Followers

Saturday, December 11, 2010

மீண்டும் சென்னை பயணம்

சென்ற பதிவின் தொடர்ச்சியாக சில விசயங்களை பதிவில் அங்கலாய்ப்பதற்கும் தமிழக யதார்த்தத்துக்கும் நிறையவே வேறுபாடுகள் இருப்பது அனுபவ பூர்வமாக புரிகிறது.அதாவது தமிழ் அகதிகளை சந்திப்பது என்ற எண்ணம் ஈடேறாத விதமாக சில தகவல்கள் சேகரிக்க முடிந்தது தமிழகம் அடைக்கலம் தரும் காரணத்தால் இவர்கள் ஒரு இடத்தில் தங்கியிருப்பார்கள்.இந்திய அரசில் தமிழகத்தின் பங்காக இவர்களை பாதுகாக்கிறார்கள் என்பதற்கும் அப்பால் அரசு கட்டமைப்பின் நியதிகளாக இவர்களை யாரும் சுதந்திரமாக பார்க்க இயலாது என்பது அனுபவ பூர்வமாக தெரிந்தது.
 
புழல் எனுமிடத்தின் சுற்று வட்டாரங்களுக்கு வியாபாரம் நிமித்தமாக செல்லும் ஒருவரிடம் முன்தகவலாக எத்தனை பேர் தங்கியிருக்கிறார்கள் என்று தெரிந்து வரச் சொன்னால் சுமார் 1500 குடும்பங்கள் தங்கியிருக்கிறார்கள் என்றும் வட்ட தாசில்தார் போன்றவர்களின் கையொப்ப மிட்ட கடிதத்துடன் வருகை தருவதற்கான காரணம் பெயர் விபரம் மற்றும் சந்திப்பவர்களின் எண்ணிக்கை போன்ற விபரங்கள் தேவை என்ற தகவலை கொண்டு வந்தார்.
 
 இதற்கு மாற்றாக கட்சிகள் ஏதாவது ஒன்றின் துணையுடன் வேண்டுமானால் முகாமுக்குள் போகமுடியுமென்றார்.நான் இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற சுயபரிதாபம் மட்டும் இருக்கிறது இப்போது.தனி ஆவர்த்தனம் பதிவுலகில் மாத்திரமே இயலுகிறது.ஆக்கபூர்வமாய் யாராவது செயல்பட்டால் இணைந்து கரம் கொடுக்க விரும்புகிறேன்.
 
வலுவான இயக்கமாக சீமான் போன்றவர்கள் வந்தால் மட்டுமே மாற்றங்களோடு எதிர்கால நம்பிக்கையையும் இவர்களுக்கு ஊட்டமுடியும்.நீதிமன்ற தீர்ப்புக்கும் சீமானின் சிறையடைப்பிலிருந்து புன்னகையோடு வெளி வந்ததற்கும் வாழ்த்துக்கள். சீமானின் மீள்வருகை தமிழக அரசியல் களத்தில் இன்னும் புயல் கிளப்புமா அல்லது மீண்டும் சிறை வாழ்க்கை அடக்கி வாசிக்க சொல்லுமா என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.மாற்று அரசியலுக்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

சீன சார்பாளர்கள் மகிழ்வதற்கும் சில நல்ல செய்திகள் சென்னைக்குள் கொட்டிக்கிடக்கிறது.கொண்டு வந்த கைபேசியில் பேச இயலவில்லையென்று ரிச்சி ஸ்ட்ரீட் என்ற தமிழ் தெருவுக்கு போனேன். லண்டன் வாழ் தமிழர்கள் ஆபரண கடை என்றும் தங்க மாளிகையென்றும் தொலைக்காட்சியில் விளம்பரப்டுத்தினால் நகர் முழுதும் ஆங்கிலத்தில் பேசுவதை அப்படியே ஜுவல்லரி மார்ட்,மெடிக்கல்ஸ்,கிளாத் செண்டர் என தமிழ் படுத்தி கடைகளின் பெயர்களை வைத்திருக்கிறார்கள்.ரிச்சி ஸ்ட்ரீட்டீல் முழுக்கவும் சீனா,ஹாங்காங் மின்பொருட்களின் ஆக்கிரமிப்பு பழுதான பொருட்களை பழுதுபார்க்கும் நிபுணத்துவம் வாய்.ந்தவர்களாக 5 அமெரிக்க டாலருக்கும் 2 குவைத் தினாருக்கும் எனது கைபேசியை சரிசெய்ய பணிபுரியும் இளைஞர்கள்.வன்பொருட்களில் சீனாவும் மென்பொருளில் இந்தியாவும் என்பது எழுதப்படாத புதிய உபயோகிப்பாளர் பொருளாதாரமாகிவிட்டது. முந்தைய அதே பர்மா பஜார் அதே தோரணையில் கால்குலேட்டருக்கு பதிலாக புது வடிவமாக கடிகாரம்,கைபேசிகளை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அனைத்து திரைப்படங்களும் 25,20 பேரத்தில் கிடைக்கின்றன.

என்னமோ தலப்பா கட்டு தலப்பா கட்டுங்கிறாங்களேன்னு ஒரு தலப்பா கட்டு கடையில் நுழைந்தால் தலைப்  பாவை ஒன்றையும் காணோ\ம்.பீகாரியோ, குஜராத்திப்பையனோ கொஞ்சம் வடக்கு வாடையுடன் தமிழ் பேசி பிரியாணி போட்டான்.முதலும் கடைசியுமான தலைப்பா பிரியாணி என முடிவு செய்துவிட்டேன்.சென்னை கண்ணன்களே!அண்ணன்களே! ந:ளபாகம் என்பது கோயம்புத்தூர் பக்கம்தானுங்ண்ணா!வானம்பாடிகள் பாலாண்ணாவுடன் சாப்பிட்ட சரவணபவன் கூட சோபிக்கவில்லை.ரசிக்கும் ஒரே விசயம் அவரது பதிவு மாதிரியே நிறைய கேரக்டர் கைவசம் வைத்திருக்கிறார் கூடுதல் புன்னகையோடு.
 
