Followers

Thursday, March 17, 2011

மாற்று அரசியலுக்கான தேவை

இரு அணி நேரத்து உற்சாகம் கடந்தும் மாற்று அரசியலுக்கான சாத்தியங்களாக மக்கள் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இரு கழக ஆட்சியையே எதிர்பார்க்கும் நிலை பெரும்பாலோரிடம் காணப்படுகின்றது.யதார்த்தமும் அதுவே.

பதிவுலகம் இது வரை கருணாநிதி முதல்வராக இருப்பதாலும்,அவரது செயல்பாடுகள் திருப்தியளிக்காத தன்மையாலும் அவரை முன்னிருத்தியே விமர்சன பதிவுகள் அதிகம் வந்தன.தற்போதைய தேவையாக தி.மு.க கழகத்திற்கு ஓய்வு தேவையென்ற காரணம் கொண்டும்,காங்கிரஸ்க்கு தமிழகத்தில் சாவு மணி அடிக்க வேண்டுமென்ற காரணம் கொண்டே அ.தி.மு.கவிற்கான மாற்று அரசியலை பெரும்பாலோர் ஜெயலலிதாவின் பொருந்தா கூட்டணி என்று தெரிந்தும் சமரசம் செய்து கொண்டு கூட்டணிக்கு வந்தார்கள்.

ஆனால் ஜெயலலிதாவின் முட்டாள்தனமான அவசர புத்தியால் தி.மு.க love ball சொல்லும் நிலைக்கு ஜெயலலிதா வை.கோ என்ற துருப்பு சீட்டு மூலமும் தன்னிச்சையான தொகுதிகள் அறிவிப்பால் ’நீ இன்னும் சிறுபிள்ளையே’ என்று உணர்த்தி விட்டார்.சாணக்கி என்ற புதுபதம் சேர்த்துக்கொள்பவர்களும் தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்யும் நேரமிது.தற்போதைய நிலையில் அரசியல் ஆட்டத்தைக் களைத்துப் போட்டே ஆட வேண்டிய நிலைக்கு தமிழகம் வந்துள்ளது.தமக்கென ஓட்டு வங்கியை இரு கழகங்களும் வைத்திருந்தாலும் புதிய அணிகள் ஜெயலலிதாவின் கூப்பிடலுக்கே காத்திருக்கும் நிலைக்கு வெட்கபடாதவர்கள் யார் முன் நின்று புதிய அணிகளை ஒன்று சேர்ப்பது என்பதில் தமது ஈகோ களைக்கும் தருணத்தில் மட்டுமே மாற்றங்களுக்கான வாய்ப்புக்கள் இருக்கிறது.இல்லையென்றால் இரு கழகங்களின் ஓட்டுப் பிரிக்கும் தன்மையையே உருவாக்கும்.

சிங்கார சென்னையாக மாற்றுவோம் கோசக்காரர்கள் கோட்டை விட்டு பிற இடங்களை தேர்ந்தெடுப்பதிலிருந்தே சுய பயம் தெளிவாகத் தெரிகிறது.

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டார்.

கலைஞர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.  மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிடுகிறார்.  

பேராசிரியர் க.அன்பழகன் வில்லிவாக்கத்தில் போட்டியிடுகிறார்.

காட்பாடியில் துரைமுருகன் போட்டியிடுகிறார்.

தற்போதைய ஜெயலலிதாவின் எடுத்தேன் கவிழ்த்தேன் பித்துக்குளித்தனம் தி.மு.க விற்கு கொஞ்சம் டானிக்கோ,டாஸ்மாக் குடிச்ச மாதிரியோ,இருக்குற மகராசனுங்க ரெமி மார்ட்டின்! குடிச்ச மாதிரியோ இருந்தாலும் ஸ்பெக்ட்ரம் பூதமும் அதன் காரணமாய் பினாமி தொழில் ஆபத்து என்ற சாதிக் பாட்ஷாவின் உயிரிழப்பு பாடம் புகட்டி நினைவுறுத்துவதாலும்,அரசியல் சார்ந்தே இந்தியாவில் ஈழத்துயரத்தை அணுகவேண்டியுள்ளதாலும்,மக்களாட்சி கோட்பாட்டில் மாற்றங்கள் அவசியமென்பதாலும்

