Followers

Tuesday, June 15, 2010

பிரேசில் தங்கத்தை வெல்லுமா?

இடுகை இடும் இந்த நேரத்தில் முதல் பாதி விளையாட்டை 0-0 என்ற கணக்கில் பிரேசிலும்,அதிக நாட்கள் தலையைக் காட்டாத வடகொரியாவும் ஆடி முடித்திருக்கின்றன.பிரேசில் மேஜிக் என்ற பதத்தை ஆட்டத்தின் முதல் பாதி வரை காணமுடியவில்லை.பாதுகாப்பு வட்டத்திலேயே நின்றும் அவ்வப்போது தாக்குதல் நுணுக்கத்தையும் வடகொரியா செய்தாலும் பந்து பிரேசில் கால்களிலேயே பெரும்பாலும் விளையாடியது.

இரண்டாம் சுற்றில் பிரேசில் கோல் போடுவதற்கான சாத்தியம் இருக்கலாம்.இருந்தாலும் இதே முறையில் பிரேசில் வரும் நாட்களிலும் ஆடினால் முன்னணி அண்ணாத்தைகளுக்கு ஆட்டம் காண்பிப்பது சிரமமாகவே இருக்கும்.

எப்படியோ அர்ஜெண்டினாவுக்கு வழிய விட்டா சரி:)

இரண்டாம் பகுதி துவங்கி விட்டது.இங்கே உட்கார்ந்துகிட்டு இருந்தால் ஆட்டத்தை யார் பார்ப்பது.வருகிறேன்.

10 comments:

ராஜ நடராஜன் said...

வர்ணனையாளர் கக்கா பேரைத் தவிர வேற யாருடைய பெயரையும் உச்சரிப்பதாக காணோம்.

பழமைபேசி said...

கால் பந்தாட்டம்; அரைப் பந்தாட்டம்...முக்காப் பந்தாட்டம்னு?

தாராபுரத்து பெரிய அண்ணங்கிட்டச் சொல்றேன் இருங்க.......

உதை பந்தாட்டம்!

ராஜ நடராஜன் said...

கமெண்டி முடிக்கல.பிரேசில் ஒரு கோல்.

ராஜ நடராஜன் said...

//உதை பந்தாட்டம்!//

பேர் எப்ப மாத்துனாங்க:)

நசரேயன் said...

விளையாட்டு அறிவே ரெம்ப குறைவு எனக்கு, அவங்களுக்கு தங்கம் கிடைகலைனாலும் பரவா இல்லை, அடகு வைக்க கடை கிடைக்குமா?

ஹேமா said...

உதைபந்தாட்டம் தான் சரி நடா.

நடா...நசருக்கு ஏதாச்சும் குடுத்தனுப்புங்க.பாவம்.

vasu balaji said...

ராஜ நடராஜன் said...
//உதை பந்தாட்டம்!//

பேர் எப்ப மாத்துனாங்க:)//

அதானே! அதெப்பிடி? முட்டுனாலும் கோல். தட்டி விட்டாலும் கோல். தள்ளி விட்டாலும் கோல். :))

ராஜ நடராஜன் said...

//விளையாட்டு அறிவே ரெம்ப குறைவு எனக்கு, அவங்களுக்கு தங்கம் கிடைகலைனாலும் பரவா இல்லை, அடகு வைக்க கடை கிடைக்குமா?//

நசரேயன்!எனக்கும் இதே பிரச்சினைதான்.பழைய தங்கம் கொடுத்தா புதுசா தங்கம் கிடைக்குது.ஆனா அடகு கடையே கண்ணுல காணோம்.

ராஜ நடராஜன் said...

//உதைபந்தாட்டம் தான் சரி நடா.

நடா...நசருக்கு ஏதாச்சும் குடுத்தனுப்புங்க.பாவம்.//

நசருக்கு மாதிரியே எனக்கும் அதே அடகு கடை பிரச்சினை இங்கே.வட்டி வாங்க கூடாதாம்.அதனால நகை கடையவே காணோம்.

வானம்பாடி சொல்றத கவனிச்சீங்களா?
வேணுமுன்னா கால் உதை பந்தாட்டம்ன்னு சொல்லிக்கலாம்:)

ராஜ நடராஜன் said...

//பேர் எப்ப மாத்துனாங்க:)//

அதானே! அதெப்பிடி? முட்டுனாலும் கோல். தட்டி விட்டாலும் கோல். தள்ளி விட்டாலும் கோல். :))//

அதானே! விளையாட்டே நீங்க சொல்றமாதிரிதான் இருக்குது.

தட்டி முட்டி தள்ளி பந்தாட்டம்:)