Followers

Thursday, March 3, 2011

பாரதிராஜா,இளையராஜா,கங்கை அமரன்,வைரமுத்து,மலேசியா வாசுதேவன்

நேற்று முதல் மரியாதை திரைப்படத்தில் பூங்காற்று திரும்புமா என்று இளையராஜாவின் மனதை அள்ளும் இசையில் மலேசியா வாசுதேவன் பாடுவதைக் கேட்டதும் தமிழ் திரையுலகம் மலேசியா வாசுதேவனை இழந்தது மட்டுமல்லாமல் நட்பு என்ற சொல்லுக்கு இலக்கணமாக இருக்கவேண்டிய தலைப்புக் கட்டுக்காரர்களின் நட்பும் திசை மாறிப்போய் விட்டது என்ற சோகம் என்னை அப்பிக்கொண்டது.தனி மனிதர்களாக இவர்களுக்கு நட்பின்  ஆழம் குறைந்த இழப்பும் இசையில் தமிழகத்துக்கு பேரிழப்பும் என்ற உணர்வு.

இளையராஜா இசையை பலவிதமாக யாரும் பரிட்சித்துப்பார்க்காத விதத்தில் தமிழுக்கு தந்திருந்தாலும் எம். எஸ். விஸ்வநாதன், கண்ணதாசன், டி,  எம். சௌந்தர்ராஜனின் கூட்டுக்கலவையில் தொனிக்கும் இதம் மிக அதிகம்.வைரமுத்துவின் குரலில் ஒலிக்கும் தமிழின் இசை அவரது திரைப்படப் பாடல்களில் இல்லை.கூடவே பரிசுக்கு பாடும் புலவன் போல்  வைரமுத்து முதுகொடிந்து போனதில் இன்னும் அதிக சோகம்.பாரதிராஜாவின் கேமிரா பார்க்கும் கோணமும்,இளையராஜாவின் சப்த நாதங்களும் ஒன்றிணைந்தாலும் அங்கே வைரமுத்துவின் வைர வரிகள் காணாமல் போய் விடுகின்றது.கண் மூடினால் கண்ணதாசனின் வரிகள் சொல்லும் வார்த்தையின் இயல்புக்கு இதுவரையிலும் எந்த தமிழ் திரைக்கவிஞனும் இணையில்லை.

பணம்,புகழ் சேர்ந்தவுடன் பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து, கங்கை அமரன், மலேசியா வாசுதேவன் கூட்டத்தை ஈகோ என்ற குணம் பல திசைகளிலும் அலைக்கழித்து விட்டிருக்கலாம்.இவர்களின் கூட்டு கலைந்து போனதின் ரகசியம் இவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் பிரிவுக்குப் பின்னும் கூட எம்.எஸ்,விஸ்வநாதனின் இசை அர்ப்பணிப்பு போலவே இளையராஜாவின் தனி ஆவர்த்தனத்தையும் உணர்கிறேன்.

5 comments:

Chitra said...

பணம்,புகழ் சேர்ந்தவுடன் பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து, கங்கை அமரன், மலேசியா வாசுதேவன் கூட்டத்தை ஈகோ என்ற குணம் பல திசைகளிலும் அலைக்கழித்து விட்டிருக்கலாம்

... :-(

பூங்குழலி said...

பாரதிராஜாவின் தாயார் இறந்த போது ,வைரமுத்து ,இளைய +பாரதிராஜா மூவரும் ஒரு வரிசையாக அமர்ந்திருக்கும் படம் அப்போது பத்திரிகையில் வெளியாகியது ...இதில் சண்டையிட்ட பாரதிராஜாவும் இளையராஜாவும் சேர்ந்து விட்டார்கள் ,வைரமுத்து ஏன் இன்னமும் விலகியே இருக்கிறார் ?

ராஜ நடராஜன் said...

