Followers

Monday, June 8, 2009

தமிழ் தொலைக்காட்சிகள் ஓர் பார்வை-பகுதி 2

சென்ற இடுகை போதுமென்று கை கட்டளையிட்டு விட்டதால் மூளையின் அங்கீகாரமில்லாமல் சார் போஸ்ட் சொல்லி விட்டது.சொல்ல வந்த கருத்து முற்றுப்பெறாத மாதிரி தோன்றிய காரணத்தால் பகுதி 2 தொடர்கிறது.

வாழ்வின் பல குழப்பமான விசயங்களில் தினமும் முக்கியமாக வேலை,தொழில் என்ற பணம் தேடுதலில் சிக்கித் தவிக்கும் காரணத்தாலும்,இளமை,கல்லூரிக்காலம்,வீட்டு நிர்வாகம்,பள்ளி செல்லுவது,பயணம் என்ற பல நிலைகளில் அனைவரும் வலம் வருவதாலும் அக்கடா என்று வீட்டில் அமரும் சமயம் கணினியை விட தொலைக்காட்சி அனைவருக்கும் எளிதான நுகர்வோர் பொருளாகி விடுகிறது.

இனி இணையம் என்ற பெருங்கடலில் மீன் பிடிக்கச் சென்றால் அது பல வகை மீன்களை இனம் காட்டி எங்காவது ஒரு இடத்தில் வலையை வீசச் செய்கிறது.சில மானுட உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட காட்சிகள் வாழ்க்கையின் கோரத்தை தோலுரித்துக் காட்டவும் செய்கிறது.ஆனால் தொலைக்காட்சி என்பது சமைத்த பண்டம்.இங்கே இதுதான் கிடைக்கும்,வேணுமுன்னா வாங்கிட்டுப் போ கதைதான்.இந்த தனி உரிமையின் காரணம் கொண்டு எது கிடைக்கிறதோ அதனை நுகர வேண்டிய சூழல் நுகர்வோருக்கு.

ஆறு மாதங்களுக்கு மேலாக ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள் இணையத்தில் மிகத்தெளிவாகத் தெரிந்தும் அதனை மக்கள் பக்கம் கொண்டு செல்வதில் ஓரளவுக்கு மானிட உணர்வு கொண்டவர்கள் வெற்றியடைந்தும் கூட அன்றாட வாழ்வில் உழலும் மக்களுக்கு கொண்டு செல்ல முடியாத படி பங்கு வகித்ததில் தொலைக்காட்சிகளில் சன் குழுமத்திற்கு பெரும் பங்கு உண்டு.அதெப்படிங்க ஒரு நாள் முழுதும் சினிமா என்ற மயக்கத்திலேயே ஒரு தனி மனிதனை மூழ்கடிக்க முடிகிறது?இந்த மயக்கம் கூட தேர்தல் வெற்றியின் பணம்,ஓட்டுப் பிரித்தலுடன் ஒரு காரணியாக இருந்திருக்குமோ?டாஸ்மார்க் பார்ட்டிகள் கூட ராத்திரி அடிச்சா காலையில் தெளிந்து விடுகிறார்களே.ஆனால் தொலைக்காட்சி என்பது ஒரு ஊடகம் என்பதன் காரணம் கொண்டும் பகுத்தறிந்து சமூகத்தின் வெற்றி தோல்விகளின் முழுப் பொறுப்புக்கும் எதிர்கால வாழ்வின் உயர்வுக்கும் சறுக்கலுக்கும் மக்களே சொந்தக்காரர்களாகிறார்கள்.

எனவே தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்பிலிருந்து மீளும் மாற்று முகமாகவும் மாற்றுப் பார்வைக்கான சாத்தியங்கள் அதிகம் தென்படுவதாலும் இணையதளம் புழக்கம் அவசியம் தேவை.வரும் சட்டமன்ற தேர்தலில் கணினி இலவசம்(தனிப்பட்ட முறையில் இலவசம் என்பது நிராகரிக்கப்படவேண்டியது என்றாலும் கூட) என்ற அறிக்கையை ஜெயலலிதா மீண்டும் அறிவிக்கலாம்.அல்லது அதனையும் தன் உரிமைப் படுத்தும் நோக்கில் தி.மு.கவும் கூட முந்திக்கலாம்.எப்படியோ தொலைக்காட்சிக்கு மாற்றுதளம் அவசியம்.மாணவர்களுக்கும் கூட கணினி வழிப்பாடம் மிக எளிது.Flash drive போன்ற எளிய முறைகள் வீட்டுப்பாடங்களைக் வீட்டில் கற்கவும் மீண்டும் பள்ளியில் சமர்ப்பிக்கவும் எளிது.(By the way desktop computers are going to be obsolete.)அத்தனை நோட்டுப் புத்தகங்களையும் சுமக்க வேண்டிய அவசியம் இருக்காது நோட்டுப்புத்தக கணினிகளை உபயோகிக்கும் பட்சத்தில்.(மின்சாரமும்,கட்டணமும் என்ற தடங்கல்களையும் கடந்தாக வேண்டும்).

