Followers

Wednesday, December 8, 2010

சென்னை பயணம்

முந்தைய பதிவின் சில பின்னூட்டத்திற்கு மறுமொழி இயலவில்லை.மன்னிக்கவும்.விமானத்திற்கு கிளம்பும் முன் ஒரு மணி நேரம் வரை முந்தைய பதிவுக்கு மறுமொழியிட்டு சென்ற வாரம் சென்னை பயணம் துவங்கிய பின் கடந்த 6 நாட்களில் 3 நாட்களாக சென்னைமழை வீட்டுச்சிறை வைத்து விட்டது.எல்லோரும் 16GB,32GB என அசலாய் ஐபோன் வைத்திருக்கும் போது 64GBயில் ஐபோன் கிடைக்கிறதே என்று உபயோகித்த சீன ஐபோன் அந்நியன் சென்னையின் டாட்டா,ஏர்செல்,பி.எஸ்.என்.எல் என்று அத்தனை சிம் கார்டுகளுக்கும் டபாய்த்து விட்டது போதாத குறைக்கு தங்கை வீட்டில்தான் கணினி இணைப்பு கிட்டுமே என்ற நினைத்து வந்ததில் கணினி இணைப்பை துண்டித்து விட்டு சன் தொலைக்காட்சியின் மெகாக்களில் மூழ்கியிருந்தார்கள்.

நொளளைகள் சொல்லாமல் இந்தியாவிலிருக்கும் நல்லவைகளை மட்டுமே இந்த முறை சொல்லவேண்டும் என்று நினைத்ததை இந்தியன் ஏர்லைன்ஸின் விமானபணி உதவியாளரிடம் விமானம் மீண்டும் கோவா வழியேவா பயணிக்குமென்று கேட்டுக்கொண்டிருந்ததை நான் சரியாக புரிந்துகொள்ளாமலிருந்த போது எனக்கும் முன்பு நின்று கொண்டிருந்தவர் உதவிக்கு வந்தார்.முதல் பார்வையில் அடையாளம் கண்டுகொள்ளாமல் சார்!நீங்க என்று பெயர் சொல்லாமல் நான் வார்த்தையை இழுக்க ஆம் என்பது மாதிரி சிரித்தவர் சீர்காழி சிதம்பரம் அவர்கள்.You are a great gift to Taminadu என்று சொன்னதை நான் மிகவும் சாதாரணமானவன் என்று பெருந்தன்மைப்பட்டார்.

பெட்டிகள் சுற்றும் ரப்பர் வளையத்துக்குள் டிராலியுடன் நின்று கொண்டுருந்த போது விமானநிலைய பணியாளர் தரையில் நான் வைத்த பெட்டியை எடுத்து டிராலிமேல் வைத்து விட்டு சார் டீ குடிக்க ஏதாவது கொடுங்க என்றார்.இதோ இந்தியாவின் நுழைவாசல் என்று 20ரூபாய் கொடுத்தேன்.அருகில் நின்றவர் அண்ணன்கிட்ட தினார் கேளு என்று தூண்டி விட்டார்.நான் சிரித்து விட்டு சுங்கவரித் துறைக்குச் சென்றேன்.நான் ஆச்சரியப்படும் வகையில் பெட்டி பற்றி கவலைப்படாமல் நின்றிருந்த பெண்கள் இருவரிடம் கையைக் காட்டிவிட்டார்கள்.அதில் ஒருவர் இமிக்ரேஷன் கார்டை மட்டும் எடுத்துக்கொண்டு போகலாம் என்று சொல்லி விட்டார்.

