Followers

Wednesday, July 9, 2008

இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம்-ஓர் பார்வை

இந்திய அமெரிக்கா அணு ஒப்பந்தத்தின் கருத்து வேறுபாடு காரணமாகவும் ஒப்பந்தம் இந்தியாவின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் என்ற கருத்து
கோட்பாட்டின் பேரிலும், பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க பயணத்தில் ஜார்ஜ் புஷ் கூட இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு தந்த பேட்டியின் அடிப்படை கருத்தைக் கொண்டும் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்துக்கு தரும் தனது ஆதரவை வாபஸ் வாங்கிக்கொள்ளப் போவதாக கூறும் இந்த தருணத்தில் இந்த பதிவின் அச்சு அவசியமாகிறது.பொதுவாகவே இந்தப் பிரச்சினையிலும் ஏனைய பிரச்சினைகளிலும் அதனைச் சார்ந்தோ அல்லது எதிர்வினையாகவே கருத்துக்கள் வருகின்றன.இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து அதன் நன்மை தீமைகளை ஆராயும் போக்கு குறைவாகவே காணப்படுகின்றது.அரசியலுக்கும் அப்பால் விஞ்ஞானிகளின் கருத்துக்கள் மேல் ஓங்கி இருந்தால் மட்டுமே இந்தப் பிரச்சினையின் மூலப் பொருளைக் கண்டறிய முடியும்.அப்படிநிறைகுறைகளைக் கண்டறியும் மனோபாவங்களை வளர்ப்பதே நமக்கும் எதிர்கால சந்ததிக்கும் பயனளிக்கும்.ஆனால் விஞ்ஞானிகளின் கருத்துக்கள் பரவலாக காணப்படவில்லை.

அரசியல் பின்னடைவுகளின் இடையிலும் இன்று 09,புதன் 2008 தினம் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் பற்றிய கருத்து மேம்பாட்டை கலந்தாலோசித்தார் மன்மோகன் சிங். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் ஜார்ஜ் புஷ்.பொரோமோய் மலையின் ஓட்டல் விண்ட்சர் என்ற இடத்தில் மன்மோகன் சிங்கும் ஜார்ஜ் புஷ்ஸும் இரண்டு நாடுகளிக்கிடையேயான நட்புறவு பற்றி பேசினார்கள்.இதில் ஜார்ஜ் புஷ் அணு ஒப்பந்தம் பற்றி தாங்கள் இருவரும் விவாதித்ததாகக் கூறினார்.

இந்திய அரசியல் அலைகளின் மாற்றங்கள் பற்றி மன்மோகன் சிங் அவர்கள் அதிகமாக வருத்தப்பட்ட மாதிரி தெரியவில்லை.தனது அரசாங்கமும்,மக்களும் குறிப்பாக நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் மக்கள் தனது பக்கம் இருப்பதாகவும் இரண்டு நாடுகளின் ஒற்றுமை மேலும் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அதன் முழு உருவத்தை அடைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.மன்மோகன் குறிப்பாக அணு ஒப்பந்தம் பற்றிக்
குறிப்பிடவில்லையென்றாலும் இரண்டு நாடுகளும் அணு,பாதுகாப்பு,விண்வெளி மற்றும் கல்வி பரிமாற்றங்களின் முன்னேற்றங்கள் பற்றியும்
இருநாடுகளின் உறவு எப்போதும் இல்லாத அளவுக்கு திருப்திகரமாக இருப்பதாகவும் இதன் காரணகர்த்தாவான ஜார்ஜ் புஷ்ஸுக்கு தனது நன்றியினைத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி ஐ.எ.இ.எ ஆளுநர் குழுவுக்கு செல்லுமானால் அரசாங்கத்துக்கு தரும் தமது ஒத்துழைப்பை திரும்பப்பெற்றுக் கொள்வதாகவும்
பிரதம மந்திரியின் அமெரிக்க வருகையின் கருத்து வெளியீடு பற்றிக் கூறுகையில் "நேரம் வந்து விட்டது" எனக் கம்யூனிஸ்ட்டுகள்
குறிப்பிட்டார்கள்.மேலும் பிரணாப் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் ஐ.எ.இ.எ உடன் அரசாங்கம் பேச்சு வார்த்தைக்கு செல்லும் முன் அதன் பாதுகாப்பு ஒப்பந்த எழுத்து வடிவினை தமக்கு இதுவரை அளிக்கவில்லையென்றும்
எழுத்து வடிவினை நோக்காமல் தாங்கள் எந்த முடிவுக்கும் வர இயலாது என்றும் கூறினர்.