//பணம்,புகழ் சேர்ந்தவுடன் பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து, கங்கை அமரன், மலேசியா வாசுதேவன் கூட்டத்தை ஈகோ என்ற குணம் பல திசைகளிலும் அலைக்கழித்து விட்டிருக்கலாம்

... :-(//

சித்ரா மேடம்!இங்கே அனுபவ பூர்வமாக அரேபியர்களிடம் காண்பது கோபமோ,சண்டையோ இட்டுக்கொண்டாலும் கூட மீண்டும் கட்டுத்தழுவி நட்பு பாராட்ட துவங்கி விடுகிறார்கள்.இன்னும் அகன்ற பார்வையில் சொன்னால் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் எத்தனை வருட சண்டைகள்?இன்னும் ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கையின்மை.வளைகுடா யுத்தத்தில் ஈராக் குவைத் மீது படையெடுத்து ஆழ்ந்த காயத்தை ஏற்படுத்தியும் கூட சதாமிற்கு பின் இரு நாடுகளும் நட்புணர்வு கொள்ள துவங்கி விட்டார்கள்.உள்ளுக்குள் சில முரண்பாடுகள் இருந்தாலும் உலகளாவிய அரசியலில் ஒன்றிணைந்து விட்டார்கள்.

ந்ம்மிடம் கதை சொல்லிகள் நீதிக்கதைகள் சொல்வது மற்றவர்களுக்கு மட்டுமே எனபது வருத்தமே அளிக்கிறது.

ராஜ நடராஜன் said...

//பாரதிராஜாவின் தாயார் இறந்த போது ,வைரமுத்து ,இளைய +பாரதிராஜா மூவரும் ஒரு வரிசையாக அமர்ந்திருக்கும் படம் அப்போது பத்திரிகையில் வெளியாகியது ...இதில் சண்டையிட்ட பாரதிராஜாவும் இளையராஜாவும் சேர்ந்து விட்டார்கள் ,வைரமுத்து ஏன் இன்னமும் விலகியே இருக்கிறார் ?//

பூங்குழலி!உங்கள் வருகைக்கு நன்றி.
தனிப்பட்ட காரணங்களை வைரமுத்தின் மனசாட்சிக்கே தெரிந்த விசயம்.ஆனால் அரசியல்,மனம் சார்ந்த சூழல்கள் இவர்களின் ஈகோவுக்கும் ஒரு காரணமா எனத் தெரியவில்லை.

பாரதிராஜா கோபப்படுவபவராகவும் பின் சமாதானமாக தோளில் கைபோட்டுக்கொள்பவராகவும் பொதுமேடைகளில் காட்சியளிக்கிறார்.
இளையராஜா ஆன்மீகம் சார்ந்து ஒதுங்கிக்கொள்ளும் மனப்பான்மையாக நகர்கிறார்.வைரமுத்து புகழ்வதற்கு வார்த்தைகள் எங்கே கிடைக்கும் என்று தேடிக்கொண்டிருக்கிறார்.இவர்களின் இணைப்புக்கான ஒற்றைத்தளம் என்றால் திரைப்படம் மட்டுமே.நட்பு எனும் கிழக்கே போகும் ரயிலின் பின்பக்க பெட்டியை முறைத்துக்கொண்டு இத்தனை வருடங்கள் கழித்தும் இவர்கள் வாழ்க்கை நடத்துவது சோகமானது.

ராஜ நடராஜன் said...

சிதரா மேடம்!ஈகோ என்றவுடன் எனது சொந்த சோகக்கதையை குறிப்பிட மறந்து விட்டேன்.என் அண்ணன் வயதான அம்மாவிடம் ஒரு சல்லிக்காசுக்கு கூட விலையில்லாத வெற்று ஈகோ பார்த்துக்கொண்டு பேசுவதில்லை.தமிழக பயணத்தில் இருவரையும் ஒருவருக்கு ஒருவரை சந்திக்க வைத்து விட்டு வந்தேன்.அண்ணன் இன்னும் திருந்துவதாக இல்லை:(