Followers

Wednesday, May 5, 2010

எல்லைகளற்ற ஊடகவியளாளர்களுடன் கோத்தபய

அர்னால்ட் ஸ்வாஸ்னிகர் நடித்த Predator பார்க்கும் போது அர்னால்ட்,கதையின் காட்சியமைப்பு,மரத்திலிருந்து திடீரென தோன்றும் மனித,மிருக,இயந்திரக் கலவை மட்டுமே கண்முன் நின்றது.Predator என்ற சொல் ஒரு மிருகம் இன்னொருவரை கொல்கிறது என்ற பொருளில் எடுக்கப்பட்ட படம்.

Predators!இந்த சொல்லுக்கு சுயலாப வன்முறையாளர்கள் 2010 (Predators 2010) என்ற தலைப்பில் எல்லையில்லா ஊடகவியளாளர்கள் அமைப்பு (Reporters Without Borders) 40 பெயர்களை பட்டியலிடுகிறது இங்கே.பொதுவான உலக நிகழ்வுகளை உற்று நோக்குபவர்களுக்கு பெயரிடப்பட்டுள்ள 40 பெயர்களில் ஏதாவது ஒன்றுக்கு மறுப்பு தருவார்களா என்பது சந்தேகம்.இதில் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவின் பெயரும் இடம் பெறுகிறது.இவர் பற்றிய எல்லைகளற்ற ஊடகவியளாளர்கள் அமைப்பு சொல்லும் இன்னுமொரு கட்டுரை இது.


நீங்கள் மனித உரிமை மீறல்கள் நிறைய செய்துள்ளீர்கள் என்று மனிதாபிமானமாக நாம் குரல் கொடுத்தால் தமிழன் என்று முத்திரை வந்து விடுகிறது.தமது சம உரிமைகளுக்கான ஆயுத போராட்டங்கள் தற்போது மௌனித்து விட்ட நிலையில் தார்மீகமாக நாடுகடந்த தமிழீழ அரசு என வாக்கு அரசியலில் குரல் கொடுத்தாலும் பயங்கரவாதத்தின் இன்னொரு பக்கம் என்று இலங்கையின் பிரதம மந்திரி D.M. ஜெயரட்னா வர்ணம் பூச முயல்கிறார்.அடிமைகளாய் இரு!அதுவே சுகம் தரும் தமிழனுக்கு.

பிரபாகரன் தலைமையிலான பேச்சுவார்த்தை கால கட்டங்களில் இலங்கை அரசு சார்பாக முதன்மை வகித்தவரும் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பெரிஷ் நாடுகடந்த தமீழீழ அரசு பற்றி அக்கறையில்லையென்று சொல்லி விட்டு இதனைத் தடுப்பதற்கான வழிகளை அரசு ஆராயும் என்கிறார்.

இலங்கையின் உள் வண்டவாளங்களை சிலசமயம் டெய்லி மிரர் உலகின் கண்முன் கொண்டு வந்து விடுவதன் காரணமாகவோ அல்லது தமிழகத்திலிருந்து இலங்கை சில விசயங்களை கற்றுக்கொள்வதனலோ போலிஸ் திருடன் விளையாட்டை....இல்லை போலிஸ் பத்திரிகையாளர் விளையாட்டை இங்கே நடத்தியிருக்கிறது.


ஊடக சுதந்திர தினத்துக்கான நாளில் ஊடகவியளாளர் திசநாயக்காவிற்கு மகிந்த ராஜ பக்சே பொது மன்னிப்பு அளித்ததன் அரசியல் உட்காரணங்கள்,அழுத்தங்கள்,மனசாட்சி என்று எதுவாக இருந்தாலும் வல்லூறு அரசியலின் பிடியிலிருந்து மெல்ல விலகும் திசநாயகத்துக்கான பொதுமன்னிப்பை வரவேற்க வேண்டியது அவசியமாகிறது.ஏனைய சுதந்திரமான பட்டங்கள் அவரது ஊடக வாழ்க்கைக்கு மகுடங்களைத் தந்தாலும் உடல்,மனரீதியான அழுத்தங்களிலிருந்து தன்னை மீண்டும் சிறிதளவாவது தன்னிலைப்படுத்திக் கொள்ள இந்த நடவடிக்கை உதவும்.

