Followers

Wednesday, June 23, 2010

இந்திய கால்பந்தாட்ட சோணங்கியும்,கிரிக்கெட் வில்லனும்

2010 உலக கால்பந்தாட்ட போட்டிக்கு கடந்த காலங்களை விட வழக்கத்து மாறாக புதிய நாடுகள்,குட்டி நாடுகள் கூடவே பின்தங்கியிருந்த ஆப்பிரிக்க நாடுகள் எல்லாம் களத்தில் நின்று துள்ளியும் தள்ளியும் விளையாடுகின்றன.இந்திய தேசம் என்ற கோசமில்லாமல் நன்றாக ஆடும் அணிகளையும்,சிறந்த ஆட்டக்காரர்களை மட்டுமே கண்டு கழிக்க முடிகிறது.வாய் மட்டும் ஏழு முழத்துக்கு நாங்கள் வல்லாரசாக்கும் பீத்தலுக்கு மட்டும் குறைச்சலேயில்லை என்ற கோபம் எழுவதற்கும் கோடானு கோடி இந்திய ஜனத்தொகையில் 23 பேர் மற்றும் கால்பந்து விளையாட்டுக்குழுவை உலக அளவில் அனுப்ப முடியாததின் காரணம் என்ன?

உலகமயமாக்கல் சந்தைக்கும்,இப்போதைய புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் முன்பும் பனிப்போர் என்னும் அமெரிக்க, ரஷ்ய நாடுகளை சார்ந்த நிலைகளிலும் அணி சாரா நாடுகள் என்றும் கொள்கையளவில் மட்டும் கடந்து வந்த இந்தியாவின் கடந்த காலங்களை யோசித்தால் டென்னிஸ் ,கால்பந்து,ஹாக்கி ,கிரிக்கெட் என கலந்து கட்டி விளையாடிய காலங்கள் என தெரிகிறது.

இதில் இந்தியாவில் கால் பந்தாட்டம் எந்த கால கட்டத்தில் தடம் மாறிப் போனதென பார்க்கலாம்.முன்பெல்லாம் ஹாக்கியின் ஆக்கிரமிப்புடன்,கால் பந்தாட்டம்,கபடி போன்றவையே முன்னிலை வகித்தது.இந்திய அளவில் ஈஸ்ட் பெங்கால்,மோகன்பேகன் அணிகள் கல்கத்தாவில் கால்பந்தாட்டத்தின் உயிர் நாடியாக இருந்தது.கோவாவில் சர்ச்சில் அணி,சல்கோங்கர் அணி போன்றவையும் இன்னும் கேரளா.பஞ்சாப் போன்ற அணிகளும் இருந்தும்கூட இப்போது உலக தரவரிசையில் 138லிருந்து 147 வரை முன்னேறிய! நாடாக இணைய தேடலில் கிடைத்தது.

கல்கத்தா,பஞ்சாப்,கோவா,கேரள மாநிலத்தில் கால்பந்தாட்டம் நன்றாக வேரூன்றியதும் குறிப்பாக ரயில்வே துறை,அதற்கும் மேலாக ஹாக்கி விளையாடுவதற்கும் ஒரு கூட்டம் அலைமோதியது.மாநில ரீதியான போட்டிக்கான இரண்டாம் வகுப்பு,மூன்றாம் வகுப்பு ரயில் பயணங்களில் இவர்கள் காணாமல் போனார்களா அல்லது திடிரென வந்த அலையான கிரிக்கெட்டின் ரசிகர் கூட்டத்தில் காணாமல் போனார்களா?

உலக கால்பந்தாட்டங்களை தொலைகாட்சியில் பார்க்கும் போது ஒன்று புரிந்தது.உடல் வலிமை,வேகம் ,உடல்,இடுப்பு,கால் வளைக்கும் லாவகத்தன்மை,எதிர்பாராமல் பந்து கால் மாறும் சூட்சுமம்,இடித்தும் ஆட வேண்டிய போங்காட்டம் போன்றவைகளில் பின் தங்கியதும் பயிற்சி இல்லாததும் கூடவே ரசிகர்கள் உருவாகி திசை மாறிப்போனதும். கிரிக்கெட் போலவே இதுவும் அடிப்படையில் மூளையை உபயோகிக்கும் விளையாட்டே.டெஸ்ட் பந்தையங்களின் தூக்கத்திலிருந்து 50 ஓவர், இப்பொழுது 20 ஓவர் என கிரிக்கெட் தனது முகத்தை மாற்றிக் கொண்டாலும் கால்பந்தாட்டம் இதுவரையிலும் தனக்கென்று அமைத்துக் கொண்ட விதிகளை ஒட்டியே இன்னும் விளையாடிக்கொண்டிருக்கிறது.

