Followers

Saturday, June 26, 2010

செம்மொழி பட்டிமன்றம்

செம்மொழி என்ற புதிய விழாவின் காலம் நெருங்க நெருங்க எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தங்களை சமாதானம் செய்து கொண்டு கோவையில் திருவிழாக் கோலத்தில் சங்கமித்து விட்டார்கள் என்று தெரிகிறது.இணையம் சார்ந்த அரங்கு கணினி ஆர்வலர்களுக்கு ஒரு நேரடி அனுபவம் என்பது தவிர மாநாட்டு நிகழ்வுகள் தனி மனித புகழ் பாடுவது மாதிரியே தொலைகாட்சிகள் செய்திகளை கொண்டு வருகின்றன.முந்தைய ஆட்சி காலத்து காலில் விழும் பாரம்பரியத்துக்கு கொஞ்சமும் குறைவானதல்ல இந்த தனிமனித உயர்வு நவிழல் மக்கள் முன், தொலைக்காட்சிகளின் முன் மிகவும் அறிமுகமான பிரபலங்கள் தனி மனித வழிபாட்டால் முகஸ்துதி செய்து வழிபாடு விட்டார்கள்.மனத்தின் ஆழங்களை அவர்களின் உறக்க நேரத்துக்கு விட்டு விட்டு பட்டி மன்றம் செல்வோம்.

அதிகாலை தொலைக்காட்சியில் கேட்கும் குரல், பட்டிமன்றத்துக்கே உரிய பாமரத்தனக் குரலின் அதிபுத்திசாலித்தனம் , பழகலாம் வாங்க பிரபலம் சாலமன் பாப்பையா தலைமையில் பாரதிராஜா , சந்திரசேகர்(அது என்ன புதிதாக வாகை என்று ஒன்று ஒட்டிக்கொண்டுள்ளது சமீபத்தில்), குதிரைப்பந்தயம் எஸ்.வி.சேகர் , நக்கீரன் கோபால் போன்றவர்களுடன் வண்ணத்திரையா,சின்னத்திரையா, அச்சுத்துறையா என்ற தலைப்புக்களில் ஒப்புக்கு சப்பாணி பட்டிமன்றம் நிகழ்ந்தது.பட்டிமன்றம் குறித்த நுண்ணரசியல் பேசுவதற்கும் அல்லது தமக்குள்ளேயே அசை போடுவதற்கும் ஏனைய பதிவர்கள் உள்ளார்கள்.எனவே இங்கே பாரதிராஜா குறித்தும் சாலமன் பாப்பையா தீர்ப்பு குறித்து மட்டும் பார்ப்போம்.2009ம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தல் காலத்து பாரதிராஜாவின் ஈழம் குறித்த அனுதாபம்,பேச்சுக்கள்,பின் தொடர்ந்த அலுவலக சேதங்கள் வன்முறையைத் தொடர்ந்து தனிமையாகிப்போன பாரதிராஜாவின் இப்போதைய பட்டிமன்ற முகங்காட்டல் என்பதும் வண்ணத்திரை குறித்த கருத்து என்பதும் கொடுத்த நேரமான 10-13 நிமிடங்களில் சொல்லிவிட்டுப் போகும் இயலாமை என்பதும் முகம்பாடலுக்கே முந்தைய மணித்துளிகளுக்கு செலவாகிப் போவதும் காரணமாக முன்பே சொன்ன ஒப்புக்கு சப்பாணியின் சாரமாகவே தெரிந்தது.எப்படியோ பாரதிராஜாவுக்கான சறுக்கல்கள்,சமரசங்கள் வார்த்தைகளில் தெரிகிறது.

காற்றோடு கரையும் வார்த்தைகளாய் ஏனைய பங்குதாரர்களின் பேச்சுக்களும் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லபடுமென்பதால் அது பற்றிய ஆய்வுக்குச் செல்லாமல் சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றத் தீர்ப்புக்கு வந்து விடுவோம்.வண்ணத்திரை,சின்னத்திரை,அச்சுத்துறை போன்றவை முப்படைகள் போலவும் இதில் வண்ணத்திரை விமானப்படை போலவும்,சின்னத்திரை கப்பற்படை போலவும்,அச்சுத்துறை தரைப்படை போலவும் என்றும் இந்த முப்படைகளில் அச்சு என்ற எழுத்துத் துறை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நான்காவது தூணாக இருப்பதால் மற்ற இரண்டை விட அச்சுத்துறைக்கு தனது தீர்ப்பின் வெற்றியை வழங்கினார்.

