக்கி விட முடியும் என்று 15 வருட உழைப்பின் ஆராய்ச்சி,140 மில்லியன் டாலர் செலவுடன் டாக்டர் வென்டர் என்ற சர்ச்சைக்குரிய அமெரிக்கரின் கண்டுபிடிப்பு இனி புதிய விவாதங்களை உருவாக்கும்.

டாக்டர் வென்டர் இன்னும் செயற்கையான உயிரை உருவாக்கி விடவில்லை.ஆனால் அதற்கான கோட்பாடுகளை கண்டுபிடித்திருக்கிறார்.கணக்கிலும்,விஞ்ஞானத்திலும் சராசரி மார்க் வாங்கிய காரணத்தால் விஞ்ஞான பதங்களை அப்படியே தமிழ்படுத்த இயலாமையால் சேனல்4 செய்தியின் சாரம்.

Dr Venter actually created artificial life. Not yet.

His micro-organism, says Jim Collins, Professor of Biomedical Engineering at Boston University in the Nature commentary "is synthetic in the sense that its DNA is synthesized, not in that a new life form has been created. Its genome is a stitched-together copy of the DNA of an organism that exists in nature, with a few small tweaks thrown in."

The organism whose DNA he copied and synthesised - the plasmid bacterium Mycoplasma mycoides that causes mastitis in goats - is one of the simplest organisms on Earth. Its single chromosome is just over a million base-pairs long; its cell lacks most of the structures found in more complex organisms.

Even so, Venter and his team got the synthesis of the genome letter-perfect, a considerable technical achievement. As it happens, they got one letter wrong at their first attempt and the bacterium failed to function.

That, in itself, should give pause to those who demand a moratorium on synthetic biology. It will be extremely difficult to scale up to the larger, more complex organisms needed to realise Dr Venter's ambition of designer microbes that can feed on carbon dioxide and excrete bio-fuels in a one-stop miracle solution to climate change.

But one day, make no mistake, it will be possible to sit in front of a computer and design the genome for a truly artificial life-form.

கூடவே காணொளியும் காண்பதற்கு: http://www.channel4.com/news/articles/science_technology/artificial+life+time+to+debate+implications/3655372


DNA கூறுகளை பாகுபடுத்திய காலத்திலிருந்தே மைக்ரோபயாலஜி பல அறிவியல் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.இனி வரும் காலங்களில் மைக்ரோபயலாஜி துறை இன்னும் பெரும் சாதனைகளை நிகழ்த்தும் சாத்தியங்கள் இருக்கின்றது.அதனால் கடவுள், கணினி,மதம்,வலைத்தளம் தேடுபவர்கள் கண்களை,மனங்களை அகன்ற விசாலத்துடன் வைத்துக்கொண்டு தேடுவது நல்லது.

Tuesday, May 18, 2010

மண்ணை நேசித்தவர்களுக்கு

சுதந்திர சுவாசத்திற்காக போரின் அவலங்களை நேரில் சந்தித்த குழந்தை,தாய்,பெண் போராளிகள்,உயிர் நீத்த மாவீரர்கள்,முள் வேலி சாட்சிகள் அனைவருக்கும் இந்த இடுகை சமர்ப்பணம்.


Sunday, May 16, 2010

நோம் சாம்ஸ்கிக்கு ஒரு சோதனை

நோம் சாம்ஸ்கி அமெரிக்க குடிமகனாக இருந்தாலும் உலகெங்குமிருந்து வந்து ஒன்று சேர்ந்த ஏனைய யூதர்களுக்கான இஸ்ரேலிய மண்வாசனைக்கான சொந்தம் கொண்டாடுவதில் அவருக்கும் பங்கு இருக்கிறது.அந்த உரிமையை அவர் கேட்காவிட்டாலும் பாலஸ்தீன ரமலா பகுதியில் இருக்கும் பிர் ஜெய்ட் பல்கலைக்கழகத்தில் பேருரை ஆற்றுவதற்காக இஸ்ரேலின் எல்லை ஜோர்டான் பகுதியை கடக்க முயற்சிக்கும் போது நுழைவு அனுமதி மறுக்கப்பட்டு 3மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு திருப்பி அனுப்ப பட்டார்.இந்த நிகழ்வு வேறு அரியணை அதிகார நினைவு ஒப்புமை கொண்டு வரலாம்.


