கிரிக்கெட் வேறு அரசியல் வேறு என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும் என்று பி.ஜே.பியின் சுஷ்மா ஸ்வராஜ் சொல்கிறார்.காங்கிரசோ அரசியலுக்குள் கிரிக்கெட்டை நுழைப்பதன் மூலமே நல்லுணர்வுக்கு தீர்வு காண இயலும் என்கின்ற கோட்பாட்டைக் கடைப்பிடிக்கிறதென்பது பாகிஸ்தானிய ஜிலானியின் வருகையும்,இலங்கையின் ராஜபக்சேவுக்கான உலக கிரிக்கெட் இறுதி ஆட்ட அழைப்பும் தெரிவிக்கும் செய்தியாகும்.
எனவே இந்தியா இலங்கை,பாகிஸ்தான் நாடுகளின் நல்லுறவை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டையே வெளியுறவுக் கொள்கையாக வைத்திருக்கிறது.இதில் தமிழக தேர்தலும்,காங்கிரஸின் அரசியல் களமும் உள்நாடு சார்ந்த ஒன்றாகவே இந்தியா கருதுகிறதென்பதும் தெளிவு.பொருளாதார உதவிகளை இலங்கைக்கு தருவதன் மூலமாகவே இலங்கையை தனது கட்டுக்குள் வைத்துக் கொள்ள இயலும் என இந்தியா கருதுகிறது.இலங்கையோ இந்தியாவும் நண்பன்,ரஷ்யாவும் நண்பன்,சீனாவும் நண்பன், பாகிஸ்தானும் நண்பன்,லிபியாவின் கடாபியும் நண்பன் என்ற வளையத்தைப் போட்டுக்கொண்டு தனது ஆட்டத்தை சிறப்பாக ஆடி வருகிறது.
இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியால் ஈழப் படுகொலைகளும்,மனித உரிமை மீறல்களும் காலப்போக்கில் மறக்கப்பட்டு விடும் என்கின்ற நிலையிலேயே இது வரையிலான அனைத்து தரப்பு காய் நகர்த்தலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
அடிபட்டவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும் என்கின்ற நிலைப்பாட்டில் கடந்த திங்கட்கிழமை மார்ச் 28ம் தேதி குளோபல் தமிழ் அமைப்பின் (Global Tamil Forum) மூலமாக அமெரிக்காவின் வாஷிங்டனில் தெற்காசிய நாடுகளுக்குப் பொறுப்பான ராபர்ட் பிளேக் அலுவலகத்தில் பேராயர் இமானுவேல் (Rev. Father S.J.Emmanuel) தலைமையில் நிகழ்ந்த சந்திப்பு இலங்கை குறித்த விசயத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைகிறது.
ஏற்கனவே அமெரிக்காவின் லிபியா குறித்த நிலைப்பாட்டில் எழுந்து வரும் விமர்சனங்களும்,ஈழ மக்களின் உரிமைகள் பின் தள்ளப்பட்ட நிலை குறித்து மனித உரிமை கழகங்கள் முன் வைக்கும் கேள்விகளும் கூட அமெரிக்காவின் தற்போதய புதிய சந்திப்புக்கு காரணமா அல்லது ஈழத்தமிழர்கள் மூலமாக இலங்கை அரசு மீதான காய் நகர்த்தலாக அமெரிக்கா இதனை நோக்குகிறதா எனத் தெரியவில்லை.அதிகார பூர்வமாக எடுக்கப்பட்ட புகைப்படம் புதிய செய்தியொன்றையே நமக்குத் தருகின்றதென்று தற்போதைக்கு நம்புவோம்.
Rev. Father S.J.Emmanuel (Germany) included President the USTPAC, Dr. Elias Jeyarajah, Mrs. Grace Williams (USA) and Mr.Suren Surendiran (UK) along with Mr.Robert Blakes, US Assistant Secretary
1.போரில் துயரப்பட்ட மக்களுக்கான உதவியும், வட,கிழக்கு இலங்கையில் வசிக்கும் மக்களின் குரலும் அதனோடு இணைந்த தமிழ் தேசிய அமைப்பின் வலுவான அரசியலும்
2.புலம் பெயர்ந்த தமிழர்களின் ஒட்டு மொத்த ஒருமித்த குரலும்3.உலகம் தழுவிய தமிழர்களின் நாடுகளுக்கு உட்பட்ட ஆதரவும்
4.மனித உரிமை அமைப்புக்கள்,மற்றும் மேற்கத்திய நாடுகளின் தமிழர்கள் சார்ந்த பார்வையும்
5.இவற்றையெல்லாம் ஒன்று படுத்தவும் முன் நகர்த்தவும் தேவையான பொருளாதார வசதியும்
மேலும் இலங்கை அரசின் போருக்கு அப்பாலான மனித உரிமை பாதுகாப்பு உலகத்தரம் வாய்ந்ததாக இல்லையென்று ராபர்ட் பிளேக் கூறியதாகவும் இது குறித்து அடுத்த வாரம் ராஜபக்சேவை சந்திக்கும் போது வலியுறுத்துவதாகவும் தெரிகிறது.
வெளிநாட்டுக் கொள்கைகளில்,அரசியல் களத்தில் சில நிகழ்வுகள் காலம் கருதி செய்யப்படும் passing cloud என்று சொல்லப்படும் முகப்பூச்சாக அமைந்து விடுவதும் உண்டு.அதே போல் ஒரு நிகழ்வின் தொடராக அடுத்த நிகழ்வு என வரிசையாக இணைந்து கொண்டு பெரும் மாற்றங்களை கொண்டு வந்து விடுவதும் உண்டு.இதில் ராபர்ட் பிளேக்கின் உடனான தமிழர்கள் சந்திப்பு எந்த வகையில் சேரும் என்பதை வரும் காலம் மட்டுமே நிரூபிக்கும்.
Source: http://tamilweek.com/news-features/archives/2488