சாப்பாடு முடிந்து தலைமையகம் பக்கம் முதல் முறையாக போனால் தமிழக செயலக கட்டிடம் அசரவைக்கிறது.கூடவே ஒரு மார்பிள் கல் கட்டிட வரிசையிலிருந்து தெத்துப்பல் மாதிரி வெளியே எட்டிப்பார்க்கிறது.கழக கண்மணிகள் யாராவது வழிதெரியாம இந்தப்பக்கம் வந்தீங்கன்னா பொதுப்ப்ணித்துறை அமைச்சரிடம் சொல்லி வையுங்க.கூடவே ஈழ்த்தமிழர்கள் விசயத்தில் அரசியல் குள்ளநரித்தனங்களை மட்டுமே இங்கே விமர்சிப்பதோடு கருணாநிதிக்குப்பின்னும் தமிழக செயலக கட்டிடம்,திருவள்ளுவர் சிலை,வள்ளுவர் கோட்டம் போன்றவை என்றென்றும் அவரது பெயர் சொல்லும் என்ற எனது பக்கம் சாராமையையும் சொல்லி வையுங்க.பதிவுலகின் நேர்மையான விமர்சனங்கள் ,எண்ணங்கள் கடல் கடந்து வானம்கடந்து தேசம்கடந்துசென்னை தொட்டு சிங்கப்பூர் மலேசியா வளைகுடா ஐரோப்பா அமெரிக்கா கனடா என்று உலக பவனி வரும்போது கருத்துப்பரிமாற்றங்கள் தமிழகத்துக்குள்ளேயே பவனி வராதது மட்டுமே தமிழக கட்சிகளின் பலம் எனலாம்.குடும்ப அரசியலில் பணம் காய்ச்சி மரங்களாய் ஆகிவிட்டதால் தி.மு.க விளம்பரங்களை விட திருமா அழைக்கிறார் விளம்பரங்களே சுவர்களில் அதிகம்.இதே மாதிரி தமிழ்மணம் அழைக்கிறது,தங்கிலிஷ் அழைக்கிறது என்று விளம்பரம் வந்தால் பதிவர்களின் கல்லா கட்டும்.

இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் பெரும்பாலும் முகமூடித் திருடிகள் மாதிரி துப்பட்டா ஹெல்மெட்,குளிர்கண்ணாடி சகிதம் வண்டி ஓட்டுகிறார்கள்.ஆண்கள் இரும்புத்தலையன்கள் மட்டுமே.அமெரிக்க, ஜப்பான்,கொரியா,ஐரோப்பிய கார்களின் வளைகுடா பொருளாதாரத்தில் சென்னை சாலைகளும்,கார்களும் என்னை கவரவில்லை.

மவுண்ட் அண்ணா சாலையைக் கடந்து மெரினா போவதற்கும் முன் சிட்டி செண்டர் போன்ற இடங்களின் காசு புரளுமிடம் எப்படியிருக்குதுன்னா சுத்தியும் கொசு,கூவம்,ஒரே நாளுக்குள் அழுக்காகும் உடைகளில் படியும் தூசுகளில் நாங்கள் வாழ்ந்தாலும் படுக்கறது பஞ்சு மெத்தை கொப்பளிக்கிறது பன்னீர்......இல்ல...இல்ல....மினரல் வாட்டர்ங்கிற மாதிரி இருக்குது:) இப்போதைய பொருளாதார வளர்ச்சியில் நேர்மை, லஞ்சமின்மை  ,பங்கீடு,நிர்வாகம்,சுயநலமின்மை போன்றவைகளை சீராக்கும் போது வளமான இந்தியாவி தமிழகத்தின் பங்கு என்பது கனவல்ல,நிகழக்கூடிய சாத்தியம்தான்.தமிழகத்தின் மற்ற மாவட்டக்காரர்களுக்கு கிடைக்க இயலாத ஒரு அனுபவம் சென்னைவாசிகளுக்கு உண்டு.அது சென்னை துறைமுகம் நோக்கி செல்லும் ஏற்றுமதி லாரிகளின் பவனி. மேற்கத்திய நாடுகளிலும்,வளைகுடாவிலும் கார்கள் பயணத்தில் ட்ராபிக் ஜாம் என சொல்லப்படும் வாகன நெரிசல்களின் அனுபவம் பலருக்கு இருக்ககூடும்.அனைத்துப்பொருட்களுக்கும் வெளிநாடுகளையே நம்பியிருக்கும் நாடுகளில் ஒன்றான குவைத்தில் கூட  கன்ட்டெய்னர் லாரிகளைப் பார்த்ததில்லை.தமிழக ஏற்றுமதி லாரிகளின் வரிசை பிரமிக்க வைக்கிறது.உள் நாட்டு உற்பத்தி திறன் மற்றும் உபயோகம் நீங்கலாக ,வெளிநாட்டுக்கு ஏற்றுமதி,பல தொழில்நுட்பங்களில் சுயதேவை பூர்த்தியெனும் நிலை.மனிதவள மேம்பாடு இன்னும் பல பொருளாதார நலன்கள் இருந்தும் கூட அனைத்திலும் பஞ்சப்பாட்டு நிலை.இயற்கை மழை,பசுமை என்று அத்தனை நலன்களைய்ம் வாரியிறைக்கிறது.அப்படியிருந்தும் புழல் ஏரி நிரம்பி விட்டதென்று மதகை திறந்து விட்டு நீரை கடலுக்குப் போ என்று துரத்தி விட்டார்கள்.அப்புறம் வெயில் காலத்தில் தண்ணீர் தண்ணீர்  என கத்த வேண்டியது.இல்லைன்னா ஏண்டா தண்ணி கொடுக்கலன்னு கர்நாடகாக்காரன் கூட சண்டைக்குப் போக வேண்டியது.அதுவும் தனக்கு அரசியல் ஆதாயமிருந்தா மட்டுமே ஆட்டுக்குட்டித் தொண்டர்களை தூவி விடுவது.
 
