Followers

Friday, June 18, 2010

ஜெயலலிதாவின் இலங்கை அறிக்கை-ஓர் பார்வை

கடலின் இருபக்கமுமிருந்து காப்பாத்துங்க!காப்பாத்துங்கன்னு கத்தியும், அழுதும் சொல்லியும் கூட கேட்காமல் மயிரே போச்சு மாரப்பா என்ற கோவை சொலவடை மாதிரி மத்திய இந்திய அரசும், மாநில அரசும் வல்லான் வகுத்த கோட்பாடுகளுடன் நடந்து கொண்டதோடுமல்லாமல் எங்களை காப்பாற்ற விட்டாலும் பரவாயில்லை,உங்களை நீங்களே காப்பாத்திக் கொள்ளுங்கள் என்று எழும் தெருக்குரல்களான(street voice) நமது குரல்களையும் கூட அலட்சியம் செய்து விட்டு ராஜதந்திரம் என்ற போர்வை போர்த்திக் கொண்டு கை குழுக்கிக் கொள்கின்றன.

அரசியல் ராஜதந்திரம் ஒன்றும் அதிசயத்தில் மாங்காய் விழ வைக்கும் அதிசயமில்லை.உள் துறை அமைச்சர் சொல்வது மாதிரி டக்ளஸ் மீது வழக்கு இருப்பதே பத்திரிகை படிச்சுத்தான் தெரியும் என்று சொன்ன மாதிரியும் அதனோடு கூடுதலாக பத்திரிகைகளின் கருத்துக்கள், தொலைக்காட்சி செய்திகள், அரசு கட்டமைப்பின் முக்கிய தீர்மானங்கள், அதன் மீதான விவாதங்கள், சட்டவியல், எதிர்க்கட்சிகளின் குரல்கள், அவற்றில் உள்ள சுயநலங்கள், பொதுநலங்கள் போன்றவற்றை அலசும் திறன், crisis management எனப்படும் அவசரகால நிர்வாக திறமை, முடிவுகளின் சாதக,பாதகங்கள்,சுயநலத்துக்கும் அப்பால் தேசத்தின் மீதும், மக்கள் மீதும் அன்பும் இருந்தாலே ஓரளவுக்கு அரசியல் ராஜதந்திரத்தில் தேறும் எண்ணிக்கையில் தேர்ந்து விடலாம்.ஆனால் நிகழும் ராஜ தந்திரங்கள் எந்த விதத்தில் இந்தியாவுக்கு நன்மையோ ஆடுகள நபர்களுக்கே வெளிச்சம். மனதுக்கு மட்டும் சமாதானமில்லை.

சென்ற வருடத்தின் ஈழப்படுகொலைகளின் அவலநிலைகளிலே இணையம் சார்ந்த பலகுரல்கள் அடேய்!இந்தியா!உன்னுடைய சுயநலத்துக்காகவாவது சீனாவை இலங்கைப் பக்கம் அண்ட விடாதே என்று குரல் கொடுத்தன.அப்போதெல்லாம் எழுந்த குரல்கள் அரசல் புரசலாக ஜெயலலிதாவின் குரலுக்கு இப்பொழுது கேட்டிருக்கும் போல் இருக்கிறது.இலங்கை வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் சீனாவின் உளவுத்துறை சார்ந்தவர்கள் இலங்கையில் குடிபுகுந்துள்ளார்கள் என்று குரல் கொடுக்கிறார்.அவரின் குரலில் வரும் காலத்தின் தேர்தல் கணக்கீடு உள்ளதா அல்லது உண்மையான இந்திய அக்கறை உள்ளதா என்பது அவருடைய மனசாட்சி சார்ந்த விசயம்.இருந்தாலும் முந்தைய தமிழக அமைச்சர் என்ற நிலையிலாவது இந்திய அரசு இதனை சீர்தூக்கிப் பார்க்கும் என்ற நம்பிக்கைக்கான நிலைகளை மனம் கடந்து விட்டது.