மேலும் ஐ.எ.இ.எ வின் குழுவிற்கு அரசாங்கம் போகும்பட்சத்தில் தமது ஆதரவை விலக்கிக் கொள்வதாக வும் பிரதமரின் அறிவிப்பினை தொடர்ந்து " நேரம் வந்து விட்டது" எனக் குறிப்பிட்டனர்.

இனி கம்யூனிஸ்ட்டுகளின் தர்க்கம் என்னவென்று பார்த்தோமானால் ஐ.எ.இ.எ வின் பாதுகாப்பு ஒப்பந்தம் விவாதத்துக்குரியதாகவும் அதனை எந்தவித
ஒளிவு மறைவுமின்றி விவாதிக்க வேண்டும் என்பது.ஏன் அரசாங்கம் ஒப்பந்த எழுத்து வடிவினை மக்களிடமிருந்து மறைக்க வேண்டும் எனக் கேள்வி
எழுப்புகின்றனர்.

மேலும் 123 ஒப்பந்தம் அனுபவத்தின்படி அரசாங்கம் கூறும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்துக்கும் 123 ஒப்பந்த எழுத்து வடிவத்திற்கும்
வித்தியாசம் இருப்பதாக வாதிடுகின்றனர்.எனவே ஒப்பந்தத்தின் எழுத்து வடிவத்தை தங்களுக்கு விளக்கவேண்டும் என்று வாதிடுகின்றனர்.

அவர்கள் வாதத்தின் முக்கியப் பிரச்சினையாக முன்னிறுத்துவது இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா எதிர்காலத்தில் கிடப்பில் போட்டால் என்ன செய்வது
என்பதாகும்.அமெரிக்காவும் இந்தியாவும் செய்த 1963ல் செய்த 30 ஆண்டு உடன்படிக்கையை பூர்த்தி செய்யாமல் 1983ல் தாராபூர் அணுசக்தி
நிலையத்துக்குண்டான எரிபொருள் வழங்குதலை இந்தியாவுக்கு நிறுத்தியதை நினைவுபடுத்துகிறார்கள்.மகாராஷ்ட்ராவில் என்ரோன் திட்டமே கிடப்பில்
போடப்பட்டு என்ரோன் நிறுவனமே திவாலாகிப்போனது உலகப்பிரசித்தம்.

தற்போதைய உடன்படிக்கை எதிர்காலத்தில் ஏதோ ஒரு காரணத்தால் நின்று போகும் சூழ்நிலையிலும் ஐ.எ.இ.எ வின் பாதுகாப்பு பரிசோதனை அனைத்து
சிவிலியன் அணுநிலையங்களிலும் தொடரும் சரத்துக்கள் உள்ளதாக விவாதிக்கின்றனர்.

123 ஒப்பந்தம் இந்தியாவுக்கு எரிபொருள் ஏனைய நாடுகளிலிருந்து நிறுத்தப்படும் பட்சத்தில் இந்தியா எடுக்கும் முடிவுகள் இந்தியாவுக்கு பாதகமான
வார்த்தைப் பதங்களைக் கொண்டுள்ளது என வாதிடுகின்றனர்.எனவே ஐ.எ.இ.எ பாதுகாப்பு ஒப்பந்த வாசகங்களை தாங்கள் காணவும் அமெரிக்கா
இந்தியாவுக்கு எரிபொருளை நிறுத்தும் பட்சத்தில் மாற்று வழிகளுக்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா என விவாதிக்க வேண்டும் என்றும் வார்த்தைப்
பிரயோகங்களை இந்தியாவுக்கு சாதகமாக அமைக்கும் சாத்தியக்கூறு உண்டா என்றும் இதனை பொதுவில் விவாதிக்க வேண்டும் என
வற்புறுத்துகின்றனர்.

