Followers

Thursday, May 13, 2010

அமைச்சர் ராஜாவுக்கு ஒரு வக்காலத்து

பக்கசார்புகள் இல்லாமல் சமூக நிகழ்வுகளை பிரதிபலிப்பதே பதிவுலகின் வெற்றியாக இருக்குமென்று நினைக்கின்றேன்.உண்மையான தமிழக மக்கள் மனநிலை எப்படியென்பதை முன்பெல்லாம் தேர்தல் முடிவுகள் சொல்லி விடும்.இப்பொழுது ஓட்டுக்கும் காசு என்ற புதிய அரசியல் அடிச்சுவடியில் தேர்தலின் முடிவுகளையும் கூட நம்ப இயலாது என்ற பாடத்தை 2009ம் வருடத்துக்கான பாராளுமன்றத் தேர்தலும் அதனைத் தொடர்ந்த தமிழக இடைத்தேர்தல் முடிவுகளும் வெளிப்படுத்தியுள்ளன.

பதிவுலக பார்வையில் கருணாநிதி மீதும்,தி.மு.க மீதும் கோபங்களையும், எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்தும் இடுகைகளே அதிகம் காணப்படும் நோக்கில் பார்த்தால் இந்த கோப உணர்வுகளை வெளிப்படுத்துபவர்கள் பெரும்பாலும் முந்தைய தி.மு.க ஆதரவு கொண்டவர்களாகவே இருப்பார்கள் என நினைக்கிறேன்.முந்தைய தி.மு.க எதிர்ப்புக்காரர்கள் ஒன்று அடக்கி வாசிக்கிறார்கள் அல்லது மடத்து அரசியல் மாற்றங்களால் ஜெ விட கா விட்ட க மேல் என்ற நிலைக்கு வந்திருக்கலாம்.எஸ்.வி.சேகரின் மொக்கை நாடகத்தின் வார்த்தை கட்டித் தழுவல்களும் நகைப்பைத் தரும் பாராட்டுரைகளும் அதனைத் தொடர்ந்த கட்சித் தாவல் முத்திரையும் கூட இதனையெல்லாம் உறுதிப் படுத்துகின்றன.ஆனால் பதிவுலகைப் பொறுத்த வரையில் கருணாநிதியின் நேசங்கள் நாசங்களாய் போன பின் அவர் மேல் உள்ள கோபத்தின் வெப்பம் அமைச்சர் ராஜாவையும் சுடுகிறதென்றே நினைக்கின்றேன்.ஆனானப்பட்ட டாடாவுக்கே பூச்சாண்டி காட்டிய பரம்பரைக்கு ஸ்பெக்ட்ரம் ஊதி தள்ளி விடக்கூடிய விசயம் என்பதை இது கார்பரேட் சண்டை என்ற காங்கிரஸ் தீர்ப்பின் துணை போதும்.

ஸ்பெக்ட்ரம் என்ற சொல் கடந்த ஆண்டுகளில் இருந்து புகைந்து கொண்டே இருக்கிறது.இப்பொழுது ஹெட்லைன்ஸ் டுடே ஸ்பெக்டரம் தொடர்பாக கார்பரேட் லாபியிஸ்ட் நீரா ராடியாவிற்கும்,அமைச்சர் ராஜாவுக்குமிடையில் நிகழ்ந்த பேச்சு வார்த்தையின் பதிவுகள் தம்மிடமிருப்பதாக கூறுகிறது.இந்த பேச்சு வார்த்தைகள் காங்கிரஸ் கூட்டணி 2009ல் இரண்டாம் முறையாக ஆட்சி அமைக்கும் துவக்க காலம் வரையிலான பேச்சுக்கள் என்பதையும் வருமான வரித்துறையால் சி.பி.ஐ அங்கீகாரத்துடன் பதிவு செய்யப்பட்டது என்றும் ஹெட்லைன்ஸ் டுடே சொல்கிறது.தம்மிடம் இருக்கும் ஆதாரங்களை இந்தியர்கள் முன் கொண்டு வருவதும் அதனுடைய நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவது மட்டுமே ஹெட்லைன்ஸ் ஊடகத்தின் பணியாக இருக்கவேண்டும்.மாறாக பயணத்தில் இருக்கும் ஒரு அமைச்சரை விமானதளத்தில் பேட்டி காண்பது ஜனநாயக மரபாக இருந்தாலும் கூட நச்சரித்து கேள்வி கேட்பது விமான பயணத்தில் இருக்கும் யாருக்கும் கோபத்தை உண்டாக்கும்.