பட்டிமன்றம் கேட்டவர்களுக்கும், பேசியவர்களுக்கும் எவருக்குமாவது முப்படைகளின் உதாரணம் மனதின் ஏதாவது ஒரு மூலையில் குத்தியிருக்குமா என்று தெரியவில்லை.எனக்கு உறைத்தது.வெறும் வாய் வார்த்தைகளில் என்னைப் போலவும்,பட்டிமன்றக்காரர்கள் போலவும் வார்த்தை படைகளை வைக்காமல் முப்படைகளையும், அதன் சாகசங்களையும் ஒரு தமிழன் உருவாக்கினான்.கண்முன்னே கொண்டு வந்து வைத்தான்.அதன் ரத்த வரலாறுகள் விமர்சனத்துக்குரியவையாக இருந்தாலும் அதன் ஆற்றல், எதிர்ப்பு சக்தியின்மையால் பேரம் பேசும் அருகதையற்ற சொன்னதை மட்டுமே கேட்கும், எதிர்ப்புக்குரல் எழுப்பாதே அவனுக்கு வலிக்கும், பின் அடிப்பான் என்ற மனோபாவத்துக்குள் நம்மை இழுத்துக் கொள்ளும் ஆமைத்தனம்.இனமின்றி மொழியில்லை.அரசியலுக்கும் அப்பாற்பட்டு தமிழ், மொழி என்று ஒன்று படுவதே மாற்றம் பெரும் உலகில் நம்மை நாமாக அடையாளம் காட்டும்.எத்தனை குறைகள் நம்மிடம்,பிரிந்து படும் மனப்பான்மை. இவற்றை சரி செய்யாமல் மூன்று நாள் முகப்பூச்சால் மொழி வளரப்போவதில்லை.முந்தைய மாநாடுகளும், கோட்டை அட்டைகளும், மனிதர்களும் அடையாளமே காணாமல் போய் விட்டன.கோவை மேம்பாலம் மட்டுமே வாகனங்களை, மனிதர்களை இன்றும் சுமந்து நிற்கின்றது.அதே போல் இப்போதைய மாநாட்டின் சுவடுகளையும் காலம் எழுதி வைக்கும் நிரந்தரப்படும் தன்மை இருந்தால் மட்டும்.

27 comments:

Thekkikattan|தெகா said...

ம்ம்ம்... உண்மை.

Karthick Chidambaram said...

நல்ல பதிவு ... எனக்கு உங்களை போல் எதுவும் தோன்றவில்லை. தமிழன் திரை(கடல்) ஓடி திரவியம் தேடுகிறான்.

http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/

Chitra said...

ரசியலுக்கும் அப்பாற்பட்டு தமிழ், மொழி என்று ஒன்று படுவதே மாற்றம் பெரும் உலகில் நம்மை நாமாக அடையாளம் காட்டும்.எத்தனை குறைகள் நம்மிடம்,பிரிந்து படும் மனப்பான்மை. இவற்றை சரி செய்யாமல் மூன்று நாள் முகப்பூச்சால் மொழி வளரப்போவதில்லை.முந்தைய மாநாடுகளும், கோட்டை அட்டைகளும், மனிதர்களும் அடையாளமே காணாமல் போய் விட்டன.


.........உண்மை.... மொழியில் கூட அரசியல் லாபம் பார்க்கும் போது, என்ன சொல்ல?

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பகிர்விற்கு நன்றி

மிக அருமை

vasu balaji said...

அக்‌ஷர லக்‌ஷம்ணா:(

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் அதுதான்

ராஜ நடராஜன் said...

//ம்ம்ம்... உண்மை.//

தெகா!வாங்க!உங்களுக்கு நேற்றே மறுமொழி சொல்ல வேண்டுமென்று நினைத்தேன்.தமிழிஷ் வந்து கடையில் அமர்ந்து கொள்ள நேரம் பிடித்ததால் பின்னூட்டப்பகுதியே கண்ணுக்கு தெரியவில்லை.

