நோம் சாம்ஸ்கி அமெரிக்க குடிமகனாக இருந்தாலும் உலகெங்குமிருந்து வந்து ஒன்று சேர்ந்த ஏனைய யூதர்களுக்கான இஸ்ரேலிய மண்வாசனைக்கான சொந்தம் கொண்டாடுவதில் அவருக்கும் பங்கு இருக்கிறது.அந்த உரிமையை அவர் கேட்காவிட்டாலும் பாலஸ்தீன ரமலா பகுதியில் இருக்கும் பிர் ஜெய்ட் பல்கலைக்கழகத்தில் பேருரை ஆற்றுவதற்காக இஸ்ரேலின் எல்லை ஜோர்டான் பகுதியை கடக்க முயற்சிக்கும் போது நுழைவு அனுமதி மறுக்கப்பட்டு 3மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு திருப்பி அனுப்ப பட்டார்.இந்த நிகழ்வு வேறு அரியணை அதிகார நினைவு ஒப்புமை கொண்டு வரலாம்.
வீரத்துக்கும்,வீர மரபின் வயதான தாய்க்கும் தமிழகத்தில் வேதனை என்றால் அமெரிக்க முதலாளித்துவ அத்துமீறல்களையும், போர்களையும், பாலஸ்தீன, இலங்கை மனித உரிமை மீறல்களையும் உலகிற்கு உரக்க சொல்லும் புத்திமான் நோம் சாம்ஸ்கி இஸ்ரேலில் சோதனை.பாலஸ்தீனிய பல்கலைக்கழகத்து மறுக்கப்பட்ட பேச்சை அவர் பேச முடியாத காரணத்தால் நோம் சாம்ஸ்கி சென்ற ஆண்டில் இலங்கை இனப்படுகொலை பற்றி என்ன சொன்னார் என்று பார்ப்போம்.
2009,செப்டம்பரில் ஐக்கிய நாடுகளுக்கான அமைப்பான R2P யில் நோம் சாம்ஸ்கி தனது கருத்தை வெளியிடும் போது
ருவாண்டா இனப்படுகொலைகளுக்கு நிகரான வன்முறைகள் இன்னொரு அளவில் நிகழும் போது மேற்கத்திய நாடுகள் கவலைப்பட வில்லை.முன்னெச்செரிக்கைக்கு நிறைய கால அவகாசம் இருந்தது.பல வருடங்கள் நிகழ்ந்த போரை நிறுத்தியிருக்க முடியும்.ஆனால் அதற்கான ஆர்வமில்லை என்பதோடு ஐக்கிய நாட்டின் R2P இலங்கையில் தோல்வியை கண்டது என்றார்.
இனி ஐக்கிய நாட்டின் R2P யின் கொள்கைகள் என்னவென்று பார்த்தால்
R2P, the Responsibility to Protect
//The Responsibility to Protect (RtoP or R2P) is a norm or set of principles based on the idea that sovereignty is not a privilege, but a responsibility. RtoP focuses on preventing and halting four crimes: genocide, war crimes, crimes against humanity, and ethnic cleansing.[1] The responsibility to protect can be thought of as having three parts.
1. A State has a responsibility to protect its population from genocide, war crimes, crimes against humanity and ethnic cleansing (mass atrocities).
2. If the State is unable to protect its population on its own, the international community has a responsibility to assist the state by building its capacity. This can mean building early-warning capabilities, mediating conflicts between political parties, strengthening the security sector, mobilizing standby forces, and many other actions.
3. If a State is manifestly failing to protect its citizens from mass atrocities and peaceful measures are not working, the international community has the responsibility to intervene at first diplomatically, then more coercively, and as a last resort, with military force.[2]
In the international community, RtoP is a norm, not a law. RtoP provides a framework for using tools that already exist (like mediation, early warning mechanisms, and economic sanctioning) to prevent mass atrocities. Civil society organizations, States, regional organizations, and international institutions all have a role to play in the operationalization of RtoP. The authority to employ the last resort and intervene militarily rests solely with United Nations Security Council and the General Assembly.
In order to implement RtoP, States and regional organizations need to have the necessary resources to prevent and halt mass atrocities, i.e. early warning mechanisms, stand-by forces in problem areas, mediation mechanisms, etc. These resources and the necessary capacity building must come from the international community, which has a historic pattern of remaining uninvolved.//
Courtesy http://en.wikipedia.org/wiki/R2P
வரலாறுகள் காதால் கேட்டவர்களும்,படித்தவர்களும் பாடங்கள் படிப்பதாக காணோம்.சுனாமிகளும்,கடலில் கொட்டிய எண்ணெயும்,பூகம்பங்களும்,எரிமலை சாம்பல்களை கோபத்தில் கக்கிக் கொண்டு மனித அவலங்களும்,அன்றாட வாழ்வின் அழகியலும் ஒன்றோடொன்று போட்டியிட்டுக்கொண்டு உலகம் அதன் சுற்றில் நகர்கிறது.