வளைகுடா நாடுகளில் கிரிக்கெட் என்று சொன்னால் வடையா (சுனாதா?) என்று கேட்குமளவுக்கு கிரிக்கெட்டின் நிலைமை.ஆனால் உலக நாடுகள் அத்தனைக்கும் சொந்தமான விளையாட்டு கால்பந்தாட்டம்.விளையாட்டுக்குப் பின்னால் ஒவ்வொரு நாட்டின் அரசியலும் இருக்கிறது என்பது ஜெர்மனி V போலந்து , பிரான்ஸ் V இங்கிலாந்து, அமெரிக்கா V இங்கிலாந்து மற்றும் இந்தியா , பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு நிச்சயம் பொருந்தும்.

கிரிக்கெட் போதைக்கு ஊறுகாயா சில சொந்த அனுபவங்களை சொல்கிறேன்.பேச்சிலர் கேம்பில் ஒரு அறையில் 10-20பேர் தொலைக்காட்சியில் இந்தியா V பாகிஸ்தான் நேரலை கிரிக்கெட் பார்ப்பது ஒரு அலாதியான அனுபவம்.எல்லா பயல்களும் இந்தியாவுக்கு குரல் எழுப்பினால் இந்த ஓவரில் சச்சின் அவுட்டாகிறான் பாருன்னு எல்லோருக்கும் சூடேற்றுவதில் எனக்கு கொள்ளைப்பிரியம்:)என்னை ரூமுக்குள் விடக்கூடாது என்றும் கூட எழும் குரலைப் பார்த்து எனக்கும் உபசரிக்கும் நண்பனுக்கும் சிரிப்பாய் வரும்:)அதே மாதிரி சச்சின் அவுட் ஆனவுடன் ஆட்டமே நிறைய நேரங்களில் ஊத்திக்கும்.இவன் வருவதால்தான் இந்தியா தோற்குது என்ற செண்டிமெண்ட் கோபங்கள் கூட சில பேரிடமிருந்து கிளம்பும்.ஒரு முறை ஒரே ஒரு முறை இந்தியா-பாகிஸ்தான் போட்டி குவைத்தில் நடந்தது.மைதான ஆட்டத்தை விட ஸ்டேடியத்தில் மினரல் வாட்டர்,பெப்சி, 7 அப்புல ஆட்டம் களைகட்டி போதுமடா சாமி உங்க கிரிக்கெட் என்று உள்துறை சொல்லி ஒரு விளையாட்டும் இதுவரை நிகழவில்லை.

இந்தியா,பாகிஸ்தான் இரண்டு பேரும் தாங்களும் போட்டியா அடித்துக்கொண்டதுமில்லாமல் வேடிக்கை பார்க்க வந்த இலங்கைகாரனையும் ,பங்களாதேஷியையும் களமிறக்கி இப்ப ஆப்கானிஸ்தான்காரன் வேற கோதாவில்.நின்னுகிட்டே போடற கிரிக்கெட் சண்டைய ஓடிப்பிடிச்சு கால்பந்திலும் காட்டறது?

எப்படியோ இந்திய அளவில் கால்பந்தாட்டம் களை இழந்தே போனதன் கால கட்டம் கபில்தேவ் அணியினர் கிரிக்கெட் உலககோப்பையையும், ரவிசாஸ்திரி ஆடி ஜெர்மன் காரை பரிசாகப் பெற்ற கால கட்டத்தில் போதை கொண்டிருக்குமோ?ஏறிய போதை கிரிக்கெட் சூதாட்டங்களில் கபில்தேவ்ப்,ஜடேஜா இப்ப மோடி,சரத்பவார் வரைக்கும் வந்தும் தெளிந்து இருக்கணுமே!அதுவும் இந்த பதிவு எழுதும் தினம் வரை நிகழ காணோம்

