வால்பையன்!உணவக நிர்வாகம் எப்படி இருக்குது? ஆர்.எஸ்.புரத்துல இருப்பதால் பஸ்,ஆட்டோ புடிச்சு கோவை ரயில் நிலையம் பக்கம் ஒரு பொடி நடை போய் வந்து விடுங்க.அப்படியே ரயில் நிலையத்துக்கு எதிர்த்தாப்புல இருக்குற குறுக்கு சந்துல போய் இடதுபக்கம் திரும்பி மறுபடியும் வலது பக்கம் திரும்பினா சுப்பு மெஸ்.நான் கோவையை அளந்து திரிந்த காலத்தில் எதிர்த்தாப்புல கீதாபவன் சைவ உணவகம்,அதுக்குப் பக்கத்துல ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள்,கலைக்கல்லூரி மாணவர்கள் வழக்கமா டேரா போட்டு சிகரெட்,டீ மிஞ்சிப்போனா இட்லி,தோசை கிட்டும் சுப்பு மெஸ்,இளைஞர் காங்கிரஸ் அணி,சந்தின் அந்தக்கடைசிக்குப் போனா உட்லண்ட்ஸ் ஹோட்டல்,கல்லூரி மதிலில் உட்கார்ந்து கொண்டு டாவடிக்கும் கல்லூரி மாணவர்கள் என்பது தவிர பெருசா சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை.ஆனால் இன்று நிறைய கட்டிடங்கள்,தங்கிம் விடுதிகள்,ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் என அந்த சந்த நிரம்பி வழிகிறது.
பொட்டிக்கடையா இருந்த சுப்பு மெஸ் தனது இருப்பிடத்தின் நீள அகலங்களைப் பெருக்கி ஒரு பெரும் உணவக முதலாளியாக உயர வளர்ந்திருக்கிறது.சுப்பு மெஸ்ஸின் உயர்வுக்கு ஒரே தாரக மந்திரம் ருசி.இயற்கையாகவே கோவையின் சிறுவாணித் தண்ணீருக்கு ருசி அதிகம்.கூடவே சுற்றுவட்டாரத்தில் கிடைக்கும் காரம்,மணம் நிறைந்த இந்திய சமையலின் மூலப்பொருட்கள்,கோழி,ஆடு,குடல் வரை எதுவும் வாசம் மிகுந்த ருசியான உணவாக மாறிப்போகும்.முன்பு நஞ்சப்பா ரோட்டில் முனியாண்டி விலாஸ் பிரியாணிக் கடை ஒன்று இருந்தது.பிரியாணி மட்டுமே ஸ்பெஷல்.கீதாபவனில் சைவ உணவு,மேம்பாலம் அருகில் சில சைவ உணவுக்கடைகளில் தோசை,ரவா தோசை,இட்லி,பொங்கல் என்ற அன்றாட மெனுக்களும், இவைகளுக்குப் பின் தலையெடுத்த காந்திபுரம் கௌரி சங்கர்,ஆர்.எஸ்.புரம் அன்னாபூர்ணா என இத்தனை வருடங்களாகியும் இவற்றைக்குறிப்பிடக் காரணம் ருசி என்ற தாரக மந்திரம்.
Catering business basic rule is "Dont compromise on taste" plus service.இட அலங்காரம்,நிலம் இருப்பிடம் என்பவை வியாபாரத்துக்கு அழகும்,மக்கள் கூட்டம் கூட்டும் அதிக காரணிகள் மட்டுமே.
அப்புறம் ஒரு கிலோ எறா மீன் தோல் உரிச்சா உங்களுக்கு 600 கிராம் சதையாக மிஞ்சும்.வெறுமனே வதக்கி எடுத்தால் 400 கிராம் மட்டுமே கிட்டும்.முள் மீன் Fillet செய்தால் 550 கிராம் கிட்டும்.கோழியை எலும்போட 4 பகுதியாக,எட்டுப்பகுதியாக வெட்டலாம்.எலும்பில்லாத கறியாக இதுவும் 550 கிராம் தேறலாம்.
நீங்கள் ஐந்து நட்சத்திர ஓட்டல் அனுபவம் உள்ளவர் என்பதை சமீபத்தில் அறிந்தேன்.Red meat will go with Redwine and White meat will go with White wine தெரியும்தானே!
சேர்க்கும் சமையல் பொருட்களை நான்கு பேர்,10 பேர் கணக்கில் கூட்டி வகுத்தால் தேர்வது Food cost.லாபகரமான வியாபாரத்திற்கு 30 முதல் 35% க்கும் மேல் உணவுப்பொருட்களின் விலை போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.அப்படி போகும் பட்சத்தில் சமையல், பரிமாறுபவர்கள் உழைப்பிற்கான ஊதியம், மின்சாரம், தண்ணீர், இதர செலவுகள்,நிகர வருமானம் எத்தனை சதம் தேவை என சேர்த்து கணக்கிட்டு உணவுப் பொருளின் சதவீகத்தால் வகுத்தால் நீங்கள் விற்க வேண்டிய விலை அதிகரிக்கும்.வாடிக்கையாளரை திருப்திபடுத்த விலை குறைத்தால் உங்கள் நிகர லாபம் அடிபடும்.
வழக்கமாக உணவகங்களில் உணவு ருசியாக இருந்தால் பரிமாறுபவருக்கு டிப்ஸ் அளிப்பது வழக்கம்.இதனை சமையல் திறனாளிகளுடன் பங்கிடுவது பின்கட்டுக்காரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதோடு நன்றாக சமைக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்தும்.
கொட்டிக்கொள்ளப்போகும் வாடிக்கையாளர்கள் அடுத்த முறை உணவு ருசியாக இருந்தால் பரிமாறுபவருக்கு டிப்ஸ் அளிப்பதோடு சமையல்காரரையும் கூப்பிட்டு டிப்ஸ் வழங்குகிறீர்களோ இல்லையோ சமையல் பிரமாதம் என்ற சொல்லை புன்முறுவலாக்கி விட்டு வாருங்கள்.
வால் பையன் வளர வாழ்த்துக்களுடன் .....