Followers

Tuesday, July 22, 2008

பாராளுமன்றத் துணுக்குகள்.

ஒரு சீரியஸ் சிரிப்பாகிப்போன சோகம்.

லாலு பிரசாத் பேசுகையில்" சரியாக மாலை 6.00 மணிக்கு ராட்சதர்களை தோற்கடித்து மாட்டுத்தொழுவத்தில் கட்டுவோம்" என்றார்.சபாநாயகர் சோமநாத் சட்டர்ஜி புன்முறுவல்.

அதுலயும் 6.00 மணிக்கு மேலதான் ஓட்டெடுப்பு நடத்தணும்.அப்பத்தான் மாடுகளை 6 மணிக்கு கொட்டிலில் அடைக்கும் தனது வார்த்தைகள் சரியாக இருக்குமென சோம்நாத் சட்டர்ஜியிடம் வேண்டுகோள்.

( லாலுவுக்கும் மாட்டுக்கும் அப்படியொரு பந்தம்)

சிறையிலிருந்து பிரத்யேகமாக வாக்களிக்க வந்த அதிக் அகமது என்ற பாராளுமன்ற உறுப்பினர் " நானும் விவாதத்தை ரொம்ப கவனமாக் கேட்டேன்.ஆனா இந்த விவாதம் எதற்காக என்று தலையும் தெரியல வாலும் தெரியல.ஆனாலும் நான் ஐக்கிய முன்னணிக்கு எதிராக பட்டனை அமுக்குவேன் " என்றார்.

(ஜெயிலுக்குள்ள இருட்டுக்குள்ளேயே மனுசனப் பூட்டிவச்சா வெளிவிவகாரங்கள் எப்படிங்க தெரியும்?)

அடுத்தவன் கால வார்றது எவ்வளவு முக்கியம் பாருங்க:

பாரதிய ஜனதாவின் ஹரிஸ்சந்திர சவான் சாலை விபத்திலிருந்து நாசிக்கிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். விமானம் மூலமாக டெல்லி வந்தார்.

நடிகர் தர்மேந்திரா முழங்கால் அறுவை சிகிச்சையிலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஸ்சல்ஸ் நகரத்திலிருந்து விண்வெளியில் பறந்து கொண்டிருக்கிறார்.எப்படியும் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்துவிடுவார்.

கிஸான் லால் டைலர் என்பவர் பாராளுமன்றத்திற்குப் பக்கத்திலுள்ள லோகியா மருத்துவ மனையிலிருந்து வருகிறார்.அவரது மனைவியும் மருத்துவர்களும் மருத்துவ மனையை விட்டு நகரக்கூடாது என்று சொல்லியும் கேட்காமல் மருத்துவ வேனில் விரைவு.

(இந்த கடமையின் பொறுப்பு அனைத்து பாராளுமன்ற உறுப்பினரின் பணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டால்.....ம்ம்ம்....( பெருமூச்சு:))

முன்னால் பிரதமர் வாஜ்பாய் இயலாமல் வாக்களிக்க வரவில்லை.

(வேண்டுமென்றே வரவில்லையோ?)

ராகுல் காந்தியை பேசவிடாமல் பாரதிய ஜனதா தள உறுப்பினர்கள் கலாட்டா.சோம்நாத் சட்டர்ஜி " பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வளவு கீழ்நிலைக்குப் போக முடியுமோ அதுவரை போகிறார்கள்."

(இதெல்லாம் எங்களுக்கு ஜுஜிபி.நாற்காலிகளையெல்லாம் உடைத்து நாங்கள் கைக்கு கை கலாட்டா செய்திருக்கிறோமாக்கும்.)

ஐக்கிய முன்னணி எங்களை ரூபாய் நோட்டுக்கட்டுக்களுடன் பேரம்பேசிய பணம் என்று பாரதிய ஜனதா உறுப்பினர்கள் டி.விக்கு போஸ்.

(25 கோடி ஒரு கைக்குள் அடக்கமா)

பணபேரத்துக்காக மன்மோகன்சிங் ராஜினாமா செய்யவேண்டும்.பி.ஜே.பி வற்புறுத்தல்.

(எங்களுக்கும் ஏனைய்யா பணம் தரவில்லை என்ற மற்ற உறுப்பினர்களின் கோபம்தான்.)

