Followers

Friday, May 21, 2010

உயிர்

பரிணாம வளர்ச்சியே மனிதன் உருவானதுக்கு காரணமென்று ஒரு பக்கமும்,இறைவனே மனிதனை படைத்தான் என்று இன்னொரு பக்கமும் விவாதித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த இரண்டு கோட்பாடுகளுமே தவறானது,உயிரை செயற்கையாக உருவாக்கி விட முடியும் என்று 15 வருட உழைப்பின் ஆராய்ச்சி,140 மில்லியன் டாலர் செலவுடன் டாக்டர் வென்டர் என்ற சர்ச்சைக்குரிய அமெரிக்கரின் கண்டுபிடிப்பு இனி புதிய விவாதங்களை உருவாக்கும்.

டாக்டர் வென்டர் இன்னும் செயற்கையான உயிரை உருவாக்கி விடவில்லை.ஆனால் அதற்கான கோட்பாடுகளை கண்டுபிடித்திருக்கிறார்.கணக்கிலும்,விஞ்ஞானத்திலும் சராசரி மார்க் வாங்கிய காரணத்தால் விஞ்ஞான பதங்களை அப்படியே தமிழ்படுத்த இயலாமையால் சேனல்4 செய்தியின் சாரம்.

Dr Venter actually created artificial life. Not yet.

His micro-organism, says Jim Collins, Professor of Biomedical Engineering at Boston University in the Nature commentary "is synthetic in the sense that its DNA is synthesized, not in that a new life form has been created. Its genome is a stitched-together copy of the DNA of an organism that exists in nature, with a few small tweaks thrown in."

The organism whose DNA he copied and synthesised - the plasmid bacterium Mycoplasma mycoides that causes mastitis in goats - is one of the simplest organisms on Earth. Its single chromosome is just over a million base-pairs long; its cell lacks most of the structures found in more complex organisms.

Even so, Venter and his team got the synthesis of the genome letter-perfect, a considerable technical achievement. As it happens, they got one letter wrong at their first attempt and the bacterium failed to function.

That, in itself, should give pause to those who demand a moratorium on synthetic biology. It will be extremely difficult to scale up to the larger, more complex organisms needed to realise Dr Venter's ambition of designer microbes that can feed on carbon dioxide and excrete bio-fuels in a one-stop miracle solution to climate change.

But one day, make no mistake, it will be possible to sit in front of a computer and design the genome for a truly artificial life-form.

கூடவே காணொளியும் காண்பதற்கு: http://www.channel4.com/news/articles/science_technology/artificial+life+time+to+debate+implications/3655372


DNA கூறுகளை பாகுபடுத்திய காலத்திலிருந்தே மைக்ரோபயாலஜி பல அறிவியல் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.இனி வரும் காலங்களில் மைக்ரோபயலாஜி துறை இன்னும் பெரும் சாதனைகளை நிகழ்த்தும் சாத்தியங்கள் இருக்கின்றது.அதனால் கடவுள், கணினி,மதம்,வலைத்தளம் தேடுபவர்கள் கண்களை,மனங்களை அகன்ற விசாலத்துடன் வைத்துக்கொண்டு தேடுவது நல்லது.

17 comments:

PPattian said...

தகவலுக்கு நன்றி.. குளோநிங்குக்கு அடுத்த படியா?

ராஜ நடராஜன் said...

//தகவலுக்கு நன்றி.. குளோநிங்குக்கு அடுத்த படியா?//

அப்படித்தான் போல தெரியுது:)

ராஜ நடராஜன் said...

புபட்டியன்!நீங்க குளோனிங்க்ன்னு சொன்னவுடன் எனக்கு திடீர்ன்னு ஒரு பளிச்.

முட்டைய உடைச்சு,உப்பு,மிளகாய்,வெங்காயம்,தக்காளி,கொத்துமல்லி போட்டு ஆம்லெட்டா வடிவம் மாறுவதும் கூட குளோனிங்க்தானுங்க:)

vasu balaji said...

வரட்டும் வரட்டும் அப்புடி எதாவது வந்தாத்தான் இந்த மனுசப்பய அடங்குவான்.:)

பனித்துளி சங்கர் said...

இதுவரை அறியாத தகவல் தந்தமைக்கு நன்றி !

நசரேயன் said...

//முட்டைய உடைச்சு,உப்பு,மிளகாய்,வெங்காயம்,தக்காளி,கொத்துமல்லி போட்டு ஆம்லெட்டா வடிவம் மாறுவதும் கூட குளோனிங்க்தானுங்க:)//

கூடவே பீர் இருந்தா மட்டையிங் ன்னு சொல்லலாமா?

ராஜ நடராஜன் said...

//வரட்டும் வரட்டும் அப்புடி எதாவது வந்தாத்தான் இந்த மனுசப்பய அடங்குவான்.:)//

இதுல முக்கியமா கவனிக்க வேண்டியது என்னன்னா கணினில உட்கார்ந்துகிட்டே organic materials ஐ ஒன்று சேர்த்து ஒரு உயிர் படைக்கலாமாம்!அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் நீங்கள் எந்த உயிரை உயிர்ப்பிப்பீர்கள்:)

ராஜ நடராஜன் said...

