Followers

Wednesday, December 1, 2010

ஸ்பெக்ட்ரம் பதிவுகளும் விக்கிலீக் இணைய பரிமாற்றமும்

சேகர் குப்தாவுடனான கருத்து பரிமாறலில் ரத்தன் டாட்டா தனது பக்கத்து நியாயத்தை சொல்லிவிட்டு தனது சார்பான வழக்கறிஞர் மூலம் ஸ்பெக்ட்ரம் 2G குறித்தான பதிவு செய்த குரல்களை பொதுவில் வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

சேகர் குப்தாவுடனான உரையாடலில் கார்பரேட் நிறுவனங்கள்,ஸ்பெக்ட்ரம் குறித்த குரல் பதிவுகளில் தனது இந்திய கவலை,2005ல் ஸ்பெக்ட்ரம் இலவசமாக்கப்படக்கூடாது(Because it is a scarce resource)என்ற தனது கருத்து தயாநிதி மாறனுக்கு பிடிக்காமல் போனதில் இருவருக்கும் வியாபார கெமிஸ்ட்ரி வேலை செய்யவில்லையென்றும்,ஆனால் தயாநிதி ரொம்ப புத்திசாலி மற்றும் Sophisticated person(தமிழ் தெரியலைங்ண்ணா!இப்படி வெச்சுக்கலாம்,குறைந்த பட்சம் பயணம் செய்வதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் தேவை)என்றும் சொல்லி விட்டு ஆ.இராசா(இதுதான் அவரோட லெட்டர்பேட் பெயர் தெரியுமா)வின் ஸ்பெக்ட்ரம் சரி தவறுகள் பற்றி கருத்து சொல்லாமல் ஆனால் ராசாவினால் டெலிகாம் பரவலாக்கப்பட்டது என்ற தனது மறைமுக ஆதரவை ராசாவுக்கு வழங்குகிறார்.

தனது சார்பு கருத்துக்களை தொலைக்காட்சியில் பொதுவில் வைத்த  மறுநாள் திங்கள் கிழமை ஸ்பெக்ட்ரம் டேப் பதிவுகளை வெளியிடக்கூடாதென்ற உயர்நீதி மன்ற மனுதாக்கல்.அவரது கருத்துப்படி இந்தியா வாழைப்பழ ஜனநாயகம்(Banana Democracy) ஆகிவிடுமென்ற கவலை தெரிகிறது.(வாழைப்பழ ஜனநாயகமென்பது litteraly a strong word.வாழைப்பழம்(லஞ்சம்)கொடுத்தால்தான் அரசாங்கத்தில் காரியமாகும் என்பதும்,இதுவே பல குற்றங்களின் இறுதியாக சர்வாதிகாரத்துக்கு வழிகோலும் என்ற பொருள் கொண்டது).

இனி விக்கிலீக்கை பார்ப்போம்.பொதுவாக கண்ணில் படும் உலக செய்திகளை அன்றாட வாழ்க்கையோடு கவனித்துக்கொண்டு வந்தோமானால் பலதேசத்து அரசாங்கம் செயல்படும் தன்மைக்கும்,யதார்த்தமாக உலகப்பார்வைக்கு வராமல் செய்யும் தகிடுதத்தங்கள் புரியவே செய்யும்.புரிதல் என்பது சாட்சியல்ல.ஆனால் இந்த புரிதலுக்கு சாட்சி ஆவணங்கள் மட்டுமே விக்கிலீக்கின் அமெரிக்காவின் உலகநாடுகளின் நிலைபாடு.இணைய வசதிகள் பொதுவாக்கப்பட்ட காலத்தில் the real war started now (இணையப்போரின் துவக்கம்)என்ற ஹேக்கர் ஒருவரின் வாசகம் நினைவுக்கு வருகிறது.கூகிள் பூமியில் உங்க வீட்டு கூரையைக் கூட கண்டுகொள்ள முடியும் என்பதும்,சீனாவின் கணினி குறித்த ஒற்றர்வெலை போன்றவையும் இந்த குறியீட்டுக்குள் வந்த போதிலும்,அமெரிக்காவின் உள்வேலைகள் சாட்சியமாக விக்கிலீக் மூலம் வெளிவருவது அமெரிக்காவையும் அனைத்து நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

அடுத்து ஸ்பெக்ட்ரம் குரல் பதிவுகள்,விக்கிலீக் அமெரிக்க கேபிள் பதிவுகள் வெளியிடப்படுவது விளையாட்டு மைந்தர்களுக்கு (அடிச்சு ஆடுகிற ground players)விருப்பமில்லாத ஒன்றாக இருந்தாலும் இதன் ஆச்சரியங்கள் என்னைப்போன்ற சாதாரண மனிதனுக்கு மகிழ்ச்சியையே உருவாக்குகின்றன. இந்த மகிழ்ச்சியின் காரணம் அரசாங்கங்களே! பொதுமக்கள் எதிர்காலத்தோடு  பயணிப்பவர்களே!இரட்டை வேடம் போடாதீர்கள்! நாம் புதிய யுகத்தில் இப்பொழுது பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதால்.