பதிவுகள் மட்டுமே ஓரளவுக்கு உண்மைகள் பேசுகின்றன.பல பேரை போய்ச் சேராமலும் பல பரிமாண கருத்துக்களை தேர்ந்தெடுக்கும் சக்தியில்லாமலும் மக்கள் இருக்கும் வரை இவர்கள் காட்டில் மழை.

பழமைபேசி said...

கை தேர்ந்த, கூர்மையான வரிகள் படைக்கிற எழுத்தாளர் ஆயிட்டீங்ணா... கோவை மேம்பாலம் போன்றதொரு சரித்தர நிகழ்வா இது இல்லை போலத்தான் தெரியுது!

பழமைபேசி said...

//பட்டிமன்றம் குறித்த நுண்ணரசியல் பேசுவதற்கும் அல்லது தமக்குள்ளேயே அசை போடுவதற்கு//

ஆகா!

ராஜ நடராஜன் said...

//நல்ல பதிவு ... எனக்கு உங்களை போல் எதுவும் தோன்றவில்லை. தமிழன் திரை(கடல்) ஓடி திரவியம் தேடுகிறான்.//

கார்த்திக்!உங்கள் தொடர் வருகைக்கு நன்றி.

வளைகுடா நாடுகளில் திர்காம்,ரியால்,தினார் என்று நம்மை விட கேரளத்துக்காரர்கள் அதிகம் திரவியம் தேடுகிறார்கள்.சிங்கப்பூர்,மலேசியா,லண்டன்,அமெரிக்கா,கனடா,பிரான்ஸ்,இத்தாலி,ஜெர்மனி,நார்வே,டென்மார்க்,ஸ்விஸ்,ஆப்பிரிக்கா,மொரிஷீயஸ் இன்னும் பல நாடுகளும் தமிழன் அதிகம் பரவிக்கிடக்கும் மண்.சரியான தலைமை இருந்தால் தமிழன் என்ற அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வது எளிதானது.

போரி என்ற குஜராத்தை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் வளைகுடாக்களில் வியாபாரத்தில் (வாசனை திரவியம்,கடிகாரம்,துணி,மின்பொருள் இன்னும் பல)ஈடுபடுகிறார்கள்.போரி அமைப்பின் மூலமாக கடன் பெற்றுக்கொண்டு வியாபாரம் செய்வது பின் வருமானத்தின் 10 சதம் அமைப்பு மற்றும் ஏனைய போரிகளுக்கு உதவ வேண்டும் என ஒற்றுமையாக இருக்கிறார்கள்.இதை விட நம்மிடம் ஆற்றல் இருக்கிறது.ஆனால் இணைக்கும் பாலமில்லை.

ராஜ நடராஜன் said...

//கை தேர்ந்த, கூர்மையான வரிகள் படைக்கிற எழுத்தாளர் ஆயிட்டீங்ணா... கோவை மேம்பாலம் போன்றதொரு சரித்தர நிகழ்வா இது இல்லை போலத்தான் தெரியுது!//

நீங்க கோவையில் சங்கமம் ஆவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.போகலையா?

முந்தைய காலகட்டங்களில் முணுமுணுப்பும்,எதிர்ப்பும் இப்படியெல்லாம் இருந்ததேயில்லை.கூடவே சரித்திர நிகழ்வுக்கான சாத்தியமுமில்லை.
நிறைய புத்தகங்கள் விற்பனையானது என தெரிய வருவது ஒரு ஆறுதல்.

ராஜ நடராஜன் said...

//.உண்மை.... மொழியில் கூட அரசியல் லாபம் பார்க்கும் போது, என்ன சொல்ல?//

எது செய்தாலும் அரசியலே மையம்.அரசியலன்றி வேறொன்றும் அறியேன் பராபரனே!குறைந்த பட்சம் தொலைக்காட்சியாவது தமிழ் வளர்க்க பயன்படுத்தலாமே!

பழமையார் கோவை மேம்பாலம்ன்னு சொன்னது பற்றி திடீர்ன்னு ஒரு தொலைக்காட்சி நினைவு வருவதால் இங்கே அதன் பகிர்வு.

