Followers

Sunday, June 6, 2010

யாராவது போனாலும் போய்வாங்க!

IIFA பிரச்சினை துவங்கும் முன்பே அதனை நோண்டிப்பார்த்தது பதிவுலகமே.அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான எனது பத்து ரூபாயாக(அதென்ன எப்ப பார்த்தாலும் 2 செண்ட்ன்னு சொல்லிகிட்டு:)) இங்கே சொல்லியாகி விட்டது.

மீண்டும் ஒரு முறை சொன்னைவைகளை அசை போடும் நோக்கில் பின்நோக்கி சென்று நோக்கும் போது பதிவர் வானம்பாடிகள் சொன்னது பலித்திருக்கிற காரணத்தால் அதுவே தலைப்பாக மாறியிருக்கிறது.சில நேரங்களில் போராட்டங்கள் நீர்த்துப் போயிருக்கின்றன,சில சமயங்களில் மக்களின் போராட்டங்கள் சிறு அதிர்வையாவது இப்போதைக்கு நிகழ்த்தியிருக்கிறது.அந்த விதத்தில் மும்பாயில் போராடிய நாம் தமிழர் இயக்கத்துக்கும்,தமிழக திரைப்படத்துறையினருக்கும் முக்கியமாக மணிரத்னம்,அமிதாப் அவர்களுக்கும் நன்றிகள்.மனித உறவுகளை மேம்படுத்தாமல் விழாக்கள் என்ற முகப்பூச்சுக்களால் நிரந்தரமான பயன் எதுவுமில்லை.

மூலையில் கடுகு மாதிரி கண்ணுக்குத் தெரியாமல் உட்கார்ந்து கொண்டு யோசிக்கும் நமக்கே நன்மை தீமைகள் பற்றிய ஒரு விரிவான பார்வை இருக்கிறது எனும் போது அரசு நாற்காலியின் அதிகாரத்தில் இருக்கும் எந்த தனி மனிதனுக்கும் இதனை விட அகன்ற பார்வையிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

8 comments:

vasu balaji said...

இதக்கூட தாங்கலாம். அந்த பரதேசி சுனாமிக்கு நான் உதவினேன்னு சொல்லி காட்டின அல்பத்தனத்துக்கு போய் சேர்ந்திருக்கலாம்:(. கொஞ்ச நாள். அப்புறம் மெதுவா படம் ரிலீஸ் ஆகும். நம்மாளுங்களும் மறந்துட்டு உய்ய் உய்ய்ய்ன்னு பார்ப்பாங்க.

ஹேமா said...

ஒரு அடிமைப்பட்டுக் கொண்டிருக்கும் இனத்தின் உணர்வை வேதனைகளைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமென்ன அவர்களுக்கு?

பணத்துக்காகவே அவர்கள்.
சம்பாத்தியங்களோடு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு திடீரென்று பணமும் புகழும் கையை விட்டுப் போவதை தாங்கிக் கொள்ள முடியுமா?

Chitra said...

மூலையில் கடுகு மாதிரி கண்ணுக்குத் தெரியாமல் உட்கார்ந்து கொண்டு யோசிக்கும் நமக்கே நன்மை தீமைகள் பற்றிய ஒரு விரிவான பார்வை இருக்கிறது எனும் போது அரசு நாற்காலியின் அதிகாரத்தில் இருக்கும் எந்த தனி மனிதனுக்கும் இதனை விட அகன்ற பார்வையிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

.....சரியா சொல்லிட்டீங்களே..... தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்குகிறவர் மாதிரி இருப்பவர்களை......????

Anonymous said...

சிலர் தீக்குளித்தும் போரைத்தான் நிறுத்த முடியவில்லை. ஆனால், பிரபல நடிகர்களை போகாமல் நிறுத்தி ராஜபக்சேயின் முகத்தில் கரி பூசியத்து பெரிய விசயமே. பெரிய சாதனை தான். ஆனாலும், இந்த பிரபலங்கள் வேற இடத்துக்கு போகணும், வேலை முடியலன்னு அவங்க சொன்னது தான் சை என்றாகிவிட்டது.

ராஜ நடராஜன் said...

//இதக்கூட தாங்கலாம். அந்த பரதேசி சுனாமிக்கு நான் உதவினேன்னு சொல்லி காட்டின அல்பத்தனத்துக்கு போய் சேர்ந்திருக்கலாம்:(. கொஞ்ச நாள். அப்புறம் மெதுவா படம் ரிலீஸ் ஆகும். நம்மாளுங்களும் மறந்துட்டு உய்ய் உய்ய்ய்ன்னு பார்ப்பாங்க.//

யாரு?விவேக் ஒபராயா?விழா ஹைலைட்டே ஒபராய் விவேக் ஸ்டைல்ல சல்மான்கான் கேலிக்கூத்துதானாமே:)கூட இருப்பவனிடம் நட்பு பாராட்ட இயலாதவர்கள் மானுடம் சிறக்க பறந்தது வேடிக்கை.

அநியாயத்துக்கு நம்ம ஆளுகளப் பத்தி பொரணி பேசக்கூடாது சொல்லிப்புட்டேன்.ஹிந்தி படத்துக்கு பஞ்ச் டயலாக் வசனமே புரியாது அப்புறம் யார் உய் யார் சொல்லுவா?நீங்க எந்த் தியேட்டர்ல உய்...உய்ய் சத்தம் கேட்டீங்க:)

ராஜ நடராஜன் said...

