Followers

Thursday, July 24, 2008

தமிழ்மணத்துக்கு இரு வேண்டுகோட்கள்

தருமி அய்யா சொல்லியும் கேட்காம நான் ஞாபகப்படுத்தியும் கேட்காம ச்சின்னப் பையன் நான் கூட "ப்" போடறேனாக்கும் போட்டுக்கோ தப்பேயில்ல போடாம இருந்தாத்தான் தப்புன்னு சொல்லியும் கேட்காம தமிழ்ப்பிரியன் இன்னும் தமிழ் பிரியன் என்று பதிவிடுவதாலும் உப்பு சேர்க்காட்டியும் பரவாயில்ல உடம்புக்கு நல்லதுதான் ஆனா "ப்" சேர்க்காட்டி தமிழுக்கும் பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணத்துக்கும் அழகல்ல என்பதினாலும் அவர் "ப்" சேர்க்கும் வரை பதினெட்டுப்பட்டி பதிவு கிராமத்திலிருந்து அவரை தற்காலிகமாக தள்ளி வைக்கவோ அல்லது அவரது பதிவு ஏதாவது ஒரு மூலையில் தெரியும்படி செய்யுமாறும் பணிவன்புடன் பிராது அனுப்புகிறேன்.

இரண்டாவதாக நேற்று சி.வி.ஆருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லலாமென்று குவைத் நேரப்படி இரவு 12.30 மணிக்கு பெட்டியத் திறந்து வச்சிகிட்டு படம் போட்டுகிட்டு இருந்த போதுதான் தெரியுது அமெரிக்க பதிவு மக்களும் நியுசி துளசி மேடமும் அந்த நேரங்களில்தான் பட்டையக் கிளப்பி பதிவு ஆட்டங்களை அடிச்சு ஆடிகிட்டு இருக்காங்கன்னு.அந்த நேரத்தில் பதிவிடுவதென்பது இயலாத ஒன்று. நான் தூங்கும் நேரமோ இரவு 11.30 மணி.அந்த நேரத்தில் இந்திய மக்கள் எல்லாம் 2.00 மணிக்கு மோன நிலையில் கனவு கண்டு கொண்டுள்ளார்கள்.

காலையில் நான் பெட்டியக்கட்டி தயாராகி அலுவலுக்கு வந்து அலுவல்களையும் பார்த்துவிட்டு அங்கே இங்கென்னு சில பின்னூட்டங்களையும் போட்டு விட்டு பதிவிடலாமுன்னு பார்த்தா அந்த நேரம் பார்த்து இந்தியப் பதிவர்கள் சாப்பாட்டு மூட்டைகளைத் தேடி ஓடி விடுகிறார்கள். சரி திரும்ப வரட்டும் வந்து பதிவினைப் படிப்பார்களென்று பார்த்தால் வந்தவுடன் உண்ட மயக்கத்தில் தூங்கிவிடுகிறார்களோ அல்லது இருக்குற ஆணிகளைப் புடுங்கி விட்டு மிச்சம் மீதி இருந்தா நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாமிங்கிற நினைப்புலயும் அல்லது ரஸ் நேரத்து டிராபிக்குக்கு முன்னால வீட்டுக்குப் போயிடணுமிங்கிற அக்கரையில பறந்து போயிடறாங்களோன்னும் தெரியல.அதுதான் அப்படின்னா பக்கத்து வீட்டு அமீரகத்து மக்களுக்கு சொல்லவே வேண்டாம்.குவைத் நேரத்துக்கும் ஒரு மணி முன்னால அவங்க பொட்டிய மூட்டை கட்டுற நேரமும்.

