Followers

Tuesday, February 10, 2009

மரபு வழி மாற்றங்கள்

முந்தைய பதிவான ஐ.நா வை பதிவேற்றம் செய்து விட்டு பிலாபில் எனும் அரபி வடைக்குள் பண் அமுக்குன உணவும் பக்கத்திலிருந்த பக்காலா எனப்படும் நம்மூர் பொட்டிக்கடையில் ஐஸ் கிரிமும் ஒரு ஆரஞ்சும் வாங்கினேன்.

இறுதியாக ஆரஞ்சை உரித்தால் அது genetically modified எனப்படும் மரபு வழி மாற்றம் செய்யப்பட்ட பழம்.மரபு வழி மாற்றம் செய்யப் பட்ட உணவிற்கும் ,விவசாயத்திற்கும் உலகம் முழுதும் எதிர்ப்பு கிளம்புகிறது.காரணம் விதை தானியத்திற்கு அதற்கு உரிமம் உள்ளவர்களிடமே கையேந்த வேண்டி வருவதும்,விவசாயம் சில சமயங்களில் இறக்குமதி செய்யப்பட்ட உரங்களுடன் எதிர்பார்த்த பலனை அளிப்பதில்லை என்பதும்.சில தினங்களுக்கு முன்பு மக்கள் தொலைக்காட்சியில் விவசாயி ஒருவர் மாட்டுச்சாணம்,மூத்திரம் மற்றும் நீருடன் கலந்தவற்றையே இயற்கை உரமாக இடுவதும் அதனால் அவரது செலவினங்கள் குறைவானது என்பதும்.

மாட்டுச்சாணம் பற்றி கூறும்போது கோவை நினைவு ஒன்று வருகிறது.வழியில் நான் பாட்டுக்கு போயிட்டுருந்தவனை மாட்டுப் பக்கம் நின்றிருந்த சுமார் ஒரு 18 வயதுப்பெண் கூப்பிட்டு "கொஞ்சம் கோமியம் எடுத்து தாரேளா" என்றாள்.எனக்கு கோமியம் என்றால் என்ன என்று திரு திரு. மேலும் பெண் பேசுவதால் கூச்சமும் கோமியம் என்றால் சாணமா மூத்திரமா என்றும் அந்தப் பெண்ணிடமும் கேட்க கூச்சம்.அதற்கும் மேலும் மாட்டுப் பக்கம் போக பயம்.துணிந்து மாட்டுப் பக்கம் நகர்ந்தால் மாடு இடதும் வலதுமாக இரண்டு சிலுப்பு சிலுத்துச்சு.எனக்கு மாட்டுப் பக்கம் போக பயமுங்கன்னு சொல்லி விட்டு நடையைக் கட்டினேன்.பின் நாட்களில் அடிச்சு பிடிச்சு சரியான பெயர் தெரிந்த போது எனது அசட்டுத்தனம் புரிந்தது.

இனி மீண்டும் மரபு வழி மாற்றத்துக்கு தாவல்.ஆரஞ்சுப் பழத்தை உரித்தேனா.தோல் எளிதாக பிய்த்துக் கொண்டு வந்தது.முன்பெல்லாம் ஆரஞ்சென்றால் கடித்து சாப்பிடுவதாயிருந்தாலும் பழரசமாக சாப்பிடுவதென்றாலும் ஒரே ஆரஞ்சுதான்.ஆனால் இப்பொழுது பழரசத்திற்கென்று ஒரு வகையும் சாப்பிடுவதற்கென்று ஒரு வகையும் வந்து விட்டது.அப்படி சாப்பிடும் வகை ஆரஞ்சை உரித்தால் தோல் சிரமப்படாமல் தனியாக வந்தது.பழத்தை உரித்தால் அதில் ஒரு விதை கூட இல்லாமல் சாப்பிடுவதற்கு சுவையாக இனிப்பாகவும் விதைகளை துப்பும் சிரமம் இல்லாமல் இருந்தது.

விவசாயிகளின் பார்வையில் பழங்களின் போகம் கூடுதலாகவும் அதே சமயத்தில் சுய சார்பில்லாமலும் பல் காரணங்களால் இழப்புகளின் பாதிப்புக்கள் அதிகம்.நுகர்வோர் தரப்பில் பார்த்தால் பழம் ருசி.நோகாமல் பழம் சாப்பிடலாம்.

9 comments:

நசரேயன் said...

மிச்சம் ஏதும் இருந்தா அனுப்பி வையுங்க சாப்பிட்டு பாத்துட்டு சொல்லுறேன்

பழமைபேசி said...

அண்ணே, நோகாம நோம்பி கும்புடுறதுல சித்த நேரத்துக்குதான் எல்லாமே! இப்ப வார பாட்டெல்லாம் நல்லா இருக்கு, ஆனா மறந்து போகுது. அந்த மாதிரியா இதுவும்? ஒன்னும் புரியலை!

அந்தக் காலத்துல மேக்க பட்டணம் போற நெனப்புலயே மப்பு வரும். இப்பெல்லாம் எத்தினி சீசாக் குடிச்சாலும் அந்த மப்பு இல்ல பாருங்க...

ராஜ நடராஜன் said...