ஹெட்லைன்ஸ் டுடே பேட்டிகாட்சியை அவர்களது தளத்திலேயே வெளியிட்டிருந்தார்கள்.அதனைக்காணும் போது அமைச்சர் ராஜாவின் கோபத்துக்கான ஊடக நிருபர் பெண்ணின் எரிச்சலூட்டும் தொடர் கேள்விகளின் முறைகளே கோபத்திற்கான காரணமாக தெரிகிறது.It could be with an intention of framing Mr.Raja too. வித்தைகள் கற்ற வித்தகர் டி.ஆர்.பாலு ஒரே வார்த்தையில் get lost சொல்லி தப்பித்துக் கொண்டார்.

24 comments:

வானம்பாடிகள் said...

அண்ணோவ்! இது போங்காட்டம். மை லீடர் கலைஞர்னு எரிஞ்சி விழற வெண்ணையும் சரி, செல்லப் பெண்ணும் சரி பதவி பத்தி பேச முடியுமா? முடியுமானா தலவர் சம்மதத்தின் பேரில்தான் நடந்ததா? அப்படித்தான் இருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. பேட்டியோ, மறுப்போ எதுவுமே இல்லை. இங்கு பத்திரிகைகளில் ஒரு வரி செய்தி கூட இல்லை. ஒரு வேளை டிவி நிருபர், பத்திரிகை நிருபர் என்று உள் பிரிவு இருக்கோ தெரியவில்லை. என்னமோல்லாம் நடக்குதுண்ணோவ். 1800 கோடி வெறும் 18 ஆயிடிச்சி. 1500 டன் சவரன் கணக்கில கூட வரலை. செய்தி ஊடகங்கள் விலை போனது அப்பட்டமான உண்மை. இது நல்லதில்லை.

vijayan said...

நிருபர் கேள்விக்கு பதில் தானே கேட்டார் கொள்ளை அடிச்ச பணத்தில் பாகமா கேட்டார்,அதற்க்கு ஏன் அவ்வளவு கோபம் வருகிறது.

ராஜ நடராஜன் said...

//அண்ணோவ்! இது போங்காட்டம். மை லீடர் கலைஞர்னு எரிஞ்சி விழற வெண்ணையும் சரி, செல்லப் பெண்ணும் சரி பதவி பத்தி பேச முடியுமா? முடியுமானா தலவர் சம்மதத்தின் பேரில்தான் நடந்ததா? அப்படித்தான் இருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. பேட்டியோ, மறுப்போ எதுவுமே இல்லை. இங்கு பத்திரிகைகளில் ஒரு வரி செய்தி கூட இல்லை. ஒரு வேளை டிவி நிருபர், பத்திரிகை நிருபர் என்று உள் பிரிவு இருக்கோ தெரியவில்லை. என்னமோல்லாம் நடக்குதுண்ணோவ். 1800 கோடி வெறும் 18 ஆயிடிச்சி. 1500 டன் சவரன் கணக்கில கூட வரலை. செய்தி ஊடகங்கள் விலை போனது அப்பட்டமான உண்மை. இது நல்லதில்லை.//

