கால் பந்தாட்டம்ன்னு சொன்னா கால்,அரைக்கால்,முக்கால் பந்தாட்டமான்னு கேட்டு உதை பந்தாட்டம்தான் சரியென்கிறார் தமிழ் புலவர் பழமை.வம்பு எதுக்குன்னு கால் உதை பந்தாட்டம்ன்னே ஆரம்பிக்கிறேன்.
பான் கி மூன் கிட்ட ரெப்ரி செய்யச் சொன்னா எப்படி ஒரு பக்கமாவே பார்த்து கோல் போடச் சொல்வாரோ அதே மாதிரி ஆட்டத்தின் ரசனையைக் கலைக்க,குலைக்கவென்றே நான்கு வருடத்துக்கு ஒரு முறை சில ஆட்கள் மேஸ்திரி வேலை பார்க்க கிடைத்து விடுகிறார்கள்.இன்றைய தென் ஆப்பிரிக்கா,உருகுவே போட்டியில் தென் ஆப்பிரிக்கா கோல் புடிப்பவருக்கு தண்டனையாக சிவப்பு அட்டையும் காண்பித்து கோல் போட அனுமதியும் தந்து ஆட்டத்தையும் கூட்டத்தையும் கலைத்து விட்டார் ரெப்ரி மேஸ்திரி.உலக கோப்பையை நடத்தும் நாடாக மஞ்சள் அட்டையை கோல் பிடிப்பவருக்கு கொடுத்தாவது ஆட்டத்தின் ஓட்டத்தை மாற்றியிருக்கலாம்.முந்தைய காலத்துக்கான பிரேசில் அணிக்கான பயிற்சியாளர்,உடல் வலிமை போன்ற அனுகூலங்கள் இருந்தும் தென் ஆப்பிரிக்காவின் ஆட்டம் சோபிக்கவில்லை.தண்டனையாக முதல் கோல் உருகுவே போட்ட போதே அரங்கிலிருந்து தென் ஆப்ரிக்க ரசிகர்கள் இடத்தை காலி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.அடி வாங்கினவனை மேலும் அடிச்சு காயப்போட்டு 3-0 என்ற நிலையில் உருகுவே சிரித்து அரங்கை காலி செய்தது.
இதே மாதிரி முந்தா நாள் ஒரு மேஸ்திரி கொடுத்த சிவப்பு அட்டையை பிஃபா தள்ளுபடியும் செய்து ரெப்ரிகளில் சிலர் ஆட்டத்தின் ரசனையை கலைக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.
ஆட்டத்திற்கு முன் அர்ஜெண்டினா,ஜெர்மனி (1990?)தங்கத்திற்கான இறுதி ஆட்டத்தை காண்பித்தார்கள்.86ம் நிமிடம் வரை இருபக்கமும் 0-0 என்ற நிலையிலிருந்து அர்ஜெண்டினாவுக்கு தண்டனையாக ஒரு கோல் போடச் சொல்லி ஜெர்மனிக்கு தங்கத்தை எடுத்து கொடுத்து விட்டார்கள்.
இதே மாதிரி முந்தா நாள் ஒரு மேஸ்திரி கொடுத்த சிவப்பு அட்டையை பிஃபா தள்ளுபடியும் செய்து ரெப்ரிகளில் சிலர் ஆட்டத்தின் ரசனையை கலைக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.
ஆட்டத்திற்கு முன் அர்ஜெண்டினா,ஜெர்மனி (1990?)தங்கத்திற்கான இறுதி ஆட்டத்தை காண்பித்தார்கள்.86ம் நிமிடம் வரை இருபக்கமும் 0-0 என்ற நிலையிலிருந்து அர்ஜெண்டினாவுக்கு தண்டனையாக ஒரு கோல் போடச் சொல்லி ஜெர்மனிக்கு தங்கத்தை எடுத்து கொடுத்து விட்டார்கள்.
விளையாட்டுத் திறன்,உலகப்புகழ்,நட்சத்திர தகுதியிலேயே அரசல் புரசலாக போதைப் பொருட்கள் உபயோகிப்பது மற்றும் வலுக்கட்டாயம் போன்றவற்றால் போதைக் கடத்தல்காரர்களுக்கு கை மாற்றுவது போன்ற செய்திகள் கசிந்தாலும் ஜெர்மனியினுடனான விளையாட்டில் அர்ஜெண்டினா கேப்டனாக இறுதிக் கட்ட விளையாட்டில் மஞ்சள் அட்டை, தங்கம் கிடைக்காத தோல்வி காரணத்தாலும், சொந்த விசயங்களாலும் மரடோனா போதைக்கு அடிமையாகியே போனார். அப்படியிருந்தும் அவற்றையெல்லாம் கடந்து 2010 உலக கோப்பைக்காக அர்ஜெண்டினா அணியின் மேலாளராக திரும்பி வந்ததற்கு மரடோனாவை பாராட்டவே செய்யலாம். அர்ஜெண்டினா குழுவுக்கான அணியாக நைஜீரியா, கொரியா, கிரிஸ் என கால்சுற்று தகுதிக்கு செல்வதற்கு அர்ஜெண்டினாவுக்கு எளிதாக இருக்க கூடும். நாளைய போட்டியான தென் கொரியாவுடனான போட்டி கணிப்பு 2-0 என்ற விகிதத்தில் வெற்றி பெறும் என வளைகுடா பருந்து ஜோசியம் சொல்கிறேன்.