வீரத்துக்கும்,வீர மரபின் வயதான தாய்க்கும் தமிழகத்தில் வேதனை என்றால் அமெரிக்க முதலாளித்துவ அத்துமீறல்களையும், போர்களையும், பாலஸ்தீன, இலங்கை மனித உரிமை மீறல்களையும் உலகிற்கு உரக்க சொல்லும் புத்திமான் நோம் சாம்ஸ்கி இஸ்ரேலில் சோதனை.பாலஸ்தீனிய பல்கலைக்கழகத்து மறுக்கப்பட்ட பேச்சை அவர் பேச முடியாத காரணத்தால் நோம் சாம்ஸ்கி சென்ற ஆண்டில் இலங்கை இனப்படுகொலை பற்றி என்ன சொன்னார் என்று பார்ப்போம்.

2009,செப்டம்பரில் ஐக்கிய நாடுகளுக்கான அமைப்பான R2P யில் நோம் சாம்ஸ்கி தனது கருத்தை வெளியிடும் போது

ருவாண்டா இனப்படுகொலைகளுக்கு நிகரான வன்முறைகள் இன்னொரு அளவில் நிகழும் போது மேற்கத்திய நாடுகள் கவலைப்பட வில்லை.முன்னெச்செரிக்கைக்கு நிறைய கால அவகாசம் இருந்தது.பல வருடங்கள் நிகழ்ந்த போரை நிறுத்தியிருக்க முடியும்.ஆனால் அதற்கான ஆர்வமில்லை என்பதோடு ஐக்கிய நாட்டின் R2P இலங்கையில் தோல்வியை கண்டது என்றார்.

இனி ஐக்கிய நாட்டின் R2P யின் கொள்கைகள் என்னவென்று பார்த்தால்

R2P, the Responsibility to Protect

//The Responsibility to Protect (RtoP or R2P) is a norm or set of principles based on the idea that sovereignty is not a privilege, but a responsibility. RtoP focuses on preventing and halting four crimes: genocide, war crimes, crimes against humanity, and ethnic cleansing.[1] The responsibility to protect can be thought of as having three parts.

1. A State has a responsibility to protect its population from genocide, war crimes, crimes against humanity and ethnic cleansing (mass atrocities).

2. If the State is unable to protect its population on its own, the international community has a responsibility to assist the state by building its capacity. This can mean building early-warning capabilities, mediating conflicts between political parties, strengthening the security sector, mobilizing standby forces, and many other actions.

3. If a State is manifestly failing to protect its citizens from mass atrocities and peaceful measures are not working, the international community has the responsibility to intervene at first diplomatically, then more coercively, and as a last resort, with military force.[2]

In the international community, RtoP is a norm, not a law. RtoP provides a framework for using tools that already exist (like mediation, early warning mechanisms, and economic sanctioning) to prevent mass atrocities. Civil society organizations, States, regional organizations, and international institutions all have a role to play in the operationalization of RtoP. The authority to employ the last resort and intervene militarily rests solely with United Nations Security Council and the General Assembly.

In order to implement RtoP, States and regional organizations need to have the necessary resources to prevent and halt mass atrocities, i.e. early warning mechanisms, stand-by forces in problem areas, mediation mechanisms, etc. These resources and the necessary capacity building must come from the international community, which has a historic pattern of remaining uninvolved.//

Courtesy http://en.wikipedia.org/wiki/R2P

வரலாறுகள் காதால் கேட்டவர்களும்,படித்தவர்களும் பாடங்கள் படிப்பதாக காணோம்.சுனாமிகளும்,கடலில் கொட்டிய எண்ணெயும்,பூகம்பங்களும்,எரிமலை சாம்பல்களை கோபத்தில் கக்கிக் கொண்டு மனித அவலங்களும்,அன்றாட வாழ்வின் அழகியலும் ஒன்றோடொன்று போட்டியிட்டுக்கொண்டு உலகம் அதன் சுற்றில் நகர்கிறது.

உலக நிலை இப்படியென்றால் பறக்கும் தட்டு,வேற்று கிரக மனிதர்கள் என்று ஹாலிவுட் படங்களுக்கே உரிய கற்பனைகள் எல்லாம் உண்மையாக இருக்கலாம் என்கிற மாதிரி ஸ்டீபன் ஹாக்கின் வேற்று கிரக மனித வாசிகள் நுண்ணியிர் வடிவமாகவோ அல்லது வேறு உருவிலோ இருக்க சாத்தியமுண்டு.இவர்களுடன் மனிதர்கள் தொடர்பு வைத்துக் கொள்வது நல்லதல்ல என்ற குண்டை வேறு தூக்கிப் போடுகிறார்.செவ்வாய் கிரகம் போய் சாயா கடை போடும் இந்திய கனவெல்லாம் என்ன ஆகுமோவென்ற கவலையுடன் முடிக்கிறேன்.

