Followers

Thursday, June 10, 2010

இடுகை சூட்டு மகுடம் இல்லாமல்

இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரையாய்
மறுமொழிகளே இபோதைய முன்னணி ஆட்டக்காரர்கள்

பரிந்துரைகளின் மோடி மஸ்தான்கள் யார்?
கொத்தும் சொற்களின் பாம்பாட்டிகள் யார்?

வாசகர் பரிந்துரைகள் புரிந்துரைகளாய் இல்லாமல் போனதால்
தமிழ்மணத்தின் இடது கண் இப்போது மருத்துவ விடுதியில்

நெற்றிப் பொட்டு நட்சத்திரம் இன்னும் மினுமினுக்கிறது
மகுடமே இல்லாமல் சூடான இடுகையும் இல்லாமல்
தமிழ்மணமே!உன் முகப்பூச்சே சரியில்லை.....


.

20 comments:

ஈரோடு கதிர் said...

மிக விரைவில் வரும் என நினைக்கிறேன்

பழமைபேசி said...

ஆகா.... அண்ணக்கிட்ட கவித்துவம் மிளிருதுங்கோ!!

க.பாலாசி said...

எனக்கும் மூணுநாளா கை ஒடைஞ்சமாதிரியே ஃபீலிங்கா இருக்குங்கண்ணே....

வானம்பாடிகள் said...

எல்லார் முகத்திலயும் தக்காளிச் சட்டினி பூச்சுக்கு இப்படி கொஞ்ச நாள் பூச்சில்லாம இருந்தாலும் பரவால்லண்ணே:))

முகிலன் said...

//எல்லார் முகத்திலயும் தக்காளிச் சட்டினி பூச்சுக்கு இப்படி கொஞ்ச நாள் பூச்சில்லாம இருந்தாலும் பரவால்லண்ணே:))

//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

கலகலப்ரியா said...

எனக்கு இந்தக் கவுஜ புரியல.. :o)

UFO said...

//பரிந்துரைகளின் மோடி மஸ்தான்கள் யார்?// --என்ன சார், கொஞ்ச நாளா வலையில் உலாவவில்லையா? அல்லது தெரியாதமாதிரி கேட்கிறீர்களா?

வினவின்/மோடி மஸ்தான்கள்?/புரட்சி வாழ்க...

//மறுமொழிகளே இபோதைய முன்னணி ஆட்டக்காரர்கள்// --மாப்பு..வச்சிட்டீகளே ஆப்பு...

இப்போதுகூட பல பதிவர்களே, தாங்களே ஒரு கமெண்டுக்கு இரண்டுதடவை நன்றிசொல்வதால்... அல்லது பல அனானி கமெண்டுகளை போட்டுக்கொள்வதால்... கூடிய சீக்கிரம் ...
//தமிழ்மணத்தின் 'வலது' கண்'ணும்' இப்போது மருத்துவ விடுதியில்//...என்று எழுதவேண்டி வரலாம்....

வாழ்க பதிவர்களின் புரட்சி...

ஹேமா said...

நடா...கவிதை கதை சொல்லுது !

நசரேயன் said...

ம்ம்ம்ம்

ஜோதிஜி said...

அவர்கள் திண்டாட்டத்தை அல்லது அக்கறையின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளலாம்.

மாறும் அல்லது மாற்றிக்கொள்ளுங்கள் என்பதற்கு அமைதியைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?

ராஜ நடராஜன் said...

//மிக விரைவில் வரும் என நினைக்கிறேன்//

வந்துருச்சு:)

ராஜ நடராஜன் said...

//ஆகா.... அண்ணக்கிட்ட கவித்துவம் மிளிருதுங்கோ!!//

சேர்த்தி:)

ராஜ நடராஜன் said...

//எனக்கும் மூணுநாளா கை ஒடைஞ்சமாதிரியே ஃபீலிங்கா இருக்குங்கண்ணே....//

இருக்கும்!இருக்கும்!அடிக்கடி முன்னுக்கு நிற்கிறவங்களுக்கு அப்படித்தான் இருக்கும்:)

ராஜ நடராஜன் said...

//எல்லார் முகத்திலயும் தக்காளிச் சட்டினி பூச்சுக்கு இப்படி கொஞ்ச நாள் பூச்சில்லாம இருந்தாலும் பரவால்லண்ணே:))//

பாலாண்ணா!இரண்டு நாளா கால்பந்தாட்டம் பார்த்துட்டு இங்கே வந்தா பரிந்துரைல நீங்கதான் எல்லோரையும் தள்ளிகிட்டு நிற்கிறீங்க:)

ராஜ நடராஜன் said...

//ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்//

பாஸ்!நம்ம இடுகை தமிழ்மணம் காதுல விழுந்திடுச்சு போல.அர்ஜெண்டினா,நைஜீரியா கால்பந்தாட்டம் பார்த்துட்டு மெதுவா ஆடி அமர இங்க வந்தா தமிழ்மணம் மகுடம்,பரிந்துரை ஹலோ சொல்லுது:)

ராஜ நடராஜன் said...

//எனக்கு இந்தக் கவுஜ புரியல.. :o)//

கவிதாயினிக்கே கவிதை புரியலையா?அவ்வ்வ்வ்வ்....

நாங்கெல்லாம் திருவிளையாடல் தருமி மாதிரி புலவர்கள்.ஏதோ புரிஞ்சவரைக்கும் கமெண்டுங்க:)

ராஜ நடராஜன் said...

////பரிந்துரைகளின் மோடி மஸ்தான்கள் யார்?// --என்ன சார், கொஞ்ச நாளா வலையில் உலாவவில்லையா? அல்லது தெரியாதமாதிரி கேட்கிறீர்களா?

வினவின்/மோடி மஸ்தான்கள்?/புரட்சி வாழ்க...//

வினவை மட்டும் ஏன் தனிமைப் படுத்துகிறீர்கள்.அவர்கள் சாராத பரிந்துரைக்கு யார் மோடி மஸ்தான்?

//மாப்பு..வச்சிட்டீகளே ஆப்பு...//

இடது பக்கம் காலியானதால வலதுபக்கம் மறுமொழி படிக்காட்டியும் எண்ணிக்கை பார்ப்பது புது பழக்கமாயிட்டுது:)

ராஜ நடராஜன் said...

//நடா...கவிதை கதை சொல்லுது//

நீங்களாவது கதை சொல்லுது சொல்றீங்க.லகலக ப்ரியா பின்னூட்டம் பார்த்தீங்களா?

ராஜ நடராஜன் said...

/ம்ம்ம்ம்//

அம்புட்டு சிரிப்பு சிரிக்கிறீங்க.பின்னூட்டத்துல மட்டும் என்ன கஞ்சத்தனம்:)

ராஜ நடராஜன் said...

//அவர்கள் திண்டாட்டத்தை அல்லது அக்கறையின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளலாம்.

மாறும் அல்லது மாற்றிக்கொள்ளுங்கள் என்பதற்கு அமைதியைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?//

மாறும் என்பதை விட மாற்றிக்கொள்ளுங்கள் என்பதுவே சரியாக இருக்கும்.பார்க்கலாம் வரும் நாட்கள் எப்படியென்று.

உங்கள் இடுகைகள் எதுவும் சமீப காலமாக கண்ணில் படவில்லை.ஆராய்ச்சியில் ஏதாவது மூழ்கிவிட்டீர்களா?