காலம் இன்னும் கடந்து விடவில்லை.கடைசியாக ஓட்டத்தை துவங்கி முதலில் வெற்றிக்கோப்பையை வென்றவர்கள் நிறைய பேர்.அரசியலிலும் அதற்கான சூழல்கள் இருக்கின்றன.இரு கழகங்களுக்கும் மாற்றாய் புதிய மக்கள் குரல்கள் ஒலிக்கும் காலம் வரையாவது இருப்பதில் ஒன்றை புதுப்பரிட்சை நிகழ்த்துவதில் தவறேயில்லை விளைவுகள் எதுவாயினும்.ஜெயலலிதாவின் ஒற்றை கணிப்பால் தமிழக அரசியல் மாற்றம் என்பது கேள்விக்குரியதும் வருத்தம் தரக்கூடியதும் கூட.கூடி தேர் இழுத்தால் மாற்றங்களுக்கான சாத்தியங்களையும் நம் மக்கள் நிகழ்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒழியட்டும் ஆணவ அரசியலும்,குடும்ப சுயநலமும் முக்கியமாக இனம் கருவறுத்த டெல்லி தர்பாரும்....

அவ்வப்போது கிளாஸ்ல உட்கார்ந்து கேட்ட அனுபவத்தில் படிக்காமலே பரிட்சை எழுதியும் சில சமயம் பாஸாகி விடுவதில்லையா:) அப்படியாகிப்போச்சு தற்போதைய தேர்தல் நிலவரங்கள்!

ஆமா! இதென்ன புது தொழில் நுணுக்கம்.காலை தினசரிக்குள் பணம் பட்டுவாடா!திருந்துங்கப்பா!.நாளைக்கே சுனாமி வந்து அடிச்சுடுச்சுப் போனா என்ன செய்வீங்க?கடல் ஜப்பான்காரனுக்கு மட்டும் சொந்தமில்லை.இருப்பதில் நேர்மையாக,சுகமாக வாழ்க்கையை அனுபவியுங்கள் அரசு,அரசியல் தோழர்களே!

13 comments:

மைதீன் said...

தி.மு.க கூட்டணி தொண்டர்களுக்கு தன கட்சி தலைவர்கள் கொடுக்காத உற்சாகத்தை ஜெயலலிதா கொடுத்துள்ளார்.

Anonymous said...

நல்லா சொல்லி இருக்கீங்க

Anonymous said...

நாளைதான் ரிசல்ட் தெரியும்

ஓலை said...

ஜெயலலிதாவின் பட்டியல் வெளியீடு தி.மு.கா பட்டியல் வெளிவருவதற்கான தந்திரம்மாக இருக்குமா? விஜயகாந்த் உள்பட எல்லோரும் வெளியேறினால் கண்டிப்பா தொங்கு சபை தானிருக்கும். விஜயகாந்தை மட்டும் இழுக்கப் பார்ப்பாங்க என்று நினைக்கிறேன். தற்கொலை மற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழல் எல்லாம் கண்டிப்பா DMK வர சான்ஸ் இல்லை. இது வரை அரசியல் வாதிகள் கணக்குப்படி மக்கள் வாக்களித்தது இல்லை. தொங்கு சபைக் காலமா?

vasu balaji said...

ஙே!

ராஜ நடராஜன் said...

//தி.மு.க கூட்டணி தொண்டர்களுக்கு தன கட்சி தலைவர்கள் கொடுக்காத உற்சாகத்தை ஜெயலலிதா கொடுத்துள்ளார்.//

வாங்க மைதீன்! தேர்தல் கள நிலை நீங்கள் சொல்கிற மாதிரிதான் மாறிப்போச்சு.தி.மு.க விற்கு ஓரளவு ஆறுதலான முடிவாகத்தான் ஜெயலலிதா தி.மு.க ஆறுதலை கொடுத்திருக்கிறார்.

ராஜ நடராஜன் said...

//நாளைதான் ரிசல்ட் தெரியும்//

வாங்க அரசியலை அமர்க்களப்படுத்தும் சதீஷ் அவர்க்ளே:)

என்னத்த ரிசல்ட் தெரிஞ்சு என்னத்த கூட்டணி செஞ்சு!ஜப்பானில் 3வது கொதிகலம் உடைஞ்ச மாதிரிதான் தற்போதைய நிலைமை.

திரும்பவும் கூட்டணி அமைஞ்சாலும் ஒட்டாத கூட்டணி மாதிரியும்,தனித்து நின்றாலும் ஓட்டுக்கள் சிதறுகிற நிலைக்கு ஜெயலலிதா திட்டமிடலுக்கு நீங்க ஏதாவது ஆலோசனைகள் சொன்னீங்களா?