அதென்னமோ தெரியல எங்கே எண்ணங்களை அழைத்துச் சென்றாலும் இறுதியில் ஈழம் என்ற கோட்டில் வந்து மனம் நின்று விடுகிறது.எனவே தொலைக்காட்சியை விட்டு அரசியல் பக்கம் நோக்கினால் சட்டசபையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது வரை அனைத்துக் கட்சிகளின் பங்கு பாராட்ட வேண்டியதே.ஆனால் அதற்கு பின் துவங்கிய அரசியல் குளிர்ப்போரில் குளித்தவர்கள் அனைத்துக் கட்சிகளுமே.
எதிர்பார்க்காத பல நிகழ்வுகள் குறுகிய கால தினங்களில் நடைபெற்று விட்டது.தமிழகத்தில் யாருக்கும் இன்று வரை தெளிவான முடிவில்லா சூழல்.யாருக்கும் பூமிப் பந்தில் இந்தியாவின் தென்கோடியாய் தமிழ்நாட்டை நெம்பிப் போடும் சக்தி இல்லாமல் போய் விட்டது.யாருக்கு எவ்வளவு ஆன்மீக பலமும் லௌகீக பலமும் உள்ளது என்ற புரிதல் மட்டும் நம்மில் சிலருக்கு கிடைத்திருக்கிறது.முன்பு நெஞ்சை பகீர் கொள்ளச் செய்யும் இந்திய நிகழ்வுகள் இப்பொழுது மரத்துப் போய் மட்டுமே பார்வையாளனாக்கியிருக்கிறது.உதாரணத்திற்கு ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் நிலை.

எப்படியிருந்த போதிலும் மானாட மயிலாட,அசத்தப் போவது யாரு,உலக திரைப்படங்கள்,மெகா சீரியல்கள் என்ற மக்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள்,அன்றாட வாழ்க்கைப் பயணம் என அன்றாட நிகழ்வுகள் அப்படியே வலம் வருகின்றன.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாலும் சிலருக்கு வேலை வாய்ப்பும் வயிற்றுக்கும் சிறிது ஊட்டப்படுகிறது என்ற சந்தோசத்தோடு சிலரை மக்கள் முன் அறிமுகப்படுத்துகிறது என்ற சமாதானத்தோடு் தொலைக்காட்சிகளை மக்கள் காண்பது தவிர வேறு வழியில்லை.நானும் இந்தப் பெட்டியின் கதவை சாத்திக் கொண்டு தொலைக்காட்சியாளர்களின் தொழில் சிரமங்கள்,அரசியல் விளையாட்டுக்கள்,மூலதனம்,தொழில்நுட்ப பங்களிப்பு,நிகழ்ச்சிகளை உருவாக்குதல் போன்ற உயர் ரகசியங்கள் தெரியாது சொல்வதற்கு எல்லோருக்கும் எளிதாம் என்ற ஞானோதயத்திலும் ஊடகங்கள் சமுதாயத்திற்கு இன்னும் நிறைய பங்காற்ற இயலும் என்ற ஆற்றாமையிலும் நிறைவு செய்கிறேன்.

20 comments:

Suresh Kumar said...

நல்ல அலசல் இணையதளம் பரவலாக்க படவேண்டும் அப்போது தான் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் .

ராஜ நடராஜன் said...

//நல்ல அலசல் இணையதளம் பரவலாக்க படவேண்டும் அப்போது தான் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் //

வாங்க சுரேஷ் குமார்!உங்களுக்கு பின் தொடருகிறேன் இட்டேனா?எதற்கும் உங்கள் தளத்துக்கு வருகிறேன்.

RAGUNATHAN said...