பாலாண்ணா!நீங்க ஹெட்லைன்ஸ் டுடே பிட் படம் பார்த்தீங்களா?நான் என்ன சொல்ல வர்றேன்னா ஹெட்லைன்ஸ் டுடே கிட்ட தகுந்த ஆதாரங்கள் இருக்கும் போது,வருமான வரித்துறை,சி.பி.ஐ போன்ற அரசு கட்டமைப்புக்கள் இதில் தலையைக் காட்டி இருக்கும் போது முறையான வகையில் உண்மையை வெளிக் கொண்டு வருவதே ஹெட்லைன்ஸ் டுடேக்கு பெருமை சேர்க்கும்.பயண அழுத்தத்தில் அவரை அழுத்துவது சரியல்ல என்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//நிருபர் கேள்விக்கு பதில் தானே கேட்டார் கொள்ளை அடிச்ச பணத்தில் பாகமா கேட்டார்,அதற்க்கு ஏன் அவ்வளவு கோபம் வருகிறது.//

வாங்க விஜயன்!கால,இடங்களுக்கு தகுந்த மாதிரி மனநிலைகள் மாறும்.நீங்கள் கொள்ளை அடிச்ச பணம் என்கிறீர்கள்.காங்கிரஸ் இது கார்பரேட்காரர்களின் போட்டி சண்டை என்கிறது.இதில் உண்மை எது?

nerkuppai thumbi said...

அந்த பிட் படம் பார்த்தோம்
அந்த பெண் நிரூபர் "நீரா ராடியாவுடன் பேசினீர்களா " என்று தான் கேட்பது போல உள்ளது. அதற்கு, ராஜா, "நான் ஒளிப்பதிவு கேட்கவில்லை, எழுத்து வடிவம் தான் பார்த்தேன்" என்று திரும்ப திரும்ப சொல்வது போல் உள்ளது; தான் பேசினேன்
அல்லது பேசவில்லை என்றோ, பேசியது திரித்து வெளியிடப் படுகிறது என்றோ சொல்லியிருந்தால் அது சரியாக இருந்திருக்கும்.

ராஜ நடராஜன் said...

//அந்த பிட் படம் பார்த்தோம்
அந்த பெண் நிரூபர் "நீரா ராடியாவுடன் பேசினீர்களா " என்று தான் கேட்பது போல உள்ளது. அதற்கு, ராஜா, "நான் ஒளிப்பதிவு கேட்கவில்லை, எழுத்து வடிவம் தான் பார்த்தேன்" என்று திரும்ப திரும்ப சொல்வது போல் உள்ளது; தான் பேசினேன்
அல்லது பேசவில்லை என்றோ, பேசியது திரித்து வெளியிடப் படுகிறது என்றோ சொல்லியிருந்தால் அது சரியாக இருந்திருக்கும்.//

பிட் படம் 5 தொகுதியாக பிரித்திருக்கிறார்கள்.அதில் முதல் பகுதியில் ராஜா நடந்து கொண்டே பதில் சொல்லிக்கொண்டுதான் செல்கிறார்.ஊடகப் பெண்ணின் திரும்ப திரும்ப கேள்வியென்ற கணைகளில் தடுமாறியோ அல்லது மன அழுத்தம் காரணமாகவோ வுடுய்யா என்ற எகிறல் வரை நீள்கிறது.

தம்மிடம் நம்பகமான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் பப்பராஸி ஸ்டைல் ஊடக பரபரப்பு தேவையில்லையென்பதே எனது வாதம்.

சரவணகுமார் said...

பொது வாழ்க்கையில் இப்படிப்பட்ட சவால்களை சந்திக்கத்தான் வேண்டும்..பத்திரிக்கையாளர் உங்களையோ..என்னையோ தொந்தரவு செய்வதில்லையே :)எம்பி, மந்திரி பதவி சுகம் மட்டும் வேண்டும் மற்றதெல்லாம் வேண்டாம் என்றால் முடியுமா ?
அது சரி " நான் தலித் என்பதால்தான் என்னை இப்படிக் கேள்வி கேட்கிறீர்களா " என்று ராசா அந்த நிருபரை மடக்கி இருக்கலாமே..அதான் தலைவர் சொல்லிக் குடுத்துருக்காருல்ல.