பதிவு தமிழ்மணத்துக்கு வரும்போது எனது பொட்டிக்கடை காத்து வாங்குது.ஒரு நாள் இப்படித்தான் தருமி அய்யாவும் அவருக்குப் புடிச்ச சிவாஜிகணேசன் பதிவப் போட்டுவிட்டு கடையத் திறந்து வெச்சுகிட்டு காத்துகிட்டு இருக்காரு.ஒருத்தருமே வரல.நாந்தான் அவருக்கு ஆறுதலா இருக்கட்டுமேன்னு ரெண்டு பின்னூட்டமிட்டேன்.கவலைப்படாதீங்க ஹிட் ஏறுமுன்னு சொல்லிப்புட்டு வீட்டுக்குப் போயிட்டேனுங்க.வீட்டுக்குப் போனப்புறம் ஏதாவது மீனு மாட்டியிருக்குதான்னு பார்த்தா நமக்கு ஒண்ணுமேயில்ல,தருமி அய்யாவுக்கு மட்டும் நம்பர் எட்டாகியிருக்குது.

அதனால வருத்தப்பட்டு தமிழ்மணத்துக்கு ஒரு பிராது சீட்டு அனுப்புறேனுங்க.இந்த சீக்கிரமாவும் வேக வேகமாவும் ஓடுற நடுப்புறத்தில எனது பதிவப் போடாம இந்த சூடான இடுகைகள் இடது புறத்தில போடாட்டியும் பரவாயில்ல அந்த வலதுபுறத்துல கொஞ்சம் ஆமை வேகத்துல நகருகிறப் பக்கமா எனது பதிவுகளை இடனுமின்னு வேண்டிக்கிறேன்.

நேற்று நான் கேட்காமலேயே இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் ஓர் பார்வை ங்கிறத மீள்பதிவாக்கினதுக்கு நன்றிங்க.வணக்கம்.

114 comments:

ராஜ நடராஜன் said...

இப்பத்தான் தருமி அய்யாவுக்கு ஒரு துண்டு சீட்டு அனுப்பலாமுன்னு பார்த்தா அதுக்குள்ள அவரோட மறக்கமுடியுமா பதிவுக் காணோம்.

rapp said...

சீக்கிரமா உங்க பிரச்சினை குறைஞ்சு, நீங்க விரும்பினபடி உங்க பதிவுகள் தெரிய வாழ்த்துக்கள் :):):)

ராஜ நடராஜன் said...

ராப் பாடகரே! அல்லது பாடகி??

உங்க மாதிரி புண்ணியவான் புண்ணியவதிகளினால்தான் சாபம் தீரணும்.அதனால வாங்க வாங்க வந்து கும்மிகிட்டே இருங்க:):):)

தமிழ் பிரியன் said...

அண்ணே! இப்படி கவுத்துப்புட்டீங்களே....அவ்வ்வ்வ்வ்வ்வ்
தமிழ்ப்பிரியன் என்ற பெயரில் வேற ஒரு பதிவர் இருக்கார்... அந்த பெயரை உபயோகித்தால் உரிமைப் பிரச்சினை வரும்ண்ணே.... இரண்டையும் தனியா வாசிங்க சரியாயிடும்.... :))

rapp said...

நான் வந்து கவுஜாயினிங்க, அண்ணன் ராயல் இராமினால் வழங்கப்பட்ட பட்டம் இதுங்கரத மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் :):):)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

இது உங்க ஆதங்கம் மட்டும் இல்ல.பல பேரோட ஆதங்கம் அண்ணே.

குசும்பன் said...

இனி அலாரம் வைத்தாவது ஒவ்வொரு மணிக்கும் ஒவ்வொரு பின்னூட்டம் வீதம் ஒவ்வொருவரும் அண்ணன் ராஜ நாகம் சாரி சாரி ராஜ நடராஜனுக்கு பின்னூட்டம் போடவும்.

இது காலை 9 மணிக்கான பின்னூட்டம்.

குசும்பன் said...

//ப்" சேர்க்காட்டி தமிழுக்கும் பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணத்துக்கும் அழகல்ல என்பதினாலும் அவர் "ப்" சேர்க்கும் வரை //

இந்த ”ப்” பெரிய பிரச்சினை இல்லை இந்த இச் இருக்கே அதுதான் பிரச்சினை. இச் சரியாக வைக்கவேண்டும். நான் சொல்வது “ச்”
சரியா.

இது காலை 10 மணிக்கான பின்னூட்டம்.