இதன் பாதையில் இலங்கையின் சுய,பொது லாபங்களுக்காக வேண்டியாவது முகாம்களில் இருக்கும் மக்கள் சுதந்திரமாக நடமாடவும் தங்கள் சொந்த மண்ணில் தமது வாழ்வை புதுப்பித்துக் கொள்ளவும் வழிகள் பிறக்க வேண்டும்.

9 comments:

vasu balaji said...

யார் என்ன சொன்னாலும் சொல்ல வேண்டியவர்களுக்கு இவர்கள் ராஜதந்திரிகள். இல்லையெனில் பயங்கரவாதத்தை ஒழிக்க உதவத்தயார் என்ற திமிர் பேச்சு வர சாத்தியமேயில்லை. அடியாட்கள் இருக்கிறவரை நாயகன் இவன்:(

ராஜ நடராஜன் said...

//யார் என்ன சொன்னாலும் சொல்ல வேண்டியவர்களுக்கு இவர்கள் ராஜதந்திரிகள். இல்லையெனில் பயங்கரவாதத்தை ஒழிக்க உதவத்தயார் என்ற திமிர் பேச்சு வர சாத்தியமேயில்லை. அடியாட்கள் இருக்கிறவரை நாயகன் இவன்:(//


மா நிலமும்,மாநிலமும் முடமாகிப் போனதின் ராஜதந்திரிகள்.

பனித்துளி சங்கர் said...

////////யார் என்ன சொன்னாலும் சொல்ல வேண்டியவர்களுக்கு இவர்கள் ராஜதந்திரிகள். இல்லையெனில் பயங்கரவாதத்தை ஒழிக்க உதவத்தயார் என்ற திமிர் பேச்சு வர சாத்தியமேயில்லை. அடியாட்கள் இருக்கிறவரை நாயகன் இவன்:(//


மா நிலமும்,மாநிலமும் முடமாகிப் போனதின் ராஜதந்திரிகள்.////////////


ஒரே வரியில் ஓங்கி அடித்ததுபோல் இருக்கிறது மிகவும் சிறப்பு பதிவு

ராஜ நடராஜன் said...

//ஒரே வரியில் ஓங்கி அடித்ததுபோல் இருக்கிறது மிகவும் சிறப்பு பதிவு//


பனித்துளி!கடைய சாத்திற நேரம் பார்த்து டீ போடுங்க சொல்றீங்க.கல்லாவுக்கு லாபம்தானே:)நன்றி.

கலர் மாத்துனீங்களா?

கலகலப்ரியா said...

அந்தக் கடைசி வரிகள் அதிகாலைல எழுதினீங்களா?.. அதிகாலைக் கனவு பலிக்கும்னு சொல்றாங்க..

ராஜ நடராஜன் said...

//இதன் பாதையில் இலங்கையின் சுய,பொது லாபங்களுக்காக வேண்டியாவது முகாம்களில் இருக்கும் மக்கள் சுதந்திரமாக நடமாடவும் தங்கள் சொந்த மண்ணில் தமது வாழ்வை புதுப்பித்துக் கொள்ளவும் வழிகள் பிறக்க வேண்டும்.//


"அந்தக் கடைசி வரிகள் அதிகாலைல எழுதினீங்களா?.. அதிகாலைக் கனவு பலிக்கும்னு சொல்றாங்க.."

கலகலப்ரியா!இங்கே சொல்லும் வார்த்தைகள் இந்திய,இலங்கை புலனாய்வு துறைகள் மூலமாவது ராஜபக்சே குழுவினருக்குப் போய்ச் சேருகிறதோ இல்லையோ இதை விட தாக்கம்,ஆக்கம் நிறைந்த சொல்லாக இலங்கை நாடாளுமன்றத்திலேயே கணீரென உரைத்த சிவஞானம் சிறிதரன் குரலையும்,எழுத்தையும் கேளுங்கள்.தமிழ்மணத்தின் ஈழம் பகுதியிலான சுட்டி கீழே.தமிழகத்தின் மேடை அலங்கார பொய் வார்த்தைகள் பொறுக்காமல் தமிழ்த்தாய் ஈழத்தில் குடிபெயர்ந்து விட்டாள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.


http://www.tharavu.com/2010/05/blog-post_05.html

கலகலப்ரியா said...

ty for da video.. :)

ராஜ நடராஜன் said...

merci beacoup!

கலகலப்ரியா said...

ஓ உங்களுக்கு ஃப்ரெஞ்ச்ல சொன்னாதான் புரியுமோ..

Merci beaucoup..~ நாமதான் சொல்லணும்..