இரண்டாவதாக 123 ஒப்பந்தம் சரத்துக்களின் படி அமெரிக்கா ஐ,எ,இ.எ விடம் இந்தியாவுக்கு மட்டும் என்ற தனி எரிபொருள் ஒப்பந்தத்தை சிபாரிசு
செய்யுமென்றும் ஆனால் நடைமுறையில் ஐ.எ.இ.எ எரிபொருள் பங்கீடு பற்றிக் கவலைப் படுவதில்லையென்றும் மாறாக அணுசக்தி கருவிகளையும்
பொருட்களின் பாதுகாப்பு செயல்படுத்தப்படுகிறதா என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

எனவே ஐ,எ.இ.எ பாதுகாப்பு ஒப்பந்தங்கள் எரிபொருள் வழங்குதலை எப்படி 123 ஒப்பந்த சரத்தின்படி உறுதிப்படுத்தும் என அறியவேண்டியுள்ளது என்கின்றனர்.

கீழ்கண்ட முக்கியப்பிரச்சினைகளை கம்யூனிஸ்ட்டுகள் முன்வைக்கின்றனர்.

1. ஐ.எ.இ.எ வின் ஒப்பந்த வாசகங்கள் அரசாங்கத்தால் வெளியிடப்படாதது கம்யூனிஸ்ட்டுகளை கவலைக்குள்ளாக்குகிறது.

2. இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகளுக்கான எரிபொருள் உறுதி நிறுத்தப்படும் பட்சத்தில் இந்த அணு உலைகளை ஐ.இ.எ.இ வின் பாதுகாப்பு
ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விடுபட முடியுமா?

3.அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் எரிபொருள் உறுதிமொழியை நிறுத்திக்கொள்ளும் பட்சத்தில் இந்தியா தனது சுய முயற்சியால் உருவாக்கிய
சிவிலியன் அணு ஆலைகளை ஐ.எ.இ.எ வின் பாதுகாப்பு ஒப்பந்தத்திலிருந்து விடுபட முடியுமா?

4. ஒப்பந்தத்திற்கும் அப்பாற்பட்ட திட்டங்களுக்கு இந்தியா எரிபொருளினைக் கொண்டுவரும் பட்சத்தில் எரிபொருள் உறுதிமொழி மீறப்படுமானால்
இந்தியா இதனை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா?

5.எரிபொருளை அமெரிக்காவும்,ஏனைய நாடுகளும் நிறுத்தும் பட்சத்தில் இந்தியா தனது நலன்கள் பாதிக்காவண்ணம் என்ன தீர்வுகளை முன்
வைக்கிறது?

6. ஒப்பந்தம் செயல்படும் நிலையில் என்ன விதமான உறுதிமொழிகளை இந்தியா அளிக்கவேண்டும்?

இந்தியா தற்சமயம் ஐ.எ.இ.எ வின் பாதுகாப்பு ஒப்பந்த வாசகங்கள் அடங்கிய ஒப்பந்தத்தை அந்தக் குழுவின் கையெழுத்து ஒப்புதல் நிலையில்

உள்ளது.அப்படி கையெழுத்திடப்படும் நிலையில் அடுத்து இந்தியாவின் பங்கு என எதுவுமே இல்லை.அடுத்து அமெரிக்க அரசாங்கமே அணு ஆயுத நாடுகளின் ஒப்புதல் பெறவும் 123 ஒப்பந்தத்தை அமெரிக்க செனட் காங்கிரஸ் ஒப்புதலுக்கு அனுப்பும்.எனவே இந்த ஐ.எ.இ.எ ஒப்பந்தம் இந்தியாவில் எந்தவித ஒளிவு மறைவுமின்றி விவாதிக்கப்படவேண்டுமென்கிறது.

இந்திய அரசாங்கம் இந்த ஒப்பந்த நகலை ஏன் மக்களிடமிருந்து மறைக்கின்றனர் என்கின்றனர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள்.