ராஜ நடராஜன் said...

//பொது வாழ்க்கையில் இப்படிப்பட்ட சவால்களை சந்திக்கத்தான் வேண்டும்..பத்திரிக்கையாளர் உங்களையோ..என்னையோ தொந்தரவு செய்வதில்லையே :)எம்பி, மந்திரி பதவி சுகம் மட்டும் வேண்டும் மற்றதெல்லாம் வேண்டாம் என்றால் முடியுமா ?
அது சரி " நான் தலித் என்பதால்தான் என்னை இப்படிக் கேள்வி கேட்கிறீர்களா " என்று ராசா அந்த நிருபரை மடக்கி இருக்கலாமே..அதான் தலைவர் சொல்லிக் குடுத்துருக்காருல்ல.//

சரவணகுமார்!பொதுவாழ்க்கையில் இப்படிப்பட்ட சவால்களை சந்திக்கத்தான் வேண்டும் என்பதில் உடன்படுகிறேன்.ஆனால் நம்ம எம்.பி.மந்திரிகள் தமிழ்நாட்டுக்குள்ளே மட்டும்தான் பயில்வான்கள்.விமானதளத்தை விட்டு வெளியே போயிட்டா எடை,பருமனில் கூட நோஞ்சான்கள்:)

ராஜாவின் ராஜினாமா கேள்விகளுக்கு உங்களுக்கு நல்ல செய்தி கொண்டுவரவில்லை என்ற லாவகமெல்லாம் கருணாநிதிக்கே உரிய மொழி வளம்.எங்கே,எப்படி தப்பிப்பது என்ற சித்து விளையாட்டுகளெல்லாம் அவருக்கே உரிய தனிச் சிறப்புக்கள்.அதனாலேயே மை லீடர் கலைஞர் சொன்னா மட்டும்தான் கேட்பேன் என்கிறார்.

எத்தனை பந்து போடுறீங்க எல்லோரும்,ஒருத்தரும் விக்கெட் எடுக்க மாட்டேன்கிறீர்களே:)

ஹேமா said...

நடா...வந்தேன்.
ஓட்டு மட்டும்தான்.

கபீஷ் said...

//பக்கசார்புகள் இல்லாமல் சமூக நிகழ்வுகளை பிரதிபலிப்பதே பதிவுலகின் வெற்றியாக இருக்குமென்று நினைக்கின்றேன்//

ஆனாலும் ரொம்பத்தான் எதிரிபாக்கறீங்க

ராஜ நடராஜன் said...

//நடா...வந்தேன்.
ஓட்டு மட்டும்தான்.//

எங்க ஊர்லயெல்லாம் காசு கொடுத்தாத்தான் ஓட்டுப் போடுவாங்க!எந்த ஊரு நீங்க?

அட ஈழமா!

ராஜ நடராஜன் said...

////பக்கசார்புகள் இல்லாமல் சமூக நிகழ்வுகளை பிரதிபலிப்பதே பதிவுலகின் வெற்றியாக இருக்குமென்று நினைக்கின்றேன்//

ஆனாலும் ரொம்பத்தான் எதிரிபாக்கறீங்க//

கபிஷ்!ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இல்லியே:)

கபீஷ் said...

//தம்மிடம் நம்பகமான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் பப்பராஸி ஸ்டைல் ஊடக பரபரப்பு தேவையில்லையென்பதே எனது வாதம்//

இந்த மாதிரி ஊடகப்பரப்பு இருந்தாதான் இந்த நியூஸ் கொஞ்சமாவது பரவும்.

அழுக்கு நல்லது. துணிதுவைக்கற சோப் விளம்பரம் மாதிரி, பரபரப்பு நல்லது இந்த மாதிரி விஷயத்தில். இல்லாட்டி தமிழ்னாட்டுக்கு இந்த மாதிரி நியூஸ் எல்லாம் வராது.

