லாபி என்ற ஆங்கில வார்த்தைக்கு நலன்கள் என்று பொருள் கொள்ளலாமா? வாழ்க்கையிலும், அரசியலிலும் , ஏன் பதிவுலகில் கூட லாபி என்ற நலன்கள் ஒரு முக்கியமான சொல்லாக அங்கம் வகிக்கிறது.பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் விளையாடுவது ,பெண்கள் வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு அரசல் புரசலாக கதை பேசுவது,குழாயடிச் சண்டை, கல்லூரியில் மாணவர் தேர்தல்,தேர்தல் காலத்து நம்ம சனத்தான் பார்த்தல், நடிகரின் ரசிகர் மன்றம் இப்படி பல உருவங்களில் லாபி ஒளிந்து கொண்டிருக்கிறது.
அங்காடித் தெரு இப்போதைக்கு மட்டும் ஒரு பக்கத்து கதை சொல்வதாகவே நினைக்கிறேன்.ஆனால் வி.ஜி.பி சகோதரர்கள் முதல், எவர்சில்வர் பாத்திரங்களை தலையில் வைத்து சுமந்து பின் பாத்திரக்கடை, அழகுப்பொருட்கள் , தேநீர் கடை இன்னும் பல வியாபாரங்களில் தங்களை வறுத்திக் கொண்டு வியாபார ரீதியாக தங்களை நிலை நாட்டிக்கொண்ட திருநெல்வேலி போன்ற மாவட்டத்துக்காரர்கள் உயர்ந்திருப்பதும் கூட லாபிக்கான அடையாளங்களே. வெளிநாடுகளில் தங்கள் பாரம்பரியம், கலாச்சாரம் தெரிய கோயில் கட்டியவை போன்றவை கூட சமூகம் சார்ந்த லாபியின் கூறு எனலாம்.
கடந்த நாட்களில் இந்தியாவும் கூட ஐ.நாவின் அகலமாகும் நிரந்தர அங்கத்தினர் இருக்கைக்கான லாபியில் மீண்டும் ஒரு முறை வலம் வருகிறது.ஐக்கிய நாட்டு சபை,அரசாங்கம்,வெள்ளை மாளிகை என லாபியின் வட்டம் இப்படி நீண்டு கொண்டே போகிறது.கடந்த வாரத்தில் பாலஸ்தீனிய காசா பகுதிக்கு சென்ற கப்பல் பயணித்தில் 9 பேரை இஸ்ரேலிய ராணுவம் சுட்டுக்கொன்றதை பி.பி.சி,சி.என்.என்,அல்ஜசிரா இன்னும் பல தொலைக்காட்சி ஊடகங்கள் முன்நிறுத்தி செய்திகளை வெளியிட்டன.நேற்று இன்னுமொரு கப்பல் ராகேல் கோரி கப்பல் மெல்ல நகர்வதையும் கூட சி.என்.என் உயிரோடு காண்பிக்கிறோம் என்கிறது.இன்னொரு பக்கம் வளைகுடா தொலைக்காட்சிகள் இதனை முதன்மை படுத்தியது.ஐ.நா,அமெரிக்கா முதற் கொண்டு தமது கண்டனங்களை வெளியிட்டது.இவைகளும் கூட லாபி என்ற சொல்லின் உள்ளடக்கம்.இலண்டனில் இஸ்ரேல் தீவிரவாதத்தை நிறுத்து போன்ற எழுத்துப்பலகைகளுடன் மக்களை தெருவுக்கு அழைத்து வர முடிகிறது லாபியால்.இவைகளுக்குப் பின்னால் வலுவான பொருளாதார பக்கபலங்கள் பின் நிற்கின்றன இரு பக்கமும்.
சமூக அக்கறை கொண்ட சமுதாயமாகவே நம்மை நான் பார்க்கிறேன்.ஆனாலும் சறுக்கல்கள் நிறையவே சமூக,அரசியல்,பொருளாதார,பூகோள ரீதியாக.நமது நலன்களின் மொத்த மதிப்பீடுகளை உங்கள் பார்வைக்கும் சிந்தனைக்கும் விட்டு விடுகிறேன்.
சமூக அக்கறை கொண்ட சமுதாயமாகவே நம்மை நான் பார்க்கிறேன்.ஆனாலும் சறுக்கல்கள் நிறையவே சமூக,அரசியல்,பொருளாதார,பூகோள ரீதியாக.நமது நலன்களின் மொத்த மதிப்பீடுகளை உங்கள் பார்வைக்கும் சிந்தனைக்கும் விட்டு விடுகிறேன்.
9 comments:
//லாபி என்ற ஆங்கில வார்த்தைக்கு நலன்கள் என்று பொருள் கொள்ளலாமா?//
Lobby...
புறக்கூடம் என்பது, பெயர்ச்சொல்...
