Followers

Tuesday, June 22, 2010

செம்மொழி தினத்தில் ராவணன்

பதிவுலக திரைப்பட விமர்சனங்களை இரு வகையாக பிரிக்கலாம்.எவ்வளவு மொக்கையாக படம் இருந்தாலும் தனது இருப்பை புதுப்பித்துக் கொள்ளும் பொருட்டோ அல்லது பதிவின் எண்ணிக்கையை கூட்டும் எண்ணத்திலோ அல்லது என்ன செய்றதுன்னே தெரியலையெ எதையாவது கிறுக்கி வைப்போம் என்பது ஒரு வகை.இன்னுமொரு வகை கவனிக்கப்பட்டவர்களை கவனிப்பதும், மனதை பாதிப்பதும், படத்தின் காலகட்டத்தையும், கதை, இசை, ஒளிப்பதிவு, நடிக, நடிகையரின் திறன் வெளிப்படுத்தலை பதிவு செய்வதும், நேர் எதிர் வினைகளும் இன்னும் கூடவும். ராவணன் இரண்டாவது வகையைச் சார்ந்தது.

ரசிகர்களை வாசல் கதவில் நல்லாவே இருக்குது என கருத்துப் படம் புடிக்கும் கால கட்டத்திற்கு முன்பு குடும்பம்,நண்பர்களாக,குழுவாக திரையரங்கை விட்டு வெளியே வரும்போதே படம் குறித்தான தாக்கம் வாயசைவுகளாக வெளிப்படும் வார்த்தைகளும்,தனி மனிதனாக படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது தொண்டைக்குழி அடைத்துக்கொள்வது மாதிரியான உணர்வுகளுடன் மனதை என்னவோ செய்வதும், திரைப்படம் குறித்தான ஆக்கிரமிப்பு திரையரங்கை விட்டு வெளியே வந்தும் நெஞ்சாங்கூட்டில் சிம்மாசனம் போட்டு உட்காருவதும், யோசிக்க வைப்பது மட்டுமே ஒரு படத்தின் வெற்றியாக அமைவதற்கான அறிகுறிகள்.

பட விளம்பரங்கள்,பாட்டு,நல்லாயிருக்குது வாய் வார்த்தைகள் என படம் கல்லா கட்டுவது என்பதெல்லாம் மாறி எதிர்வினைகளும்,நிகழ்வுகளும் படத்தை காணவேண்டும் என்ற விளம்பர நுட்பமாகவும்,தொலைக்காட்சி விளம்பரங்கள்,பாடல் விழா,வலைத்தளம் என்று மாறிப்போன காலகட்டத்தில் படம் குறித்த பார்வைகள் ஓரளவுக்கு கசியத் துவங்குவதும்,படம் பார்க்கும் முன்னே அது குறித்தான பல்நோக்கு விமர்சனங்கள் வெளிவந்து விடுவதாலும் முந்தைய கால கட்டத்து தாக்கங்கள் எதுவுமின்றி வீரா மலை மாதிரி நின்ற துவக்க காட்சியுடன் தொடர்ந்த கதை ஒண்ணுமே புரியமாட்டேங்குதே என்ற பக்கத்து இருக்கை இரு பேச்சிலர் பார்ட்டி குரல்களுடனும்,ஸ்டிரியோ சத்தத்தால் சத்தம் போட்டு அழுத குழந்தையின் அழுகையுடனும் துவங்கியது.பின் இடம் பழக்கப்பட்ட மாதிரி படத்தின் தாக்கம் ஒவ்வொருவரையும் சூழ்ந்து கொண்டது ரஞ்சிதாவின் முகம் தெரியும் வரை.இது குறித்த ஏனைய தமிழக பதிவர்களின் விமர்சனங்களையும் காணும் போது மனதின் சலனங்கள் நாடு விட்டு நாடு போனாலும் ஒரே மாதிரிதான் போலும்.பாரதிராஜாவின் நாடோடி தென்றலும்,மணிரத்னத்தின் ராவணனும் ரஞ்சிதாவின் வாழ்க்கையை நினைவுக்கு கொண்டு வரும் மிக முக்கிய காலகட்டங்கள் ரஞ்சிதாவைப் பொறுத்த வரையில்.

யார் யாரை முந்துகின்றார்கள் என்ற போட்டியில் காமிராவே எல்லோரையும் முந்திக்கொள்கிறது.அதற்கு துணையாக காடும், காடு சார்ந்த இடங்களும், அதனையொட்டிய கதையமைப்பும்.2010 சிறந்த படம்,நடிகர்,நடிகையென விக்ரம், ஐஸ்வர்யா பச்சனுக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. படத்தில் நடித்தவர்கள் உழைப்புக்கும், ஒளிப்பதிவு, பாடல்கள்,அரங்கமைப்பு, சண்டைக்காட்சி போன்ற உழைப்புக்கும் அப்பால் மணிரத்னத்தின் உழைப்பின் நேர்த்தி படத்தை அழகாகவே கொண்டு வர முயற்சி செய்திருக்கிறது.காடும்,காடு சார்ந்த இடங்களும்,வீரா பெயரும், தூதுக்கு வந்தவனை சுட்டுக்கொன்ற எஸ்.பி போன்ற நிகழ்வுகள் வீரப்பனை நோக்கி நகர்த்த முயற்சித்து விட்டு, காட்டில் வசிக்கும் மக்களை நோக்கி மேல் தட்டு வசனத்துடனும், வடக்கில் நிகழும் பழங்குடியினர் சார்ந்த மாவோயிஸ போராட்டத்தை மெல்ல அடையாளம் காட்டி விட்டு கதாபாத்திரங்களின் புனைவுகளில் ராவண காவியம் எழுத முயற்சி செய்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.ராமனை விட ராவணன் உயர்ந்தவன் என்பது மட்டுமே படத்தில் தெரிகிறது. விவாதம் உள்ளவர்கள் கம்பராமயாணத்தையும், பட்டிமன்றங்களையும் மீள் வருகை செய்வது நல்லது.