ராஜ நடராஜன் said...

////தம்மிடம் நம்பகமான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் பப்பராஸி ஸ்டைல் ஊடக பரபரப்பு தேவையில்லையென்பதே எனது வாதம்//

இந்த மாதிரி ஊடகப்பரப்பு இருந்தாதான் இந்த நியூஸ் கொஞ்சமாவது பரவும்.

அழுக்கு நல்லது. துணிதுவைக்கற சோப் விளம்பரம் மாதிரி, பரபரப்பு நல்லது இந்த மாதிரி விஷயத்தில். இல்லாட்டி தமிழ்னாட்டுக்கு இந்த மாதிரி நியூஸ் எல்லாம் வராது.//

இப்படியும் ஒரு பார்வை இருக்குதா?பரவாயில்லையே!ஆனா பரபரப்பே நியூசாகிட்டா என்ன செய்யறது?ஒரு பரபரப்பு முடியுறதுக்குள்ளே நாலஞ்சு க்யூவில நிற்குது.பரபரப்புக்கும் இந்தியாவுக்கும் முக்கியமா தமிழ்நாட்டுக்கும் பஞ்சமா என்ன!

கார்டன் பிரவுன் போனதும் தெரியல,டேவிட் கேமரூன் வந்ததும் தெரியல.அது பாலிடிக்ஸ்!

கபீஷ் said...

ஆஹா, வழக்கம்போல் மிஸ்டேக், ஆனாலும் இதுவும் சரியாத்தான் இருக்கு.

பக்கச்சார்பு கொஞ்சம் இருந்தா கூட பரவாயில்ல.(நாம தான் கண்டுபிடிச்சிருவோமே :))) தப்புன்னு தெரிஞ்சும், மனசாட்சிக்கு விரோதமா எத்தனை பேர் நம்பறமாதிரி எழுதறாங்க. அதக் கொறைச்சாலே போதும் முதல்ல. நான் கொஞ்சமா தான் எதிர்பாக்கிறேன் :)))))

கபீஷ் said...

ஆஹா, வழக்கம்போல் மிஸ்டேக், ஆனாலும் இதுவும் சரியாத்தான் இருக்கு.

பக்கச்சார்பு கொஞ்சம் இருந்தா கூட பரவாயில்ல.(நாம தான் கண்டுபிடிச்சிருவோமே :))) தப்புன்னு தெரிஞ்சும், மனசாட்சிக்கு விரோதமா எத்தனை பேர் நம்பறமாதிரி எழுதறாங்க. அதக் கொறைச்சாலே போதும் முதல்ல. நான் கொஞ்சமா தான் எதிர்பாக்கிறேன் :)))))

கபீஷ் said...
This comment has been removed by the author.
ராஜ நடராஜன் said...

//ஆஹா, வழக்கம்போல் மிஸ்டேக், ஆனாலும் இதுவும் சரியாத்தான் இருக்கு.

பக்கச்சார்பு கொஞ்சம் இருந்தா கூட பரவாயில்ல.(நாம தான் கண்டுபிடிச்சிருவோமே :))) தப்புன்னு தெரிஞ்சும், மனசாட்சிக்கு விரோதமா எத்தனை பேர் நம்பறமாதிரி எழுதறாங்க. அதக் கொறைச்சாலே போதும் முதல்ல. நான் கொஞ்சமா தான் எதிர்பாக்கிறேன் :)))))//

இங்கே நெற்றிக்கண் திறக்காமலும் கூட மனதில் பட்டதை சொல்லும் பதிவர்கள் நிறைய இருக்கிறார்கள்.எல்லாரையும் வரிசைப்படுத்த முடியாவிட்டாலும் குறிப்பிடும் படியாக சிலர் வானம்பாடிகள் பாலா,அதுசரி,செந்தில்,உண்மைத்தமிழன் போன்றவர்களும் தொடரும் அவர்களின் பின்னூட்டக்காரர்களும் இருக்கிறார்கள்.

