Followers

Thursday, March 31, 2011

துபாய் பதிவர்களும்,ஸ்பைடர் மேன் அலன் ராபர்ட்டும்

மொக்கை போட்டு ரொம்ப நாளாச்சு.பழக்கம் விட்டுப் போகக்கூடாதுன்னும் கூடவே செய்தியாகவும் மீண்டும் ஒரு முயற்சி.முன்னாடியெல்லாம் பார்த்தா ஓரமா நிற்கிற என்னையெல்லாம் அடிச்சு புடிச்சு இடிச்சு தள்ளி விட்டு பொது அறிவு வளர்க்கிறேன், கார்ட்டூன் போடறேன்,சமைக்கிறேன்,ஜோக் சொல்றேனாக்கும் என்று துபாய் விவேகானந்தா குறுக்கு தெருவுலேயிருந்து ஏகப்பட்ட பதிவர்கள்.பின்னூட்டத்துல முதல் வடைங்கிறதுமில்லாம வீட்டுலேயோ,சேட்டன் கடையிலேயோ வடைய பொட்டலம் கட்டிகிட்டு பார்க்குல உட்கார்ந்துகிட்டு போஸ் கொடுத்தவங்களையெல்லாம் இப்ப கண்ணுல பார்க்கவே முடியல.இன்னாமா ஆச்சு?அமெரிக்க பொருளாதார சரிவும்,அதனால் துபாய் ரியல் எஸ்டேட் சரிவும் துபாய்க்காரங்க பம்மிகிட்டதன் காரணமா என்றும் தெரியவில்லை.ஒருவேளை தமிழக அரசியல் காய்ச்சலில் நான் கவனிக்காம கூடப் போயிருக்கலாம்.

இதையெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா துபாயில் நிகழும் சில முக்கிய செய்திகளையும் கூட யாரும் சொல்வதாகக் காணோம்.அதனால் பதிவுக்கு தலைப்பு இப்படி வச்சு துபாய் பதிவர்கள் சார்பாக துபாய்க்கு வந்த பிரெஞ்சுக்காரர் ஸ்பைடர்மேன் அலன் ராபர்ட்டின்(Alain Robert) சாகச கதையிது.
போன வாரம் மண்புழுதிய நினைச்சு எல்லோரும் புலம்பிகிட்டிருந்தா அலன் ராபர்ட் அதையெல்லாம் கண்டுக்காம மலையேறப்போறேன்னு துபாயின் மற்றும் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புஜ் கலிபா மீது குரங்கு தாவல் செய்திருக்கார்.வெறும் பெட்ரோலை மட்டும் வச்சுகிட்டு ரொம்ப நாளைக்கு காலம் தள்ள முடியாது,அதனால் வளைகுடா நாடுகளின் முக்கிய பொருளாதார மண்டலமா மாத்திடலாமென்று நினைத்த கனவுகளில் ஒன்றே புஜ் கலிபா உயரமான கட்டிடம்.
ஏனைய வளைகுடா நாடுகள் காரும், பெட்ரோலும் சல்லிசா கிடைக்குத்துன்னு புதிய முயற்சிகளில் ஈடுபடாத போது F1 கார்பந்தயம்,முதல் மெட்ரோ ரயில்,கிரிக்கெட், நம்ம ஊரு குதிரைப் பந்தயம் மாதிரி ஒட்டகப் பந்தயம்ன்னு துபாய் தன்னை தனித்துவப் படுத்திக் கொண்டது.துபாய் புர்ஜ் கலிபா கட்டிடம் உருவாகும் போதே அலன் ராபர்ட்டின் கண்கள் இந்தக் கட்டிடம் மீது கண் வைத்திருக்க கூடும்.அலன் ராபர்ட்டுக்கு உயரமான கட்டிடங்கள், மலைகள் போன்றவையப் பார்த்தா இருட்டுக்கடை அல்வா திங்கிற மாதிரி.

இதுல என்ன முக்கியத்துவம்ன்னா தன் கையும்,காலுமே தனக்குதவின்னு தாவலுக்கு வேறு எந்த விதமான உபகரணங்களோ உபயோகிக்காமல் மலையேறும் மகாதேவன் இவர்.மாறுதலாக துபாய் புர்ஜ் கலிபா கட்டிடத்துக்கு பாதுகாவலாக வயித்துல நெருப்பைக் கட்டிகிட்டிருக்கேண்டின்னு அம்மாக்கள் பருவ வயதில் இருக்கும் பெண்களை பயமுறுத்துவது போல் இவர் வயிற்றுல கயிற்றைக் கட்டிகிட்டு துபாயை பயமுறுத்துகிறார்.கட்டிடத்தை தாவும் நேரம் ஆறு முதல் ஏழு மணி நேரங்கள் ஆகக்கூடுமென்று அறிக்கை விட்டு தாவலை துவங்கினார்.


