Followers

Friday, March 4, 2011

ராஜபக்சே,கடாபி மீதான போர்க்குற்றங்கள்

முந்தைய பதிவுகளில் ஒன்றில் லிபியாவுக்கு குரல் கொடுத்து விட்டு மழையுமில்லாமல் வெயிலுமில்லாமல் இரவில் குடை பிடிக்கும் கடாபி இன்னும் வில்ல்ங்கம் செய்வான் என்ற எண்ணத்தில் லிபியாவின் மக்களுக்கு அனுதாபம் சொல்லி முடித்து விட்டு இதுவரை மக்கள் குரலுக்கு டிமிக்கி கொடுக்கும் கடாபி மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரசியல்,குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள்,ஐரோப்பிய நாடுகளின் நிலையைக் கவனித்தால் லிபியாவில் கடாபி மீதான சுருக்கு கயிறு இறுகும் காலம் வெகு தூரத்தில் இல்லையென்றே தெரிகிறது.சுய தேவைகளாய் பெட்ரோலிய எரிபொருளின் அவசியம் கொண்டு கடாபி குற்றம் சாட்டும் அல்கொய்தாவே கலகக்காரர்கள் என்பதனையும் புறம் தள்ளி விட்டு போர்க்குற்ற விசாரணக்கு தீவிரம் காட்டுவது புரிகிறது.மனித உரிமைக் குழு சார்ந்த நிகழ்ச்சி நிரலில் கூட ஈழ அவலங்கள் ஒலிக்காமலே போனது வருத்தம்.

அதற்கு முத்தாய்ப்பாய் போர்க்குற்றவாளி பிரகடனத்துக்காக புகைப்படங்கள்,யூட்யூப்,அமெச்சூர் காமிரா,குரல் ஒலிப்பதிவென்று கிடைப்பதெல்லாம் ஆவணப்படுத்தும் வேலை நடக்கின்றது.சி.என்.என்.பி.பி.சி, முக்கியமாக அல்ஜசிரா தொலைக்காட்சி செய்திகளின் படி நோக்கினாலும் இதுவரையில் இணையம் மூலமாய் வெளிவந்த ஆவணங்களாய் ஈழப்படுகொலையின் அவலங்களுடன் ஒப்பிடும் போது ராஜபக்சே கடாபிக்கும் முன்னால் தூக்கில் தொங்க வேண்டியவன்,ராஜபக்சேவை காக்கும் வேலி என்ன?தற்போதைக்கு கடாபியின் பதாகைகளுடன் ராஜபக்சேவின் படத்தையும் இணைத்து லிபியாவுக்கான குரலாக குரல் கொடுப்பது யாரிவன் கடாபியின் அண்ணனா?தம்பியா என்ற உலக பொது உணர்வு பலனையாவது  த்ரும்.

ஈழத்திற்கான குரலாய்  சர்வதேச ரீதியில் லிபியா போன்ற சந்தர்ப்பங்களில் அவ்வப்போது ஒலித்துக்கொண்டிருந்தால் மட்டுமே இன்றோ நாளையோ இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இதற்கான விடியலைக்காண இயலும்.அரசு என்ற கட்டமைப்பில் இலங்கை இயங்குவதன் காரணம் கொண்டே இலங்கை அரசுக்கு உலகரீதியாக சாதிப்பது எளிதாக அமைகிறது.இராணுவ ரீதியாக பிரபாகரன் கட்டமைப்பில் சில விகிதாச்சாரம் கூட அரசியல் ரீதியாக தற்போது முன் நகர்த்தி செல்ல இயலவில்லை என்பதே உண்மை. ஒன்றிரண்டாக அமிதாப்பச்சனை உணரவைத்ததும்,ராஜபக்சேவை லண்டனிலிருந்து துரத்தியது மட்டுமே இப்போதான சாத்தியங்களானவை.

இலக்கிய முகமூடிகள் அணிந்து கொண்டு புலியெதிர்ப்பு செய்தவர்களின் முக விகாரங்கள் மது,பெண்ணுடல் என்று போதைக்குள் பல்லிளிக்கின்றன. இப்படியான இங்கொன்றும் அங்கொன்றுமாய் இதிகாசமாய்த் தொடரும் எட்டப்பன்களை இனி மேல் துணிவாக பொதுக்கருத்துக்களில் புறம் தள்ளலாம்.பல சுழிவுகளில் மெல்ல நகரும் தமிழகம் ஈழத்திற்கு வரமா? சாபமா?