Saturday, May 15, 2010

யோக நிலைகள்

பல்லவி

சலசலக்கும் அருவி தென்றல் காற்று
சூரிய உதய பறவைகளின் பயணம்
இவையெல்லாம் பாடியவர்கள் ஏராளம்
பலர் பாடாத பாட்டொன்று நான் பாட வந்தேன்

சரணம்

தப்பில்லா நசரேயனின் கணினி தட்டு
கண்ணாடி பார்க்காத தாடி வழித்தல்
கத்திரிக்கோலின் சிகையலங்காரம்
பள்ளி மாணவன் மனப்பாடம்
மை கொட்டாத பேனா
முதன் முதலில் எழுதிய கவிதை
தூண்டிலில் சிக்கும் மீனின் அசைவு
கடகட காய்கறி வெட்டும் பெண்களின் கத்தி
முந்தைய காலத்து நெல் குத்தல்
தூக்கத்தில் சந்தைக்கு பயணிக்கும் விவசாயி
அதில் லயம் கொஞ்சமும் தவிராத மாடு

அனுபல்லவி

சிரிக்காத புத்தனுக்கு போதி மரமும்
ஐசக் நியூட்டனுக்கு ஆப்பிளும்
ஞானம் தந்தது மாதிரி
அம்மணிக்கு ச்மையலுக்கு உதவ
கீரை அரியலில் எனக்கு வந்த ஞானோதயம்.

டிஸ்கி: வார்த்தைகளின் நடனமே கவிதையென்றால்
இதுவும் கட்டுடைப்பு கவிதையே.

Thursday, May 13, 2010

அமைச்சர் ராஜாவுக்கு ஒரு வக்காலத்து

பக்கசார்புகள் இல்லாமல் சமூக நிகழ்வுகளை பிரதிபலிப்பதே பதிவுலகின் வெற்றியாக இருக்குமென்று நினைக்கின்றேன்.உண்மையான தமிழக மக்கள் மனநிலை எப்படியென்பதை முன்பெல்லாம் தேர்தல் முடிவுகள் சொல்லி விடும்.இப்பொழுது ஓட்டுக்கும் காசு என்ற புதிய அரசியல் அடிச்சுவடியில் தேர்தலின் முடிவுகளையும் கூட நம்ப இயலாது என்ற பாடத்தை 2009ம் வருடத்துக்கான பாராளுமன்றத் தேர்தலும் அதனைத் தொடர்ந்த தமிழக இடைத்தேர்தல் முடிவுகளும் வெளிப்படுத்தியுள்ளன.

பதிவுலக பார்வையில் கருணாநிதி மீதும்,தி.மு.க மீதும் கோபங்களையும், எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்தும் இடுகைகளே அதிகம் காணப்படும் நோக்கில் பார்த்தால் இந்த கோப உணர்வுகளை வெளிப்படுத்துபவர்கள் பெரும்பாலும் முந்தைய தி.மு.க ஆதரவு கொண்டவர்களாகவே இருப்பார்கள் என நினைக்கிறேன்.முந்தைய தி.மு.க எதிர்ப்புக்காரர்கள் ஒன்று அடக்கி வாசிக்கிறார்கள் அல்லது மடத்து அரசியல் மாற்றங்களால் ஜெ விட கா விட்ட க மேல் என்ற நிலைக்கு வந்திருக்கலாம்.எஸ்.வி.சேகரின் மொக்கை நாடகத்தின் வார்த்தை கட்டித் தழுவல்களும் நகைப்பைத் தரும் பாராட்டுரைகளும் அதனைத் தொடர்ந்த கட்சித் தாவல் முத்திரையும் கூட இதனையெல்லாம் உறுதிப் படுத்துகின்றன.ஆனால் பதிவுலகைப் பொறுத்த வரையில் கருணாநிதியின் நேசங்கள் நாசங்களாய் போன பின் அவர் மேல் உள்ள கோபத்தின் வெப்பம் அமைச்சர் ராஜாவையும் சுடுகிறதென்றே நினைக்கின்றேன்.ஆனானப்பட்ட டாடாவுக்கே பூச்சாண்டி காட்டிய பரம்பரைக்கு ஸ்பெக்ட்ரம் ஊதி தள்ளி விடக்கூடிய விசயம் என்பதை இது கார்பரேட் சண்டை என்ற காங்கிரஸ் தீர்ப்பின் துணை போதும்.

