Followers

Friday, July 1, 2011

இயக்குநர் பாலாவுக்கு இலவச விளம்பரதாரர்.

அவன்-இவன் திரைப்படத்தில் ஆம்பிள அம்மணமா இருக்குறதையே கடந்து போகும் நிலையில் இருக்கும் மனநிலையில் திரைப்படங்களின் பரிணாமம் நகர்ந்து கொண்டிருக்கும் போது ஏனய்யா அப்பட்டமா காண்பிக்கிறேன்னு கத்தறதுக்கு கூட ஆட்கள் இல்லாத சூழல் இருக்கும் போது நீ என்னமோ செய்துக்கோ என் மதத்தில் மட்டும் கையை வைத்துவிடாதே என்ற மத அடிப்படை வாதத்தை கட்டுப்படுத்துவது அவசியமான ஒன்று.விட்டா ராஜபக்சே கூட என் பேரை ஏன் படத்தில் இழுத்தீங்கன்னு இயக்குநர் பாலாவுக்கும் வசனம் எழுதியதற்கு எஸ்.ராமகிருஷ்ணன் மேலும் கேஸ் போடுவாங்க போல இருக்குதே!

ஒரு விளிம்புநிலை மக்கள் எப்படி லஜ்ஜையில்லாமல் பேசிக்கொள்வார்கள் என்பதையே கிரகித்துக்கொள்ளும் சமுதாயத்தில், இன்றைக்குப் பார்க்கும் படத்தின் தாக்கம் அடுத்த சில தினங்களில் மறந்து இன்னொரு படம் வந்து ஆக்கிரமித்துக்கொள்ளும் சூழலில் வசனங்களை யாரும் நெட்டுரு செய்து கொள்வதில்லை.எதுவும் கடந்து போகும்.இந்தப் பதிவை எழுதும் போது நினைவு படுத்திப் பார்த்தாலும் நினைவுக்கு வராத குர்பானி வசனத்துக்கு ஒருத்தர் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் முஸ்லீம் சமுதாய மக்களை புண்படுத்துவதாக உள்ளதாகவும் சென்னை போலிஸ் கமிசனருக்கு புகார் மனு கொடுத்துள்ளாராம்.

மத அடிப்படை வாதத்திற்கு எதிராக இயக்குநர் பாலாவுக்கு கருத்து சுதந்திரம் என்ற அரசியல் சாசன உரிமை இருக்கிறது.அப்படியே புகார் மனு கொடுத்தாலும் இந்திய சென்சார் போர்டு மெம்பர்களை மனு கொடுத்தவர் சந்திப்பது நல்லது.

மதநல்லிணக்கம் பற்றியும் பேசிக்கொள்வதும்,பிள்ளையை கிள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பதும் இந்திய ஜனநாயகத்திற்கு அழகானதல்ல. மதநல்லிணக்கம் என்பது என்ன என்று சொன்ன பம்பாய் படத்திற்காக மணிரத்தினம் வீட்டில் கல் எறிந்த புத்தர்கள் அல்லவா மதம் காக்கிறோம் என்ற பெயரில் வன்முறை செய்தவகள்.

திரைப்படம் பார்த்தால் அதன் இயக்கம்,காமிரா நுட்பம், கதை, நடிப்பு, பாடல்கள்,நடனம் என்று மொத்த நுணுக்கங்களையும் உள்வாங்கிக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.கூடவே நிறை,குறைகளை விமர்சனம் செய்யும் தகுதிகளையும்.இதனையெல்லாம் விடுத்து படத்தில் கடுகு மாதிரி இருக்கும் ஒன்றை பைனாகுலர் வைத்துப் பார்த்து பெரிதுபடுத்துபவர்கள் சமூக வளர்ச்சிக்கும்,கட்டமைப்புக்கும் ஆபத்தானவர்கள்.

இஸ்லாமில் திரைப்படமே தடைசெய்யப்பட்ட ஒன்றா என்று தெரியவில்லை.ஆனால் வளைகுடா நாடுகளில் யாரும் திரைப்படம் தயாரிப்பதில்லை.அதே நேரத்தில் திரைப்படங்களை அனுமதிக்காமலும் இருப்பதில்லை.எகிப்தில் திரைப்படங்கள் உருவாகின்றன.அவை மொத்த அரேபிய தேசங்களிலும் பார்க்கப்படுகின்றன.