அனைத்து விளையாட்டுகளையும் பின் தள்ளி விட்டு முக்கியமாக கிரிக்கெட் மட்டும் எப்படி வளர்ந்தது என்பது இன்னும் ஆய்வுக்குரியது.அதில் முக்கியமாக இந்திய,பாகிஸ்தான் இடையேயான பகை உணர்வு எல்லையில் துப்பாக்கி பிடிக்க முடியாத இரு நாட்டு சீருடையில்லா காமன்மேன் போர்வீரர்களுக்கு மனதளவிலான சண்டையே கிரிக்கெட் எனும் வில்லன் இவ்வளவு விசுவரூபமெடுத்ததற்கு காரணம் எனலாம்.மேலும் இந்தியாவின் கால் பந்தாட்ட திறன் குறைந்ததற்கு ரசிகர்கள் இல்லாமல் சோணங்கியாகிப் போனதும் ,ஊக்குவிப்பு இல்லாததும் கிரிக்கெட் வில்லன் மோகமும் ,சூதாட்டமும் இன்னும் அல்லக்கை காரணங்கள்.

டிஸ்கி: இவ்வளவு வளவளக்கிறீயே!மைதானத்துல வந்து நின்னு பாருன்னு சென்னையிலருந்து யாரோ கூவுற மாதிரி கேட்குது.கிரிக்கெட் மட்டைக்கு முன்னாடியே கத்துகிட்டதே கால்பந்தும்,கபடியும்,கோலி,கில்லிங்ண்ணா:)

அட நம்மள வுடுங்க!ஏதோ பஞ்சம் பொளக்க பரதேசம் போயிட்டோம்.திருப்பூர்ல சின்னசாமின்னு தமிழக மாநில அளவிளான ஒரு வாலிபால் பிளேயரே மாநில அளவில் விளையாடி அடையாளமில்லாமல் வியாபாரம் செய்ய போயிட்டாருங்ண்ணா.



16 comments:

ராஜ நடராஜன் said...

மங்காத்தா எந்த ஊரு ஆத்தான்னே எனக்கு தெரியாது!சொல்லிப்புட்டேன்:)

Chitra said...

உலக கால்பந்தாட்டங்களை தொலைகாட்சியில் பார்க்கும் போது ஒன்று புரிந்தது.உடல் வலிமை,வேகம் ,உடல்,இடுப்பு,கால் வளைக்கும் லாவகத்தன்மை,எதிர்பாராமல் பந்து கால் மாறும் சூட்சுமம்,இடித்தும் ஆட வேண்டிய போங்காட்டம் போன்றவைகளில் பின் தங்கியதும் பயிற்சி இல்லாததும் கூடவே ரசிகர்கள் உருவாகி திசை மாறிப்போனதும்.


....... so true!

நல்லா விரிவான அலசல் பதிவு.

கிரிக்கெட்க்கு secret energy யா எல்லா விதத்திலேயும் வளர்ச்சி அடைய "பூஸ்ட்" பண்ணிட்டு, மத்த விளையாட்டுக்களுக்கு "கஞ்சி" கூட ஊத்தாம போய்ட்டாங்க...... :-(

Unknown said...

நம்ம ஊருக்காரங்க உடம்பு வாகுக்கு ஃபுட்பால் எல்லாம் சரிப்பட்டு வராதுங்க..

அதுக்கெல்லாம் ஸ்டாமினா நிறைய வேணும். நமக்குள்ளயே ஆடுறதுக்குத்தான் லாயக்கு. ஆப்ரிக்காக்காரன், தென்னமரிக்காக்காரனோடவெல்லாம் ஆடக்கூடிய அளவுக்கு நமக்கு திறமை இல்லை.

கிரிக்கெட்ல ஏதோ 9 நாடு மட்டும் ஆடுறதால நம்பர் ஒன்னு ரெண்டுனு காலம் தள்ளிக்கிட்டு இருக்கோம். இதுல தென்னமெரிக்காக்காரன் ஆட வந்துட்டா நாம் அம்புட்டுத்தான்.