ஸ்பெக்ட்ரம் என்ற சொல் கடந்த ஆண்டுகளில் இருந்து புகைந்து கொண்டே இருக்கிறது.இப்பொழுது ஹெட்லைன்ஸ் டுடே ஸ்பெக்டரம் தொடர்பாக கார்பரேட் லாபியிஸ்ட் நீரா ராடியாவிற்கும்,அமைச்சர் ராஜாவுக்குமிடையில் நிகழ்ந்த பேச்சு வார்த்தையின் பதிவுகள் தம்மிடமிருப்பதாக கூறுகிறது.இந்த பேச்சு வார்த்தைகள் காங்கிரஸ் கூட்டணி 2009ல் இரண்டாம் முறையாக ஆட்சி அமைக்கும் துவக்க காலம் வரையிலான பேச்சுக்கள் என்பதையும் வருமான வரித்துறையால் சி.பி.ஐ அங்கீகாரத்துடன் பதிவு செய்யப்பட்டது என்றும் ஹெட்லைன்ஸ் டுடே சொல்கிறது.தம்மிடம் இருக்கும் ஆதாரங்களை இந்தியர்கள் முன் கொண்டு வருவதும் அதனுடைய நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவது மட்டுமே ஹெட்லைன்ஸ் ஊடகத்தின் பணியாக இருக்கவேண்டும்.மாறாக பயணத்தில் இருக்கும் ஒரு அமைச்சரை விமானதளத்தில் பேட்டி காண்பது ஜனநாயக மரபாக இருந்தாலும் கூட நச்சரித்து கேள்வி கேட்பது விமான பயணத்தில் இருக்கும் யாருக்கும் கோபத்தை உண்டாக்கும்.

ஹெட்லைன்ஸ் டுடே பேட்டிகாட்சியை அவர்களது தளத்திலேயே வெளியிட்டிருந்தார்கள்.அதனைக்காணும் போது அமைச்சர் ராஜாவின் கோபத்துக்கான ஊடக நிருபர் பெண்ணின் எரிச்சலூட்டும் தொடர் கேள்விகளின் முறைகளே கோபத்திற்கான காரணமாக தெரிகிறது.It could be with an intention of framing Mr.Raja too. வித்தைகள் கற்ற வித்தகர் டி.ஆர்.பாலு ஒரே வார்த்தையில் get lost சொல்லி தப்பித்துக் கொண்டார்.

Thursday, May 6, 2010

சிரிச்சிகிட்டே அழுதுக்கலாம்

ஐரோப்பாவிலிருந்து Euronews ன்னு தொலைக்காட்சியில No comments ன்னு ஒரே ஒரு நிமிட நிகழ்ச்சி ஒவ்வொரு நாளுக்குமான ஏதாவது ஒரு செய்தியை மெளனமாக சொல்லும்.அந்த மாதிரி ஒரே நிமிடத்தில் கண்ணில் பட்டவை!வானம்பாடிகள் பாலா கண்ணுல மட்டும் பட்டிருந்தா?

காங்கேயம் காளைகளை காக்க வேண்டும்:காங்கிரஸ்

ஜல்லிக்கட்டு விளையாட தயாரா? காங்கிரசுக்கு கலைஞர் கேள்வி!

விரும்பும் இடங்களில் ஜல்லிக்கட்டு: அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தல்

அரசியல்வாதிகளால் நாட்டுக் கோழி இனமே அழிந்து விட்டது:பா.ம.க ஆதங்கம்

ஜெயலலிதா மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு


திட்ட ஒதுக்கீட்டில் மத்திய,மாநில அரசின் பங்கு எவ்வளவு?விஜயகாந்த் கேள்வி

கேரளா செல்லும் சாலைகளை உடைப்போம்:வை.கோ


இந்தியன் படம் எடுத்த இடத்தில் ரகளை:2 வக்கீலுக்கு வெட்டு

சென்னை வந்தது பிரான்ஸ் மோ(போ)ர் கப்பல்

சென்னை:சப் இன்ஸ்பெக்டரை கடத்தியதால் பரபரப்பு


செம்மொழி மாநாடு: ரூ 51/2 கோடி செலவில் பந்தல்.

Wednesday, May 5, 2010

எல்லைகளற்ற ஊடகவியளாளர்களுடன் கோத்தபய

அர்னால்ட் ஸ்வாஸ்னிகர் நடித்த Predator பார்க்கும் போது அர்னால்ட்,கதையின் காட்சியமைப்பு,மரத்திலிருந்து திடீரென தோன்றும் மனித,மிருக,இயந்திரக் கலவை மட்டுமே கண்முன் நின்றது.Predator என்ற சொல் ஒரு மிருகம் இன்னொருவரை கொல்கிறது என்ற பொருளில் எடுக்கப்பட்ட படம்.