ப.சிதம்பரம் மூன்றடுக்கு பாதுகாப்பில் எதிரே.பாதுகாப்பு உதவியாளர்களின் மிரட்டலும் பநதாக்களும் கூடவே.வெளியே வந்தால் கரடுமுரடான ரோட்டில் வரவேற்புக்காக காத்திருக்கும் கூ\ட்டம்.சார்!இந்தியா பணம் வேணுமா என்று ஒளிவு மறைவில்லாமல் கைநிறைய கறுப்பு அல்லது ஹவாலா பணம்.இந்தியாவின் நாடியான உயிரோட்டமுள்ள ஜனசந்தடியும்,வாகன டர்புர்களும்.திருமா ஆளுயர பேனரில்.விஜயகாந்தின் கல்யாண மண்டபம் இடிபட்டும் படாமலும் பாலத்தின் அருகில்.டிசம்பர் 26 மாநாடும் வரும்கால அரசியல்தந்திர கூட்டணியும் திருமண மண்டபத்தை மீட்டுக்கொடுக்கும் என்ற கனவு கை கொடுக்குமா என்று நினைத்துக்கொண்டு குடும்பத்தோடு கண்ணில் பட்ட சரவணபவனுக்கு இட்லி தோசை பூரி சாப்பிடப்போனோம்.சரவணாவின் ருசியோ ருசி.பெண் மோகப் பெயரைக் கெடுத்துக்கொள்ளாமல் இருந்திருக்கலாம்.

சென்னையின் மெரினா சாலையிலிருந்து முந்தைய சட்டசபையான ஜார்ஜ்கோட்டை வரையிலுமான சாலையும் இருபுறம் மட்டுமே நானும் உலகத்தரத்துக்கு போட்டி போட்டுக்கொண்டு நின்று கொண்டிருக்கிறேன் சொல்கிறது.கோயம்பேடு மார்க்கெட்,புதிய துறைமுகத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையின் லாரிகளின் வரிசையும் குண்டும் குழியுமான பாதைகளும் தமிழகத்தின் திட்டமிடலின்மையையும், திட்டமிட்டாலும் தோற்றுவிடும் கட்டமைப்புக்களையும் பறைசாற்றுகின்றது.பொருளாதார ரீதியாக சீனாவுடன் போட்டியென்பதாலும் வணிக ரீதியான அல்லது நம்மை நாமே தட்டிக்கொடுத்துக்கொள்ளும் மனபாவம் மட்டுமே.தானும் போராடாமல் போராடுபவனை குறைசொல்லி சிறையில் தள்ளும் சாட்சிகள் ரீதியாக காண்கிறேன்.மாமா!இந்த போலிஸ்காரன் லஞ்சம் வாங்குவதில் படுகில்லாடியென லாரி ஓட்டுனரை மிரட்டிக்கொண்டிருக்கும் கான்ஸ்டபிளை தங்கை மகன் காட்டி எரிச்சல் பட்டான்.

கழுகுப்பார்வையாய் தூரத்தில் நின்றுகொண்டு விமர்சனம் செய்யும் அத்தனையும் கண்முன்னே நிதர்சனங்களாய்.இன்றைய மழை விட்ட தேங்கிய நீருக்குள் கால்,உடை நனைத்து நடந்து செல்லும் மாணவ,,மாணவிகள் மட்டுமே எதிர்கால நம்பிக்கையை இன்னும் உயிர்ப்பிக்க வைக்கின்றன.

கோவை நோக்கிய பயணத்துக்கு ரயில் டிக்கட் முன் அனுமதிக்கு செல்லலாமென்று போகையில் ஹோண்டா பைக்கை ஓட்டிகொண்டிருந்த தங்கை மகன் மாமா இலங்கை தமிழ் அகதிகளைப் போய் பார்க்கலாமா என்றான்.

27 comments:

துளசி கோபால் said...

விடுமுறை எவ்வளவு நாட்கள்?

அதுலே சென்னைக்கு ஒதுக்கியது எவ்வளவு & எப்போ?

Thekkikattan|தெகா said...

வாவ்! ராஜ நட, சென்னையில. அசத்துங்க.

தொடர்ந்து இங்கே உங்க கண்ணில் பட்டவை முதலில் வந்த சிந்தனையின்னு தவறாம பதிஞ்சி வைச்சிருக்கங்வோ... புள்ளகுட்டிகளுக்கு புன்னியமா போவும் :)

ஜோதிஜி said...