//ஒரு அடிமைப்பட்டுக் கொண்டிருக்கும் இனத்தின் உணர்வை வேதனைகளைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமென்ன அவர்களுக்கு?

பணத்துக்காகவே அவர்கள்.
சம்பாத்தியங்களோடு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு திடீரென்று பணமும் புகழும் கையை விட்டுப் போவதை தாங்கிக் கொள்ள முடியுமா?//

ஹேமா!மொழி ஒரு புறம் இருக்கட்டும்.ஹிந்தி திரைப்படங்கள் பெரும்பாலும் மக்கள் வாழ்க்கையை பிரதிபலிப்பதில்லை.மொத்த மக்கள் தொகை ரீதியாகவும்,இசையின் இனிமையின் காரணமாகவும் அவைகள் வெற்றி பெற்று விடுகின்றன.

புனே படக்கல்லூரி போன்றவற்றில் படித்து வருபவர்கள் விரல் விட்டு எண்னக்கூடிய அளவிலேயே பிரபலமாகிறார்கள் அல்லது காணாமல் போகிறார்கள்.சமூக அக்கறையற்ற,வறுமைக்கோட்டை தாண்டிய மத்தியதரத்து இந்திய குடும்பங்களிலிருந்து இந்தி திரையுலகம் செல்பவர்கள் அங்குள்ள வட்டத்துக்குள்ளேயே அமுங்கிப் போய் விடுகிறார்கள்.

நீங்கள் சொன்னது மாதிரி சொகுசான வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்வதென்பது நிர்பந்தமாகிப் போய் விடுவதால் இலங்கை பயணம் இவர்களுக்கு பணம் ஈட்டும் இலவச சுற்றுப்பயணம்.

சட்டத்துக்கு எதிராக மான்கறி சாப்பிடுகிறவனும் அந்த சட்டத்தையே மான விவகாரத்திலும்,குடிபோதையில் வாகனம் ஓட்டிய விபத்து குற்றத்தையும் பணத்தால் வளைக்கத் தெரிந்தவர்கள் போன்றவர்களிடம் மனிதாபிமானம் எதிர்பார்ப்பது தவறே.

ராஜ நடராஜன் said...

//மூலையில் கடுகு மாதிரி கண்ணுக்குத் தெரியாமல் உட்கார்ந்து கொண்டு யோசிக்கும் நமக்கே நன்மை தீமைகள் பற்றிய ஒரு விரிவான பார்வை இருக்கிறது எனும் போது அரசு நாற்காலியின் அதிகாரத்தில் இருக்கும் எந்த தனி மனிதனுக்கும் இதனை விட அகன்ற பார்வையிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

.....சரியா சொல்லிட்டீங்களே..... தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்குகிறவர் மாதிரி இருப்பவர்களை......????//

இவங்க எங்கே தூங்கிறமாதிரி நடிக்கிறார்கள்?எல்லாம் தெரிந்தே செய்கிறார்கள் என நினைக்கிறேன்.Hidden Agenda ன்னு கேள்விப்பட்டிருப்பீங்களே,ஊடகர்களின் முன் ஒரு அறிக்கையும்,திரைக்குப்பின்னால் ஒரு அறிக்கையும் என்பதெல்லாம் தெரிந்தே செய்யும் ராஜதந்திரம் எனும் போர்வைக்குள் மறைந்து இருப்பவை.

இஃபா வைப் பொறுத்த வரை தூங்காட்டியும் பரவாயில்லை விழா கொண்டாடி விடவேண்டும் என்பதே முக்கியம்.ஆனால் விழா தூங்கிடுச்சு.

ராஜ நடராஜன் said...

//சிலர் தீக்குளித்தும் போரைத்தான் நிறுத்த முடியவில்லை. ஆனால், பிரபல நடிகர்களை போகாமல் நிறுத்தி ராஜபக்சேயின் முகத்தில் கரி பூசியத்து பெரிய விசயமே. பெரிய சாதனை தான். ஆனாலும், இந்த பிரபலங்கள் வேற இடத்துக்கு போகணும், வேலை முடியலன்னு அவங்க சொன்னது தான் சை என்றாகிவிட்டது.//

அனாமிகா!முந்தைய காலங்களில் உங்களை மூத்த பதிவர் துளசி டீச்சர் அல்லது பெண்பதிவர் யாரோ அறிமுகப்படுத்தியது மாதிரி ஒரு நினைவு.புரைஃபைல் மருதாணியால் சரியாக உறுதிபடுத்த முடியவில்லை.

தமிழக அரசியலில் முந்தைய காலகட்டங்களில் தீக்குளீப்பதென்பது ஒரு ஆயுதம்.அதனை பயன்படுத்தியவர்களே அந்த தீ தன்னை சுடும் என்று மழையில் நின்று அணைத்து விட்டார்கள்:(
கூடவே சுயநல அரசியல் கணக்கீடூகளும்.

எனது பார்வையில் ராஜபக்சே முகத்தில் இந்த மாதிரி கரிபூசுவதென்பது முக்கியமில்லை.செய்த தவறுகளுக்கு அடிப்படை மனிதாபிமானம் இல்லாமல் மக்களை அலைக்கழிப்பதுவே ராஜபக்சேவின் சுயமுகத்தை காட்டுகிறது.அதற்கான கரிபூசும் வலிய சக்திகளுக்காக வேண்டுகிறேன்.