Predators!இந்த சொல்லுக்கு சுயலாப வன்முறையாளர்கள் 2010 (Predators 2010) என்ற தலைப்பில் எல்லையில்லா ஊடகவியளாளர்கள் அமைப்பு (Reporters Without Borders) 40 பெயர்களை பட்டியலிடுகிறது இங்கே.பொதுவான உலக நிகழ்வுகளை உற்று நோக்குபவர்களுக்கு பெயரிடப்பட்டுள்ள 40 பெயர்களில் ஏதாவது ஒன்றுக்கு மறுப்பு தருவார்களா என்பது சந்தேகம்.இதில் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவின் பெயரும் இடம் பெறுகிறது.இவர் பற்றிய எல்லைகளற்ற ஊடகவியளாளர்கள் அமைப்பு சொல்லும் இன்னுமொரு கட்டுரை இது.


நீங்கள் மனித உரிமை மீறல்கள் நிறைய செய்துள்ளீர்கள் என்று மனிதாபிமானமாக நாம் குரல் கொடுத்தால் தமிழன் என்று முத்திரை வந்து விடுகிறது.தமது சம உரிமைகளுக்கான ஆயுத போராட்டங்கள் தற்போது மௌனித்து விட்ட நிலையில் தார்மீகமாக நாடுகடந்த தமிழீழ அரசு என வாக்கு அரசியலில் குரல் கொடுத்தாலும் பயங்கரவாதத்தின் இன்னொரு பக்கம் என்று இலங்கையின் பிரதம மந்திரி D.M. ஜெயரட்னா வர்ணம் பூச முயல்கிறார்.அடிமைகளாய் இரு!அதுவே சுகம் தரும் தமிழனுக்கு.

பிரபாகரன் தலைமையிலான பேச்சுவார்த்தை கால கட்டங்களில் இலங்கை அரசு சார்பாக முதன்மை வகித்தவரும் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பெரிஷ் நாடுகடந்த தமீழீழ அரசு பற்றி அக்கறையில்லையென்று சொல்லி விட்டு இதனைத் தடுப்பதற்கான வழிகளை அரசு ஆராயும் என்கிறார்.

இலங்கையின் உள் வண்டவாளங்களை சிலசமயம் டெய்லி மிரர் உலகின் கண்முன் கொண்டு வந்து விடுவதன் காரணமாகவோ அல்லது தமிழகத்திலிருந்து இலங்கை சில விசயங்களை கற்றுக்கொள்வதனலோ போலிஸ் திருடன் விளையாட்டை....இல்லை போலிஸ் பத்திரிகையாளர் விளையாட்டை இங்கே நடத்தியிருக்கிறது.


ஊடக சுதந்திர தினத்துக்கான நாளில் ஊடகவியளாளர் திசநாயக்காவிற்கு மகிந்த ராஜ பக்சே பொது மன்னிப்பு அளித்ததன் அரசியல் உட்காரணங்கள்,அழுத்தங்கள்,மனசாட்சி என்று எதுவாக இருந்தாலும் வல்லூறு அரசியலின் பிடியிலிருந்து மெல்ல விலகும் திசநாயகத்துக்கான பொதுமன்னிப்பை வரவேற்க வேண்டியது அவசியமாகிறது.ஏனைய சுதந்திரமான பட்டங்கள் அவரது ஊடக வாழ்க்கைக்கு மகுடங்களைத் தந்தாலும் உடல்,மனரீதியான அழுத்தங்களிலிருந்து தன்னை மீண்டும் சிறிதளவாவது தன்னிலைப்படுத்திக் கொள்ள இந்த நடவடிக்கை உதவும்.

இதன் பாதையில் இலங்கையின் சுய,பொது லாபங்களுக்காக வேண்டியாவது முகாம்களில் இருக்கும் மக்கள் சுதந்திரமாக நடமாடவும் தங்கள் சொந்த மண்ணில் தமது வாழ்வை புதுப்பித்துக் கொள்ளவும் வழிகள் பிறக்க வேண்டும்.