உளமார வரவேற்கின்றேன்.

பெரும்பாலும் ப சிதம்பரம் இது போன்ற பந்தாக்களை அனுமதிக்க மாட்டாரே?

Chitra said...

கழுகுப்பார்வையாய் தூரத்தில் நின்றுகொண்டு விமர்சனம் செய்யும் அத்தனையும் கண்முன்னே நிதர்சனங்களாய்.இன்றைய மழை விட்ட தேங்கிய நீருக்குள் கால்,உடை நனைத்து நடந்து செல்லும் மாணவ,,மாணவிகள் மட்டுமே எதிர்கால நம்பிக்கையை இன்னும் உயிர்ப்பிக்க வைக்கின்றன.


.......ஒளிமயமான எதிர்காலம். நம்பிக்கையே வாழ்க்கைங்க.

பழமைபேசி said...

அண்ணா, ஊர்லீங்ளா?

பழமைபேசி said...

அந்த டிச-26, ஈரோடு சங்கமம், ஒடு எட்டு போய்ட்டு வந்துருங்கோ!!

ராஜ நடராஜன் said...

//விடுமுறை எவ்வளவு நாட்கள்?

அதுலே சென்னைக்கு ஒதுக்கியது எவ்வளவு & எப்போ?//

வணக்கம் டீச்சர்.12ம்தேதி வரை சென்னையில் இருப்பேன்.27ம்தேதி மீண்டும் பயணம்.

ராஜ நடராஜன் said...

//வாவ்! ராஜ நட, சென்னையில. அசத்துங்க.

தொடர்ந்து இங்கே உங்க கண்ணில் பட்டவை முதலில் வந்த சிந்தனையின்னு தவறாம பதிஞ்சி வைச்சிருக்கங்வோ... புள்ளகுட்டிகளுக்கு புன்னியமா போவும் :)//

தெகா!சொல்றதுக்கு நிறைய இருக்குது.கூடவே சுற்றும் பயணங்களும்.முடிந்தவரை எனது பார்வையை பதிக்கிறேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

//உளமார வரவேற்கின்றேன்.

பெரும்பாலும் ப சிதம்பரம் இது போன்ற பந்தாக்களை அனுமதிக்க மாட்டாரே?//

ஜோதிஜி!வணக்கம்.
அவர் எங்கே பந்தா செய்கிறார்.கூட இருக்கும் காவல் பணியாளர்கள்.

ராஜ நடராஜன் said...

//.......ஒளிமயமான எதிர்காலம். நம்பிக்கையே வாழ்க்கைங்க.//

சித்ரா மேடம்!நம்மகிட்ட அத்தனை திறமையும் கொட்டிக்கிடக்குது.அமைப்புக்கள் திசை மாறிப்போய் விட்டன.முந்தைய காலகட்டத்துடன் நோக்கும் போது வாழ்க்கைத்தரம் சற்று முன்னேறியது கண்முன் தெரிகிறது.ஆனால் அடிப்படைக் கட்டமைப்புக்களான வீடு,சாலை,குடிநீர்,மின்கம்ப முறைகள்,முக்கியமாக சுகாதாரம் என அத்தனையும் பாழ்பட்டே கிடக்கிறது.

இந்த குழந்தைகளின் காலத்திலாவது இன்னும் கொஞ்சம் மாறும் என நம்பிக்கை வைப்போம்.

ராஜ நடராஜன் said...

//அண்ணா, ஊர்லீங்ளா?//

இப்போதைக்கு சென்னைங்ண்ணா.அடுத்த வாரம் கோவை பயணம்.27ம் தேதி மீண்டும் பயணமென்பதால் ஈரோடு சங்கமம் இயலாதென்றே நினைக்கிறேன்.

உமர் | Umar said...