இருந்தாலும் இங்கே ஒரு விசயத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியமேற்படுகிறது.தற்போது தங்க கோப்பைக்கான உலக கால் பந்தாட்டம் நிகழ்கிறது.இதற்கான மொத்த நேரலை தொலைக்காட்சியை கத்தாரின் அல்ஜசிரா நிறுவனத்திற்கு FIFA தாரை வார்த்து விட்டது.துவக்க நாளின் நேரலை ஆட்டம் தடங்கல் செய்யப்பட்டது.இதற்கான காரணங்கள் கணினி,தொலைக்காட்சி ஒளிபரப்பு சார்ந்த அல்ஜசிராவின் உள் கட்டமைப்போ அல்லது எதிர் நிலை அமைப்புகளின் ஹேக் நிலையாக கூட இருக்க கூடும்.இந்தியாவின் தெற்கு கடற்கரை மாநிலங்களான தமிழகமும்,கேரள மாநிலமும் மாநாட,மயிலாட,சுயபுராண நிகழ்வுகள்,ஆட்டம்,பாட்டம் என்று திளைத்துக் கொண்டு அதன் வட்டத்துக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கும் வேளைகளில் சீனாவின் கணினி வன்,மென்பொருள்கள் உலக சந்தையை குப்புற தள்ளி பயனாளிகளுக்கு பயன் தரும் அதே வேளையில் பல முன்னணி நிறுவனங்களை ஹேக் செய்யும் திறன் படைத்தது.இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு உட்கார்ந்த இடத்திலே உலகத்தை ஆட்டுவிக்கும் திறன் கொண்ட மனித வளங்களை மட்டுமே வல்லரசு பட்டியலில் நிறுத்தும் திறன் கொண்டது.அந்த விதத்தில் சீனாவின் திறன்களை குறைவாக எடை போடவும்,இலங்கையின் வாலையும்,தலையையும் காட்டும் சீன,இந்திய ராஜதந்திரம் நட்புறவாக இருக்கும் பட்சத்தில் ஆபத்தில்லை.அரசியல் நிரந்தர நண்பன்,பகைவன் இல்லை என்ற கோட்பாட்டில் மாற்றங்கள் வருமானால் வடக்கிலே காஷ்மீரப் பிரச்சினையை நீட்டுவித்த மாதிரி தென்பகுதியில் இந்தியாவின் நலன்களை குலைத்ததற்கு இப்போதைய காங்கிரஸ் அரசின் பங்கு நிச்சயமாக இருக்கும்.

ஒரு புறம் மக்களின் எண்ணங்கள், தேவைகளின் குரல்கள் பிரதிபலிக்காமல் பொதுமக்களின் சார்பான அமைப்புகளின் மனம் வன்முறைகளை தேடுவது,இன்னொரு பக்கம் அரசியல் குறுகிய லாப கணக்குகள் கொண்டோ, அல்லது நிகழ்வுகளை மாற்றியமைக்கும் முயற்சி கொண்டோ குற்றமும் செய்து விட்டு பழியையும் மக்கள் மீதே போட்டு பிரச்சினைகளை இன்னும் தீவிரமாக்கும் அரசு கட்டமைப்பின் சில அங்கங்களுமென இரு நிலைகளில் ஏதாவதொன்றில் உண்மையிருக்கிறதென்பதற்கான நிகழ்வாக கடந்த வாரத்தில் நிகழ்ந்த ரயில் தண்டவாள தகர்ப்பு தனது அவல முகத்தை வெளிக்காட்டுகிறது.பொது மக்களின் உயிர்களின் மீது அரசியல் சதுரங்கம் நிகழ்த்துபவர்கள் யாராக எந்த நிலையில் இருந்தாலும் கண்டனத்துக்குரியவர்கள்.

11 comments:

ராஜ நடராஜன் said...

சொல்வதையெல்லாம் கேட்க ஆளா இருக்குது?இது தடி ஊணும் காலத்தில் நிகழ்வுகளின் அலைகளை மெல்ல அசை போட.....

கலகலப்ரியா said...

ம்ம்... வந்து படிக்கறேன்..

வானம்பாடிகள் said...

/ஆனால் நிகழும் ராஜ தந்திரங்கள் எந்த விதத்தில் இந்தியாவுக்கு நன்மையோ ஆடுகள நபர்களுக்கே வெளிச்சம். மனதுக்கு மட்டும் சமாதானமில்லை./

நாயரின் புலிவால் பாலிசிண்ணா. விலாங்கு மீன் தலை என் பக்கம்னு ரெண்டு பேரும் பால் ஊத்தறாங்க. அது விஷநாகம்னு தெரிய வரும்போது என்ன நடக்கும்னு பார்க்க பயமான ஆவலாத்தான் இருக்கு. எனக்கொரு சந்தேகம். எல்லா எழவையும் ஏதோ ஒரு சமயத்துல எழுதுற தாதாகிரி கூட ஏண்ணா இந்த நாயர் சிண்ட்ரோம் பத்தி எழுதினதேயில்லை?

ராஜ நடராஜன் said...

//நாயரின் புலிவால் பாலிசிண்ணா. விலாங்கு மீன் தலை என் பக்கம்னு ரெண்டு பேரும் பால் ஊத்தறாங்க. அது விஷநாகம்னு தெரிய வரும்போது என்ன நடக்கும்னு பார்க்க பயமான ஆவலாத்தான் இருக்கு. எனக்கொரு சந்தேகம். எல்லா எழவையும் ஏதோ ஒரு சமயத்துல எழுதுற தாதாகிரி கூட ஏண்ணா இந்த நாயர் சிண்ட்ரோம் பத்தி எழுதினதேயில்லை?//

இது நாயர் சிண்ட்ரோமா அல்லது மேனன் சிண்ட்ரோமா?அரசியல் நடப்புகள் ஏதாவது ஒன்று நம்மைப் போன்று பொதுப்பார்வை பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறதா?