நம்ம சிதம்பரம் பி.ஜே.பி மீதும் கம்யூனிஸ்ட்டுகள் மீதும் பாய்ச்சல் " "nothing more bizarre" than two disparate groups coming together to vote against the Government on the confidence motion."

( பஜாரிகள் என்பதன் வார்த்தையின் அர்த்தம் அவர்களுக்கு தெரியாது என்ற காரணத்தினாலே பிசார் என்றார்)


எப்படியோ ஐக்கிய முன்னணி மந்திர எண் 271 தாண்டி 272க்கு தாண்டிவிட்டதாக கடைசி நேரத் தகவல்.

(இந்தப் பதிவு உங்கள் பார்வைக்கு வரும் வினாடிகளில் உண்மை நிலவரம் பாராளுமன்றத்திலிருந்து உங்களுக்குத் தெரிந்திருக்கும்) வருகிறேன்.

12 comments:

Unknown said...

இந்திய பிரதமர் , பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன் சிங்-கின் வருடாந்திர வருமானம் 3,60,000 ரூபாய்.அதாவது நிமிடத்திற்கு 57 காசு.

Unknown said...

ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானியின் கடந்த வருட சம்பளம் மட்டும் 21.72 கோடி ரூபாய்.அதாவது நிமிடத்திற்கு 413 ரூபாய்.

சின்னப் பையன் said...

:-)))))))

ராஜ நடராஜன் said...

// :-))))))) //

அவ்வ்வ்வ்வ்வ் வா இது:)

சின்னப் பையன் said...

அவ்வ்வ்வேதாங்க அது...

செய்திகளுக்கேற்ற உங்க கமெண்ட்களுக்காகத்தான் அந்த சிரிப்பு....

rapp said...

ரொம்ப நல்லா கமெண்ட்ஸ் போட்டிருக்கீங்க :):):) வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் said...

// ரொம்ப நல்லா கமெண்ட்ஸ் போட்டிருக்கீங்க :):):) வாழ்த்துக்கள் //

ராப் பாடகரே வாங்க.வணக்கம்.இப்பத்தான் நம்ம பொட்டிக்கடைக்கு கூட்டமே சேரமாட்டேங்குதுன்னு பொலம்பிகிட்டு இருந்தேன்.நல்லவேளை நீங்க மாட்டினீங்க.நன்றி.

ராஜ நடராஜன் said...

புதுகைச் சாரல் இப்பத்தான் கவனித்தேன்.அடிக்கடி கணக்குல கைய வைப்பீங்க போல இருக்குதே:) பார்த்து பேலன் சீட் டேலியாகமப் போவுது:)

வல்லிசிம்ஹன் said...

கணக்கில புலியோ,இல்ல சிங்கமோ இருந்தாலும் ஓட்டுப் போடும்போது நாம் மறப்பதென்னமோ அன்றையக் கடமையை. அத்ற்குப் பதில்தான் நேற்று நடந்த கூத்து. நல்லா இருந்ததுப்பா கமெண்ட்ஸ் எல்லாம்:)

சின்னப் பையன் said...

Check comments at:
http://blogintamil.blogspot.com/2008/07/blog-post_3938.html

புதுகை.அப்துல்லா said...

பணபேரத்துக்காக மன்மோகன்சிங் ராஜினாமா செய்யவேண்டும்.பி.ஜே.பி வற்புறுத்தல்.

(எங்களுக்கும் ஏனைய்யா பணம் தரவில்லை என்ற மற்ற உறுப்பினர்களின் கோபம்தான்.)
//

அல்டிமேட் கோவைக் குசும்பு
:))

ராஜ நடராஜன் said...

//அல்டிமேட் கோவைக் குசும்பு
:))//

வாங்க அப்துல்லா.தங்கள் வரவு நல்வரவாகட்டும்.நம்ம மக்களுக்கு குசும்புதான் இனிக்குது.அதனால் சர்க்கரை கலந்து செய்தி சொல்லும் ஒரு முயற்சிதான்.இதுல என்ன பிரச்சினையின்னா சிரிப்ப எடுத்துகிட்டு விசயத்த விட்டுடுவாங்களோன்னு பயமும் இருக்கு:) அவ்வ்வ்வ்:)) இது பதிவுக்கு வந்து புதுசா கத்துகிட்டது.