//மிச்சம் ஏதும் இருந்தா அனுப்பி வையுங்க சாப்பிட்டு பாத்துட்டு சொல்லுறேன்//

ஆசை தோசை ஆரஞ்சுப் பழம்.

ராஜ நடராஜன் said...

//அண்ணே, நோகாம நோம்பி கும்புடுறதுல சித்த நேரத்துக்குதான் எல்லாமே! இப்ப வார பாட்டெல்லாம் நல்லா இருக்கு, ஆனா மறந்து போகுது. அந்த மாதிரியா இதுவும்? ஒன்னும் புரியலை!//

பண்னாடி!எனக்கு விவசாயம் பற்றியெல்லாம் அதிகம் தெரியாதுங்க.டவுனு டவுனா சுத்தி டவுன் பஸ்களைப் பத்திக் கேட்டால் நிறைய சொல்வேன்.புரியாததற்கு இதுவும் ஒரு காரணம்.

ராஜ நடராஜன் said...

//அந்தக் காலத்துல மேக்க பட்டணம் போற நெனப்புலயே மப்பு வரும். இப்பெல்லாம் எத்தினி சீசாக் குடிச்சாலும் அந்த மப்பு இல்ல பாருங்க...//

அந்தக் காலத்துல வாளையார் ன்னு கேரளா பார்டர் பக்கம் கூட அக்கம் பக்கம் இருக்குற பெருசுக போகுங்க.போயிட்டு வந்துட்டு கிசுகிசுன்னு சிரிப்போட அதுகளா பேசிக்குங்க.அப்பவெல்லாம் தெரியல மப்புக்கும் மந்தாரத்துக்கும் போகுதுகள்ன்னு:)

அது சரி(18185106603874041862) said...

இப்ப ஆஜர் போட்டுக்கிறேன்...நாளைக்கா வந்து ஃபுல்லா படிச்சிட்டு மீதியை சொல்றேன்...

டைம் இல்ல...மன்னிச்சுக்குங்க..

ராஜ நடராஜன் said...

//இப்ப ஆஜர் போட்டுக்கிறேன்...நாளைக்கா வந்து ஃபுல்லா படிச்சிட்டு மீதியை சொல்றேன்...

டைம் இல்ல...மன்னிச்சுக்குங்க..//

இங்கேயும் செம ஆணிங்க.பேருதான் பொருளாதார மந்தம்.வேலையெல்லாம் மந்தம் இல்லை.வார கணிப்பு 500 மடிக்கணினின்னா இந்த வாரம் 900 சொச்சம்.வெளியூருல காசு செலவு செய்யத்தான் மக்கள் பயப்படுறாங்க போலிருக்கு.

அது சரி said...

//
விவசாயிகளின் பார்வையில் பழங்களின் போகம் கூடுதலாகவும் அதே சமயத்தில் சுய சார்பில்லாமலும் பல் காரணங்களால் இழப்புகளின் பாதிப்புக்கள் அதிகம்.நுகர்வோர் தரப்பில் பார்த்தால் பழம் ருசி.நோகாமல் பழம் சாப்பிடலாம்.
//

இல்லீங்ணா...மரபு மாற்ற பழம் தானியத்துனால விவசாயிகளுக்கு மட்டும் பாதிப்பில்லை...மெடிக்கல் ரீதியான அதை சாப்பிடறவங்களுக்கும் பாதிப்பு இப்ப இல்லாட்டியும் பின்னாடி வருமான்னு பயமா இருக்கு..நம்ம சாப்ட்றது தான உள்ள போயி பல கெமிக்கலா பிரிஞ்சி சதை, ரத்தம், ப்ரோட்டீன்னு மாறுது...இதுல ஒரு கெமிக்கல் தப்பா போயி கையி ஆளை விட நீளமா வளர்ந்துருச்சின்னா?? அட கையை விடுங்க...இப்ப உங்க மூக்கு உங்களை விட நீளமா இருந்தா நல்லாவா இருக்கும்? :0))

பிரச்சினை இருக்குன்னு இதுவரை ப்ரூவ் பண்ணலை...ஆனா பின்னாடி பிரச்சினை வராதுன்னும் இன்னும் ப்ரூவ் பண்ணலை...அதனால முடிஞ்ச வரை ஜெனிடிக்கல்லி மாடிஃபைட் உணவை தவிர்ப்பது நலம்!

ராஜ நடராஜன் said...

//இதுல ஒரு கெமிக்கல் தப்பா போயி கையி ஆளை விட நீளமா வளர்ந்துருச்சின்னா?? அட கையை விடுங்க...இப்ப உங்க மூக்கு உங்களை விட நீளமா இருந்தா நல்லாவா இருக்கும்? :0))//

நீங்க சொல்வதிலும் விசயம் இருக்குங்கண்ணா!மங்கோலிய இனங்களான சீனா,பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் அதிகம் அஜ்னமோட்டோ உபயோகிப்பதும் மரபுவழியாக மூக்கு சப்பைக்கு காரணமோ?ஆனாலும் பாருங்க சைனீஸ் உணவுன்னா ஒரு தனி அலாதிதான் மக்களுக்கு.

(என்னை இட்லியும் தோசையும் இங்கே வந்தும் விடமாட்டேங்குது:))