ராஜ நடராஜன் said...

//ஜெயலலிதாவின் பட்டியல் வெளியீடு தி.மு.கா பட்டியல் வெளிவருவதற்கான தந்திரம்மாக இருக்குமா? விஜயகாந்த் உள்பட எல்லோரும் வெளியேறினால் கண்டிப்பா தொங்கு சபை தானிருக்கும். விஜயகாந்தை மட்டும் இழுக்கப் பார்ப்பாங்க என்று நினைக்கிறேன். தற்கொலை மற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழல் எல்லாம் கண்டிப்பா DMK வர சான்ஸ் இல்லை. இது வரை அரசியல் வாதிகள் கணக்குப்படி மக்கள் வாக்களித்தது இல்லை. தொங்கு சபைக் காலமா?//

தி.மு.க பட்டியல் வெளியிட்ட பின்னா என்றால் வை.கோ வை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?என்.ராம் மூலமாக ராஜபக்சே வத்தி வச்சிருந்தாலும் கூட ஆச்சரியப்படுத்தவதற்கில்லை.

தொங்கு சபை என்ற மாற்றம் கூட தமிழகத்து மாற்று அரசியலுக்கு நல்லதுதான்.இல்லைன்னா திருடும் கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும்.

ராஜ நடராஜன் said...

//ஙே!//

பாலாண்ணா!உங்களுக்கு மட்டும் நச்ன்னு எப்படித்தான் ரிதமா ஒற்றைச் சொல்லில் கூட ஆயிரம் அர்த்தம் சொல்லும் மொழி கிடைக்குதோ:)

ஙே!ன்னு முழிக்கிறது நீஙக் மட்டுமில்லை.மொத்த தமிழகமும்:)

ஓலை said...

"தி.மு.க பட்டியல் வெளியிட்ட பின்னா என்றால் வை.கோ வை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?"

- விஜயகாந்த் சேர்ந்ததினால் ஏற்ப்பட்ட ஆணவம், ச்பெக்ட்ரும் ஊழல் நிரூபிக்கப்பட்டுவிடும் என்ற யூகம், எல்லாம் சேர்ந்து 5 வருடம் கூட இருந்தவரை கழட்டிவிட வந்த தைரியமாக இருக்கலாம். சிவப்பு சட்டைக்காரர்கள் தொகுதியை எடுத்துகிட்டா அவங்க தனித்துப் போய்விடுவார்கள், அந்த 22 தொகுதிகளை வை.கோவிற்கு கொடுக்கலாம் என்று திரைமறைவு வேலை நடந்திருக்கும்.


--ராஜபக்சே வத்தி வச்சிருந்தாலும்

வீண் கற்பனையாகத் தோன்றுகிறது.

சக்தி கல்வி மையம் said...

அரசியல் விளையாட்டு.. ம்...ம்...

ராஜ நடராஜன் said...

//விஜயகாந்த் சேர்ந்ததினால் ஏற்ப்பட்ட ஆணவம், ச்பெக்ட்ரும் ஊழல் நிரூபிக்கப்பட்டுவிடும் என்ற யூகம், எல்லாம் சேர்ந்து 5 வருடம் கூட இருந்தவரை கழட்டிவிட வந்த தைரியமாக இருக்கலாம். சிவப்பு சட்டைக்காரர்கள் தொகுதியை எடுத்துகிட்டா அவங்க தனித்துப் போய்விடுவார்கள், அந்த 22 தொகுதிகளை வை.கோவிற்கு கொடுக்கலாம் என்று திரைமறைவு வேலை நடந்திருக்கும்.


--ராஜபக்சே வத்தி வச்சிருந்தாலும்

வீண் கற்பனையாகத் தோன்றுகிறது.//

ஓலை!திரைமறைவு வேலைகள் என்பதனாலேயே அரசியலில் எதையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.நேர்மையான,வெளிப்படையான அரசியல் இல்லை நம்மிடம்:(

ராஜ நடராஜன் said...

//அரசியல் விளையாட்டு.. ம்...ம்...//

கருன்!இவங்க அரசியல் விளையாட்டுக்கு மக்கள்தான் ஊறுகாயா?

நேற்று ஜெ கொடும்பாவி எரிப்புக்கு வை.கோ இன்று தொண்டர்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறார்.மறுபடியும் ஒட்டிக்கும் போலதான் தெரியுது.