மூர்மார்க்கெட்டில் ஒரே ஒரு பெண்மணியின் கெட்டவார்த்தை தவிர சென்னைமொழி கேட்கவில்லை.வாழக தமிழகம்.முந்தைய பிச்சைக்காரர்களையும்,தொழு நோயாளிகளையும் இதுவரை பார்க்கவில்லை. ஒருவேளை முந்தைய காலங்களில் நடைப்பயணம்,பஸ் பயணம் என்பதால் எளிதாக நேரடியாகவோ அல்லது கண்ணிலோ பட்டிருக்கலாம்.இப்போதைய பயணவேகத்தில் உட்காருமிடங்கள் இடம் மாறிவிட்டனவா இல்லை பிச்சைக்காரர்கள் இல்லா தமிழக தலைநகரம் என பெருமைப்பட்டுக்கொள்ளலாமா என சென்னைவாசிகள் தகவல் பின்னூட்டம் சொன்னால் நல்லது.அண்ணாசமாதி,எம்.ஜி.ஆர் சமாதிப் பக்கம் கூட போய்ப்பார்த்தேனே ஒருத்தரையும் காணவில்லை.ஒருவேளை மழைக்கு ஒதுங்கி விட்டார்களா என்றும் தெரியவில்லை.கண்ணகியைக் காணவில்லையென்று தமிழக முதல்வர் விளம்பரம் கொடுத்தாரான்னு தெரியவில்லை.காந்தி தாத்தாவுக்கும் பக்கத்தில் யாரோ மஞ்சக்கலருல நிற்கிறாஙகளேன்னு போய்ப்பார்த்தால் சிவாஜி சிலையாம்.என்னமோ நாங்கெல்லாம் சிவாஜியை சினிமாவிலேயே பார்க்காத மாதிரித்தான் இவர்தான் சிவாஜின்னா நம்பிடுவோமா என்ன? 


தனிமனித தேவைகளாக அத்தனையும் பாக்கெட்டுகளாகவும்,பவுடர்களாகவும் கிடைக்கின்றன.வீடு தேடிவரும் நெல்லிக்காய்,நெல்லிக்காய் என்ற ஒரு அம்மாவின் குரலுக்கு வேண்டாம் எனும் கோலம் போடும் பெண்களின் குரலே அதிகம்.வீட்டிலும் சரி பதிவுலகிலும் சரி கண்ணுக்கு இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் விடுங்கன்னு சொல்லிகிட்டே இருக்கேன். கேட்கறதுக்குத்தான் ஆட்களில்லை.முன்பு போட்ட சோடாபுட்டி கண்ணாடியில்லாமலே பார்வையும் எழுத்தும் தெளிவாக தெரிவதற்கு விளக்கெண்ணெய் ஆண்டவரின் கருணையும் ,பதிவர் தெகா கொடுத்த யோகா பயிற்சி மாதிரியான குட்டிக்கரணங்களும் கூட காரணமாக இருக்கலாம். குவைத்தில் சீயக்காய்த்தூள் தேடி அலைந்தும் கிடைக்காமல் சென்னையில் தேடியதில் சிகைக்காயோடு செம்பருத்திப்பூ ,ரோஜாப்பூ ,மகிழம்பூ ,வெட்டிவேர் ,பூங்ககாய் கொட்டை,கேழ்வரகு,பச்சை பயிறு,பச்சஅரிசி,வெந்தயம், வாசனைப்பட்டை ,கார்போக அரிசி ,ம கிச்சலி கிழங்கு,கோரை கிழங்கு என ஹெர்பல் மிக்ஸ் என்ற பெயரில் சாம்பு கிடைக்கிறது.இதை அரைத்து தர யந்திரத்தோடு கடையும் இருக்கிறது.ஆனால் உபயோகிப்பாளர்கள் மட்டுமே குறைவு என நினைக்கிறேன்.சிகைக்காய் உபயோகித்து விட்டு ஜாதக பலனை பின்னால் சொல்கிறேன். சிந்தனையாளர்கள்,நேர்வகிடு கனவான்களுக்கு இந்த சிகைக்காய் சித்தமருத்துவம் பொருந்துமா எனத் தெரியவில்லை.இருந்தாலும் போனதே போச்சு ஜான் என்ன முழம் என்ன என்று உபயோகித்துப்பார்க்கலாம்.

சுடுதண்ணியைக் காலுல ஊத்திகிட்டவன் மாதிரி சென்னை மேலோட்டம் பார்க்கிற எனக்கே தலைநகரின் தங்கப்புதையலா பலசெய்திகள் நசரோட வளவளத்தா பாணியில் அப்படியே வரிகள் கொட்டுது.அடைமழைக்கும் அஞ்சாத சென்னைப்பதிவர்கள் இன்னும் கூட அடிச்சு(அடிச்சுக்காம) ஆடலாம்.

அடுத்த வாரம் கோவை,திருப்பூர் பயணம்.ஜோதிஜி தவிர ஏனைய பதிவர்கள் யாராவது அந்தப்பக்கம் சிறுவாணி தண்ணீர் கொடுப்பதாயிருந்தால் சந்திக்கலாம்.