எல்லா தொழிலையும் போல பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகமும் ஒரு தொழில் என்ற முறையில் செயல்படுவதால் வணிகதிற்கே உரிய லாபம் மட்டுமே நோக்கம் என்பதன் வெளிப்பாட்டின் ஒரு சான்றே சன் தொலைக்காட்சியும் இன்ன பிறவும். நல்ல பதிவு.

ஷண்முகப்ரியன் said...

ரகுநாதன் said...

எல்லா தொழிலையும் போல பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகமும் ஒரு தொழில் என்ற முறையில் செயல்படுவதால் வணிகதிற்கே உரிய லாபம் மட்டுமே நோக்கம் என்பதன் வெளிப்பாட்டின் ஒரு சான்றே சன் தொலைக்காட்சியும் இன்ன பிறவும்.//

நண்பர் ரகுநாதன் சொல்லும் இதே கருத்தைத்தான் நான் உங்கள் சென்ற பதிவில் கூறி இருந்தேன்,திரைத் துறையையும் சேர்த்து..
லாபம் எங்கெல்லாம் ஈட்டப் படுமோ அங்கெல்லாம் வாடிக்கையாளர்கள்தான் நிறுவனத்தின் கொள்கைகளைத் தீர்மானிக்கிறார்கள்.
காந்தியே சொன்னது போல ‘customer is always right'.
வாடிக்கையாளர்களைப் பற்றிக் கவலைப் படாத ஞானிகள் சொல்வதை நாம் புறந்தள்ளி விடுவோம்,அல்லது சடங்குகளாக்கி விற்று விடுவோம்.
எதையும் வணிகமாக்கி விடுகிறோம்,ஆன்மீகம் உட்பட.
சமூகத்திலிருந்து விடுதலையானவர்கள்தான் இதுவரை சமூகத்துக்கு நன்மை பயந்திருக்கிறார்கள்.

ராஜ நடராஜன் said...

//எல்லா தொழிலையும் போல பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகமும் ஒரு தொழில் என்ற முறையில் செயல்படுவதால் வணிகதிற்கே உரிய லாபம் மட்டுமே நோக்கம் என்பதன் வெளிப்பாட்டின் ஒரு சான்றே சன் தொலைக்காட்சியும் இன்ன பிறவும். நல்ல பதிவு.//

ஊடகம் என்பதால் இவங்களுக்கு ஒரு கூடுதல் சமூகப் பொறுப்பும் இருக்குதுங்களே!ஆனாலும் நீங்க சொல்வது போல் லாபம் மட்டுமே பிரதானம்.

ராஜ நடராஜன் said...

//நண்பர் ரகுநாதன் சொல்லும் இதே கருத்தைத்தான் நான் உங்கள் சென்ற பதிவில் கூறி இருந்தேன்,திரைத் துறையையும் சேர்த்து..
லாபம் எங்கெல்லாம் ஈட்டப் படுமோ அங்கெல்லாம் வாடிக்கையாளர்கள்தான் நிறுவனத்தின் கொள்கைகளைத் தீர்மானிக்கிறார்கள்.
காந்தியே சொன்னது போல ‘customer is always right'.//

Boss (நீங்கதான்) is always right ன்னும் ஒரு வாசகம் இருக்கும் போல தெரியுதே:)

கிரி said...

//சென்ற இடுகை போதுமென்று கை கட்டளையிட்டு விட்டதால் மூளையின் அங்கீகாரமில்லாமல் சார் போஸ்ட் சொல்லி விட்டது.சொல்ல வந்த கருத்து முற்றுப்பெறாத மாதிரி தோன்றிய காரணத்தால் பகுதி 2 தொடர்கிறது.//

நல்லா இருக்கு உங்க விளக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :-)

நசரேயன் said...

ம்ம்ம்.. பெருந்தலைகள் யோசிக்க வேண்டிய விஷயம்

vasu balaji said...

/ஆனால் தொலைக்காட்சி என்பது ஒரு ஊடகம் என்பதன் காரணம் கொண்டும் பகுத்தறிந்து சமூகத்தின் வெற்றி தோல்விகளின் முழுப் பொறுப்புக்கும் எதிர்கால வாழ்வின் உயர்வுக்கும் சறுக்கலுக்கும் மக்களே சொந்தக்காரர்களாகிறார்கள்./

இதை உணராமல் இந்த பொறுப்பை எவ்வளவு மோசமாக தட்டிக் கழிக்கிறோம்.