இனி சில நடைமுறை வாசகங்கள்

* கம்யூனிஸ்ட் தனது கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாது

* மன்மோகன் சிங் " ஒரு தனித் தீவில் ஒரு தனி மனிதன்."

* நமது முகத்தை உலக அளவில் காட்டவும் குறைந்த பட்சம் தனது வார்த்தைகளைக் காப்பாற்றும் முகமாகவாவது இந்த ஒப்பந்தம் அவசியம்.

* பிரான்ஸ் நாட்டு தூதுவரின் பார்வை "இந்தியாவின் இறையாண்மைக்கு எந்தவித பாதகமுமில்லாத உலக உடன்படிக்கை இது"

* கம்யூனிஸ்ட்டுகள் " ஒரு மோசமான அணு ஒப்பந்தத்தை செயல்படுத்தும் புராணக் கதைகளுக்கு ஒப்பான செயல்.நாடு தழுவிய செய்தி திரித்தல்."

* ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்திய அரசாங்கத்தின் கடைசி முயற்சி.

* ஒரு பத்திரிகையாளரின் கருத்து " ஒப்பந்தம் ஏன் முக்கியமானது?"

* 1962ல் சீனா யுத்தத்தின் தோல்விக்குப் பிறகு நேருவின் வானொலிக் குரல்"நாம் நமக்கு நாமே இட்டுக்கொண்ட செயற்கையான உலகில் வாழ்கிறோம்"

* "மன்மோகன் சிங்கை வரலாறு எவ்வாறு பார்க்கும்?"

* " இப்பொழுது அல்லது எப்பொழுதும் இல்லை"

* மன்மோகன் சிங் " உள்நாட்டு அரசியல் நமது வெளிநாட்டுக் கொள்கையை பாதிக்கிறது"

பதிவு நீளமாகி விட்டதால் இத்துடன் முடிக்கிறேன்.அலசல்கள் எதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே.

5 comments:

Sanjai Gandhi said...

அருமையான அலசல்.. :)

//அமெரிக்காவும் இந்தியாவும் செய்த 1963ல் செய்த 30 ஆண்டு உடன்படிக்கையை பூர்த்தி செய்யாமல் 1983ல் தாராபூர் அணுசக்தி
நிலையத்துக்குண்டான எரிபொருள் வழங்குதலை இந்தியாவுக்கு நிறுத்தியதை நினைவுபடுத்துகிறார்கள்//

இது தேவை இல்லாத கவலை நடராஜன். பிறகு ரஷ்யா, சீனா மற்றும் ஃப்ரான்ஸ் உதவியுடன் அந்த அணு உலை இன்னும் ச்எயல் பட்டுக் கொண்டுதான் இருக்கு. :)

SEE THIS
http://thinkcongress.blogspot.com/2008/07/blog-post_17.html

ராஜ நடராஜன் said...

தமிழ்மணம் மீண்டும் ஒரு முறை கால காரண காரியங்கள் அறிந்து பதிவினைப் பார்வைக்கு வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

டிஸ்கி: கடை காத்து வாங்கிச்சுன்னா தனக்குத் தானே பின்னூட்டமிடுறதுங்கிறது இதுதானா:)

ராஜ நடராஜன் said...

சஞ்சய் கருத்துக்கு நன்றி.முன்னால உங்கள் வருகைக்கு நன்றி செலுத்துன மாதிரி நினைவு.அவசரத்துல மறந்து போச்சு போல.எனவே இப்போது ஒரு புன்முறுவலுடன் நன்றி.

கிரி said...

//டிஸ்கி: கடை காத்து வாங்கிச்சுன்னா தனக்குத் தானே பின்னூட்டமிடுறதுங்கிறது இதுதானா:)//

:-))))))))))

ராஜ நடராஜன் said...

//டிஸ்கி: கடை காத்து வாங்கிச்சுன்னா தனக்குத் தானே பின்னூட்டமிடுறதுங்கிறது இதுதானா:)//

:-))))))))))

கிரிமீண்டும் வணக்கம்.இதுக்கெல்லாம் அசந்தா முடியுமா?வருது வருது மொக்கப் பதிவு சீக்கிரம் வருது.