6 comments:

Thekkikattan|தெகா said...

உண்மைதான் ராஜ நட, யாராவது பக்கம் பக்கமாக (side by side) இது போன்று கடாபியின் போற்குற்றங்களுக்கான காணொளியையும், ராசபக்கியின் போற்குற்ற காணொளிகளையும் ஒன்றாக இணைத்து தேடு பொறியில் யாரைத் தேடினாலும் ஒன்றாக கிடைக்குமாறு செய்து வலையேற்றி வைப்பது அவசியம்.

காலமறிந்து செய்து வருவது நீங்கள் கூறியபடி பலன்களை மெல்ல தருவித்துத் தரலாம்...

ராஜ நடராஜன் said...

//உண்மைதான் ராஜ நட, யாராவது பக்கம் பக்கமாக (side by side) இது போன்று கடாபியின் போற்குற்றங்களுக்கான காணொளியையும், ராசபக்கியின் போற்குற்ற காணொளிகளையும் ஒன்றாக இணைத்து தேடு பொறியில் யாரைத் தேடினாலும் ஒன்றாக கிடைக்குமாறு செய்து வலையேற்றி வைப்பது அவசியம்.

காலமறிந்து செய்து வருவது நீங்கள் கூறியபடி பலன்களை மெல்ல தருவித்துத் தரலாம்...//

தெகா!அமைதியாக பதிவுலகை மேற்பார்வை செய்து கொண்டிருக்கிறீர்கள் போல தெரியுதே:)

இணையம்,தொலைக்காட்சிகள் கொண்டு வந்த ஆவணங்கள் படி ராஜபக்சேவின் குற்றங்களே இன்னும் அதிகம் உறுதியானவை.இன்றைக்கு கடாபிக்கு சர்வ தேச நீதி மன்றத்தில் வழக்கு துவங்கியாகி விட்டது.ராஜபக்சேவையும் சர்வ நீதி மன்றத்தில் கொண்டு வருவதற்கு முயற்சிகள் நிகழ்ந்தன்.இதன் பின்னடைவு பின்புல அரசியல் என்ன என்பதற்கு பில்கிளிண்டனும்,பெரு(ஷ்)சும் ஒன்றாய் படித்தவர்கள் என்ற காரணம் தொட்டு அரசாங்க ரீதியாக இலங்கை தடுப்பு சுவராய் சதுரங்க காய்களை நன்றாக நகர்த்துகிறது.

ஹேமா said...

இண்ணைக்குச் செய்தியின்படி இரண்டுபேரும் தொலைபேசில பேசிக்கிட்டாங்களாமே.இவரு அவருக்குத் தஞ்சம் குடுக்கபோறாராம் !

ராஜ நடராஜன் said...

//இண்ணைக்குச் செய்தியின்படி இரண்டுபேரும் தொலைபேசில பேசிக்கிட்டாங்களாமே.இவரு அவருக்குத் தஞ்சம் குடுக்கபோறாராம் !//

ஹேமா!எப்படியிருக்கீங்க?

இந்தப்பயலுக பேசிக்கிறதும்,கூடிக்குலாவுவதும் நல்லதுக்குத்தான்.அப்பத்தான் அனைத்து நாடுகளும் நாம் சொல்வதற்கும் ஆமாம் போடுங்க.

Thekkikattan|தெகா said...

இந்தப்பயலுக பேசிக்கிறதும்,கூடிக்குலாவுவதும் நல்லதுக்குத்தான்.//

:))) எங்கப்பன் குதிருக்குள் இல்லை...!! இந்தியாவையும் துணைக்கு அழைத்தாரமா கடாபி, சூப்பர்ப் :D

ராஜ நடராஜன் said...

//இந்தப்பயலுக பேசிக்கிறதும்,கூடிக்குலாவுவதும் நல்லதுக்குத்தான்.//

:))) எங்கப்பன் குதிருக்குள் இல்லை...!! இந்தியாவையும் துணைக்கு அழைத்தாரமா கடாபி, சூப்பர்ப் :D//

கடாபி,ராஜபக்சே சீட்டாட்டத்துக்கு இன்னொரு கை பத்தலையாக்கும்:)
டெல்லியிலே அவுகளே கைல தலைய வச்சிகிட்டு உட்கார்ந்துகிட்டிருக்காங்க.இதுல கடாபிய கவனிக்க நேரமேது?