எல்லாவற்றிற்கும் ஒரு புலிப்பார்வை என்று பொதுச்சொல் வைத்து தொலைக்கிறார்கள்.ஒற்றுமை என்ற ஒற்றைச் சொல்லில் அத்தனையையும் புரட்டிப்போடும் வல்லமை நமக்கு இருக்கிறது.ஆடும் அரசியல் ஆட்டங்களில் அத்தனையும் ஆட்டம் கண்டு போகி விடுகின்றன.

ராஜ நடராஜன் said...

//எனக்கொரு சந்தேகம். எல்லா எழவையும் ஏதோ ஒரு சமயத்துல எழுதுற தாதாகிரி கூட ஏண்ணா இந்த நாயர் சிண்ட்ரோம் பத்தி எழுதினதேயில்லை?//

நியூட்டனுக்கு ஆப்பிள் விழுந்த மாதிரி ஆப்பிள் கடிக்கும் போது தாதாகிரி புரிந்தது:)தொடுவார்கள் என எதிர்பார்ப்போம்!

வவ்வால் said...

Innum konjam thelivaga ezhuthi irukkalam (ippadi ezhuthuvathu than style ah?)

ராஜ நடராஜன் said...

வவ்வால்!எப்படி இருக்கீங்க?இன்னும் தெளிவா?இன்று ஜெயலலிதா அறிக்கை படித்ததில் அப்படியே வந்து விழுந்த வார்த்தைகள்.இதுக்கு மேலே எந்த வாதத்தை துணைக்கு இழுப்பது என்று தெரியவில்லை.எனினும் உங்கள் கருத்து யோசிக்க வைக்கின்றது.

வானம்பாடிகள் said...

ம்ம்ம். நான் சொன்ன நாயர் சிண்ட்ரோம் இதைத் தாண்டிய ஒன்னு. :)

ராஜ நடராஜன் said...

//ம்ம்ம். நான் சொன்ன நாயர் சிண்ட்ரோம் இதைத் தாண்டிய ஒன்னு. :)//

இதையெல்லாம் தாண்டிய சிண்ட்ரோமா?என்னாது!அவ்வ்வ்வ்வ்.....

வவ்வால் said...

Raj,
nalame,nalama?

Pala vishayangalai thottu selvathal ulvaanga siramam irukku ena solla vanthen.

Karuthu purinthathu. J vin arikkaiku enakku therinthu neengal oruvar than kavanithu irukkinga anaivarum raavana mayakkathil.

Mediavai nanku avathanikkiringa.j vin thidir akkarai election koottani nokki mattume. Cong udan peram padinthuvittal
maranthu viduvar.

China innoru pakistan aga kudaichal tharum.aanmaiyarra india govt vedikkai mattume paarkkum.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!உங்கள் கருத்துக்கு நன்றி!பல விசயங்களை தொட்டுச் சென்றாலும் சொன்னவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

முதலில் 2008ம் ஆண்டு கிட்டத்தட்ட செப்டம்பர்,அக்டோபர்,நவம்பர் மாத கால கட்டங்களிலேயே பலரும் சீனா பற்றிய கவலையை பதிவுலகில் பதிவு செய்து இருந்தார்கள்.

அதற்கு பின்னான நிகழ்வுகளில் இந்தியா,சீனாவின் இலங்கையின் பங்கும் மேலாதிக்க திரை மறைவு மற்றும் பொருளாதார உதவிகளும் புதிய ஒரு போட்டி நிலையையே இலங்கையில் ஊக்குவிக்கிறது.

அல்ஜசிரா பற்றி இங்கே சொன்னது மட்டுமே நீங்கள் சொன்னது மாதிரி சரியாக விளக்கவில்லை என்பதும் உலகசந்தையை சட்டரீதிக்கும் அப்பால் வன்,மென்பொருட்களால் கட்டுப்படுத்த இயலுகிறது என்பதை சொன்னதன் காரணம் இந்தியாவின் தென்பகுதிக்கு surveillance system மூலமாக கண்காணிப்பதற்கு இலங்கை சிறந்த இடம் என்பதால். இருநிலைப் போட்டிகளிலிருந்து இப்பொழுது அமெரிக்காவும் தனது பங்குக்கு இலங்கை சந்தையில் உள் நுழைய முடிகிறது.

கடல் சூழ்ந்த நிலங்கள் இந்தியாவுக்கு பாதுகாப்புக்கான சூழல் என்பதான முந்தைய கோட்பாடு இலங்கை யுத்தம் மூலமும்,அதனைத் தொடரும் மேலாதிக்க உறவுகளாலும் தகர்க்கப்படுகிறது.

All is well as far as another one major crisis do not happen on the island.

ஜெயலலிதாவோ,கருணாநிதியோ பங்காளிச் சண்டைகளுக்கும் அப்பால் மொழி,தமிழக நலன்கள்,தமிழகம் சார்ந்த வெளியுறவுக்கொள்கை என்ற பார்வையில் இலங்கை சார்ந்து நோக்குவது நல்லது.