இதுக்கு மேல என்ன சொல்வது?சரக்கு தீர்ந்து போச்சே!சரக்குன்னு சொன்னதும் .மெய்யாலுமே இது வரைக்கும் சொன்ன கலவையான பல எழுத்துக்களில் ஒன்று கூட கலப்படமில்லாத சுத்த மெய்யினால் தயாரிக்கப்பட்ட பதிவுகள்ன்னு பெருமைப் பட்டுக்கிறத விட தமிழகத்தின் டாஸ்மாக்குலயேருந்து நான் தப்பித்து விட்டேன் என்பது மட்டுமே உண்மை:)


ஸ்பைடர் மேன் அலன் ராபர்ட் பற்றிய மேலதிக தகவல்களை

இங்கேயும் பார்க்கலாம்

இங்கேயும் பார்க்கலாம்

14 comments:

சக்தி கல்வி மையம் said...

nice post.,

ராஜ நடராஜன் said...

//nice post.,//

கருன்! புதுசா கவிதை என்ன போட்டீங்க?

நிரூபன் said...

முதல் பந்தியிலை முதல் வடை காரங்களுக்கு நெத்தியடி.

நிரூபன் said...

இதையெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா துபாயில் நிகழும் சில முக்கிய செய்திகளையும் கூட யாரும் சொல்வதாகக் காணோம்.அதனால் பதிவுக்கு தலைப்பு இப்படி வச்சு துபாய் பதிவர்கள் சார்பாக துபாய்க்கு வந்த பிரெஞ்சுக்காரர் ஸ்பைடர்மேன் அலன் ராபர்ட்டின்(Alain Robert) சாகச கதையிது.//

ஒரு இணையத்திலை இருக்கிறதை அப்படியே காப்பி பண்ணி போடும் காலத்திலை யாராவது றிஸ்க் எடுக்கிற ஆளைப் பற்றி றீசேர்ச் பண்ணிப் பதிவு போடுவாங்களா?

நிரூபன் said...

இப்படியான நிகழ்வுகளையெல்லாம் நம்மாளுங்க கண்டுக்க மாட்டாங்க. ஏன்னா. அவங்க பத்திரிகை, சஞ்சிகைகளிலை வாறதிலை தான் கண் வைச்சு, அதனைப் பதிவாக்கி மகிழுறாங்க.

ராஜ நடராஜன் said...

//முதல் பந்தியிலை முதல் வடை காரங்களுக்கு நெத்தியடி.//

பின்னுட்ட வடை வந்த காரணமே பதிவர்கள் பூங்கா புல்மேட்டுல உட்கார்ந்துகிட்டு வடை தின்னும் பழக்கத்தில்தான் வந்துருக்கும்ன்னு இப்பத்தான் தெரியுது:)

ராஜ நடராஜன் said...

//ஒரு இணையத்திலை இருக்கிறதை அப்படியே காப்பி பண்ணி போடும் காலத்திலை யாராவது றிஸ்க் எடுக்கிற ஆளைப் பற்றி றீசேர்ச் பண்ணிப் பதிவு போடுவாங்களா?//

இந்த மாதிரி விசயங்களையெல்லாம் கட்டாயம் ரிசர்ச் செய்யணும் சகோதரம்.

That's really incrediable.

ராஜ நடராஜன் said...

//இப்படியான நிகழ்வுகளையெல்லாம் நம்மாளுங்க கண்டுக்க மாட்டாங்க. ஏன்னா. அவங்க பத்திரிகை, சஞ்சிகைகளிலை வாறதிலை தான் கண் வைச்சு, அதனைப் பதிவாக்கி மகிழுறாங்க.//

பதிவுகளின் தனிச் சிறப்பே பொதுவான ஊடகங்கள் கொண்டு வராத உண்மைச் செய்திகளைத் தருவதுதான்.சரியான பகிர்வு மக்களுக்குப் போய்ச் சேரக்கூடாதென்றே சில பத்திரிகைகள்,அரசியல் சார்ந்த தொலைக்காட்சி ஊடகங்கள் செயல்படுகின்றன.

நீங்க போட்ட சாமியாராகப்போகிறேன் சிரிப்பை எந்த ஊடகமாவது கொண்டு வந்து விடுமா:)

Chitra said...

அவரது சாகசங்களை டிவியிலும் Youtube லேயும் பார்த்து இருக்கிறேன். He is amazing! பகிர்வுக்கு நன்றிங்க.

ராஜ நடராஜன் said...

//அவரது சாகசங்களை டிவியிலும் Youtube லேயும் பார்த்து இருக்கிறேன். He is amazing! பகிர்வுக்கு நன்றிங்க.//

தொலைக்காட்சியில் கூட இவரது சாகசங்களை காண்பித்தார்களா?

எங்களுக்கு வருவதெல்லாம் ஊமைப்படம் மாதிரி கலைஞர் தொலைக்காட்சியும்,இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன் மெகா தங்கபாலுவுக்குன்னு.மக்கள் தொலைக்காட்சி ஓரளவுக்குப் பரவாயில்லை.

Youtube மறந்தே போச்சே.தகவலுக்கு நன்றி மேடம்!

boopathy perumal said...

