பல்லவி
சலசலக்கும் அருவி தென்றல் காற்று
சூரிய உதய பறவைகளின் பயணம்
இவையெல்லாம் பாடியவர்கள் ஏராளம்
பலர் பாடாத பாட்டொன்று நான் பாட வந்தேன்
சரணம்
தப்பில்லா நசரேயனின் கணினி தட்டு
கண்ணாடி பார்க்காத தாடி வழித்தல்
கத்திரிக்கோலின் சிகையலங்காரம்
பள்ளி மாணவன் மனப்பாடம்
மை கொட்டாத பேனா
முதன் முதலில் எழுதிய கவிதை
தூண்டிலில் சிக்கும் மீனின் அசைவு
கடகட காய்கறி வெட்டும் பெண்களின் கத்தி
முந்தைய காலத்து நெல் குத்தல்
தூக்கத்தில் சந்தைக்கு பயணிக்கும் விவசாயி
அதில் லயம் கொஞ்சமும் தவிராத மாடு
அனுபல்லவி
சிரிக்காத புத்தனுக்கு போதி மரமும்
ஐசக் நியூட்டனுக்கு ஆப்பிளும்
ஞானம் தந்தது மாதிரி
அம்மணிக்கு ச்மையலுக்கு உதவ
கீரை அரியலில் எனக்கு வந்த ஞானோதயம்.
டிஸ்கி: வார்த்தைகளின் நடனமே கவிதையென்றால்
இதுவும் கட்டுடைப்பு கவிதையே.
10 comments:
//சிரிக்காத புத்தனுக்கு போதி மரமும்
ஐசக் நியூட்டனுக்கு ஆப்பிளும்
ஞானம் தந்தது மாதிரி
அம்மணிக்கு ச்மையலுக்கு உதவ
கீரை அரியலில் எனக்கு வந்த ஞானோதயம்.///
ரசித்த வரி.... அருமை...
லேபில்ல கவிதைன்னு போட்டா கவிதைதான். அந்த துணிச்சல்லதான் நம்ம கடை போய்க்கிருக்கு. நீங்க வேற பீதிய கெளப்பாதீங்க.:))
நடா....என்ன ராகம்,என்ன தாளம் ன்னு போடல நீங்க.அப்பிடியே பாடிக் காட்டியிருந்தீங்கன்னாலும் நல்லாருக்கும்.
கீரை வெட்றப்போ இவ்ளோ ஞானமா !அப்பா....டி !
ஆக்கா... சங்கீதம் சங்கீதம்...
//சிரிக்காத புத்தனுக்கு போதி மரமும்//
ஹா... ஹா .....
////சிரிக்காத புத்தனுக்கு போதி மரமும்
ஐசக் நியூட்டனுக்கு ஆப்பிளும்
ஞானம் தந்தது மாதிரி
அம்மணிக்கு ச்மையலுக்கு உதவ
கீரை அரியலில் எனக்கு வந்த ஞானோதயம்.///
ரசித்த வரி.... அருமை...//
இர்ஷாத்!நன்றி!வாங்க ஜோதியில கலந்துக்குங்க.
நீங்க ஏன் இரண்டாம் ஆட்டம் போடுறீங்க?
//லேபில்ல கவிதைன்னு போட்டா கவிதைதான். அந்த துணிச்சல்லதான் நம்ம கடை போய்க்கிருக்கு. நீங்க வேற பீதிய கெளப்பாதீங்க.:))//
இப்படியும் ஒரு டெக்னிக் இருக்குதா?சொல்லவேயில்ல:)
//நடா....என்ன ராகம்,என்ன தாளம் ன்னு போடல நீங்க.அப்பிடியே பாடிக் காட்டியிருந்தீங்கன்னாலும் நல்லாருக்கும்.
கீரை வெட்றப்போ இவ்ளோ ஞானமா !அப்பா....டி !//
ராகம்,தாளம் தெரிஞ்சிருந்தா நாங்களும்
எம்.எஸ்.வி,இளையராஜா,ஏ.ஆர்.ரகுமானுக்கு போட்டியா வந்திருக்க மாட்டோம்?
கீரை வெட்றத விட வெங்காயம் வெட்டுறதில இருக்குற ரிதம் இருக்குதே! ஆஹா!
//ஆக்கா... சங்கீதம் சங்கீதம்...//
லகலக ப்ரியா!இது கவிதை!
கான மயிலாட கண்டிருந்த வான் கோழி கேள்விப்பட்டிருப்பீங்களே!
////சிரிக்காத புத்தனுக்கு போதி மரமும்//
ஹா... ஹா .....//
சிரிக்காதீங்க!நவீன புத்தர்கள் சிரித்தால் அர்த்தம் வேற.
போன இடுகையின் பின்னூட்ட மறுமொழியில் உங்கள் பெயர் குறிப்பிட்டிருந்தேன் படித்தீர்களா?
Post a Comment