நசரேயன் said...

என்ன நடக்கு இங்கே, கபீஷ் கும்மி அடிச்சிகிட்டு இருக்காரு

ராஜ நடராஜன் said...

//என்ன நடக்கு இங்கே, கபீஷ் கும்மி அடிச்சிகிட்டு இருக்காரு//

மொக்கையர் குழுமம் ஒருத்தரு கூட கண்ணுல படலையாம்:)

Dr.Rudhran said...

nice post

ராஜ நடராஜன் said...

//nice post//

Doc!Thanks for your glimpse!

முகிலன் said...

நடராஜன் இன்னொரு விசயம் விட்டுட்டீங்க. இந்த வட இந்திய ஊடகங்களுக்கு தமிழ்நாட்டு/தென்னாட்டு விசயங்கள் என்றாலே ஒரு தனி எள்ளலோடு தான் நடப்பார்கள்.

முன்பு ஒரு முறை கூகுள் இந்திய மேலாளர் ஒருவரை என்.டி.ட்டி.வியில் பேட்டி எடுக்கும்போது அவர் இந்தியாவில் இரண்டாவதாக அதிகம் கூகுளில் தேடப்படுவது தமிழ் சினிமா என்று சொன்ன போது - தமிழில் என்ன சினிமா இருக்கிறதென்று தேடுகிறார்கள் என்று நக்கலடித்தது அந்த பேட்டியாளர்கள் குழு..

ராஜ நடராஜன் said...

//நடராஜன் இன்னொரு விசயம் விட்டுட்டீங்க. இந்த வட இந்திய ஊடகங்களுக்கு தமிழ்நாட்டு/தென்னாட்டு விசயங்கள் என்றாலே ஒரு தனி எள்ளலோடு தான் நடப்பார்கள்.

முன்பு ஒரு முறை கூகுள் இந்திய மேலாளர் ஒருவரை என்.டி.ட்டி.வியில் பேட்டி எடுக்கும்போது அவர் இந்தியாவில் இரண்டாவதாக அதிகம் கூகுளில் தேடப்படுவது தமிழ் சினிமா என்று சொன்ன போது - தமிழில் என்ன சினிமா இருக்கிறதென்று தேடுகிறார்கள் என்று நக்கலடித்தது அந்த பேட்டியாளர்கள் குழு..//

பாஸ்!முதல் பாராவுக்கான காரணம்,நாம் ஆங்கிலத்தில் பேசுவது அதிகமென்றாலும் நமக்கான ஆங்கில ஊடகங்கள் எங்காவது இருக்கிறதா?மாநில அளவிலேயே நம்து ஊடக வியாபாரம் நிகழ்வதால் இந்த் எள்ளல்.

இரண்டாவது பாராவுக்கான விடையாக இதே தமிழ் மொழி தெரியாத வங்காளத்துக்காரர்களை விசாரித்துப் பாருங்கள் தமிழ் சினிமாவின் வீச்சு பற்றி.அப்படியிருந்தும் சினிமா பற்றி தெரிந்த வடக்கத்தியர்களுக்கு கமலஹாசன் சினிமா பற்றியும் அதிகம் தெரியும்.

இந்தி இசை தவிர இந்திய அளவில் செல்லும் இந்தி படங்களில் என்ன இருக்கிறது என்ற வாதத்தையும் நாம் முன் வைப்போம்.

முக்கியமான ஒரு விசயம் பின்னுரை முடிவு நேரத்தில் நினைவு வந்தது.நேரு காலம் தொட்டு இந்திய அரசாங்கத்தை,பாராளுமன்றத்தை மந்திரிகளுக்குப் பின்னிருந்து பீரோகிராட்டிக் அளவில் இயக்குவது தமிழர்களும்,கேரளத்துக்காரர்களும் என்பது வானம்பாடிகள் போட்டோ ஸ்டைலில் யோசிப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த விசயம்.