Followers

Friday, May 29, 2009

Modern Holocaust - மே 2009ன் மீள் பதிவு

தெற்காசியாவின் மூலையில் மிதந்து கிடந்த இலங்கை தீவை பிரபாகரன் உலகின் வரைபடத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். போரின் இறுதி நாட்களின் அவலங்களையும்,மர்ம முடிச்சுகளின் உண்மைகளையும் தமது காரண காரியங்களுக்காக மறைத்தோ பொய்களினால் நிரப்பி விடும் அபாயம் தொடர்கிறது.இன்னும் உலக ஊடகங்கள் அனுமதிக்காத நிலையிலும் அங்கொன்றும் இங்கொன்றும் உண்மை தன்னை முகம் காட்டிக் கொண்டுள்ளது.இதில் சோகம் என்னவென்றால் சில மைல் தூரங்களில் நின்று கொண்டு தமிழகம் உதவ இயலாமல் மௌனம் காப்பது.

உலகப் போரின் ஹிட்லரின் கொடுமைக்கு சாட்சியாய்


இலங்கைப் போரின் ராஜபக்சேவின் கொடுமைக்கு சாட்சியாய்


எல்லாம் முடிந்து விட்டது என்று பறை சாற்றிக் கொள்ளும் இலங்கை அரசு புதிய அரசியல் தீர்வுகளுக்கான நம்பிக்கையைத் தராமல் மக்களை முட் வேலிகளுக்குள் அமர்த்தி மனித உரிமை ஓட்டெடுப்பிலும் வெற்றி முகம் காட்டுகிறது.இதுவரை காலனிக்காரனாய் இருந்தவர்கள் ஓரளவுக்காவது மனிதநேயம் பற்றிய அனுதாபம் காட்டுவது தெரிகிறது.சுதந்திரம் பேசிய மார்க்சீய நாடுகள் தங்கள் சுய முகங்களை காட்டியிருக்கின்றன.

மேற்கத்திய நாடுகளாய் ஐரோப்பா மற்றும் அமெரிக்க பத்திரிகைகள் மெல்ல உண்மைகளைப் பேச ஆரம்பித்திருக்கிறது.இவை இலங்கை அரசின் சுயமுகத்தை உரித்துக் காட்டும் என நம்புவோம்.இதிலும் Bruce Fein கொண்டு வரும் நீதிமன்ற வழக்கிலும் கூட இலங்கை அரசு ஜெயித்து விடும் சாத்தியம் இருக்கலாம்.ஆனால் பூகோளமாய் தனக்குத் தானே தனது இறையாண்மையை பாகிஸ்தான்,சீனா,இந்தியா என்ற மூன்று துருப்புச் சீட்டுகளிலும் போரில் அடகு வைத்து விட்டது.இதிலும் கூட மூன்று சீட்டுக்காரனாய் கால நிலைக்குத் தக்கபடி கண்ணாமூச்சி ஆடலாம்.ஆனால் பக்கத்து கரையாய் தமிழகம் காத்திருக்கிறது இன்று அரசியல் காரணங்களுக்காக தோல்விகளால் துவண்டு போன போதிலும்.இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விசயம் காங்கிரஸ் தவிர தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஈழம் குறித்த மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை தேர்தல் அரசியல் நிலைப்பாடுகளால் பிரிந்து நிற்கும் சோகம் நினைவுக்கு வருவதைத் தவிர. மாநிலப் பிரச்சினைகளில் கருத்து வேறுபாடும் வெளியுறவு கொள்கையில் ஒருமித்த கருத்தும் என இரு வேறு நிலைபாடுகள் நமக்கு அவசியம்.நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலகச் சூழல்,தமிழக அரசியல் சூழல் மாறும் காலம் வந்து கொண்டிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

உண்மையான தூரப்பார்வை அரசியல் இருக்குமானால் இலங்கை அரசு தனக்குத் தானே சூழல்களை பாதகமாக மாற்றிக் கொள்வதை விட மக்களை தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தட்டும்.நிலத்தில் உழைத்தும்,மீன் பிடித்தும் தனது வீட்டை இருக்கும் மரம்,பனைகளை வைத்து மீள் கட்டிக் கொள்வார்கள்.அதற்குப் பின் அவர்களை சக மனிதர்களாக நடத்துவதும் இரண்டாம் தரக் குடிமகனாய் மீண்டும் மாற்றுவதும் பற்றி யோசிக்கட்டும்.இவைகள் எல்லாம் நிகழாத பட்சத்தில் மக்களின் எதிர்காலம் குறித்த பார்வையில் ஒருமித்த கருத்துக் கொண்ட புதிய அரசியல் அமைப்பு தோன்றுவது அவசியமாகிறது.அது தாய் மண்ணுக்குள்ளா அல்லது புலம் பெயர்ந்தா என தீர்மானிக்க வேண்டியவர்கள் மண்ணின் மைந்தர்களே.