ஹாக்கியில ஒரு காலத்துல ட்ரெப்ளிங் மட்டுமே ஆட்டமா இருந்தது. நம்ம தியான்சந்த்கிட்ட கோலி பாலை பாஸ் பண்ணினதும் நம்ம கோல் போஸ்ட்ல இருந்து ட்ரபிள் பண்ணிக்கிட்டே அடுத்த கோல் போஸ்ட் வரைக்கும் போயி கோல் போட்டுட்டு வருவாரு.

ஆனா மத்த நாடுங்க எல்லாம் பாஸ் பண்ணி ஆட ஆரம்பிச்சதும் நாம ஈடு குடுக்க முடியாம இப்ப உலகத் தரவரிசையில எந்த மூலைல இருக்கோம்னே தெரியாம இருக்கோம். :(

நசரேயன் said...

இன்னும் எவ்வளவு இடுகை இருக்கு இந்த உதை பந்தை வச்சி ?

நசரேயன் said...

//அதுக்கெல்லாம் ஸ்டாமினா நிறைய
வேணும்//

கள்ளு குடிக்கணும் முகிலன்

வவ்வால் said...

Raj,

cricket ippo onnum ver oonra aarampikkavillai athu pre independant periodla start aachu, vellaikaran kooda friends aaga samasthana rajakal cricket aada aarampichanga.

Appadiye samasthanathuku oru team form pannanga.english teams invite seythu match nadathi perumai valartharkal.

Lala amarnath ,baroda raja karunaiyinale cricket aada mudinthathu. Appothellam rajakal than indin team ku captain.aana aada varathu ,non playing captain aaga perumpalum pavilionil utkanthu pakoda sapiduvarkal.

mannarkal,and british karan kita sanmanam ,velai vangave palar cricket aada aarampichanga. Ippo varaikkum cricket aadinaa than easy ah kaasu paakka mudiyuthu,rajakal pathila sponsors.

வவ்வால் said...

One more info, british timela indian football team world cup select aanathu ,but aadalai, because indian players appo shoe pottu aadi anubavam illai. 'Wc' la kandipa shoes pottu aadanum rules. Enave appo chance miss pannitanga,ippo shoes irukku but no chance!

ராஜ நடராஜன் said...

//நல்லா விரிவான அலசல் பதிவு.

கிரிக்கெட்க்கு secret energy யா எல்லா விதத்திலேயும் வளர்ச்சி அடைய "பூஸ்ட்" பண்ணிட்டு, மத்த விளையாட்டுக்களுக்கு "கஞ்சி" கூட ஊத்தாம போய்ட்டாங்க...... :-(//

ஆஹா!"பூஸ்ட்"ன்னு ஒரே வார்த்தைல மொத்த இடுகையையும் அடக்கிட்டீங்க!

ராஜ நடராஜன் said...

பாஸ்!முகிலன்! கொரியாக்காரனுங்களுக்கு இருக்கிற ஸ்டெமினா கூட நம்ம ஊர் சர்தார்ஜி,கேரள பசங்களுக்கு இல்லைன்னு சொல்றீங்களா?

நீங்க இந்தியாவுல பிரபலமான மோகன் பேகன்,ஈஸ்ட் பெங்கால் போட்டிகளை எங்காவது பார்த்திருந்தீங்கன்னா எல்லாமே லாங்க் ஷாட்லதான் ஆடுவாங்க.பந்து நகர்த்தும் பாஸ் செய்றதே கிடையாது.மைதானத்தின் நடுவிலிருந்து எத்தினால் கோல் விழ வேண்டும் என்கிற மாதிரிதான் விளையாட்டே.பயிற்சியின்மையே முக்கிய காரணம் என்பேன்.

பெய்சிங்க் பூட்டியாவெல்லாம் ஆசிய கோப்பை வரை பிரகாசிக்க முடிந்தது.

சரி கால்பந்த விடுங்க!ஹாக்கி?உலக தரத்திலிருந்தும் கீழே விழுந்ததுக்கு என்ன காரணம்?