குசும்பன் said...

//பதிவு தமிழ்மணத்துக்கு வரும்போது பொட்டிக்கடை காத்து வாங்குது.//

பொட்டீ கடை என்று ஒரு பதிவர் இருக்கிறார், ஜாக்கிரதை:))

இது காலை 11 மணிக்கான பின்னூட்டம்.

குசும்பன் said...

//இரண்டாவதாக நேற்று சி.வி.ஆருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லலாமென்று குவைத் நேரப்படி இரவு 12.30 மணிக்கு பெட்டியத் திறந்து வச்சிகிட்டு படம் போட்டுகிட்டு இருந்த போதுதான் ///

பதிவு போட வந்துட்டு பொறவு ஏன் பொட்டியில் படம் போட்டீங்க!!!
என்னா படம் இரவு 12.30 மணிக்கு தனியாக படம் போட்டு பார்த்தன் மர்மம் என்ன?

இது 12 மணிக்கான பின்னூட்டம்.

ராஜ நடராஜன் said...

// அந்த பெயரை உபயோகித்தால் உரிமைப் பிரச்சினை வரும்ண்ணே....//

பதிவுக்குப் பலன் இருக்கும்போல தெரியுதே.சரி உங்கள் பிரச்சினைக்கு மாற்றுவழி யாராவது முன்வைக்கிறார்களா எனப் பார்ப்போம்:)நானும் யோசித்துப் பார்க்கிறேன்.

குசும்பன் said...

//பக்கத்து வீட்டு அமீரகத்து மக்களுக்கு சொல்லவே வேண்டாம்.குவைத் நேரத்துக்கும் ஒரு மணி முன்னால அவங்க பொட்டிய மூட்டை கட்டுற நேரமும்.//

அமீரக மக்கள் அனைவரும் கடமை வீரர்கள்...5 மணிக்கு மேல் கோடி ரூபா கொடுத்தாலும் கும்மி அடிக்க மாட்டார்கள் ஆபிசில் இருந்து.
கும்மி அடிக்க ஓவர் டைம் கொடுத்தால் உங்களது கோரிக்கை பரிசீலனை செய்யபடும்

இது 12 மணிக்கான பின்னூட்டம்

குசும்பன் said...

ஆஹா இப்ப எத்தனை மணி வரை பின்னூட்டம் போட்டேன் என்று தெரியவில்லையே!!!:((

குத்துமதிப்பாக இது மதியம் 1 மணிக்கான பின்னூட்டமாக வெச்சுக்குங்க.

குசும்பன் said...

// இது காலை 9 மணிக்கான பின்னூட்டம்.

July 24, 2008 3:17 AM//

இப்படி 3.17 போட்ட பின்னூட்டத்தை 3.18 ஆகும் முன்பே ரிலீஸ் செஞ்சா, உங்க பதிவு முதல் பக்கத்தில் இருந்து காணாம போகாம, சிலை மாதிரி நட்டுக்காவா நிற்க்கும்?

இது மதியம் 2 மணிக்கான பின்னூட்டம்

ராஜ நடராஜன் said...

// இது உங்க ஆதங்கம் மட்டும் இல்ல.பல பேரோட ஆதங்கம் அண்ணே.//

ஆதங்கம் மட்டுமில்லை.நமது எழுத்து உரிமையை எப்படி விட்டுத் தருவது?ஆனால் அவர் பெயரில் ஒருத்தர் "ப்" சேர்த்துக்கொண்டு பதிவதாக புலம்புகிறார்.ஏதாவது அவருக்கு மாற்று வழி சொல்லுங்களேன்.

குசும்பன் said...

5 கமெண்ட்டு வந்தாலும் அதை ஒன்னு ஒன்னா பொருமையா ரிலீஸ் செஞ்சு பின் கொஞ்ச நேரம் கழித்து ஒன்னு ஒன்னுக்கும் தனி தனியா பதில் சொன்னா பலர் கண்ணில் படுமே, இப்படி டக்கு டக்குன்னு ரிலீஸ் செஞ்சா என்னா அர்த்தம்!