Tuesday, May 4, 2010

ஒட்டு

முன்பு ஜார்ஜ் புஷ்,டோனி பிளேர் போன்றவர்கள் வெள்ளை மாளிகையில் புல்வெளியில் உலாவும் போது காலாற நடக்கிறார்கள் என்றே நினைத்திருந்தேன்.வெள்ளை மாளிகையின் சுவர்களுக்கும் கூட பேசும் திறன் இருக்கலாமென கருதி சில ரகசிய பேச்சுக்களை புல்வெளியில் நடந்து கொண்டே பேசுவது மிகுந்த பாதுகாப்பாக இருக்கும் என்று கருதியும் கூட ஒருவேளை நடைப்பயிற்சி செய்து இருக்கலாம்.உலகளாவிய அளவில் சிறந்த ஒட்டுக்கேட்கும் கதாநாயகன் ஜேம்ஜ்பாண்ட் 007.அசலா CIA, KGB, Scotlandyard மற்றும் Interpol போன்ற நிறுவனங்கள் எனலாம்.இவைகளெல்லாம் மடியிலே கனமிருப்பவர்களுக்கு மட்டுமே.அரசியல் ரீதியாக எங்கே எப்படியெல்லாம் ஒட்டுக் கேட்கப்பட்டதோ ஆனால் வெற்றிக்கோப்பையைக் கைப்பற்றியது வாட்டர்கேட் ஊழல் என்ற நிக்சன் காலத்து ஒட்டு.

மக்களாட்சியை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்வதில் ஒட்டுக்கேட்டல் என்ற அரசியல் மீறல்களும் கூட வெளிச்சத்துக்கு வந்து விடுவதுதான்.மக்களாட்சி தத்துவத்தில் ஒட்டுக்கு வழிகாட்டிய அமெரிக்காவுடன் நாமும் போட்டி போடாவிட்டால் எப்படி என இந்தியாவும் இப்போது தனது ஒட்டு பங்களிப்பை செய்கிறது.

ஒட்டுக்கேட்டல் இந்திய பாராளுமன்றத்திலேயே ஒலிக்கும் போது ஆளுநர் பதவியில் ஆற அமர்ந்து இருப்பதன் காரணம் கொண்டோ மிட்டாய்க்கடை,பணியாளர்கள் குரல்கள் மட்டுமே கிட்டும் பழக்கதோசத்தின் துக்கத்திலோ ஒட்டுக்கேட்டலின் மகிமையை ஒருவர் டமாரம் கொட்டுகிறார்.


இப்போதைய காலத்து அரசியலில் கல்லறை வரை ரகசியத்திருடர்கள் என இருவரைக் குறிப்பிடலாம்.ஒன்று முந்தைய பிரதமர் நரசிம்ம ராவ். அடுத்து எம்.கே.நாராயண். ஒரு பீரோகிராட்டிக்காக நரசிம்ம ராவை விட ரகசியங்களை எம்.கே நாராயண் தன்னகத்தே வைத்திருக்க கூடும்.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,நேபாளம்,பங்ளாதேஷ், சீனா, அமெரிக்கா என இவரது பங்களிப்பை சரித்திரம் எழுதி வைக்க மறந்து போனாலும் ஈழத்தமிழர்களின் ரத்தக்கறையின் பங்காளிகளில் ஒருவர் என்பதை தமிழக வரலாறு நிச்சயம் எழுதி வைக்கும்.


இனி திருவிளையாடல் ஸ்டைலில்

வாசிப்பின் சுகத்துக்கு

மால்குடி நினைவுகள் ஆர்,கே.நாராயண்

ஒட்டு கேட்கும் சுகத்துக்கு

எம்.கே.நாராயண்

ஒட்டு கேட்பது சுகம் என்ற அவரது திருவாய் மலர்ந்தது இங்கே


இனி அரசியலுக்கும் அப்பால் கொஞ்சம் ஒட்டும்,ஒட்டு சார்ந்த இடங்களையும் காணலாம்.

ஹலோ யார் பேசறது வடிவேலுவுக்கும் முன்பான க்ராஸ்டாக் பேச்சுக்களின் ஒட்டுக்கேட்டல் எல்லோருக்கும் இலவசம்.ஆனா லாட்டரி மாதிரி யார் யாருக்கு என்ன டயலாக் மாட்டுமென்பது கண்ணதாசன் பாடலின் இறைவன் கொடுத்த வரம்.இருந்தும் மொபல்களுக்கும் முன் யூத்களுக்கு ஒட்டுக்கேட்பதில் எல்லாம் விருப்பமிருப்பதில்லை.மாறாக ஒட்டுக்கேட்கும் நிறுவனத்தின் வருமானத்தில் கைவைக்கும் படியாக ஒற்றை ரூபாய் நாணயத்தில் நூலைக்கட்டி நண்பனுக்கோ காதலிக்கோ கடலை போட்டு விட்டு காசை திருப்பி எடுத்துக் கொள்வதுடன் சரி.ஒரு முறை கல்லூரி சேர்மன் பிரின்சிய திட்டனுமென்று டெலபோன் முகத்துக்கு கர்சீப் போட்டு கரகர என்று கத்தினான்.அந்தப்புறம் அவர் கத்த இங்கே இவன் கத்த பக்கத்திலிருந்த அல்லக்கைகளான எங்களுக்கு ஒரே ஒட்டு கேட்ட சிரிப்பு.