ராஜ நடராஜன் said...

////சென்ற இடுகை போதுமென்று கை கட்டளையிட்டு விட்டதால் மூளையின் அங்கீகாரமில்லாமல் சார் போஸ்ட் சொல்லி விட்டது.சொல்ல வந்த கருத்து முற்றுப்பெறாத மாதிரி தோன்றிய காரணத்தால் பகுதி 2 தொடர்கிறது.//

நல்லா இருக்கு உங்க விளக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :-)//

ஸ்மைலி சொல்லிக்கிறேனுங்க:)))

ராஜ நடராஜன் said...

///ஆனால் தொலைக்காட்சி என்பது ஒரு ஊடகம் என்பதன் காரணம் கொண்டும் பகுத்தறிந்து சமூகத்தின் வெற்றி தோல்விகளின் முழுப் பொறுப்புக்கும் எதிர்கால வாழ்வின் உயர்வுக்கும் சறுக்கலுக்கும் மக்களே சொந்தக்காரர்களாகிறார்கள்./

இதை உணராமல் இந்த பொறுப்பை எவ்வளவு மோசமாக தட்டிக் கழிக்கிறோம்.//

பாலா!மக்களைச் சார்ந்த அழுத்தங்கள் நிறையவே வந்து சேருது.தீர்வுகளுக்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்.

ராஜ நடராஜன் said...

//ம்ம்.. பெருந்தலைகள் யோசிக்க வேண்டிய விஷயம்//

ஆமாம்!வாழைப்பழத்துல ஊசி குத்துற உங்க மாதிரி பெருந்தலைகள் யோசிக்க வேண்டிய விஷயம்:)

ராஜ நடராஜன் said...

//நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்போ வந்து பாருங்க
http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html//

எழுதுவதற்கு காசு கூட கொடுக்கிறீங்களா?இது நல்லாயிருக்கே!

(கஜானா பத்திரம்!பாசக்காரங்க நிறைய பேர் அடிச்சு ஆடிகிட்டு இருக்காங்க!)

க. தங்கமணி பிரபு said...

அதாவதுங்க திராவிடர்-தமிழர்/தமிழ்-ஹிந்தி/பிராமின்-நான்பிராமின். இந்த வரிசையில ஊடகங்கள்(தொலைக்காட்சி, அது பரவலாகும் முன் பத்திரிக்கைகள்) படுமுக்கியமா வெகுசனங்களுக்கு எதக்கொண்டுவந்து வைக்கறங்கன்னா எம்.ஜி.ஆர்-சிவாஜி(போஸ்டரில் சானி)/ரஜினி-கமல்(போட்டி நையாண்டி போஸ்டர்)/விஜய்-அஜித்(போட்டி ரசிகனை கொலை செய்வது)/அடுத்த வரலாறு படைக்க காத்திருப்பவர்கள் சிம்பு-தனுஷ்!!

அப்படியே சைடுகட்டி வந்தோம்னா.. பரபரப்பா பால்த்க்ரே வகையறா 80கள்ல மண்ணின் மைந்தர்கள்னு கிளப்ப "வடக்கே தமிழன் தாக்கப்பட்டால் தெற்க்கே வடநாட்டான் கொல்லப்படுவான்னு"தமிழகத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டது. 90கள்ல கர்நாடகாவில் தமிழர்கள் துரத்தியடிக்கப்பட்டபோது ரஜினி கன்னடரா என்பதே முக்கியமான ஊடகச் செய்தி!

மாலை 6 மணி முதல் 9 மணின்னு கேபிள் ஒலிபரப்பு காலை 6 முதல் இரவு 9 என்று மாறி நள்ளிரவில் ரிப்பீட் ப்ரொகிராம் வந்துச்சு! பிறகு அரபுநாடு தமிழர்களுக்காக நள்ளிரவில் சீரியல்கள் மற்றும் முக்கிய சினிமாக்கள் ரிப்பீட்டேய்! அதுக்கப்புறம் 24மணிநேர ஒலிபரப்பு தொடங்குனாங்க(மக்கள் கேக்கறங்கள்ல!!) ஐரோப்பிய மற்றும் அரபு தமிழர்களுக்காக delayed server மூலம் அவரவர் நாட்டில் அதே நேரத்தில் ஒலிபரப்பு வந்தது ஒரு பயங்கரமான வெளிநட்டு வருமானப்புரட்சி!!

