சென்ற இடுகையில் 2.0 என்ற பருந்து ஜோசியம் பலிக்காமல் அர்ஜெண்டினா 4-1 என்ற வித்தியாசத்தில் தென் கொரியாவை வென்றது.பிரான்ஸ்,மெக்ஸிகோ போட்டியில் 2.0 என்ற கணக்கில் மெக்ஸிகோ வென்றது.இன்றைய ஜெர்மனி,செர்பியா முதல் பகுதி 45 நிமிட ஆட்டத்தில் 1-0 என்ற நிலையில் ஜெர்மனியை நிலை குலைய வைத்து ஆடிக்கொண்டிருக்கிறது.
பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற அணிகள் உலக தரத்தில் சிறந்த அணிகளாக இருந்தாலும் காலை தட்டி விட்டு ஆடும் ஆட்டத்தை தொடர்வது அணிகளுக்கு அழகும் சேர்க்காமல் மஞ்சள் அட்டையையும்,சிவப்பு அட்டையையும் வாங்கி ஆட்டத்தின் அழகை குறைக்கின்றது.க்ளாஸ் என்ற ஜெர்மனி முன்னணி ஆட்டக்காரர் நோகாமல் நொங்கு தின்னும் ஆசையில் ஆளில்லாத இடமாக (Offside) பார்த்து நின்று கொண்டு ஆடும் போதே எரிச்சல் வந்தது.குறைந்த பட்சம் எதிரணியில் ஒருவரையாவது கடந்து சென்று பந்தை நகர்த்தி வெற்றி பெறுவதே ஸ்கிப்பரின் பங்காக இருக்க வேண்டும்.
மேலும் பின்புறத்திலிருந்து பந்தை தள்ளவும்,எதிரணிக்காரரை கீழே தள்ளவும் முயற்சி செய்து மஞ்சள் அட்டையையும் வாங்கி,இருக்கிற கூட்டத்தின் சத்தத்தில் நமக்கு கேட்க இயலாமல் மேஸ்திரி(refree)யை என்ன சொன்னாரோ அடுத்த கணத்தில் சிவப்பு அட்டையுடன் வெளியேற்றப்பட்டார்.
Red Card controversy is continuing....
மீதி ஆட்டம் பார்த்துட்டு மனசுல ஏதாவது பட்டால் பின்னூட்டத்தில்....
6 comments:
இரண்டாம் பகுதி ஆட்டத்தில் பெனால்ட்டி பந்திலே ஜெர்மனி கோல் போட முடியல.ஜெயிச்சமாதிரிதான்.
Brazil - First goal - was super!
இத நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் நடராஜன் அவர்களே...
என்ன கொடுமைங்க இது...
Switz - Spain match பார்க்கலையா... அதை எப்பூடி விடலாம்... Switz.. வரலாறு காணாத வெற்றிங்க... அது எப்பூடி விடலாம்.. மருவாதியா அட் பண்ணுங்க... அப்போதான் ஓட்டு...
//Brazil - First goal - was super!//
Goal is super but Lacks the magic of their own so far.
//Switz - Spain match பார்க்கலையா... அதை எப்பூடி விடலாம்... Switz.. வரலாறு காணாத வெற்றிங்க... அது எப்பூடி விடலாம்.. மருவாதியா அட் பண்ணுங்க... அப்போதான் ஓட்டு...//
இது வரை இரண்டு பேர் ஸ்விஸ்-ஸ்பெய்ன் பற்றி சொல்லீட்டீங்க.மறு ஒளிபரப்பு எப்படியாவது பார்த்துட்டு கருத்து சொல்கிறேன்.
athu seri...
Post a Comment