Wednesday, December 8, 2010

சென்னை பயணம்

முந்தைய பதிவின் சில பின்னூட்டத்திற்கு மறுமொழி இயலவில்லை.மன்னிக்கவும்.விமானத்திற்கு கிளம்பும் முன் ஒரு மணி நேரம் வரை முந்தைய பதிவுக்கு மறுமொழியிட்டு சென்ற வாரம் சென்னை பயணம் துவங்கிய பின் கடந்த 6 நாட்களில் 3 நாட்களாக சென்னைமழை வீட்டுச்சிறை வைத்து விட்டது.எல்லோரும் 16GB,32GB என அசலாய் ஐபோன் வைத்திருக்கும் போது 64GBயில் ஐபோன் கிடைக்கிறதே என்று உபயோகித்த சீன ஐபோன் அந்நியன் சென்னையின் டாட்டா,ஏர்செல்,பி.எஸ்.என்.எல் என்று அத்தனை சிம் கார்டுகளுக்கும் டபாய்த்து விட்டது போதாத குறைக்கு தங்கை வீட்டில்தான் கணினி இணைப்பு கிட்டுமே என்ற நினைத்து வந்ததில் கணினி இணைப்பை துண்டித்து விட்டு சன் தொலைக்காட்சியின் மெகாக்களில் மூழ்கியிருந்தார்கள்.

நொளளைகள் சொல்லாமல் இந்தியாவிலிருக்கும் நல்லவைகளை மட்டுமே இந்த முறை சொல்லவேண்டும் என்று நினைத்ததை இந்தியன் ஏர்லைன்ஸின் விமானபணி உதவியாளரிடம் விமானம் மீண்டும் கோவா வழியேவா பயணிக்குமென்று கேட்டுக்கொண்டிருந்ததை நான் சரியாக புரிந்துகொள்ளாமலிருந்த போது எனக்கும் முன்பு நின்று கொண்டிருந்தவர் உதவிக்கு வந்தார்.முதல் பார்வையில் அடையாளம் கண்டுகொள்ளாமல் சார்!நீங்க என்று பெயர் சொல்லாமல் நான் வார்த்தையை இழுக்க ஆம் என்பது மாதிரி சிரித்தவர் சீர்காழி சிதம்பரம் அவர்கள்.You are a great gift to Taminadu என்று சொன்னதை நான் மிகவும் சாதாரணமானவன் என்று பெருந்தன்மைப்பட்டார்.

பெட்டிகள் சுற்றும் ரப்பர் வளையத்துக்குள் டிராலியுடன் நின்று கொண்டுருந்த போது விமானநிலைய பணியாளர் தரையில் நான் வைத்த பெட்டியை எடுத்து டிராலிமேல் வைத்து விட்டு சார் டீ குடிக்க ஏதாவது கொடுங்க என்றார்.இதோ இந்தியாவின் நுழைவாசல் என்று 20ரூபாய் கொடுத்தேன்.அருகில் நின்றவர் அண்ணன்கிட்ட தினார் கேளு என்று தூண்டி விட்டார்.நான் சிரித்து விட்டு சுங்கவரித் துறைக்குச் சென்றேன்.நான் ஆச்சரியப்படும் வகையில் பெட்டி பற்றி கவலைப்படாமல் நின்றிருந்த பெண்கள் இருவரிடம் கையைக் காட்டிவிட்டார்கள்.அதில் ஒருவர் இமிக்ரேஷன் கார்டை மட்டும் எடுத்துக்கொண்டு போகலாம் என்று சொல்லி விட்டார்.

ப.சிதம்பரம் மூன்றடுக்கு பாதுகாப்பில் எதிரே.பாதுகாப்பு உதவியாளர்களின் மிரட்டலும் பநதாக்களும் கூடவே.வெளியே வந்தால் கரடுமுரடான ரோட்டில் வரவேற்புக்காக காத்திருக்கும் கூ\ட்டம்.சார்!இந்தியா பணம் வேணுமா என்று ஒளிவு மறைவில்லாமல் கைநிறைய கறுப்பு அல்லது ஹவாலா பணம்.இந்தியாவின் நாடியான உயிரோட்டமுள்ள ஜனசந்தடியும்,வாகன டர்புர்களும்.திருமா ஆளுயர பேனரில்.விஜயகாந்தின் கல்யாண மண்டபம் இடிபட்டும் படாமலும் பாலத்தின் அருகில்.டிசம்பர் 26 மாநாடும் வரும்கால அரசியல்தந்திர கூட்டணியும் திருமண மண்டபத்தை மீட்டுக்கொடுக்கும் என்ற கனவு கை கொடுக்குமா என்று நினைத்துக்கொண்டு குடும்பத்தோடு கண்ணில் பட்ட சரவணபவனுக்கு இட்லி தோசை பூரி சாப்பிடப்போனோம்.சரவணாவின் ருசியோ ருசி.பெண் மோகப் பெயரைக் கெடுத்துக்கொள்ளாமல் இருந்திருக்கலாம்.

சென்னையின் மெரினா சாலையிலிருந்து முந்தைய சட்டசபையான ஜார்ஜ்கோட்டை வரையிலுமான சாலையும் இருபுறம் மட்டுமே நானும் உலகத்தரத்துக்கு போட்டி போட்டுக்கொண்டு நின்று கொண்டிருக்கிறேன் சொல்கிறது.கோயம்பேடு மார்க்கெட்,புதிய துறைமுகத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையின் லாரிகளின் வரிசையும் குண்டும் குழியுமான பாதைகளும் தமிழகத்தின் திட்டமிடலின்மையையும், திட்டமிட்டாலும் தோற்றுவிடும் கட்டமைப்புக்களையும் பறைசாற்றுகின்றது.பொருளாதார ரீதியாக சீனாவுடன் போட்டியென்பதாலும் வணிக ரீதியான அல்லது நம்மை நாமே தட்டிக்கொடுத்துக்கொள்ளும் மனபாவம் மட்டுமே.தானும் போராடாமல் போராடுபவனை குறைசொல்லி சிறையில் தள்ளும் சாட்சிகள் ரீதியாக காண்கிறேன்.மாமா!இந்த போலிஸ்காரன் லஞ்சம் வாங்குவதில் படுகில்லாடியென லாரி ஓட்டுனரை மிரட்டிக்கொண்டிருக்கும் கான்ஸ்டபிளை தங்கை மகன் காட்டி எரிச்சல் பட்டான்.