//இதுவரை அறியாத தகவல் தந்தமைக்கு நன்றி !//

வாங்க பனித்துளி!நன்றியெல்லாம் உண்மைகளை சீக்கிரம் கொண்டு வரும் சேனல் 4 க்கும்,அமெரிக்க மருத்துவ குழுவுக்கும் சொல்லுங்க:)

ராஜ நடராஜன் said...

////முட்டைய உடைச்சு,உப்பு,மிளகாய்,வெங்காயம்,தக்காளி,கொத்துமல்லி போட்டு ஆம்லெட்டா வடிவம் மாறுவதும் கூட குளோனிங்க்தானுங்க:)//

கூடவே பீர் இருந்தா மட்டையிங் ன்னு சொல்லலாமா?//

பீர் க்கே மட்டையா:)

ஹேமா said...

இப்பவே மனுசன் ஆட்டம் தாங்கல பூமி.இயற்கையைத் தாண்டி உயிரின உருவாக்கல்.உருப்படுற மாதிரித்தான் !

புதிய தகவலுக்கு நன்றி நடா.

சேனல் 4 தரும் புதிய பழைய செய்திகளுக்கும் நன்றி.

Unknown said...

நல்ல பகிர்வு.. வானம்பாடி சொன்ன மாதிரி இப்பிடியெதாவது வந்தாத்தான் நல்லது..

Unknown said...

//கூடவே பீர் இருந்தா மட்டையிங் ன்னு சொல்லலாமா?//

பீர் க்கே மட்டையா:)//

பீர்னு எழுதியிருக்கிறதைப் படிச்சாலே நம்ம தளபதி மட்டையாயிடுவாருன்னு வில்லன் சொல்லக் கேள்வி.. :))

Karthick Chidambaram said...

இயற்கையோடு அதிகம் விளையாடுகிறோமோ ? இயற்கையின் சூட்சமங்களை தெரிந்து கொள்வது நல்லதே.
என் நண்பர் ஒருவர் சொல்லுவார் பழைய காலங்களில் தலை சாயம் பயன்பாட்டில் குறைவாகவும் அது பற்றிய அறிவும் குறைவாகவும் இருந்தது.
எப்போது இந்த அறிவு வந்ததோ அந்த நாட்களில் இருந்தே சின்ன வயதிலேயே பலருக்கு முடி வெளுக்க ஆரம்பித்து விட்டது. காரணம்
இயற்கை அறியும் இந்த மனிதனுக்கு மாற்று வழி கிட்டிவிட்டது என்று சொல்லிவிட்டு சிரிப்பார். அவர் சொல்வது இதுதான் இயற்கை மிக பெரிய புத்திசாலி - உங்களை அது வழிநடத்தவும் செய்யும் உங்கள்வழியை புரிந்துகொள்ளவும் செய்யும்.

தகவலுக்கு நன்றி நண்பரே.

கலகலப்ரியா said...

பகிர்தலுக்கு நன்றி... நேற்று bbc-ல பார்த்தேன்... நன்றோ தீதோ நாமறியோம்..

||
Karthick Chidambaram said...
இயற்கையோடு அதிகம் விளையாடுகிறோமோ ? இயற்கையின் சூட்சமங்களை தெரிந்து கொள்வது நல்லதே.
என் நண்பர் ஒருவர் சொல்லுவார் பழைய காலங்களில் தலை சாயம் பயன்பாட்டில் குறைவாகவும் அது பற்றிய அறிவும் குறைவாகவும் இருந்தது.
எப்போது இந்த அறிவு வந்ததோ அந்த நாட்களில் இருந்தே சின்ன வயதிலேயே பலருக்கு முடி வெளுக்க ஆரம்பித்து விட்டது. காரணம்
இயற்கை அறியும் இந்த மனிதனுக்கு மாற்று வழி கிட்டிவிட்டது என்று சொல்லிவிட்டு சிரிப்பார். அவர் சொல்வது இதுதான் இயற்கை மிக பெரிய புத்திசாலி - உங்களை அது வழிநடத்தவும் செய்யும் உங்கள்வழியை புரிந்துகொள்ளவும் செய்யும்.||

நல்லா சொல்லி இருக்கீங்க கார்த்திக்... உங்க நண்பர் சொல்வது முற்றிலும் உண்மை..

அமைதி அப்பா said...

நல்ல தகவல்.
டாக்டர் வெண்டர் உடன் இருந்த குழுவில் மூன்று இந்தியர்கள் இருந்தார்கள் என்று செய்தித்தாளில் படித்து மகிழ்ந்தேன்.

Unknown said...

மனிதன் படைப்பின் தத்துவத்தை உடைத்துவிடுவான் என்பதற்கு இன்னுமொரு சாட்சி

ப.கந்தசாமி said...

நல்ல தெளிவான தகவல்.