இந்தியாவில் படமும் பார்க்க வேண்டும்,வீண் எதிர்ப்பும் செய்ய வேண்டும் என்ற இரட்டை நிலை கருத்துரிமை ஜனநாயகத்திற்கு உடன்பாடானதல்ல.

டிஸ்கி: இந்த பதிவால் எனது பெயர் சிலருக்கு பக்க சார்பாளன் கடுப்பை உருவாக்கினாலும் மதம் என்ற  சென்ஸ்விட்டியின் நல்ல,தீய இரு பக்கங்களையும் கடந்து வந்துள்ள லிபரல்களின் பட்டியலில் நானும் உள்ளேன் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

16 comments:

saarvaakan said...

நல்ல பதிவு,
அந்த படமே ஒரு குப்பை,அதில் இப்படி,அப்படி வசனம் என்பதும் தேவையற்ற ஒன்று.
நன்றி

ராஜ நடராஜன் said...

//நல்ல பதிவு,
அந்த படமே ஒரு குப்பை,அதில் இப்படி,அப்படி வசனம் என்பதும் தேவையற்ற ஒன்று.
நன்றி//

சார்வகன்!பதிவை இணைத்த சில கணங்களில் பின்னூட்டம் போட்டுட்டீங்க!
நீங்கள் சொல்வது சரிதான்.பாலாவின் ஏனைய படங்களுடன் ஒப்பிடும் போது படம் பற்றி சிலாகிக்க ஒன்றுமேயில்லை.அதிலும் மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு சின்ன வசனத்தை பெரிது படுத்தி போலிஸ் கமிசனருக்குப் புகார் செய்வது இவர்களின் சமூக சலசலப்பு உருவாக்கும் உள்நோக்கு காரணங்களே எனலாம்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

நான் கொஞ்சம் படம் பார்த்துட்டே ஓடியே போயிட்டேன்....!!!

தனிமரம் said...

நல்ல பதிவு படம் என்னவோ சுமார் ரகம்தான் சிலர் தங்களை பிரபல்யமாக்க இப்படி புகார் கூறுவோர் பட்டியலில் தம்மையும் ஓசியில் பிரபல்யமாக்கிறார்கள்.

Muslims Base said...

ஒரு சினிமாகாரனாக அல்லது நல்ல படம் பார்க்கும் ரசிகனாக உங்கள் ஆதங்கங்கள் புரிகிறது. ஆனால் அதில் வந்த வசனங்களின் சில சொற்கள் இஸ்லாத்தில் எவ்வளவு ஆழமானவை என்பது உங்களிற்கு புரிய வாய்ப்பில்லை.

சினிமா என்றால் எதையும் பேசலாம் என்று அர்த்ப்படுத்த முடியாது. சேரி பேச்சானாலும் அது சார்ந்த மக்களின் மனங்களில் ஏற்படும் தாக்கம் வலிது. ” ஜெயலலிதாவை கொண்டு வா வைப்பாட்டியாக வைத்துக்கொள்கிறேன் எனும் வசனம் வந்தால்” நீங்கள் சொல்லும் சென்சார் அதையும் அனுமதிக்குமா? பாலாவுக்கு வேண்டுமானால் அது அந்த நிமிட சேரிப்பேச்சாகலாம். முஸ்லிம்களிற்கல்ல.

ராஜ நடராஜன் said...

//MANO நாஞ்சில் மனோ said...

நான் கொஞ்சம் படம் பார்த்துட்டே ஓடியே போயிட்டேன்....!!!//

மனோ!குற்றால குளியல் முடிச்சிட்டீங்களா?எப்ப திரும்பற மாதிரி?

படம் என்னவோ முந்தைய படங்களில் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று பிய்த்து பிய்த்து போட்ட மாதிரிதான் இருக்கிறது.நிறைவில்லை.

ராஜ நடராஜன் said...