நன்றி ''பாருங்க!. படிங்க!. பரப்புங்க!'' பதிவிருக்கு
http://jmdtamil.blogspot.com/2011/03/blog-post_31.html

இறுதி போட்டிக்கு வருகிறான்! இனவெறி பிடித்தவன்!

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி! மும்பையில் ஏப்ரல் 2 -ம் தேதி நடக்க இருக்கிறது!
இறுதி போட்டியில் இந்தியாவும், இலங்கையும் களம் காணுகின்றன.... பாதுகாப்பு பலபபடுத்தப்பட்டுள்ளது, போட்டியை காண பெரிய வி. வி.ஐ.பி. கள் வருகின்றனர்,

அது மட்டும் இல்லை, இன வெறி பிடித்த இலங்கை அதிபர் ராசபக்சே- வும் வருகிறார்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செய்தி தொடர்பாளர் பந்துலா ஜெயசேகரா இதை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியை காண வந்த ராஜபக்சேவுக்கு எதிராக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தமிழின உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதைப்போல மும்பையில் நடைபெறும் இந்த போட்டியை காண வரும் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்த தமிழின உணர்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதைவைத்து தமிழக அரசியலும் அரங்கேருமாம்!..
இனத்தை அழித்தவனக்கு!
இன்முக வரவேற்ப்பா!

பூபதி துபை

boopathy perumal said...

''துபாய் புர்ஜ் கலிபா கட்டிடத்துக்கு பாதுகாவலாக வயித்துல நெருப்பைக் கட்டிகிட்டிருக்கேண்டின்னு அம்மாக்கள் பருவ வயதில் இருக்கும் பெண்களை பயமுறுத்துவது போல் இவர் வயிற்றுல கயிற்றைக் கட்டிகிட்டு துபாயை பயமுறுத்துகிறார்''
அலன் ராபர்ட் பொதுவாக கயிறு போன்ற பாதுகாப்பு சாதங்களின்றிதான் கட்டிடங்கள் மீது ஏறுவது வழக்கம். அவ்வாறு ஏறுவதற்கு துபை அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். வேறு வழியின்றி பாதுகாப்பாக கயிறு கட்டிக்கொண்டு ஏறினார்.
பூபதி துபை

ராஜ நடராஜன் said...

//'துபாய் புர்ஜ் கலிபா கட்டிடத்துக்கு பாதுகாவலாக வயித்துல நெருப்பைக் கட்டிகிட்டிருக்கேண்டின்னு அம்மாக்கள் பருவ வயதில் இருக்கும் பெண்களை பயமுறுத்துவது போல் இவர் வயிற்றுல கயிற்றைக் கட்டிகிட்டு துபாயை பயமுறுத்துகிறார்''
அலன் ராபர்ட் பொதுவாக கயிறு போன்ற பாதுகாப்பு சாதங்களின்றிதான் கட்டிடங்கள் மீது ஏறுவது வழக்கம். அவ்வாறு ஏறுவதற்கு துபை அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். வேறு வழியின்றி பாதுகாப்பாக கயிறு கட்டிக்கொண்டு ஏறினார்.
பூபதி துபை//

அதானே பார்த்தேன்!எந்த உபகரணங்களுமில்லாமல்தானே அலன் ராபர்ட் கட்டிடங்களில் தொங்குவார்?

துபாய் அதிகாரிகளின் அனுமதி கிடைக்கவில்லையென்ற தகவல் பகிர்வுக்கு நன்றி தோழரே.

(இன்னொரு பின்னூட்டத்துக்கு கருத்து அடுத்த பதிவில் சொல்லியுள்ளேன்)

நிரூபன் said...

இதையெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா துபாயில் நிகழும் சில முக்கிய செய்திகளையும் கூட யாரும் சொல்வதாகக் காணோம்.அதனால் பதிவுக்கு தலைப்பு இப்படி வச்சு துபாய் பதிவர்கள் சார்பாக துபாய்க்கு வந்த பிரெஞ்சுக்காரர் ஸ்பைடர்மேன் அலன் ராபர்ட்டின்(Alain Robert) சாகச கதையிது.//

ஒரு இணையத்திலை இருக்கிறதை அப்படியே காப்பி பண்ணி போடும் காலத்திலை யாராவது றிஸ்க் எடுக்கிற ஆளைப் பற்றி றீசேர்ச் பண்ணிப் பதிவு போடுவாங்களா?

//இதில் ஒரு சில வரிகளைத் தவற விட்டு விட்டேன். மன்னிக்கவும்!



ஒரு இணையத்த்தில், பத்திரிகைகளில் இருக்கிற சினிமா விடயங்களை அப்படியே காப்பி பண்ணி போட்டு, பிரபல பதிவர் ஆக நினைக்கும் எம்மில் சில உள்ளங்கள் இப்படியான நல்ல விசயங்களைப் பற்றி, இக் காலத்திலை றிஸ்க் எடுக்கிற ஆளைப் பற்றி றீசேர்ச் பண்ணிப் பதிவு போடுவாங்களா?