இதுக்கு இணையா பத்திரிக்கைகள் பலவித சினிமா/பெண்கள்/யூத் இணைப்புகள், அன்பளிப்புகள்னு வளர.... அல்ரெடி உணர்வு தூக்கலான தமிழினம் பொழுதுபோக்கு போதையில துயில்கொள்ள தொடங்குவதற்க்கு ஏதாக தீம் பார்க்குகள் கொண்டுவந்தாங்க! அவனவன் கையிருப்புக்கேற்ப்ப பீ-ட்சாவோ பர்கரோ சைனீஸ் அயிட்டமோ சாப்பிடலாம்.அப்புறம் மொபைலு காய்ச்சல் இப்போவரை பன்றிக்காய்ச்சலை விட கடுமையா பாதிச்சிருக்கு! பன்னாட்டு வியாபாரிகள் பலனடைந்தார்கள்! இநதகட்டத்துலதான் முழுமையான ஊடக யுத்தம் - புத்தகமா, டிவியா, மொபைலா? வியாபாரிகளாச்சே... பங்கு பிரிச்சுட்டாங்க! அட, இங்க 5 வருட தலையெழுத்த நிர்ணயிக்கற பாரளுமன்ற தேர்தலே வந்தாலும் பரவாயில்ல, மோடிகளும் லோடிகளும் சீனிவாசன்களும் ஊரையடித்து உலையில் போட ஐபிஎல்லை அயல்நாட்டிலாவது நடத்தியே தீருவார்கள்!

உற்று பார்க்க யார்க்கும் எளிதா புரியும். அரசியலின்/சமுகத்தின் பார்வையை எங்கு திருப்புவது என்பதயும் ஊடகங்களின் போக்கையும் சர்வதேச வியாபாரிகள் உள்ளூர் வியாபாரிகளோட இணைந்து தீர்மணிக்கறாங்களே கண்டி டிவிக்காரன் ஒரு டூல்! அவ்வளவுதான்! சன் டிவி ஒரு pioneer, premium channel, biggest market share holder. கலைஞர் டிவி தொடக்கம் முதல் நெ.2! விஜய் டிவி, ஸ்டாரின் தமிழ் ஜெராக்ஸ் - தமிழ் சேனல்களை கிளாமராக மாற்றிப்புண்ணியம் கட்டியவர்கள் - அதுகூட ஒரு விதமான USP!

ட்ரான்ஸ்பாண்டர் வாடகை, எர்த் ஸ்டேஷன்கள், SNG பரமரிப்பு, லைவ்க்கான OB வேன்கள், கட்டான காளையர்க்கும், கட்டழகிகளுக்கும் ஏறிப்போன சம்பளம், எட்சட்ரா எட்சட்ரா! கட்டுபடியாகவேணாமா?.... மானும் ஆடும் - மயில் காபரேவும் ஆடும்! நமக்குத் தேவை, நம்ம மக்களுக்குத் தேவை.... விழிப்புணர்ச்சி!! ஆனா, அதுக்கும் இப்போ நாம இந்த ஊடகங்களுத்தான் நம்பியிருக்கிறோம், அதான் நிகழ்த்து கலைகளையெல்லாம் கொண்ணு போட்டமே! அதாவது நம் நாட்டின் முக்கிய நிகழ்வான சுதந்திர போராட்டத்தின் பல தளங்களை பரப்புரை செய்த கலைப் பிரிவுகளை கொண்ணு போட்டோம்!! இப்போ வியாபாரிகள் ஐடியாவுல மக்களுக்கான விழிப்புணர்ச்சி ஒரு டிமாண்டில்லாத ஐட்டம்! சுருக்கமா சொன்னா, இந்த மட்டமான போதைய முதல்ல அவனுக கஷ்டப்பட்டு வித்தாங்க! ஆன இப்போ நாம ஓடி ஒடி வாங்கறோம்! ஒன்னும் பண்ண முடியாது! நாம நினைக்கற ஊடகம் சம்பந்தமான் மாற்றத்த, அந்த ஐடியாவ நம்ம வீட்டு பொம்பளங்ககிட்ட விக்கமுடியாதுங்க!

ராஜ நடராஜன் said...