இது மதியம் 3 மணிக்கான பின்னூட்டம்

குசும்பன் said...

//ராஜ நடராஜன் said...
இப்பத்தான் தருமி அய்யாவுக்கு ஒரு துண்டு சீட்டு அனுப்பலாமுன்னு பார்த்தா அதுக்குள்ள அவரோட மறக்கமுடியுமா பதிவுக் காணோம்.//

நான் பதிவு போட்டு விட்டு திரும்பி வந்து தமிழ்மணம் முதல் பக்கத்தை பார்த்தா டக்கு டக்குன்னு எங்கிருந்துதான் பதிவு போடுவாங்களோ தெரியாது பதிவு போட்டு என்னை கீழே தள்ளி விட்டு விடுவார்கள். ஒருத்தரும் பார்க்க மாட்டாங்க:((( அந்த குறை எனக்கு இருக்கு !!!

இது மாலை 4 மணிக்கான பின்னூட்டம்.

குசும்பன் said...

ராஜ நடராஜன் said...
இப்பத்தான் தருமி அய்யாவுக்கு ஒரு துண்டு சீட்டு அனுப்பலாமுன்னு பார்த்தா அதுக்குள்ள அவரோட மறக்கமுடியுமா பதிவுக் காணோம்//

தருமி அய்யா மிகப்பெரியவர் அவரு துண்டு சீட்டு எல்லாம் அனுப்ப கூடாது...பெரிய பெட்சீட் தான் அனுப்பனும்.

இது மாலை 5 மணிக்கான பின்னூட்டம்.

குசும்பன் said...

rapp said...
சீக்கிரமா உங்க பிரச்சினை குறைஞ்சு, நீங்க விரும்பினபடி உங்க பதிவுகள் தெரிய வாழ்த்துக்கள் :):):)///

அப்ப என் பதிவு எல்லாம் என்னா ஆவது?:))) இருந்தாலும் நானும் வாழ்த்திக்கிறேன்.

இது மாலை 6 மணிக்கான பின்னூட்டம்

ராஜ நடராஜன் said...

// இது காலை 9 மணிக்கான பின்னூட்டம்.//

இந்த குசும்பு வேலைதானே வேண்டாங்கிறது.நேற்று தெகா பதிவப் படிச்சிட்டு அட என்னடா நாமும் ரொம்ப நாளா உடம்பப் பத்திக் கவலைப்படாம இருக்குமேன்னு ரத்த மூத்திர பரிசோதனைக்கு போயிட்டு வந்தா இங்கே நேரம் 11.00 அதாவது அமீரகத்துக்கு மணி 12.00.நம்ம பதிவிறக்கம் எப்படியும் ஒரு 10 அல்லது 15 நிமிடம் வச்சிகிட்டாலும் 9.00 மணிக்கு உங்களால எப்படி பின்னூட்டமிட முடியும்

டிஸ்கி: பதிவுலகத்துல நான் கத்துக்கவேண்டியது ரொம்ப....ரொம்பவே இருக்கும் போல:)

குசும்பன் said...

//அந்த வலதுபுறத்துல கொஞ்சம் ஆமை வேகத்துல நகருகிறப் பக்கமா எனது பதிவுகளை இடனுமின்னு வேண்டிக்கிறேன்.//

இந்த வாசகர் பரிந்துரை என்று ஒரு பக்கம் இருக்கே அதை ஏன் விட்டீங்க, அங்க போறதுக்கு என்ன செய்யனும் என்று இதுவரை எனக்கு தெரியாது அங்கு போனதே இல்லை.

இது இரவு 7 மணிக்கான பின்னூட்டம்

கிரி said...

பதிவுகள் வேகமாம முதல் பக்கத்துல இருந்து காணாம போய்டுது :-(

குசும்பன் said...