உலகின் நன்மைக்கு நல்லது என்றும்,நாட்டு மக்களுக்கு நல்லது என்ற அகன்ற பார்வையில் சில விதிவிலக்குகள் அரசியல் களத்தில் இருக்கலாம்.தவறில்லை.ஆனால் நட்பு நாடு என்று பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவி எனும் பெயரில் இந்தியாவுக்கு எதிராக கொம்பு சீவி விடுவதும் அதே சமயத்தில் பாகிஸ்தானுக்கு ஆப்பு வைப்பதும்,மத்திய கிழக்கில் இஸ்ரேலையும்,ஏனைய அரபு நாடுகளையும் நட்பு ரீதியாக இணைப்பதற்கு பதிலாக சவுதி அரேபிய மன்னர் ஈரான் மீது குண்டு போடு என்பதும் பரிசீலிக்கிறேனென்ற அமெரிக்க நிலைப்பாடும் உலக சமாதானத்திற்கு நல்லதல்ல.

Classified எனும்  ரகசியங்களை வெளியிடுபவர்கள்( Whisle blowers)வானிலிருந்து வந்த வேற்றுகிரகவாசிகள் அல்ல.இவர்கள் ஒன்று ஒரு அமைப்பின் மீதான நம்பிக்கையை இழந்தவர்கள் என்பதற்கான காரணங்களும்,ஒருவேளை சுயநலவிருப்ப காரணங்களாக கூட இருக்கலாம்.ஆனால் தவறுகளிலிருந்து திருத்திக்கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்குபவர்கள் என்பதோடு இவர்கள் உலகமாற்றுக்கான கிரியாஊக்கிகள் எனபது மட்டும் தெளிவு.

7 comments:

ராஜ நடராஜன் said...

//ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கு பங்கு! அதிர்ச்சி தகவல்//

அருள்!பின்னூட்டம் போட்டுத்தான் உங்க கடைக்கு வருவேன் என்று நினைத்தீர்களாக்கும்:)

அனுஷ்காவெல்லாம் நம்ம ஏரியா இல்லைங்கிறதால கருத்து சொல்லாம வந்து விட்டேன்.

Unknown said...

டாடாவின் நிஜ முகம் சந்திக்கு வந்துவிட்டது எனக்கு மகிழ்ச்சிதான்...

விக்கிலீக்ஸ் போல இந்தியாவில் தெகல்கா, மற்றும் சவுக்கு தளங்கள் இருப்பதும் நமக்கு மகிழ்ச்சியே..

ராஜ நடராஜன் said...

//டாடாவின் நிஜ முகம் சந்திக்கு வந்துவிட்டது எனக்கு மகிழ்ச்சிதான்...

விக்கிலீக்ஸ் போல இந்தியாவில் தெகல்கா, மற்றும் சவுக்கு தளங்கள் இருப்பதும் நமக்கு மகிழ்ச்சியே..//

செந்திலண்ணே!தெகல்கா வழியில் சவுக்கும் பயணித்தால் நமக்கு மகிழ்ச்சியே.கூடவே நக்கீரன் மாதிரி கட்டெறும்பு ஆகாமலும் இருக்க வேண்டும்.

ஜோதிஜி said...

ஆச்சரியம் தான்.

எதுக்கு?

அதிக பதிவுக்ள்

ஆழ்ந்த கருத்துகள்

முதல் 20 தர வரிசைப்பட்டியல்.

தேடுங்க தேடுங்க....

கொடுங்க கொடுங்க கொடுத்துக்கிட்டே இருங்க (இதில் மட்டும் இரண்டு அர்த்தம்)

vasu balaji said...

//தவறுகளிலிருந்து திருத்திக்கொள்ள//

திருந்தீட்டாலும்..

தனி மனித உரிமையாம். துட்டிருக்கிறவனுக்குத்தான் அது போல. அடுத்த ஊழல் வந்து இது மறந்துடும்.அவ்வ்வ்

ராஜ நடராஜன் said...

//ஆச்சரியம் தான்.

எதுக்கு?

அதிக பதிவுக்ள்

ஆழ்ந்த கருத்துகள்

முதல் 20 தர வரிசைப்பட்டியல்.

தேடுங்க தேடுங்க....

கொடுங்க கொடுங்க கொடுத்துக்கிட்டே இருங்க (இதில் மட்டும் இரண்டு அர்த்தம்)//

ஜோதிஜி!தர வரிசைக்கெல்லாம் ஆசைப்பட்டால் மூணு வருசமா ஒண்ணாம் வகுப்பிலேயே உட்கார்ந்துகிட்டு இருப்பேனா?

எங்கிருந்து கொடுக்கிறது?இதுவும் இரட்டை அர்த்தம்தான்.

ராஜ நடராஜன் said...

////தவறுகளிலிருந்து திருத்திக்கொள்ள//

திருந்தீட்டாலும்..

தனி மனித உரிமையாம். துட்டிருக்கிறவனுக்குத்தான் அது போல. அடுத்த ஊழல் வந்து இது மறந்துடும்.அவ்வ்வ்//

பாலாண்ணா!எதற்கும் ஒரு எல்லை முடிவு இருக்கிறது.அடுத்த ஊழல்,அதற்குமடுத்த ஊழல் என்று ஆசைப்பட்டால் அப்புறம் ஜனநாயகம் மறந்து விடும் என்றாவது ஒரு நாள்.

வெற்றிக்கொடி கட்ட தொலைப்பார்வை கொண்ட நல்ல தலைவன் வந்து விட்டால் போதும்.இந்த ஜனநாயகத்திலேயே நாம் சந்தோசப்பட்டுக்கொள்ளும் காலம் வந்து விடும்.