வரும்போதே மழையோட வந்துட்டீங்க. :-)

நசரேயன் said...

விடுமுறை சிறப்பா அமைய வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

நீங்கள் ஒரு வக்கீல் என்று கேள்விப்பட்டேன்... பதிவு திருட்டு பற்றியும், பதிவுகளுக்கு உரிமம் வாங்குவது பற்றியும் விலாவரியாக ஒரு பதிவிட முடியுமா..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

லீவ்-ல ஊருக்கு போயிட்டீங்களா?..

மறந்தும் மேட்டுப்பாளையம் போயிடாதீங்க.. ரோடே இல்லையாம்..

ராஜ நடராஜன் said...

//வரும்போதே மழையோட வந்துட்டீங்க. :-)//

கும்மி!அதுவும் அடைமழை.
சென்னைக்குள் இருந்தால் சந்திக்கலாமே!

ராஜ நடராஜன் said...

//விடுமுறை சிறப்பா அமைய வாழ்த்துக்கள்//

நசர்!ஆயிரம் குறைகள் இருந்தாலும் நம்மூர் என்ற பிணைப்பிருக்கிறதே அந்த பிணைப்பே நம்மையெல்லாம் இணைக்கிறது.

வாழ்த்துக்களுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//நீங்கள் ஒரு வக்கீல் என்று கேள்விப்பட்டேன்... பதிவு திருட்டு பற்றியும், பதிவுகளுக்கு உரிமம் வாங்குவது பற்றியும் விலாவரியாக ஒரு பதிவிட முடியுமா..//

பிரபாகரன்!நீங்கள் குறிப்பிடுவது திரவியம் நடராஜன்.இங்கே போடும் பின்னூட்டத்தை அவருக்கு போடுங்கள்.

அவர் உதவிகரமான பலவற்றையும் சொல்லியும் கடைக்கு யாருமே வருவதில்லைன்னு முன்பு புலம்பிகிட்டிருந்தார்:)

ராஜ நடராஜன் said...

//லீவ்-ல ஊருக்கு போயிட்டீங்களா?..

மறந்தும் மேட்டுப்பாளையம் போயிடாதீங்க.. ரோடே இல்லையாம்..//

பட்டு!மேட்டுப்பாளையம் ரோட்டுல பாதி வழியாவது போகவேண்டி வருமே.தகவலுக்கு நன்றி.

துளசி கோபால் said...

27 கிளம்பிடுவீங்களா?

கிறிஸ்மஸ் வாரம் நான் சென்னைக்கு வருகிறேன்.

முடிஞ்சால் சந்திக்கலாமேன்னுதான் கேட்டேன்.

vasu balaji said...

வாங்க வாங்க:)

ராம்ஜி_யாஹூ said...

அருமை, நன்றிகள்

உமர் | Umar said...
This comment has been removed by the author.
உமர் | Umar said...

அண்ணே, என்னுடைய மின்னஞ்சல் முகவரி கிடைத்ததா?

ராஜ நடராஜன் said...

//27 கிளம்பிடுவீங்களா?

கிறிஸ்மஸ் வாரம் நான் சென்னைக்கு வருகிறேன்.

முடிஞ்சால் சந்திக்கலாமேன்னுதான் கேட்டேன்.//

டீச்சர்!தாமதமாக மீண்டும் பின்னூட்டம் கண்டேன்.டிசம்பர் 20க்குப் பின் மீண்டும் சென்னையில் இருப்பேன்.முடிந்தால் சந்திக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//அருமை, நன்றிகள்//

ராம்ஜி!தாமதமாக பின்னூட்டம் கண்டேன்.கருத்துக்கு நன்றி.நீங்கள் சென்னையென்றால் ஹலோ சொல்கிறேன்:)

ராஜ நடராஜன் said...

//அண்ணே, என்னுடைய மின்னஞ்சல் முகவரி கிடைத்ததா?//

கும்மி!அடுத்த பதிவில் பதில் சொல்லியிருக்கிறேன்.