//ட்ரான்ஸ்பாண்டர் வாடகை, எர்த் ஸ்டேஷன்கள், SNG பரமரிப்பு, லைவ்க்கான OB வேன்கள், கட்டான காளையர்க்கும், கட்டழகிகளுக்கும் ஏறிப்போன சம்பளம், எட்சட்ரா எட்சட்ரா! கட்டுபடியாகவேணாமா?.... மானும் ஆடும் - மயில் காபரேவும் ஆடும்! நமக்குத் தேவை, நம்ம மக்களுக்குத் தேவை.... விழிப்புணர்ச்சி!! ஆனா, அதுக்கும் இப்போ நாம இந்த ஊடகங்களுத்தான் நம்பியிருக்கிறோம், அதான் நிகழ்த்து கலைகளையெல்லாம் கொண்ணு போட்டமே! அதாவது நம் நாட்டின் முக்கிய நிகழ்வான சுதந்திர போராட்டத்தின் பல தளங்களை பரப்புரை செய்த கலைப் பிரிவுகளை கொண்ணு போட்டோம்!! இப்போ வியாபாரிகள் ஐடியாவுல மக்களுக்கான விழிப்புணர்ச்சி ஒரு டிமாண்டில்லாத ஐட்டம்! சுருக்கமா சொன்னா, இந்த மட்டமான போதைய முதல்ல அவனுக கஷ்டப்பட்டு வித்தாங்க! ஆன இப்போ நாம ஓடி ஒடி வாங்கறோம்! ஒன்னும் பண்ண முடியாது! நாம நினைக்கற ஊடகம் சம்பந்தமான் மாற்றத்த, அந்த ஐடியாவ நம்ம வீட்டு பொம்பளங்ககிட்ட விக்கமுடியாதுங்க!//

பிரபு!நுகர்வோர் வட்டத்துக்குள்ள உட்கார்ந்துகிட்டு இருக்கறதால நிறைய விஷயங்கள் வெளியே தெரிவதில்லை.நீங்க சமூக கருத்தோடும்,உள்ள நடக்கிறதையும் தொட்டுச் சென்றுள்ளீர்கள்.தொடர்ந்து உங்களை எதிர்பார்க்கிறேன்.

ராஜ நடராஜன் said...

பிரபு!உங்கள் நீண்ட கருத்தை உங்கள் தளத்திலேயே இன்னும் கொஞ்சம் மெருகூட்டியிருந்திருந்தால் பலருக்கும் கருத்துக்களம் போய்ச் சேர்ந்திருக்கும்.

ஆ.ஞானசேகரன் said...

//அன்றாட வாழ்வில் உழலும் மக்களுக்கு கொண்டு செல்ல முடியாத படி பங்கு வகித்ததில் தொலைக்காட்சிகளில் சன் குழுமத்திற்கு பெரும் பங்கு உண்டு.//

உண்மைதான் நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//எனவே தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்பிலிருந்து மீளும் மாற்று முகமாகவும் மாற்றுப் பார்வைக்கான சாத்தியங்கள் அதிகம் தென்படுவதாலும் இணையதளம் புழக்கம் அவசியம் தேவை//

தேவை அதிகம்,.. இந்தியாவில் இது இன்னும் நடுத்தர மக்களுக்கு வந்தடையாத ஒன்றுதான்.... அதிகப்படுத்தபட வேண்டியது...

குறும்பன் said...

ஜெயா, ராஜ் தொலைக்காட்சி பற்றியும் சொன்னால் முழுமை பெறும்.


\\எல்லா தொழிலையும் போல பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகமும் ஒரு தொழில் என்ற முறையில் செயல்படுவதால் வணிகதிற்கே உரிய லாபம் மட்டுமே நோக்கம் என்பதன் வெளிப்பாட்டின் ஒரு சான்றே சன் தொலைக்காட்சியும் இன்ன பிறவும். நல்ல பதிவு.\\

லாபம் வேண்டும் என்பதற்காக செய்தியில் கூடவா ஈழ தமிழர்களின் செய்தியை புறக்கணிக்க வேண்டும்?

rapp said...

//சென்ற இடுகை போதுமென்று கை கட்டளையிட்டு விட்டதால் மூளையின் அங்கீகாரமில்லாமல் சார் போஸ்ட் சொல்லி விட்டது.சொல்ல வந்த கருத்து முற்றுப்பெறாத மாதிரி தோன்றிய காரணத்தால் பகுதி 2 தொடர்கிறது.//

இப்டி எல்லாமா பீதியக் கெளப்பி ஆரம்பிப்பீங்க:):):)