//Nesan said...

நல்ல பதிவு படம் என்னவோ சுமார் ரகம்தான் சிலர் தங்களை பிரபல்யமாக்க இப்படி புகார் கூறுவோர் பட்டியலில் தம்மையும் ஓசியில் பிரபல்யமாக்கிறார்கள்.//

மீள் வருகைக்கு ந்ன்றி நேசன்.தங்களை பிரபல்யமாக்குவது புகார் கூறுவோரின் நோக்கமாகத் தெரியவில்லை.மத அடிப்படைவாதத்தின் நேசிப்பு மட்டுமே இதுபோன்ற புகார்களை தூண்டுகின்றதென நினைக்கின்றேன்.

சந்திர கிருஷ்ணா said...

சரியாகச் சொன்னீர்கள்!

ராஜ நடராஜன் said...

//Muslims Base said...

ஒரு சினிமாகாரனாக அல்லது நல்ல படம் பார்க்கும் ரசிகனாக உங்கள் ஆதங்கங்கள் புரிகிறது. ஆனால் அதில் வந்த வசனங்களின் சில சொற்கள் இஸ்லாத்தில் எவ்வளவு ஆழமானவை என்பது உங்களிற்கு புரிய வாய்ப்பில்லை.

சினிமா என்றால் எதையும் பேசலாம் என்று அர்த்ப்படுத்த முடியாது. சேரி பேச்சானாலும் அது சார்ந்த மக்களின் மனங்களில் ஏற்படும் தாக்கம் வலிது. ” ஜெயலலிதாவை கொண்டு வா வைப்பாட்டியாக வைத்துக்கொள்கிறேன் எனும் வசனம் வந்தால்” நீங்கள் சொல்லும் சென்சார் அதையும் அனுமதிக்குமா? பாலாவுக்கு வேண்டுமானால் அது அந்த நிமிட சேரிப்பேச்சாகலாம். முஸ்லிம்களிற்கல்ல.//

உஙகள் பெயர் முஸ்லிம் அடிப்படை என்று பொருள்படுத்திக்கொள்ளும் படி இருக்கிறது.

இந்த பதிவின் நோக்கமே அடிப்படைவாதத்தின் தன்மையில் சமூகப் பிரச்சினைகளைப் பார்க்காதீர்கள் என்பதுதான்.இஸ்லாமிய சகோதரர்கள் அனைத்தையும் கேள்விக்குட்படுத்திக் கொள்ளப் பழகிக் கொள்ளவேண்டும்.மதம் என்ற செக்குமாட்டு கொள்கைகளினாலே பதிவுலகில் எதிர்க் கேள்விகளும் கேட்கப்படுகின்றன.

இதோ சென்சாரையும்,இயக்குநர் பாலாவையும் குறை சொல்லும் உங்களின் கேள்வி கேட்கும் முறையிலேயே வசனங்களை குறை சொல்லும் தகுதியை நீங்கள் இழக்கிறீர்கள்.

நான் வளைகுடாவில் வசிக்கிறேன்.இங்கே பின்பற்றப்படும் இஸ்லாத்திற்கும்,இந்தியா,பாகிஸ்தானில் பின்பற்றப்படும் தலிபானிச இஸ்லாமியத்திற்கும் வித்தியாசங்கள் இருப்பதை உணர்கிறேன்.இதன் காரணம் கொண்டே உண்மையான இஸ்லாமியத்தின் நற்குணங்கள் பின் தள்ளப்பட்டு 9/11 இஸ்லாமிய பிம்பங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இயக்குநர் பாலா மீதான புகாரும் அந்த வகையைச் சார்ந்ததே.

மத நல்லிணக்கத்தையும்,நடபையும் மதசார்பற்ற இந்தியாவுக்கு முன்நிறுத்துங்கள்.நன்றி.

நிகழ்வுகள் said...

நியாயமான ஆதங்கமே,பதிவு. முட்டையிலே மயிர் பிடுங்க நினைக்கும் நிலை தான் இந்த படங்களில் இடம்பெறும் சிறு விடயங்களையும் ஊதி பெருக்க வைக்கிறது. இதால் இவர்களுக்கு என்ன லாபம் என்று தான் தெரியவில்லை ..