கல்லூரி காலத்தில் சண்டை போடனுமுன்னா கிரிக்கெட் மட்டைய தேடி கண்டுபிடிக்கனும்.ஹாக்கி பேட் அப்படியல்ல.மொத்தமா கொட்டிக்கிடக்குறதுல கிடைச்சவன் எடுத்துட்டு சண்டைக்கு ஓடுற த்ரில் கூட காணாம போச்சே.அதுக்கு பதிலா கத்தியெல்லாம் கல்லூரி விடுதிக்குள்ளே வந்து பூந்துகிச்சே.

எந்த ஒரு விளையாட்டுக்கும் உற்சாகம் முக்கியம்.

ராஜ நடராஜன் said...

//இன்னும் எவ்வளவு இடுகை இருக்கு இந்த உதை பந்தை வச்சி ?//

அடுத்த மாதம் அர்ஜெண்டினா கோப்பையை கைப்பற்றும் வரைக்கும்:)

ராஜ நடராஜன் said...

////அதுக்கெல்லாம் ஸ்டாமினா நிறைய
வேணும்//

கள்ளு குடிக்கணும் முகிலன்//

கேட்டீங்களா பாஸ்:)

ராஜ நடராஜன் said...

வவ்வால்!சமஸ்தான காலத்து கிரிக்கெட் பகிர்வுக்கு நன்றி.அங்கேயிருந்து அப்படியே ஓடி வந்தா டெஸ்ட் மேட்ச் காலம் வரைக்கும்,தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்புக்கு முன்னாடி வரைக்கும் வாக்மேனை சொருகிகிட்டுப் போறவங்கிட்ட ஸ்கோர் ப்ளீஸ் கேட்கிறது தவிர கிரிக்கெட்டின் ஆக்கிரமிப்பு இல்லையே!

சித்ரா மேடம் சொன்ன மாதிரி பூஸ்ட்ல துவங்குன விபரீதம் கிரிக்கெட் விளையாட்டின் விபரீதங்கள்.

சென்னை ஜிம்கானா கிளப்பில் கூட நல்ல பக்கோடா,காப்பி கிடைக்கும்.கமான்,கமான்னு கத்துறதுக்கு தெம்பு வேணும்ங்கிறதுக்கான உபசரிப்பு:)

நிறைய நீங்கள் பதிவுலகுக்கு பங்களிக்கலாம் என்பது மீண்டும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.நீங்கள் இருக்கும் இடத்திற்கெல்லாம் கணினி இணைய இணைப்பு வரும் காலமே தமிழகத்தின் உண்மையான கணினி தகவல் பரிமாற்ற காலங்கள் என்பேன்.

காலணி அணியாமல் இந்தியா உலக கோப்பை ஆட்டத்தை தவறவிட்டதென்பதை எங்கோ படித்ததாக நினைவு.

மீண்டும் உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன்.நன்றி.

ஹேமா said...

சுவிஸ் ல் நான் பிறரோடு கதைத்தவரை கிரிக்கெட் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.
விளையாட்டுக்களில் பங்கு பற்றும் பாடசாலை இளைஞர்கள் கூட !

ஜோதிஜி said...

இந்த பதிவை படிக்காமல் அடுத்த பதிவில் உள்ள கருத்துக்கு நான் அளித்த விமர்சனத்தை அப்படியே பிரதிபலித்து உள்ளீர்கள். வியப்பாய் இருக்கிறது. ஒத்த கருத்து.

12 ஆம் வகுப்புக்கு படித்த காலத்தில் பள்ளிக்கூட மைதானத்தில் மாலை 4 முதல் வெளிச்சம் வரைக்கும் படித்துக்கொண்டுருக்கும் போது ராமு என்பவர் ஓட்டப்பந்தயத்திற்காக பயிற்சி எடுத்துக்கொண்டுருப்பார்.

எப்படி?

ஓட ஆரம்பித்தால் நிற்காமல் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே இருப்பார். மைதானத்தில் இருந்து அவர் கிராமத்துக்கு 20 கிலோமீட்டர். சில சமயம் அவர் அண்ணன் (பால் வியாபாரம் செய்பவர்) வண்டியில் கொண்டு வந்து விடுவார். பல சமயம் அவர் mofed வேகமாக ஓட்டிக் கொண்டு செல்ல ராமு துரத்தி பயிற்சி எடுப்பார்.

இந்திய அளவில் வாங்கிய கோப்பைகளும் பரிசுகளும் வைக்க தனியாக ஒரு அறை வேண்டும்.