உலக நிலை இப்படியென்றால் பறக்கும் தட்டு,வேற்று கிரக மனிதர்கள் என்று ஹாலிவுட் படங்களுக்கே உரிய கற்பனைகள் எல்லாம் உண்மையாக இருக்கலாம் என்கிற மாதிரி ஸ்டீபன் ஹாக்கின் வேற்று கிரக மனித வாசிகள் நுண்ணியிர் வடிவமாகவோ அல்லது வேறு உருவிலோ இருக்க சாத்தியமுண்டு.இவர்களுடன் மனிதர்கள் தொடர்பு வைத்துக் கொள்வது நல்லதல்ல என்ற குண்டை வேறு தூக்கிப் போடுகிறார்.செவ்வாய் கிரகம் போய் சாயா கடை போடும் இந்திய கனவெல்லாம் என்ன ஆகுமோவென்ற கவலையுடன் முடிக்கிறேன்.
11 comments:
உங்களின் இடுகைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நீங்கள் இந்த இடுக்கையில் சொல்வது போல் பலரும் வரலாற்றை படிப்பதும் இல்லை. உணர்வதும் இல்லை.
நாம் இன்றை பற்றி மட்டுமே கவலை பட்டால் கூட பரவில்லை - நம்மில் பெரும்பாலோர் தன்னை பற்றி மட்டுமே கவலை கொள்கின்றனர்.
மனிதன் தனி தீவு வாழ்வு வாழவே விரும்புகிறான்.
Karthick Chidambaram
http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/
உலக வரலாறு எல்லாம் எனக்கு சரியா தெரியாது, நான் இன்னும் உள்ளூர் கிணறு தாண்டலை
நசரேயன் சொன்னது ரிப்பீட்
//உங்களின் இடுகைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நீங்கள் இந்த இடுக்கையில் சொல்வது போல் பலரும் வரலாற்றை படிப்பதும் இல்லை. உணர்வதும் இல்லை.
நாம் இன்றை பற்றி மட்டுமே கவலை பட்டால் கூட பரவில்லை - நம்மில் பெரும்பாலோர் தன்னை பற்றி மட்டுமே கவலை கொள்கின்றனர்.
மனிதன் தனி தீவு வாழ்வு வாழவே விரும்புகிறான்.//
வாங்க கார்த்திக்!நிலையில்லா வாழ்க்கையின் அதிகபட்சமான 100 வருட வாழ்க்கையின் சுற்றுக்குள் தனிமனிதன் ஆடும் ஆட்டம் காண சகிக்கவில்லை.இங்கே குரல் எழுப்பும் புத்திசாலிகள் தோற்றுப்போகிறார்கள் இல்லையென்றால் நீங்கள் சொல்கிறமாதிரி தன்னை பற்றி மட்டுமேயான கவலையான தனி தீவு வாழ்க்கை.
உங்க கடைல என்ன இருக்குது பார்க்க வருகிறேன்.
//உலக வரலாறு எல்லாம் எனக்கு சரியா தெரியாது, நான் இன்னும் உள்ளூர் கிணறு தாண்டலை//
ஆமா!ரத்தக்காட்டேரிக கூடயே பேசிகிட்டு இருங்க:)அங்க கிணறு கூட இருக்குதா?
//நசரேயன் சொன்னது ரிப்பீட்//
நசரேயனுக்கு முகிலனே சாட்சி:)
இந்த R2P ஆசியாக்கெல்லாம் செல்லாதா? பேசறவய்ங்க பேசிக்கிட்டுதான் இருக்காய்ங்க. நடத்துறவன் நடத்திக்கிட்டுதான் இருக்கான். :(
இன்றைய வாழ்வில் எதை எடுத்துப் பார்த்தாலும் சுயநலம்தான் 98%.மிகுதி 2% த்தினரை உலகம் வாழவோ வாழ்ந்தாலும் அவ்ர்களுக்கான இடத்தையோ கொடுப்பதில்லை.
உலக நிலை இப்படியென்றால் பறக்கும் தட்டு,வேற்று கிரக மனிதர்கள் என்று ஹாலிவுட் படங்களுக்கே உரிய கற்பனைகள் எல்லாம் உண்மையாக இருக்கலாம் என்கிற மாதிரி ஸ்டீபன் ஹாக்கின் வேற்று கிரக மனித வாசிகள் நுண்ணியிர் வடிவமாகவோ அல்லது வேறு உருவிலோ இருக்க சாத்தியமுண்டு.இவர்களுடன் மனிதர்கள் தொடர்பு வைத்துக் கொள்வது நல்லதல்ல என்ற குண்டை வேறு தூக்கிப் போடுகிறார்.செவ்வாய் கிரகம் போய் சாயா கடை போடும் இந்திய கனவெல்லாம் என்ன ஆகுமோவென்ற கவலையுடன் முடிக்கிறேன்.
....... பல விஷயங்களை, நல்லா தொகுத்து அருமையாக தந்து இருக்கீங்க. பாராட்டுக்கள்!
பூமிய இங்குள்ளவங்களே அழிச்சுருவாங்க. வேற்றுகிரகவாசிகள் வேற வரணுமாக்கும்.
||1. A State has a responsibility to protect its population from genocide, war crimes, crimes against humanity and ethnic cleansing (mass atrocities).||
:)..
well written
Post a Comment