நேற்று ரிமோட்டை (அதுக்குப் பேரு குட்டிச்சாத்தானாம்.உபயம் நேற்றைய பட்டி மன்ற இன்னொரு பேச்சாளர் திண்டுக்கல் லியோனி அவர்கள்)ஒரு ஆந்திர சேனல் பக்கம் திருப்பினால் பிரான்ஸில் உள்ள ஒரு நீண்ட பாலத்தை பற்றி செப்புகிறார்கள்.ஈபிள் கோபுரத்துக்கு அடுத்த படியாம்.கீழே வெறும் தூண்களை மட்டும் நிறுத்தி விட்டு இந்த அமெரிக்காவில் ஹாலிவுட் படங்களில்,நம்ம மக்களும் போய் வருகிற பாலம் மாதிரி குழந்தைக்கு தொட்டில் கட்டின மாதிரி எல்லா கம்பிகளும் மேலே ஒன்றோடு ஒன்று இணைத்து கட்டிடவியலின் அற்புதம் எனலாம்.பெருமூச்சுதான் வருகிறது பார்க்கும் போது.

அது சரி(18185106603874041862) said...

//
இவற்றை சரி செய்யாமல் மூன்று நாள் முகப்பூச்சால் மொழி வளரப்போவதில்லை.
//

அய்யய்ய...எதுக்கு நடத்துறாங்கன்னு தெரியாம என்னது இது மொழி வளரணும், புளி வளரணும்னு??

குத்தாட்ட பிரியனை குளிர்விக்க மாநாடு நடத்துறாங்க...அல்லக்கைங்களும் அடிச்சி புடிச்சி எடம் வாங்கி நீ தான் தமிழ்னு தமிழை கற்பழிக்கிறானுங்க... இதுல நீங்க வேற மொழி கிழின்னுட்டு.....

குத்தாட்ட பிரியனுக்கு இரட்டை லாபம்...ஒரு மணி நேரம் ஒரு நாள்னு அல்லக்கை ஆராதனை இல்லாம இப்போ மூணு நாள்...வாரக்கணக்கில நடக்குது..எல்லாம் கவர்மென்ட் காசு..குத்தாட்ட பிரியனோட கோடீஸ்வர பிள்ளைகளோ பேரன்களோ தரப்போறது இல்ல..ஓசிக் குத்து..

அப்படியே செம்மொழி கொண்டான், மாநாடு கண்டான் அப்படி இப்படின்னு அல்லக்கைங்க பட்டம் கொடுத்துரும்...அப்படியே ஈழ்ப்பிரச்சினைல குத்தாட்ட பிரியன் எப்பிடில்லாம் நாடகம் நடத்துனான்கிறதையும் மறைச்சிடலாம்...

ம்ம்ம்...இப்படியும் கேவலமா சில பேரு இருக்காங்க...இவனுங்களையும் தலைவன்னு சொல்றதுக்கு அல்லக்கைங்க...வெளங்கிடும்!

ராஜ நடராஜன் said...

////பட்டிமன்றம் குறித்த நுண்ணரசியல் பேசுவதற்கும் அல்லது தமக்குள்ளேயே அசை போடுவதற்கு//

ஆகா!//

பின்ன!கண்ணு காது மூக்கு வைக்கிறதில நாம கில்லாடிகள் அல்லவா?

அம்பானி காசு பார்க்கவோ,மணிரத்னம் ராவணன் படம் இயக்கவோ செய்தால் பம்பாய் படத்துக்கு முடிச்சு போடும் திறமையெல்லாம் வேறு யாருக்கு வரும்:)

ராஜ நடராஜன் said...

////
இவற்றை சரி செய்யாமல் மூன்று நாள் முகப்பூச்சால் மொழி வளரப்போவதில்லை.
//

அய்யய்ய...எதுக்கு நடத்துறாங்கன்னு தெரியாம என்னது இது மொழி வளரணும், புளி வளரணும்னு??

குத்தாட்ட பிரியனை குளிர்விக்க மாநாடு நடத்துறாங்க...அல்லக்கைங்களும் அடிச்சி புடிச்சி எடம் வாங்கி நீ தான் தமிழ்னு தமிழை கற்பழிக்கிறானுங்க... இதுல நீங்க வேற மொழி கிழின்னுட்டு.....