இப்போது காரைக்குடியின் அதிமுக வில் ஏதோ ஒரு பதவியில் இருந்து கொண்டு வாழ்க்கையை வீணாக்கி மொத்தமும் பழாக்கிக் கொண்டு.................

பிடி உஷா வுக்கு சரிசமமாக வர வேண்டிய பையன்.

விளையாட்டுக்கு பொறுப்பில் வரும் அமைச்சர்களைப் பாருங்கள். அதை விட பள்ளிக்கூட உடற்பயிற்சி ஆசிரியர் நடவடிக்கைகளையும் பாருங்கள்.

வடிவேல் சொன்ன சிரிப்பு போலிஸ் தான்?????

நம்மவர்கள் பேசாமல் தொடக்கம் முதலே கூலி வேலைக்கு போய் விடுவது உத்தமம்?

முகிலன் சொன்ன ஸ்டெமினா அரசியல்வாதிகளின் புத்தியில் இருப்பதால் நம் விளையாட்டு வீரர்கள் புழுதியில் பூத்த புது மலராக இருந்தாலும் போக்கிடம் இல்லாமல் காலப் போக்கில் மறைந்தும் போய் விடுகின்றனர்.

பஞ்சு நூல் ஏற்றுமதி கொள்ளையில் மூன்று முக்கிய தலைகளில் ஒரு தறுதலை சச்சின் டெண்டுல்கர்?

எப்பூடி?

ராஜ நடராஜன் said...

//சுவிஸ் ல் நான் பிறரோடு கதைத்தவரை கிரிக்கெட் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.
விளையாட்டுக்களில் பங்கு பற்றும் பாடசாலை இளைஞர்கள் கூட !//

சுவிஸ்லதான் சருக்கு விளையாட்டும்,பூதம் காக்கும் காசு போடற பேங்கும் இருக்குதே:)

வவ்வால் சார் சொன்னமாதிரி இங்கிலாந்துக்காரர்கள் சமஸ்தானத்து ஆட்களோட யானை,குதிரை மேல உட்கார்ந்துகிட்டு போலோ விளையாடவும்,கிரிக்கெட் விளையாடவும் ஆரம்பிச்ச நோகாம நொங்கு தின்னும் விளையாட்டை கத்துகிட்டு இப்ப வியாபார ரீதியா இந்தியா இல்லைன்னா கிரிக்கெட்டே இல்லங்கிற அளவுக்கு கொண்டு வந்துட்டாங்க.

இதுல என்ன கொடுமைன்னா 10-20 ஈரானி ரொட்டி சாப்பிடும் ஆப்கானிஸ்தானும் கூட இந்தியாகிட்ட மல்லுக்கட்டுறேன் பார்ன்னு கிரிக்கெட்டுல சேர்ந்துகிட்டதுதான்:)

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!நீங்கள் குறிப்பிட்ட ராமு மாதிரி ஆட்களில் ஒன்று இரண்டு பேருக்கு இயக்குநர் வசந்த பாலன் போன்றவர்களால் திரைப்பட சந்தர்ப்பங்கள் அமைகிறது.மற்றவர்கள் பள்ளியிறுதி வரை விளையாட்டில் துடிப்பாக இருப்பார்கள்.அப்புறம் காதல்,வீட்டு பிரச்சினைகள்,வேலை தேடுதல்,குடும்பம் என்ற வட்டத்துக்குள் சிக்கி அடையாளமே இல்லாமல் போய் விடுவார்கள்.ராமுவின் அ.தி.மு.க பதவி கொஞ்சம் வித்தியாசம்.

உடற்பயிற்சி வகுப்புன்னாலே ஓய்வு மாதிரிதான் ஆசிரியர்,மாணவர் மனநிலை:)கணக்குல நொங்கு எடுக்குற வாத்தியார்களை நிறைய பேர் அனுபவித்திருப்பார்கள்.உடற்பயிற்சி வாத்தியாரைப் பார்த்து ஓடின பள்ளி மாணவர்கள் யாராவது இருக்கிறார்களா?

பஞ்சு சச்சின், ஆச்சரியம் தரும் பெரும்பாலோருக்கும் தெரியாத அதிர்ச்சி தகவல்.