சின்னப்பயல் said...

இது கொஞ்சம் வாசிங்க..!

http://chinnappayal.blogspot.com/2011/06/blog-post_21.html

சிந்திக்க உண்மைகள். said...

அவன்.. இவன்.. எவனாக இருந்தாலும் திரைப்படங்களில் பார்ப்பனீயத்தைத் தான் தூக்கிபிடிக்கிறான். இதற்கு ஆதாரம் தான் சமீபத்தில் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘அவன் – இவன்’ திரைப்படம். இத்திரைப்படம் மூலம் பாலாவும் தான் யார் என்று மக்கள் முன் காட்டுகிறார். காட்டுவது மட்டுமல்ல பார்ப்பனீய தர்மத்தை பாபா ராம்தேவ் பாணியில் போதிக்கிறார். சினிமாத்துறையில் வெகுசிலர் தவிர பலர் எடுக்கும் திரைப்படங்களைத்தவிர தெரிந்தோ தெரியாமாலோ பார்ப்பனீயக்கருத்துக்கள் எட்டிப்பார்க்கின்றன. சிலப்படங்களில் பார்ப்பனீயக்கருத்துக்கள் விஸ்வரூம் கூட எடுத்து இருக்கும்

CLICK THE LINK AND READ

‘அவன் – இவன்’ திரைப்படம் ஒரு பார்வை!

.


..

ராஜ நடராஜன் said...

//நிகழ்வுகள் said...

நியாயமான ஆதங்கமே,பதிவு. முட்டையிலே மயிர் பிடுங்க நினைக்கும் நிலை தான் இந்த படங்களில் இடம்பெறும் சிறு விடயங்களையும் ஊதி பெருக்க வைக்கிறது. இதால் இவர்களுக்கு என்ன லாபம் என்று தான் தெரியவில்லை ..//

இந்தப் படம் யாருடைய அக்கறையுமில்லாமலே இன்னும் சில வாரங்களில் தியேட்டரை விட்டும்,மக்களை விட்டும் போய் விடும்.இதற்கு ஏன் வீணாக அலட்டிக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

ராஜ நடராஜன் said...

//சின்னப்பயல் said...

இது கொஞ்சம் வாசிங்க..!

http://chinnappayal.blogspot.com/2011/06/blog-post_21.html//

ச்சின்னப்பயல் பதிவர் இருப்பது உங்களுக்குத் தெரியுமா:)

உங்கள் விமர்சனம் மட்டுமல்ல,படமே விஷாலின் நடிப்பு மட்டுமே பரவாயில்லை.இயக்குநர் பாலா கதையில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம்.

ராஜ நடராஜன் said...

//சந்திர கிருஷ்ணா said...

சரியாகச் சொன்னீர்கள்!//

இது நேசனின் பின்னூட்ட மறுமொழிக்கான அங்கீகாரமா:)

ராஜ நடராஜன் said...

சிந்திக்க உண்மைகள்!தராசு படத்தை நேராகத்தான் போடுங்களேன்)

பார்பனீயச் செடியை பெரியாருக்குப் பின் யாரும் புடுங்குவதாக காணோம்.ஆனால் அவ்வப்போது உரம் மட்டும் போடுவதற்கு நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.

ஒரு படத்தின் வெளியீட்டில் பல மக்களின் வாழ்க்கை,வியாபார நலன்கள்,கதை,காமிரா,நடிப்பு,பாடல்கள்,இசை,தொழில் நுணுக்கம்,பலரின் உழைப்பு எனக் கூட்டு முயற்சிகள் உள்ளன.இவற்றில் எது வெற்றி பெறுகிறது என்று பார்க்கா விட்டாலும் ரசிகனாக ஒருவனை படம் திருப்தி படுத்துகிறதா என்று பார்ப்பது மட்டுமே நல்ல கலை ரசனையாக இருக்க முடியும்.இவை விடுத்த பார்வைகள் யானையைத் தொட்ட குருடர்கள் கதை மாதிரியாகவே முடியும்.