குத்தாட்ட பிரியனுக்கு இரட்டை லாபம்...ஒரு மணி நேரம் ஒரு நாள்னு அல்லக்கை ஆராதனை இல்லாம இப்போ மூணு நாள்...வாரக்கணக்கில நடக்குது..எல்லாம் கவர்மென்ட் காசு..குத்தாட்ட பிரியனோட கோடீஸ்வர பிள்ளைகளோ பேரன்களோ தரப்போறது இல்ல..ஓசிக் குத்து..

அப்படியே செம்மொழி கொண்டான், மாநாடு கண்டான் அப்படி இப்படின்னு அல்லக்கைங்க பட்டம் கொடுத்துரும்...அப்படியே ஈழ்ப்பிரச்சினைல குத்தாட்ட பிரியன் எப்பிடில்லாம் நாடகம் நடத்துனான்கிறதையும் மறைச்சிடலாம்...

ம்ம்ம்...இப்படியும் கேவலமா சில பேரு இருக்காங்க...இவனுங்களையும் தலைவன்னு சொல்றதுக்கு அல்லக்கைங்க...வெளங்கிடும்!//

இதுவரையிலும் உள்ள பின்னூட்டங்களிலே காரம்,புளி,பச்சை மொளகா,வற மொளகா எல்லாம் கலந்து உங்க வூட்டுக்காரம் எங்க வூட்டுக்காரமில்ல,ஊர்க்காரமெல்லாம் சேர்ந்த பின்னூட்டமிது:)

குத்தாட்டம் பார்க்கணுமின்னா அவர் மட்டும் போய் பார்க்கப் போறாரு.குடும்பத்தோட ஏன் வருகிறார்?எனவே உங்கள் வாதம் சரியில்லை.

ரெக்கார்டு டான்ஸெல்லாம் பேர மாத்திகிட்டு குத்தாட்டமின்னு இப்ப பொறந்தது.அதற்கும் முன் அவருக்குப் பிடித்தது கவியரங்கம்,எழுத்து,சிலேடை,கலையுலகம்,வசனம் போன்றவை.இதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.விமர்சனெமெல்லாம் சகுனித்தனம்,திரிபுகள்,சுயநலங்கள் பற்றியே.

வேணுமின்னா மொழியில் கூட அரசியல் லாபம் என்ற சித்ரா மேடம் சொன்னது சரியாக இருக்கும்.

தலைவரோட அனுபவத்துல பாதிக்கே அம்மா பட்டம் கிடைக்கும் போது தலைவா என்று சொல்லவும் ஒரு கூட்டம் இருப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?நம்ம விமர்சனமெல்லாம் தல என்ன சொன்னாலும் கடிவாளம் போட்டு கண்ணை மறைத்த குதிரையாய் ஓடும் தொண்டுத்தன்மை பற்றியே.

இந்த மாநாட்டுக்கு அம்பு விட ஜெயலலிதா சென்ற பாராளுமன்றத்துக்கு எடுத்த ஈழக்கணையை இப்போது சட்டமன்றத்துக்கு பெங்களூருலிருந்து மீண்டும் வீசுவது தெரிகிறதா?

அது சரி(18185106603874041862) said...

ஆஹா...அண்ணே, யாரோ இதுக்கும் நெகட்டிவ் வோட் போட்ருக்காங்க...அது என்னோடதில்லை...ஆறாவது வோட் என்னுது..நான் பாஸிட்டிவ் வோட் தான் போட்டேன்..

ராஜ நடராஜன் said...

//அக்‌ஷர லக்‌ஷம்ணா:(//

லொல லொலொன்னு பேசிட்டு உங்களை கவனிக்க மறந்து விட்டேனே!

ராஜ நடராஜன் said...

//ம்ம்ம் அதுதான்//

ஞானசேகரன்!எப்படியிருக்கீங்க?காமிரா நுட்பத்துக்குள் புகுந்துட்ட மாதிரி தெரியுது:)

ராஜ நடராஜன் said...

//பகிர்விற்கு நன்றி

மிக அருமை//

உலவு குழுவினருக்கு நன்றி.

அது சரி(18185106603874041862) said...