அனில் அம்பானியின் பணமும்,சிறந்த இயக்குநரின் ஆளுமையும் இருந்தும் கூட சொல்ல வந்ததை சொல்ல முடியாத தயக்கங்கள் இருப்பது தெரிகிறது.மேல்தட்டு சிந்தனைகள் கீழ்தட்டோடு பொருந்தாமல் போவதன் காரணம் எல்லாவற்றையும் சமன் செய்து நடக்க வேண்டிய இந்திய சூழலா என்பது தெரியவில்லை.அனில் அம்பானிக்கும்,மணிரத்னத்துக்குமே சொல்ல வந்ததை சொல்ல இயலாத நிலைமையென்றால் இந்திய முக பிரதிபலிப்பை மீண்டும் ஒரு முறை நமக்கு நாமே பார்த்துக்கொள்வது நல்லது.

மேலும் திரைப்படத்துறையில் இருக்கும் அமிதாப்பச்சனுக்கும், மணிரத்னத்துக்குமே அவரவர் படம் குறித்த பார்வைகளின் விமர்சனங்கள் இருக்கும் போது படம் குறித்தான முழுமை இல்லையென்றே தெரிகிறது.

பொழுதுபோக,வியாபாரம் மட்டுமே என்ற கண்ணோட்டத்தில் ஒரு திரைப்படம் இருந்தால் இருக்கவே இருக்கிறது நண்பர்களின் விமர்சனங்களும்,திருட்டு டி.வி.டிக்களும்.இங்கே விமர்சனம் என்பதற்கு இவற்றை தாண்டிய சமூக பார்வையும் அதனை சொல்ல வேண்டிய அவசியமும் உள்ளது.


தமிழனின் உண்மையான இதிகாசமான ஒரு காலகட்டத்துக்குள் நாம் வாழ்ந்து வருகிறோம் என்கின்ற புரிதல் நமக்கு ஏற்படவேண்டும் நிறை, குறைகள் எதுவானாலும்.நமது இருப்பை, அதன் பொறுப்பை பல படிமங்களாக விட்டுச் செல்லவேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.இல்லையென்றால் வரலாறுகள் திரிக்கப்படும் அபாயங்களை மட்டுமே எதிர்காலத்திற்கு சொல்லாமல் போவோம்.

மணிரத்னம்,கமலஹாசன்,பாரதிராஜா இன்னும் திரைப்படத்துறை சார்ந்த சமூக அக்கறை கொண்ட தயாரிப்பாளர்கள் தங்களை நிரந்தரமாக தமிழ் மண்ணில் அடையாளப்படுத்தி விட்டுப் போகும் ஆற்றல் கொண்டவர்களாய் வரலாற்றின் நிகழ்வுகளை புனைவுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளாமல் பதிவு செய்ய வேண்டிய தார்மீக கடமை கொண்டவர்கள்.ஆனால் அதற்கான தடங்கல் இந்திய சூழல்களா மனம் சார்ந்த தயக்கங்களா?இரண்டுமா?

4 comments:

கோவி.கண்ணன் said...

மணி ரத்னம் நாயகன், தளபதி என நெகட்டீவ் ரவுடிகளை ஹீரோவாக உயர்த்தி படம் எடுக்கும் போது அவர்களை அரசாங்கத்தரப்புடன் நேரடியாக மோதவிடாமல் வெறும் தனி நபர் வெறுப்பாக கட்டமைப்பார், இதில் அரசு அதிகாரப்பட்டாளத்துடன் மோதுவதாகக் காட்டி அதற்கான பின்னனி அமைக்க முடியாமல் திணறி சொதப்பிவிட்டார்.

ராஜ நடராஜன் said...

வாங்க கோவி.கண்ணன்!நாயகன்,தளபதிக்கான கால கட்டங்கள் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும்,மற்றும் தமிழகம் சார்ந்த சினிமா கண்ணோட்டம்.ரோஜா,பம்பாய் படங்களுக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னத்தின் திறன் இந்திய அளவில் தெரிந்ததன் பின் அதற்கான திசை நோக்கி பயணிப்பது முக்கியம்.குறிப்பாக அம்பானியின் தயாரிப்பு கூட்டு மூலமாக தான் சொல்ல வந்ததை துணிந்தும்,பொருளாதார கணக்கீட்டின் குறுக்கீடுகள் இல்லாமலும் செய்திருக்க முடியும்.வீரப்ப,மாவோயிஸ,ராவண கூட்டு கலவை மட்டுமே தயாரிக்க முடிந்திருக்கிறது.சொல்றதைத்தானே கேட்கும் காமிரா:)

vasu balaji said...

அவுட் ஆஃப் சிலபஸ்:)

ராஜ நடராஜன் said...

//அவுட் ஆஃப் சிலபஸ்:)//

இவ்வளவு சீக்கிரமாவா!

எல்லோரும் செம்மொழி பரிட்சை எழுதிகிட்டு இருக்கிறாங்களாக்கும்:)