படங்கள் கொண்டு வந்த இடங்கள்

1)http://history1900s.about.com/library/holocaust/blpictures.htm

2) சயந்தனின் துயரப் பதிவு : http://sajeek.com/?p=263

16 comments:

பழமைபேசி said...

:-0(

நசரேயன் said...

வருத்த படுவதை தவிர வேற ஒன்னும் செய்ய முடியாது :((((

ராஜ நடராஜன் said...

வாங்கண்ணா பழமை & நசரேயன்.நமது நிலையில் பதிவுகளில் கருத்து சொல்வதோடும் வருத்தப்படுவதோடும் மட்டுமே செய்ய முடிகிறது.ஆனால் நிகழ்வுகளின் சோகங்களில் நாம் மௌனமாகிப் போனால் குரல் கொடுக்கும் மேற்கத்திய நாடுகளும் இதனை மறந்து போவார்கள்.வெற்றியோ இன்னுமொரு தோல்வியோ மக்களுக்கு ஒரு தீர்வு வரும் வரை கருத்துக்களை உயிர்ப்பித்தல் அவசியம்.

பதி said...

:(

//நிகழ்வுகளின் சோகங்களில் நாம் மௌனமாகிப் போனால் குரல் கொடுக்கும் மேற்கத்திய நாடுகளும் இதனை மறந்து போவார்கள்.வெற்றியோ இன்னுமொரு தோல்வியோ மக்களுக்கு ஒரு தீர்வு வரும் வரை கருத்துக்களை உயிர்ப்பித்தல் அவசியம்.//

உண்மை....

கிரி said...

சொல்வதற்கு ஒன்றுமில்லை... :-(

தேவன் மாயம் said...

எல்லாம் முடிந்து விட்டது என்று பறை சாற்றிக் கொள்ளும் இலங்கை அரசு புதிய அரசியல் தீர்வுகளுக்கான நம்பிக்கையைத் தராமல் மக்களை முட் வேலிகளுக்குள் அமர்த்தி மனித உரிமை ஓட்டெடுப்பிலும் வெற்றி முகம் காட்டுகிறது.இதுவரை காலனிக்காரனாய் இருந்தவர்கள் ஓரளவுக்காவது மனிதநேயம் பற்றிய அனுதாபம் காட்டுவது தெரிகிறது.சுதந்திரம் பேசிய மார்க்சீய நாடுகள் தங்கள் சுய முகங்களை காட்டியிருக்கின்றன.///

சிரத்தையுடன் எழுதியுள்ளீர்கள்!!

ஆ.ஞானசேகரன் said...

///உண்மையான தூரப்பார்வை அரசியல் இருக்குமானால் இலங்கை அரசு தனக்குத் தானே சூழல்களை பாதகமாக மாற்றிக் கொள்வதை விட மக்களை தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தட்டும்.நிலத்தில் உழைத்தும்,மீன் பிடித்தும் தனது வீட்டை இருக்கும் மரம்,பனைகளை வைத்து மீள் கட்டிக் கொள்வார்கள்.அதற்குப் பின் அவர்களை சக மனிதர்களாக நடத்துவதும் இரண்டாம் தரக் குடிமகனாய் மீண்டும் மாற்றுவதும் பற்றி யோசிக்கட்டும்.//

வழிமொழிகின்றேன்..


படங்களின் ஒப்பீடு.... மனதை கனக்க செய்கின்றது...

அது ஒரு கனாக் காலம் said...

இப்பொழுது மிகவும் தேவை உதவி, உதவி உதவி, .... யார் மூலம் என்றாலும் , எப்படி வந்தாலும் உடனே சேர்க்க வேண்டியது ..மருந்து, உணவு, உடை, ..கூரை, படுக்கை. கண்டிப்பாக அரசு தான் இதை கொண்டு பொய் சேர்க்க முடியும், ஆனால் மக்கள் இப்பொழுதே பள்ளிகளிலும் , கோவில்களிலும் இதை சேகரிக்க ஆரம்பித்தால் , அரசு கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்து, அவர்களின் செயல் வேகம் எடுக்கலாம். ... நீங்கள் இப்பொழுது இட்ட இடுக்கையும் ... நிச்சயமாக , நல்ல நான்கு பேர்களின் பார்வயில் படும், மேலும் ஆங்கிலத்தில் தலைப்பும் இருப்பதால் நல்லதாயிற்று , படங்கள் வார்த்தையை விட ஆயிரம் மடங்கு பேசும் சக்தி உள்ளது,

ஷண்முகப்ரியன் said...