கிணற்று மேடு,குழாயடி,அலுவலக கேன்டீன்,பேன் பார்த்துக் கொண்டே பக்கத்து வீட்டு கதைகள் என பெண்களின் ஒட்டுப்பேச்சு இலக்கிய தரத்து பிரபலம்.ஏதோ பக்கத்துல இருந்து ஒட்டு கேட்ட மாதிரி சினிமா கிசு கிசுன்னு ஒன்று இருக்குது.பத்திரிகை கிசு கிசு படிக்கிறதுன்னா லட்டு மாதிரி ஜொள்ளு விடற வயசுல.அப்புறம் நிருபருக்கு காசு கொடுத்து நடிகரோ, நடிகையோ,நடிகையோட அம்மாவோ செய்யும் வியாபார மார்க்கெட் தந்திரமின்னு தெரிஞ்சப்புறம் உப்பு,காரமில்லாத பத்தியம் மாதிரி ஆயிடுச்சு.சமீபத்துல சிம்பு நயன்தாரா உதடு கடி வியாபார சந்தைப்படுத்தலின் ஒரு உதாரணம்.சமீபத்தில் ஒரு பதிவர் இன்னொரு சமீபத்துக்களை கிசு கிசுத்திருந்தார்.இதுவும் ஒட்டு கேட்டலின் உள்ளடக்கம்.எங்கேயோ துவங்கி எங்கேயோ மொக்கை ஓடுது. ஜூட்.

Sunday, May 2, 2010

நாடு கடந்த தமிழீழ வேட்பாளர்கள்.

தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தொலைக்காட்சி ஊடகம் இருந்த போதும், தேர்தல் காலத்திலும் கூட வேட்பாளாராக அல்லாத இரண்டு அல்லது மூன்று பேரை அழைத்து சில கருத்துப் பகிர்வுகளுடனும், தேர்தல் கணிப்புக்களுடனும்,இறுதி வாக்கெடுப்பையும் கூட கட்சிகளுக்கு சாதகமாக அதிகரித்தோ அல்லது குறைத்தோ நேரலையில் சொல்லி விட்டு வழக்கம் போல் மெகா, திரைப்படம், செய்தி இன்னபிற விளம்பரத்துடன் தமது அரைத்த மாவை அரைக்க துவங்கி விடுவது வழக்கம்.

இதற்கெல்லாம் மாறாக நேற்றும்,முந்தைய தினமும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைப்பதற்கான வாக்கெடுப்பு நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஜி.டி.வியில் காண நேர்ந்தது.பல துறைகளிலிருந்தும் தமிழீழம் அமைப்பதற்காக நாடுகடந்த தமீழீழ அரசு வேட்பாளார்களாக பலரையும் ஜி.டி.வி அறிமுகம் செய்து வைத்தது.ஒரு புறம் நண்டுக்கதை மாதிரி காலைப் பிடித்து இழுக்கும் தமிழன்,இன்னொரு புறம் இலங்கை அரசின் குற்றவியல்களைக் கூட சரியான தீர்ப்பு என்று மனதுக்குள்ளும் எழுத்திலும் வெளிப்படுத்தும் இவர்கள் என்ன செய்கிறார்களென்று அறியாமல் இருக்கிறார்கள் என்ற இயேசுவின் வசனத்துக்கு சொந்தக்காரர்கள்,இன்னுமொரு புறம் உரிமைக்கும்,சுதந்திர உணர்விக்கும் குரல் கொடுப்பவர்கள் தீவிரவாத முத்திரைக்காரர்கள் என்று குரல் எழுப்பி விட்டு ஒரு விடியலுக்கான விடையையும் சொல்லத் தெரியாமல் குட்டையைக் குளப்பி குளிர்காயும் கூட்டம்.இவைகளுக்கும் மத்தியில் இப்பொழுது இருக்கும் தருணத்தை விட்டு விட்டால் இனியும் தமது உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சந்தர்ப்பமே இல்லாது போகும் என்று புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து ஒரு உயர்ந்த காரணத்துக்காக தங்கள் முகங்களை உலகுக்கு காட்டும் தமிழர்கள் என நூல் சிக்கல்களுனூடே ஒரு குழப்பமான சூழல்.

