Followers

Tuesday, June 22, 2010

மரடோனாவின் கட்டுப்புடி வைத்தியம்

கமலஹாசன் அர்ஜெண்டினாவின் கால் பந்து ஆட்டங்களை பார்க்கிறாரா என்று தெரியவில்லை.கட்டுப்புடி வைத்தியம் சொல்லிக் கொடுத்தும் தமிழகத்தில் யாரும் வைத்தியம் பார்க்கிற மாதிரி தெரியவில்லை.ஆனால் உலக கோப்பையில் இந்த மனோதத்துவ இயற்கை வைத்தியத்தை கடைபிடிக்கும் ஒரே ஆள் மரோடானாதான்.அணியின் ஆட்டக்காரர்களுக்கும்,கோல் விழும் நேரத்தில் பக்கத்துல யாரு மாட்டுவார்கள் என்று தேடிப்பிடித்து வைத்தியம் பார்ப்பதிலும் மனுசன் கில்லாடியாகவே இருக்கிறார்.

இன்றைய அர்ஜெண்டினா V கிரீஸ் ஆட்டத்தின் துவக்கத்தில் முதல் பகுதி வரைக்கும் அலட்டாமல் ஆடிய இரு அணிகளும் இரண்டாம் பகுதியில் ஆட்டத்தின் வேகத்தை அதிகப் படுத்தி ஆடினார்கள்.ஆனாலும் பெரும்பாலான நேரங்களில் பந்து அர்ஜெண்டினாக்காரர்களின் கால்களிலேயே சுழன்றது.பந்து ஆளாளுக்கு நகர்த்தும் நேர்த்தியும்,பெரும்பாலான நேரங்களில் இம்மியளவும் பிசகாத பந்து மாற்றலும் கண்ணுக்கு நல்ல விருந்து.

இரண்டாம் சுற்றுக்கு அர்ஜெண்டினாவும் , தென்கொரியாவும் முறையே 9 & 4 என்ற கணக்கின் குறீயீட்டில் தகுதி பெற்றுள்ளன.இதில் தென்கொரியா, நைஜீரியா மற்றும் கிரீஸை தோற்கடித்து அர்ஜெண்டினா ஹேட்டிரிக் அடித்தது குறிப்பிடத்தக்கது.

மரடோனாவின் கட்டுப்புடி வைத்தியம் தொடர வாழ்த்துக்கள்.

6 comments:

ஹேமா said...

அர்ஜெண்டீனா வரைக்கும் கமல் புகழ் பரவியிருக்குன்னா எனக்களுக்கும் சந்தோஷம்தானே !

நடா நேத்து பதிவில ஒரு கேள்வி எனக்கு மிஞ்சியிருக்கு.
படம் பார்க்கலாமா பார்க்க
வேணாமான்னு சொல்லல நீங்க !

vasu balaji said...

அந்த கங்காரு ஜம்ப் பத்தி சொல்லாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்:))

ஜோதிஜி said...

இங்கு நான் பார்த்தவரைக்கும் எவரும் கால்பந்து ஆட்டத்தை ஒரு விளையாட்டாகக்கூட மதிக்க தயாராய் இல்லை. கிரிக்கெட் அளவிற்கு இதன் தாக்கம் இங்கு குறைவு. ஏன்?

ராஜ நடராஜன் said...

//அர்ஜெண்டீனா வரைக்கும் கமல் புகழ் பரவியிருக்குன்னா எனக்களுக்கும் சந்தோஷம்தானே !

நடா நேத்து பதிவில ஒரு கேள்வி எனக்கு மிஞ்சியிருக்கு.
படம் பார்க்கலாமா பார்க்க
வேணாமான்னு சொல்லல நீங்க !//

ஹேமா!இப்ப ராவணன் பற்றி திரும்ப யோசிக்கும் போது படத்துக்கான விமர்சனங்களை மட்டும் நம்மால் எளிதாக வைக்க முடிகிறது.ஆனால் இயக்குநர் மணிரத்னம் உடல்நிலை,பின் புலத்து சிக்கல்கள் என்று நாம் எதையுமே கணக்கில் கொள்வதில்லை.

காசை கரியாக்கி மசாலா வடை சுடுவதை விட வித்தியாசமாக தயாரிக்க முயற்சி செய்யும் உழைப்புக்காக ஒரு முறை பார்த்து வைக்கலாம்.

நம்மகிட்ட உலகிற்கு சொல்வதற்கான வடுக்கள்,கதைக்களங்களை வைத்துக் கொண்டும் வாய்மூடிகளாய் இருப்பது எந்த ஒரு படைப்பாளிக்கும் அழகில்லை.இதே அமெரிக்கன்காரன் பிரச்சினையா இருக்கட்டும்....ஆஸ்கர் வரைக்கும் கொண்டு போய் விடுவான்.அல்லது ஒரு ஈரானியனின் பார்வையில் சிறந்த படம் என்ற உலக முத்திரையாவது வாங்கி விடுவான்.

படம் பார்க்கலாம் என சிபாரிசு செய்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//அந்த கங்காரு ஜம்ப் பத்தி சொல்லாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்:))//

நீங்களும் பார்த்துகிட்டுத்தான் இருந்தீங்களா:)

எவண்டா கிடைப்பான்!மகிழ்ச்சில குதிரையேறலாம் என்பதை சொல்ல நினைச்சு விட்டுப்போச்சுதான்:)

ராஜ நடராஜன் said...

//இங்கு நான் பார்த்தவரைக்கும் எவரும் கால்பந்து ஆட்டத்தை ஒரு விளையாட்டாகக்கூட மதிக்க தயாராய் இல்லை. கிரிக்கெட் அளவிற்கு இதன் தாக்கம் இங்கு குறைவு. ஏன்?//

இது பற்றி பதிவு எழுதி வச்சு கிடப்புல கிடக்குது.உங்க நினைவூட்டலில் இன்றைக்கு வெளியிட முடியுமா என்று பார்க்கிறேன்.நன்றி