கழுகுப்பார்வையாய் தூரத்தில் நின்றுகொண்டு விமர்சனம் செய்யும் அத்தனையும் கண்முன்னே நிதர்சனங்களாய்.இன்றைய மழை விட்ட தேங்கிய நீருக்குள் கால்,உடை நனைத்து நடந்து செல்லும் மாணவ,,மாணவிகள் மட்டுமே எதிர்கால நம்பிக்கையை இன்னும் உயிர்ப்பிக்க வைக்கின்றன.

கோவை நோக்கிய பயணத்துக்கு ரயில் டிக்கட் முன் அனுமதிக்கு செல்லலாமென்று போகையில் ஹோண்டா பைக்கை ஓட்டிகொண்டிருந்த தங்கை மகன் மாமா இலங்கை தமிழ் அகதிகளைப் போய் பார்க்கலாமா என்றான்.

Friday, December 3, 2010

இலங்கையின் மனித உரிமை மீறல் மீதான ஊடகப்பார்வை

தமிழக ஊடகங்களே உண்மைகளை வெளிக்கொண்டு வர இயலாத நிலையில் இந்திய ஆங்கில ஊடகங்களில் அவ்வப்போது இலங்கை குறித்தான மனித உரிமை மீறல்களையும் இனப்படுகொலையின் ஒரு சில ஆவண்ங்களையும் Channel 4 வெளியிட்டதாக  செய்திகள் வர ஆரம்பித்திருப்பது இந்தியர்களின் பார்வையை இலங்கை மீதும்,ஈழத்தமிழர்கள் மீதும் கொண்டு வருவது சக்கரத்தின் சுழற்சியில் மாற்றங்களைக் கொண்டு வருமா என்பது இன்னும் வரும் காலங்களில் கணிக்க வேண்டியிருக்கிறது.

கூடவே விசில்கார அண்ணாச்சிJulian Assange யின் ஆவண வெளியீடுகள் சட்டரீதியாக போராடும் தமிழ் தரணிகளுக்கு எதிர்காலத்தில் உதவும் என்று நம்புவோம்.


உயிருக்கு ஆபத்தான நிலையிருந்தும் கூட ஜூலியன் தனது இணையதளத்தை வேறு தளத்திற்கு மாற்றி விட்டு வாங்கய்யா கேள்வி கேளுங்க  பதில் சொல்கிறேன் என்கிறார்.அவர் பக்கத்துல யாராவது இருந்தா இலங்கை குறித்தான ஒரு கேள்வியும் போட்டு வையுங்க.இவரைக்குறித்து சுடுதண்ணி சுடசுட டீ ஆத்துவதால் தலைப்புக்கு மீண்டும் வந்து விடுகிறேன்.

Channel 4 Video of Sri Lanka executions causes shockwaves 

என்று தலைப்பிட்டு இங்கே  வீடியோ  ஆவணப்பதிவு செய்திருக்கிறார்கள். வழக்கம் போல் இலங்கை அரசு It's fake என்று உண்மையானது அல்ல என்று மறுத்திருக்கிறது.

Channel 4 தொலைக்காட்சி இதனை ஐக்கிய நாட்டின் குற்றங்களை விசாரிக்கும் குழுவுக்கு அனுப்பியிருப்பதாக தெரிகிறது.


பார்க்கலாம் எங்கே போகும் இந்த பாதையென்று!

ஓடிப்போன ராஜபக்சேவும் இந்திய,தமிழக சூழலும்

பிரிட்டன் வாழ் தமிழ் மக்களின் உணர்ச்சிகரமான ஒன்று கூடுதலால் இன்று ராஜபக்சே இலங்கை திரும்புகிறார்.விமானத்தளத்தில் நின்ற புலம்பெயர் தமிழ் மக்களின் கூட்டத்திலிருந்து துவங்கி அவர் தங்கியிருந்த டோர்செஸ்டர் ஹோட்டலின் முன்பு கூடியிருந்த மக்களைக் கண்டு பிரிட்டனின் இலங்கை தூதரகத்தில் தஞ்சம் புகுந்து கொண்டு நாட்டின் தலை என்ற டிப்ளமட்டிக் என்ற தனி அங்கீகாரத்தால் தப்பித்தோம் பிழைத்தோமென்று நாடு திரும்புகிறார்.

தமிழ் மக்களின் நியாயமான உணர்வுகள் உலகம் முழுதும் வாழும் தமிழ்மக்களின் அடிமனத்தில் கனல் விட்டு எழுந்து கொண்டிருக்கிறதென்பதே உண்மை.இதற்கு விதிவிலக்காக சில வழிதவறிய ஆடுகளும்,இலங்கையின் சர்வாதிகார எமெர்ஜென்சி சட்டங்களால்  தமிழர்கள் வாய்மூடியாகவும், தவறுகளை சுட்டிக்காட்ட வலுவில்லாத நிலையில் சமத்துவம் பேணும் சில சிங்களவர்களும் இருக்கலாம்.

இவற்றைத் தவிர்த்து தமிழகம் நோக்கினால் அரசியல் களத்தில் நின்று ஈழத்தமிழர்களுக்காக அமைப்பு ரீதியாகவும்,தனிமனித குரல்கொடுப்பவர்கள் தவிர  ஏனைய தமிழர்கள் என்ன நடக்கிறதென்றே  அறியாத் நிலையிலே கண்ணைக்கட்டி விடப்பட்டிருக்கிறார்கள்.ஈழம் திசை மாறிப்பயணித்ததில் மாநில அரசுக்கும்,மத்திய அரசுக்கும் முக்கிய பங்கு இருக்கிறதென்று கிளிப்பிள்ளையாக திரும்ப திரும்ப சொல்லவேண்டியிருக்கிறது.

கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுருக்கிறது என்று இன்னுமா தமிழக அரசும்,மாநில அரசும்  நினைத்துக்கொண்டிருக்கப் போகின்றன?எங்களுக்கு ஊழல் குற்றங்களையும், குடும்ப அரசியலுக்கு ஜெயலலிதாவுக்கு பதில் சொல்வதற்குமே நேரம் சரியாக இருக்கிறதென்று சொன்னால் தள்ளி நின்று தயவுசெய்து மக்களின் உணர்வுகளுக்கு வழி விடவாவது செய்யுங்கள்.குறைந்த பட்சம் நாட்டை விட்டுத் துரத்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆட்சி செய்வது எப்படியென்பதை பிரிட்டன்காரனைப் பார்த்தாவது தெரிந்து கொள்ளுங்கள்.கூடவே ஜனநாயக ரீதியாக மக்கள் போராடுவது எப்படியென்பதை லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்களைப்பார்த்து தமிழ்மக்களும்,மொத்த இந்தியர்களும் இனியாவது கற்றுக்கொள்ளட்டும்.போராட்டமென்றால் கல்லெறிதலும்,பஸ் எரித்தலும் ,ரயில் கொளுத்தலும் நாட்டின் உடமைகளை சேதமாக்குவதல்ல.ஆனால் இவற்றின் காரணகர்த்தாக்களே நீங்களல்லவா?

அடக்குமுறைகளிலும்,சிறை அடைப்புக்களிலும்,மக்களை திசை திருப்பி களியாட்டங்களிலும்,போதையிலும் தள்ளிவிட்டு ஊடகச்செய்திகள் கூட மக்களை போய்ச் சேர்ந்து விடக்கூடாது என்று அரசு நடத்துவது மக்களுக்கான மக்களால் நடக்கும் ஆட்சிமுறையல்ல.நாற்காலிச் சண்டைக்காக விடாப்பிடியாக கருணாநிதியும்,ஜெயலலிதாவும் ஒருவருக்கொருவர் அறிக்கை விட்டுக்கொள்வது களைப்பையே தருகிறது.உலகின் எந்த நிர்வாகமும் இப்படி தின்மும் அறிக்கை விட்டுக்கொள்வதேயில்லை.இரு தினங்களுக்கு முன்பான எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்று கணக்கு காண்பிப்பதும் அதற்கு தகுந்த மாதிரி ஜெயலலிதா சொல்லும் நகைப்புக்குரியது உண்மையென்பதும் கட்சி சார்பற்றவர்களுக்கு நன்றாகவே புரிகிறது.

ரஜனி படத்து சாகும் நாட்கள் தெரிந்து போனா வாழும் நாட்கள் நரகம்ங்கிற மாதிரி அளவுக்கு மீறிய  பணமும் கூட வாழும் நாட்களில் நரகமே.உங்களுக்கெல்லாம் தினமும் இரவில் மெய்மறந்த  தூக்கம் வருகிறதா?அரசியல் ரீதியாக எந்த நிலைப்பாடு எடுத்து இருவருமே ஒருவரை ஒருவர் கும்மிக்கொண்டிருந்தாலும் ராஜபக்சே இந்தியா வருவதையும் ,மனிதப்படுகொலை கறைபடிந்தவர்களையும் கோயில் குளமென்று இந்தியா சுற்ற உங்கள் அரசியல் அழுத்தங்கள் கொண்டு அனுமதித்து இருக்க மாட்டீர்கள்.

இணைய உலகம் பரந்து கிடக்கிறது.வந்து பாருங்கள்!அதில் தமிழனின் அவலங்களும்,மனித உரிமை மீறல்களும் தலைவன் என்பதையும் அம்மா என்பதையும் கேலிசெய்து முகத்தில் அறைந்து பதில் சொல்லும்.

Wednesday, December 1, 2010

ராஜபக்சேவுக்கு ஒரு ஆப்பு

 மக்கள் போராட்ட குணத்திற்கு கிடைத்த வெற்றியாக ராஜபக்சே லண்டனில் பேச இருந்த லண்டன் ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி நிகழ்த்தவிருந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளதை அதன் அதிகார பூர்வ அதிகாரி கடித எழுத்தில் கையெழுத்திட்டு உறுதிப் படுத்தியுள்ளார்.

கிட்டத்தட்ட 50ஆயிரம் புலம் பெயர் தமிழர்கள் கூடுவார்கள் என்று நம்ப படுவதாலும் நிகழ்ச்சிக்கும் ராஜபக்சேவுக்கும் பாதுகாப்பில்லை என்று கருதியே இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேற்கொண்டு ராஜபக்சே என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.அதை விட பதவியில் இருக்கும் திமிரில் நெஞ்சை நிமிர்த்தி நடப்பதை நிறுத்திக்கொண்டு மனிதனாக மக்களுக்கு நல்லது என்ன செய்யலாம் என்பதை மனதில் கொள்ளட்டும்.

இந்த செய்தியை தமிழ் ஆர்வலர்களுக்கும் ஏனைய மானிடம் நிலைக்க போராடுபவர்களுக்கும் எடுத்துச் செல்வோமாக.ஒற்றுமை தமிழனிடமிருந்தால் ராஜபக்சே என்ன கோத்தபாய என்ன ?காலம் அதன் தீர்ப்பை சரியாகவே எழுதும்.குளிரையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக ரீதியாக போராட துணிந்த பிரிட்டன் தமிழர்களுக்கு எனது வணக்கங்கள்.