11 comments:
ஆட்டம் முடிந்து தென் ஆப்பிரிக்கா,உருகுவே அணி சார்பாக கோவிச்சுகிட்டு கோச்சுகள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறார்கள்.
இனி மேல் பதிவுலகிலும் ஏதாவது அழுகுணி ஆட்டம் நடந்தா பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யனும்:)
//இனி மேல் பதிவுலகிலும் ஏதாவது அழுகுணி ஆட்டம் நடந்தா பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யனும்:)
//
எதுக்கு சிகப்பு அட்டை கொடுக்கவா?
////கால் பந்தாட்டம்ன்னு சொன்னா கால்,அரைக்கால்,முக்கால் பந்தாட்டமான்னு கேட்டு உதை பந்தாட்டம்தான் சரியென்கிறார் தமிழ் புலவர் பழமை.வம்பு எதுக்குன்னு கால் உதை பந்தாட்டம்ன்னே ஆரம்பிக்கிறேன்.////
...... Foot ball?? Soccer???
Kick ball????? avvvvv......
கால் உதை பந்தாட்டம் !
சுவிஸ் வெற்றி பெற்றது பற்றிச் சொல்லவேயில்லை நீங்க.
பொறாமைதான் உங்களுக்கும் நடா.
//Chitra said...
////கால் பந்தாட்டம்ன்னு சொன்னா கால்,அரைக்கால்,முக்கால் பந்தாட்டமான்னு கேட்டு உதை பந்தாட்டம்தான் சரியென்கிறார் தமிழ் புலவர் பழமை.வம்பு எதுக்குன்னு கால் உதை பந்தாட்டம்ன்னே ஆரம்பிக்கிறேன்.////
...... Foot ball?? Soccer???
Kick ball????? avvvvv......
//
Take your seat அப்படின்னு சொன்னவுடனே, இருக்கையைக் கையோட தூக்குறமாதிரி எல்லாம் மொழியப் பெயர்க்கப்படாது.... மொழியாக்கம் செய்யணும்....
Raj,
naattamaikal paththi nalla sonninga. Ella sportslum ithu irukku.
enakkum uthai panthu/kaal panthu ethu sarinu doubt. Etho oru ball ellam senthu uthaikiranga.
Aattam inimethan soodu pidikkum.
Cameron,ivory coast ponra panja desangal final varuthu ,intha veena pona india than cricket la tholanju poiduchu.
////இனி மேல் பதிவுலகிலும் ஏதாவது அழுகுணி ஆட்டம் நடந்தா பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யனும்:)
//
எதுக்கு சிகப்பு அட்டை கொடுக்கவா?////
உலக போட்டியே சிகப்பு அட்டை கொடுக்கும் போது இங்கே கொடுத்தால் தப்பேயில்லை.
//Foot ball?? Soccer???
Kick ball????? avvvvv......//
Foot Ball தான் துவக்க காலம் தொட்டு இருந்து வருகிறது.
Soccer- நீங்க இருக்கிற ஊர்க்காரங்க இடையில வந்து பேரை மாத்தினது.
//கால் உதை பந்தாட்டம் !
சுவிஸ் வெற்றி பெற்றது பற்றிச் சொல்லவேயில்லை நீங்க.
பொறாமைதான் உங்களுக்கும் நடா.//
ஹேமா!பார்த்த ஆட்டங்களுக்கு மட்டுமே பதிவுகள்.சுவிஸ் விளையாடும் நேரத்தில் அலுவலகத்தில் ஆணி.
//Take your seat அப்படின்னு சொன்னவுடனே, இருக்கையைக் கையோட தூக்குறமாதிரி எல்லாம் மொழியப் பெயர்க்கப்படாது.... மொழியாக்கம் செய்யணும்....//
தமிழை சரியா சொல்லவே நான் படும் பாடு எனக்குத்தானே தெரியும்:(
வவ்வால் எப்படியிருக்கீங்க?
Post a Comment