அப்படியிருந்தும் மேடை மயக்கப் பேச்சுகள்,நிலம் தழுவும் துண்டு,தேர்தல் வாகனத்து கைகூப்பல்,காசுக்கும், பிரியாணி பொட்டலத்துக்கும் விலை போகும் வாக்காளர்கள், எதிர்க்ட்சி வசவுகள் என்று தமிழகத் தேர்தலின் சிறு நாற்றம் கூட இல்லாமல் வேட்பாளர்களை அறிமுகப்ப்டுத்தும் நிகழ்ச்சியாளருக்கு இருபுறமும் பெண்,ஆண்கள் என நாடு கடந்த தமிழீழ அரசு வேட்பாளர்களையும்,அவர்களது மொழி ஆளுமையாக தமிழ்,ஆங்கிலமென தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள்.மேலை நாட்டு வாழ்க்கை ஒரு சிலருக்கு சிறிது மொழி தடுமாற்றத்தை தந்தாலும் உடைநாகரீகம், அவை நாகரீகம், அரசியல் அகன்ற பார்வை போன்ற சிறப்புக்களை கற்றுத்தந்துள்ளதை காண முடிந்தது.ஒரு சிறந்த அரசியல் கலந்துரையாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தது தொலைக்காட்சி நிகழ்ச்சி.

நிகழ்ச்சியாளர் வேட்பாளர்களிடம் கேட்ட வெளிப்படையான கேள்விகளில் சில:

ஈழத்தில் வாழும் மக்களுக்கு,குறிப்பாக அகதி முகாம்களில் வாழும் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதியாக நீங்கள் எந்த விதத்தில் உதவ முடியும்?

உங்களையும் பயங்கரவாதிகள் என்ற பட்டியலில் இலங்கை அரசு சேர்க்க முயற்சித்தால் எப்படி அரசியல் ரீதியாக அணுகுவீர்கள்?

(தமிழக முதல்வரின் ஸ்டைலில்) நாடுகடந்த தமிழீழம் அமைப்பதன் மூலம் ராஜபக்சே கோபித்துக்கொண்டு அகதிமுகாம்களில் இருக்கும் மக்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்த மாட்டாரா?

உங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கிறீர்களா?

தமிழகத்தில் சாராயக்கடைகளின் உரிமையாளர், கட்சிக்காகஅடிதடி, கொலைக்கேசு என்பது மாதிரியான தகுதி அடிப்படையில்லாமல், வேட்பாளர்களின் தகுதிகளாய் மருத்துவராய், ஆசிரியராய், பாராளுமன்ற பிரதிநிதிகளுடன் தொடர்பு, ஐ.நா, செஞ்சிலுவை சங்கம் போன்றவற்றுடன் இணைந்து செயல்படும் அரசு சாரா நிறுவனத்துடன் பணிபுரிபவர், இசையாளர், முந்தையப் போராளியும் டென்மார்க் பல்கலைக்கழகத்தில் மேநிலை ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்,தமிழ் நூல்களை அச்சிட்டவர் இன்னும் பலர் என புலம் பெயர்ந்த நாடுகளில் தங்கள் தகுதியை முத்திரை பதித்த சமூக, தமிழ் உணர்வாளர்களென அறிமுகமே சோர்ந்து போன நம்பிக்கைகளை மெல்ல எட்டிப்பார்க்க செய்கிறது. இது கூடி தேர் இழுக்கும் முயற்சி. நகராத தேர்களென்று இது வரை ஏதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அப்படியிருந்தும் குழு மனப்பான்மை கோபங்களால்,கருத்து மாறுபாடுகளால்,தமிழர்களின் முன்னெடுப்புக்களை ராஜதந்திர ரீதியாக தோற்கடித்து விடவேண்டும் என்ற கங்கணம் என்ற விசப்பரிட்சைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயங்கள் இருக்கிறது. இவைகளுக்கும் மேலாக நிலத்தில் வாழும் மக்களுக்கு தங்கள் வாழ்வாதாரத்தை நிர்ணயித்துக்கொள்ளும் பொருளாதார வளமை, மக்கள் மனதில் நம்பிக்கையேற்படுத்தும் வல்லமை,நிலத்தையும், புலத்தையும் இணைக்கும் வல்லமை, கூடவே வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கப் போனால் திமிங்கலத்தின் வாய்க்குள் நுழைந்து விடும் தூண்டில் என தமிழக,இந்திய அரசியல் தடுமாற்றங்கள் என போராட்டம் எளிதாக இருக்கப் போவதில்லை.ஆனாலும் ஜனநாயக ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என்ற முத்திரையுடன் உலக அரங்கை சந்திக்க இதை விட வேறு வலிமையான ஆயுதமும் இல்லை.தேர்தல் முடிவுகள் நாளை எந்த விதமான எதிர்காலத்தை முன் வைக்கிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம்.