//
குத்தாட்டம் பார்க்கணுமின்னா அவர் மட்டும் போய் பார்க்கப் போறாரு.குடும்பத்தோட ஏன் வருகிறார்?எனவே உங்கள் வாதம் சரியில்லை.
//

கரெக்டு தான்....நமீதா/நடிகை குத்தாட்டம்னா தனியா போய் பாப்பாரு...என்னங்க, எப்ப பார்த்தாலும் நீங்க மட்டும் ஜாலியா போய் டான்ஸ் பார்த்துட்டு வரீங்கன்னு வீட்ல புகார் சொல்லிருப்பாங்க போல...அதான் அவங்களுக்கு ஒரு பொழுதுபோக்கா இருக்கட்டும்னு இப்படி ஒரு மாநாடு ஏற்பாடு பண்ணிட்டார்...

ஒரே கல்லுல பல மாங்கா.

அது சரி(18185106603874041862) said...

//

ரெக்கார்டு டான்ஸெல்லாம் பேர மாத்திகிட்டு குத்தாட்டமின்னு இப்ப பொறந்தது.அதற்கும் முன் அவருக்குப் பிடித்தது கவியரங்கம்,எழுத்து,சிலேடை,கலையுலகம்,வசனம் போன்றவை.இதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.விமர்சனெமெல்லாம் சகுனித்தனம்,திரிபுகள்,சுயநலங்கள் பற்றியே.
//

அவருக்கு என்ன எழவோ பிடிக்கட்டும்...ஆனா, அதை கவர்மெண்ட் காசுல அரேஞ்ச் பண்றதும், இந்தாளை தமிழே, தமிழைப் பெற்றவனேங்கிற ரேஞ்சுல அல்லக்கைங்க கால் நக்கறதும்...இதெல்லாம் அரசு அதிகாரம் இருக்கிறதுனால தான??

இவருக்கு சகுனித்தனம் எல்லாம் இல்ல...வேணும்னா சகுனிக்கு கொஞ்சம் கருணாநிதித்தனம் இருந்ததுன்னு சொல்லலாம்.

அது சரி(18185106603874041862) said...

//

வேணுமின்னா மொழியில் கூட அரசியல் லாபம் என்ற சித்ரா மேடம் சொன்னது சரியாக இருக்கும்.
//

மொழியில் கூட அரசியலா? என்னப்பா இது? இவ்ளோ அப்பாவியா இருக்கீங்க..இவங்க மொழியை பயன்படுத்தறதே அரசியலுக்கு தானே?? சன் டிவி, ரெட் ஜெயண்ட் மூவிஸ், க்ளவுட் நைன் மூவிஸ் இதெல்லாம் இவங்க குடும்ப நிறுவனம் தான்...இப்படி அழகு தமிழ்ல பேரு வச்சிக்கிட்டு தான் குத்தாட்ட பிரியன் செம்மொழி மாநாடு நடத்தறார்...

அது சரி(18185106603874041862) said...

//

தலைவரோட அனுபவத்துல பாதிக்கே அம்மா பட்டம் கிடைக்கும் போது தலைவா என்று சொல்லவும் ஒரு கூட்டம் இருப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?நம்ம விமர்சனமெல்லாம் தல என்ன சொன்னாலும் கடிவாளம் போட்டு கண்ணை மறைத்த குதிரையாய் ஓடும் தொண்டுத்தன்மை பற்றியே.
//

அந்தம்மாவுக்கே இருக்கே, இவருக்கு இருக்கதுல என்ன தப்புன்னு கேட்ட என்ன சொல்றது? அந்தம்மா சேலை கட்டுது, அப்போ இவரும் கட்டுவார்னு சொல்றது மாதிரி இருக்கு...இருக்கட்டும்...அந்தம்மாவுக்கு இருக்கது நியாயம்னு நான் எங்கயும் சொல்ல மாட்டேன்...ரெண்டும் ஒரே குட்டை தான்.

அம்மா ஆட்சில இருந்தா இதே ஆளுங்க இதே பாட்டை அந்தம்மாவுக்கு பாடியிருப்பாங்க.....இதுக்கு பேரு தொண்டு இல்ல...கால் நக்குதல்!

ஹேமா said...