பாராளுமன்றத் தேர்தலில் நம்மிடம் தோற்றது ஈழத் தமிழர்கள்தான்,ராஜ நடராஜன்.

ராஜ நடராஜன் said...

//உண்மை....//

வாருங்கள் பதி!உங்கள் வருகைக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//சொல்வதற்கு ஒன்றுமில்லை... :-(

வாங்க கிரி!உறவு பூர்வமாகவும்,உணர்வு பூர்வமாகவும் நம்மை விட ஈழத்தமிழர்கள் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.நம் முன் இரண்டே வழிகள் இருக்கின்றன.ஒன்று போகின்ற போக்கில் போகட்டும் என்று மௌனம் சாதிப்பது.அல்லது ஒன்றாகக் கூடி வாழ்வைத் தொலைத்த மக்களுக்கு ஏதாவது உபயோகமாய் உதவ நினைப்பது.

ராஜ நடராஜன் said...

//சிரத்தையுடன் எழுதியுள்ளீர்கள்!!//

வாருங்கள் தேவா!என்னைப் பொறுத்த வரையில் ஹிட் எண்ணிக்கைக்காக பதிவுகள் செய்வதில்லை.போருக்கு குரல் கொடுத்த,எழுதிய அனைவரும் சோகம் மனதை அப்பிக் கொள்ள விட்டு விடலாம் என்ற மனப்பான்மையில் இருப்பது வருத்தம் அளிக்கிறது.அதற்கு ஏற்றாற்போல் அறிக்கை நாயகர்களின் முன் பின் முரண் அறிக்கைகள் இன்னும் சிக்கல்களை உருவாக்குகின்றது.

ராஜ நடராஜன் said...

//பாராளுமன்றத் தேர்தலில் நம்மிடம் தோற்றது ஈழத் தமிழர்கள்தான்,ராஜ நடராஜன்.//

வாங்க ஷண்முகப்ரியன் சார்!தேர்தல் முடிவுகள் தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் இன்னும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.என்னதான் சொல்லு எனது ஓட்டு இந்தக் கட்சிக்குத்தான் என்ற நிரந்தர ஓட்டு,பணம் என்ற புதிய கலாச்சாரம்,தேர்தல் நேரத்துக் கட்சி தாவல்கள்,விஜயகாந்த் என்ற ஓட்டுப் பிரிப்பு,கலைஞரின் வயதுக்கு தகுதியில்லாத அரசியல் விளையாட்டுக்கள் என பல காரணிகள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக அமைந்து விட்டன.பதிவர்களின் கண்ணோட்டம் அனைத்தையும் வெளிச்சம் போட்டுக் காண்பித்தும்,திரை உலக இயக்குனர்கள் குரல் எழுப்பியும் எதிர்பார்த்த தீர்ப்புக்கள் வராமல் போனது சோகம் தருகிறது.கட்சி சார்பற்ற தேர்தல் கணிப்புக்களில் இந்த முறை எனது கணிப்பும் தோல்வியே.

ராஜ நடராஜன் said...

//படங்களின் ஒப்பீடு.... மனதை கனக்க செய்கின்றது...//

வாருங்கள் ஞானசேகரன்!மனிதாபிமானத்தோடு நோக்கும் எவருக்கும் இந்த ஒப்பீடு துக்கத்தையே தரும்.

vasu balaji said...

/அது தாய் மண்ணுக்குள்ளா அல்லது புலம் பெயர்ந்தா என தீர்மானிக்க வேண்டியவர்கள் மண்ணின் மைந்தர்களே./

சரியாய்ச் சொன்னீர்கள்

ராஜ நடராஜன் said...

///அது தாய் மண்ணுக்குள்ளா அல்லது புலம் பெயர்ந்தா என தீர்மானிக்க வேண்டியவர்கள் மண்ணின் மைந்தர்களே./

சரியாய்ச் சொன்னீர்கள்//

பாலா!நிகழ்ந்த சோகங்களில் எல்லோரும் விரக்தியில் உள்ளார்கள்.ஆனாலும் நாம் இந்த சோகத்தை தாண்டி போய் ஆகவேண்டும்.விரக்தியில் அமைதி கொண்டால் நிகழ்வுகளின் அலையில் அமுங்கிப் போய் விடுவோம்.அளவிட முடியாத இழப்புக்கள் இருந்தாலும் இன்னும் எதுவும் முடிந்து விடவில்லை.