கூட்டத்தில் அலசப்போகும் பற்றியத்துக்கான தேற்றுதல் வேலைகள், கூட்டம் நடக்க இருக்கும் மாடத்திற்கு அருகில் இருக்கும் புறக்கூடத்தில் நடப்பது வாடிக்கை... இது தொட்டு வந்த வினையாகு பெயரே Lobbying...
தேற்றுதல் வேலைகள் எனத்தான் பொருள் கொள்ள முடியும்... புறக்கூடத் தேற்றுதல்கள் எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துவது உண்டு.... எனவே, நலன்கள் என்பதைப் பழமைபேசி மறுக்கிறான்....இஃகிஃகி!!
//சமூக அக்கறை கொண்ட சமுதாயமாகவே நம்மை நான் பார்க்கிறேன்.ஆனாலும் சறுக்கல்கள் நிறையவே சமூக,அரசியல்,பொருளாதார,பூகோள ரீதியாக.//சுயநலம்தான் முக்கியமான காரணம்.
//தேற்றுதல் வேலைகள் எனத்தான் பொருள் கொள்ள முடியும்... புறக்கூடத் தேற்றுதல்கள் எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துவது உண்டு.... எனவே, நலன்கள் என்பதைப் பழமைபேசி மறுக்கிறான்....இஃகிஃகி!!//
காளமேக அப்புச்சி கனவுல மறுபடியும் வந்திட்டாராக்கும்:)
தேற்றுதல் வேலைகள் இருசொல் ஆகிறது.உச்சரிப்புக்கு உதவாது.புறக்கூடத் தேற்றுதலும் அப்படியே.தேற்றுதல் பொருந்தி வருவது மாதிரி இருக்கிறது.ஆனால் அழுகையை நிறுத்த தேற்றுதல் பொருளும் வருகிறது.
புதுச்சொல் சொல்லுங்க:)
////சமூக அக்கறை கொண்ட சமுதாயமாகவே நம்மை நான் பார்க்கிறேன்.ஆனாலும் சறுக்கல்கள் நிறையவே சமூக,அரசியல்,பொருளாதார,பூகோள ரீதியாக.//சுயநலம்தான் முக்கியமான காரணம்.//
ராபின்!உங்களின் மீள் வருகைக்கு நன்றி.சுயநலத்தோடு குறுகிய பார்வைகளும் கூட காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.மேற்கத்திய நாடுகளை கவனித்தால் அவர்களுக்குள்ளும் கருத்து முரண்கள் இருக்கின்றன.ஆனால் பொதுவான நலன்கள் என்று வரும்போது பாராளுமன்றத்தில் கருத்து முரண்களை பின்னுக்குத் தள்ளி பொதுநலனுக்கு ஏதுவாக இருக்கும் என தீர்மானத்தை வெற்றிகரமாக்கி விடுகிறார்கள்.
ஈழம் குறித்த தமிழக சட்டமன்ற தீர்மானமும்,அதனைத் தொடர்ந்த அரசியல் நிகழ்வுகளும் நாம் எங்கே நிற்கின்றோம் என்பதனை தெளிவுபடுத்துகின்றன.
மக்களாட்சியின் அழகியல் திசைமாறிப்போகின்றன.
ஆனால் அழுகையை நிறுத்த தேற்றுதல் பொருளும் வருகிறது.//
ஹிஹி. திரட்டுதலும் பொருளாகிறது. (குழு வைத்து ஓட்டு தேத்துறாய்ங்க=))). மரா மரா மாதிரி லாபி லாபின்னு திருமச் சொன்னா பீலா பீலான்னும் வருது. எப்படியோ பழமைசொல்லுக்கு மறுப்பு சொன்னதுக்காக என் கண்டனத்தைப் பதிகிறேன்.(இல்லைன்னா விடமாட்டாய்ங்க. இதான் ட்ரெண்டு)
//ஹிஹி. திரட்டுதலும் பொருளாகிறது. (குழு வைத்து ஓட்டு தேத்துறாய்ங்க=))). மரா மரா மாதிரி லாபி லாபின்னு திருமச் சொன்னா பீலா பீலான்னும் வருது. எப்படியோ பழமைசொல்லுக்கு மறுப்பு சொன்னதுக்காக என் கண்டனத்தைப் பதிகிறேன்.(இல்லைன்னா விடமாட்டாய்ங்க. இதான் ட்ரெண்டு)//
ஒரு இஃகியும் இரு ஹி...ஹி..யும் போட்டுக்கறேன்:)நிறைய அர்த்தம் வருதுல்ல!
லாபி பீலா உண்மையிலேயே நல்ல கண்டுபிடிப்புத்தான்:)
தமிழ் ஆசான் பழமை நெற்றிக்கண்...இல்ல...முட்டக்கண்ணால முழிச்சாலும் சொன்ன பொருள் சமாதானமாகலீங்ண்ணா:)
Nalan engira porullai oppukkolgiren. Aanaal yaar nalan enbathe kelvi ?
சரிக்கட்டுதல்!
பழமைபேசி தமிழில் புதுமைபேசி.
Post a Comment