//அரசியலுக்கும் அப்பாற்பட்டு தமிழ், மொழி என்று ஒன்று படுவதே மாற்றம் பெரும் உலகில் நம்மை நாமாக அடையாளம் காட்டும்.எத்தனை குறைகள் நம்மிடம்,பிரிந்து படும் மனப்பான்மை. இவற்றை சரி செய்யாமல்......//

சரியகச் சொல்லி
முடிச்சிருக்கீங்க நடா.

நல்ல பதிவு.மனதின் ஆதங்கம் எரிச்சலாய் எழுத்தாய்க் கொட்டிக்கிடக்கு !

ராஜ நடராஜன் said...

//அவருக்கு என்ன எழவோ பிடிக்கட்டும்...ஆனா, அதை கவர்மெண்ட் காசுல அரேஞ்ச் பண்றதும், இந்தாளை தமிழே, தமிழைப் பெற்றவனேங்கிற ரேஞ்சுல அல்லக்கைங்க கால் நக்கறதும்...இதெல்லாம் அரசு அதிகாரம் இருக்கிறதுனால தான?? //

அரசியலில் ஒருவரை நேசிப்பதும்,கோபம் கொள்வதும் அவரவர் இயல்பு,சிந்திக்கும் திறன்,சுய உரிமைகள் சார்ந்தவை.நேசிப்பதற்கான காரணங்கள் கருணாநிதியின் பன்முகப் பண்பும்,சுய தேவைகளாகவும் இருக்கலாம்.ஆனால் கோபத்திற்கான காரணமாக அதிகார பிரயோகங்களை தனக்கு தேவையான மாதிரி வளைக்க இயலும் என்பதை நடைமுறைப்படுத்துவதும்,அரசியல் தடுமாற்றங்கள் இயல்பாகவே தெரிகிறது.இதில் இரு கழக தலைமைகளுமே ஒன்றுக்கு ஒன்று சோர்ந்தவையல்ல.

இதற்கு மாற்று அரசியலுக்கான சூழலும் இல்லை என்பதும் கவனிக்கத் தக்கது.எதிர்வினை மட்டும் செய்யாமல் இதற்கான வழி என்ன என்பதும் விவாதிக்க வேண்டிய ஒன்று.

ராஜ நடராஜன் said...

//நல்ல பதிவு.மனதின் ஆதங்கம் எரிச்சலாய் எழுத்தாய்க் கொட்டிக்கிடக்கு !//

மனதின் ஆதங்கம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நிகழ்வுகள், வலிமைகள் சார்ந்த ஓட்டத்தில் ஓடுகின்றன.மேலும் தாமரை இலை தண்ணீராய் சுயசார்புகளின்றி தூரமிருந்து கவனிக்கும்போது சரி,தவறுகள் நன்றாகவே தெரிகிறது.

பார்வையுள்ளவர் பார்க்க கடவர்.

ராஜ நடராஜன் said...

//அந்தம்மாவுக்கே இருக்கே, இவருக்கு இருக்கதுல என்ன தப்புன்னு கேட்ட என்ன சொல்றது? அந்தம்மா சேலை கட்டுது, அப்போ இவரும் கட்டுவார்னு சொல்றது மாதிரி இருக்கு...இருக்கட்டும்...அந்தம்மாவுக்கு இருக்கது நியாயம்னு நான் எங்கயும் சொல்ல மாட்டேன்...ரெண்டும் ஒரே குட்டை தான்.

அம்மா ஆட்சில இருந்தா இதே ஆளுங்க இதே பாட்டை அந்தம்மாவுக்கு பாடியிருப்பாங்க.....இதுக்கு பேரு தொண்டு இல்ல...கால் நக்குதல்!//

நீங்கள் சொல்லும் டயலாக்கை "இரண்டு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என்று காமராஜர் சொன்னதாக எங்கோ பார்த்த நினைவு.ஆனால் மட்டைகள் காலவெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகாமல் மரமாக அவை உறுதியாய் நிற்கின்றன.அரசியல் கார்ட்டூன்,ஜெயிக்கும்ங்கிற கட்சி தோற்பதும்,தோற்கும்ன்னு சொல்லும் கட்சி ஜெயிப்பதும் ஆருடம் சொல்லும் சோ கூட இப்போது சமரச மனநிலையில்.நீங்கள்?