எஸ்.எம்.கிருஷ்ணா எத்தனை அடிச்சாலும் தாங்குவாரு

தலைப்பு நம்ம வடிவேலு சொல்லும் எத்தனை அடிச்சாலும் தாங்குறானய்யா!புதுசா ஏதாவது செய்தி வந்தா பழையவற்றை மறந்து விட்டு புது அவலுக்கு தாவி விடுகிறோம்.நான் பழையவற்றை நினைவுபடுத்தி விட்டு புதுசுக்கு தாண்டுகிறேன்.எஸ்.எம்.கிருஷ்ணா எந்த எந்த ஊருக்கு பயணப்படுகிறார் என்பது தெரிவதில்லை.சில நேரங்களில் நாட்டுக்கு நல்லது என்று பறக்கும் பயணங்களைக் கூட செய்திருக்க கூடும்.அவை ஊடகத்தில் அமுக்கியும் வாசிக்கப்பட்டிருக்க கூடும்.

ஆனால் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரிடம் போய் வாங்கிக்கட்டிக்கொண்டு வந்ததையும் என் மீசையில் மண் ஒட்டவில்லையென்ற எஸ்.எம்.கிருஷ்ணா டெல்லி வந்த பின் தந்த ஊடக பேட்டியும் சரவெடிமாதிரி வெடிச்சு பின் அமுங்கிப் போனது.அதற்குப் பின் நானும் கிருஷ்ணாவை மறந்துவிட்டேன்.நேற்றுக்கும் முந்தைய தினம் ராஜபக்சே பிரிட்டன் பயணம் குறித்து தகவல்களை லண்டன்வாழ் புலம்பெயர் தமிழர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்று கவனிக்கையில்  குறுக்கே எஸ்.எம்.கிருஷ்ணா மறுபடியும் வந்து கண்ணில் பட்டுத் தொலைத்து விட்டார்.

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற முதுமொழி மாறாக கிருஷ்ணா வருவார் பின்னே டக்ளஸ் தேவானந்தா வருவார் முன்னே என்று படை சூழ வரும் கிருஷ்ணாவுக்கு வழிகாட்டியாக டக்ளஸ் நடந்து வந்த தோரணை இருக்கிறதே!சொல்லி மாயாது:( இந்த ஆளு பேரே கதிர்வேலு நித்யானந்த டக்ளஸ் தேவானந்தா என்பது இங்கே http://www.pakistan-karachi.info/Douglas_Devananda  என தேடலில் பாகிஸ்தான் தளமொன்று சொல்லித்தான் எனக்கு தெரிய வந்தது.

இந்தியனைப் பொறுத்தவரையில் சட்டங்களும் முக்கியமாக நீதித்துறையும் கேலிக்குரியதாக்கப்படுகின்றன என்பதற்கு டக்ளஸ் இந்திய தலைகளோட கரம் கோர்ப்பதும் வழிகாட்டும் படலங்களும் சிறந்த உதாரணங்கள்.


டக்ளஸ் கிருஷ்ணாவுடன் வரும் புகைப்படத்தை தேடியதில் கிட்டவில்லை.சந்தர்ப்பங்கள் யாருக்காவது கிட்டினால் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.அதுவரைக்கும் நம்ம Mr.clean உடனான படத்தோடு ஆறுதலையடைய வேண்டுகிறேன். அரசன் எவ்வழியோ மந்திரியும் அவ்வழியே. 

சரி!திருடனும்,கொலைகாரனும்தான் பொதுவாழ்க்கை நாயகர்கள் என்பது மக்களின் தலைவிதியாகிப்போச்சு.கிருஷ்ணா! இலங்கைக்கு போனதுதான் போனீர்கள்.திட்டமிட்ட ஈழத்தின் தமிழ்க்கூட்டமைப்பு அமைச்சர்களுடன் ஆறுதலுக்கோ அல்லது தொலைகாட்சி செய்தியென்ற முகப்பூச்சுக்காக வேண்டியாகினும் அவர்களை சந்தித்து வந்திருக்கலாமே.அவர்கள்தான் ஜனநாயகத்தில் சங்கமாகி விட்டோமென்ற மக்கள் தேர்வாளர்களாயிற்றே. நேரம்,கால,இடம்,சூழ்நிலைகள் அமையவில்லையா அல்லது மத்திய அரசின் உள்நிலைப்பாட்டில் தவிர்ப்பா என்பது உங்களது மனசாட்சிக்கே வெளிச்சம்.நீங்கள் போனதின் ஒரே இந்திய பயன் சீனாவுக்கு முட்டுக்கட்டை போடும் இலங்கை தூதரக திறப்பு விழா மட்டுமே.தூதரக கட்டிடத்தை வச்சுகிட்டு ஒற்றர் வேலை மட்டுமே செய்ய முடியும்.சீனாக்காரன் இலங்கையில் கட்டமைப்புக்களை நிறுவிக்கொண்டிருக்கிறான் இந்தியாவுக்கு ஆப்பு வைக்க. 
 
உட்கார்ந்து கொண்டு பார்ப்பவனுக்கு தெரிவது ஊர்சுற்றுபவனுக்கு தெரியாமல் போவது எப்படி சாத்தியம்?

ஸ்பெக்ட்ரம் பதிவுகளும் விக்கிலீக் இணைய பரிமாற்றமும்

சேகர் குப்தாவுடனான கருத்து பரிமாறலில் ரத்தன் டாட்டா தனது பக்கத்து நியாயத்தை சொல்லிவிட்டு தனது சார்பான வழக்கறிஞர் மூலம் ஸ்பெக்ட்ரம் 2G குறித்தான பதிவு செய்த குரல்களை பொதுவில் வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

சேகர் குப்தாவுடனான உரையாடலில் கார்பரேட் நிறுவனங்கள்,ஸ்பெக்ட்ரம் குறித்த குரல் பதிவுகளில் தனது இந்திய கவலை,2005ல் ஸ்பெக்ட்ரம் இலவசமாக்கப்படக்கூடாது(Because it is a scarce resource)என்ற தனது கருத்து தயாநிதி மாறனுக்கு பிடிக்காமல் போனதில் இருவருக்கும் வியாபார கெமிஸ்ட்ரி வேலை செய்யவில்லையென்றும்,ஆனால் தயாநிதி ரொம்ப புத்திசாலி மற்றும் Sophisticated person(தமிழ் தெரியலைங்ண்ணா!இப்படி வெச்சுக்கலாம்,குறைந்த பட்சம் பயணம் செய்வதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் தேவை)என்றும் சொல்லி விட்டு ஆ.இராசா(இதுதான் அவரோட லெட்டர்பேட் பெயர் தெரியுமா)வின் ஸ்பெக்ட்ரம் சரி தவறுகள் பற்றி கருத்து சொல்லாமல் ஆனால் ராசாவினால் டெலிகாம் பரவலாக்கப்பட்டது என்ற தனது மறைமுக ஆதரவை ராசாவுக்கு வழங்குகிறார்.

தனது சார்பு கருத்துக்களை தொலைக்காட்சியில் பொதுவில் வைத்த  மறுநாள் திங்கள் கிழமை ஸ்பெக்ட்ரம் டேப் பதிவுகளை வெளியிடக்கூடாதென்ற உயர்நீதி மன்ற மனுதாக்கல்.அவரது கருத்துப்படி இந்தியா வாழைப்பழ ஜனநாயகம்(Banana Democracy) ஆகிவிடுமென்ற கவலை தெரிகிறது.(வாழைப்பழ ஜனநாயகமென்பது litteraly a strong word.வாழைப்பழம்(லஞ்சம்)கொடுத்தால்தான் அரசாங்கத்தில் காரியமாகும் என்பதும்,இதுவே பல குற்றங்களின் இறுதியாக சர்வாதிகாரத்துக்கு வழிகோலும் என்ற பொருள் கொண்டது).

இனி விக்கிலீக்கை பார்ப்போம்.பொதுவாக கண்ணில் படும் உலக செய்திகளை அன்றாட வாழ்க்கையோடு கவனித்துக்கொண்டு வந்தோமானால் பலதேசத்து அரசாங்கம் செயல்படும் தன்மைக்கும்,யதார்த்தமாக உலகப்பார்வைக்கு வராமல் செய்யும் தகிடுதத்தங்கள் புரியவே செய்யும்.புரிதல் என்பது சாட்சியல்ல.ஆனால் இந்த புரிதலுக்கு சாட்சி ஆவணங்கள் மட்டுமே விக்கிலீக்கின் அமெரிக்காவின் உலகநாடுகளின் நிலைபாடு.இணைய வசதிகள் பொதுவாக்கப்பட்ட காலத்தில் the real war started now (இணையப்போரின் துவக்கம்)என்ற ஹேக்கர் ஒருவரின் வாசகம் நினைவுக்கு வருகிறது.கூகிள் பூமியில் உங்க வீட்டு கூரையைக் கூட கண்டுகொள்ள முடியும் என்பதும்,சீனாவின் கணினி குறித்த ஒற்றர்வெலை போன்றவையும் இந்த குறியீட்டுக்குள் வந்த போதிலும்,அமெரிக்காவின் உள்வேலைகள் சாட்சியமாக விக்கிலீக் மூலம் வெளிவருவது அமெரிக்காவையும் அனைத்து நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

அடுத்து ஸ்பெக்ட்ரம் குரல் பதிவுகள்,விக்கிலீக் அமெரிக்க கேபிள் பதிவுகள் வெளியிடப்படுவது விளையாட்டு மைந்தர்களுக்கு (அடிச்சு ஆடுகிற ground players)விருப்பமில்லாத ஒன்றாக இருந்தாலும் இதன் ஆச்சரியங்கள் என்னைப்போன்ற சாதாரண மனிதனுக்கு மகிழ்ச்சியையே உருவாக்குகின்றன. இந்த மகிழ்ச்சியின் காரணம் அரசாங்கங்களே! பொதுமக்கள் எதிர்காலத்தோடு  பயணிப்பவர்களே!இரட்டை வேடம் போடாதீர்கள்! நாம் புதிய யுகத்தில் இப்பொழுது பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதால்.

உலகின் நன்மைக்கு நல்லது என்றும்,நாட்டு மக்களுக்கு நல்லது என்ற அகன்ற பார்வையில் சில விதிவிலக்குகள் அரசியல் களத்தில் இருக்கலாம்.தவறில்லை.ஆனால் நட்பு நாடு என்று பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவி எனும் பெயரில் இந்தியாவுக்கு எதிராக கொம்பு சீவி விடுவதும் அதே சமயத்தில் பாகிஸ்தானுக்கு ஆப்பு வைப்பதும்,மத்திய கிழக்கில் இஸ்ரேலையும்,ஏனைய அரபு நாடுகளையும் நட்பு ரீதியாக இணைப்பதற்கு பதிலாக சவுதி அரேபிய மன்னர் ஈரான் மீது குண்டு போடு என்பதும் பரிசீலிக்கிறேனென்ற அமெரிக்க நிலைப்பாடும் உலக சமாதானத்திற்கு நல்லதல்ல.

Classified எனும்  ரகசியங்களை வெளியிடுபவர்கள்( Whisle blowers)வானிலிருந்து வந்த வேற்றுகிரகவாசிகள் அல்ல.இவர்கள் ஒன்று ஒரு அமைப்பின் மீதான நம்பிக்கையை இழந்தவர்கள் என்பதற்கான காரணங்களும்,ஒருவேளை சுயநலவிருப்ப காரணங்களாக கூட இருக்கலாம்.ஆனால் தவறுகளிலிருந்து திருத்திக்கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்குபவர்கள் என்பதோடு இவர்கள் உலகமாற்றுக்கான கிரியாஊக்கிகள் எனபது மட்டும் தெளிவு.