இந்த குசும்பு வேலைதானே வேண்டாங்கிறது.நேற்று தெகா பதிவப் படிச்சிட்டு அட என்னடா நாமும் ரொம்ப நாளா உடம்பப் பத்திக் கவலைப்படாம இருக்குமேன்னு ரத்த மூத்திர பரிசோதனைக்கு போயிட்டு வந்தா இங்கே நேரம் 11.00 அதாவது அமீரகத்துக்கு மணி 12.00.நம்ம பதிவிறக்கம் எப்படியும் ஒரு 10 அல்லது 15 நிமிடம் வச்சிகிட்டாலும் 9.00 மணிக்கு உங்களால எப்படி பின்னூட்டமிட முடியும்///

1+1+1=? பேண்டு பாக்கெட்டுக்குள் விரலை விட்டு கூட்டல் போடும் மங்குணி பாண்டியனான என்னிடம் இப்படி பல ஊர் டைம்மை சொல்லி என்னிடம் கேள்வி கேட்டால் நான் என்ன செய்வேன்:((((

இது இரவு 8 மணிக்கான பின்னூட்டம்.

குசும்பன் said...

//ராஜ நடராஜன் said...
பதிவுக்குப் பலன் இருக்கும்போல தெரியுதே.சரி உங்கள் பிரச்சினைக்கு மாற்றுவழி யாராவது முன்வைக்கிறார்களா எனப் பார்ப்போம்:)நானும் யோசித்துப் பார்க்கிறேன்//

மாற்று வழி : அத்திப்பட்டிக்கு செல்ல Take டைவர்சன்.

மாற்றுவழி எல்லாம் டிராபிக் போலீஸ் தானே வைக்கனும்.

இது இரவு 9 மணிக்கான பின்னூட்டம்

குசும்பன் said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்
தமிழ்ப்பிரியன் என்ற பெயரில் வேற ஒரு பதிவர் இருக்கார்... அந்த பெயரை உபயோகித்தால் உரிமைப் பிரச்சினை வரும்ண்ணே.... இரண்டையும் தனியா வாசிங்க சரியாயிடும்.... :))//

அப்ப அவருக்கு போலியா நீங்க?:)))

இது இரவு 10 மணிக்கான பின்னூட்டம்.

ராஜ நடராஜன் said...

// 1+1+1=? பேண்டு பாக்கெட்டுக்குள் விரலை விட்டு கூட்டல் போடும் மங்குணி பாண்டியனான என்னிடம் இப்படி பல ஊர் டைம்மை சொல்லி என்னிடம் கேள்வி கேட்டால் நான் என்ன செய்வேன்:((((

இது இரவு 8 மணிக்கான பின்னூட்டம். //

அவ்வ்வ்வ்வ்:) உங்க தல துண்டுப்போட்டுத்தான் விலை பேசிப் பார்த்திருக்கேன்.நீங்க குருவ மிஞ்சிய சிஷ்யனா இருப்பீங்க போலிருக்குது பேண்ட் க்குள்ளும் கணக்கு போடிறீங்க:) என்னமோ பண்ணுங்க நீங்களாச்சு உங்க கணக்காச்சு:)

குசும்பன் said...

//rapp said...
நான் வந்து கவுஜாயினிங்க, அண்ணன் ராயல் இராமினால் வழங்கப்பட்ட பட்டம் இதுங்கரத மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் :):)//

டாக்டர் ராயல் ராம் வழங்கினாரா? அவரு அழகிய தமிழ் மகன் பார்த்ததில் இருந்து விஜய் வெறியர் ஆகி விட்டார். அதானால் அவர் தலைவரை போல அவரும் டாக்டர் ராயல் ராம் ஆகிவிட்டார். அது போல் பட்டங்களும் வழங்கி வருகிறார்.

இது இரவு 10 பத்து மணிக்கான பின்னூட்டம்!!!

குசும்பன் said...

அவ்வ்வ் என்னங்க நீங்க காலை 9 மணிக்கு போட்ட பின்னூட்டத்தையும், இரவு 8 மணிக்கு போட்ட பின்னூட்டத்தையும் ரிலீஸ் செஞ்சா என்னா அர்த்தம் இடைப்பட்ட நேரத்தில் போட்ட பின்னூட்டத்தை எல்லாம் ரிலீஸ் செஞ்சாதானே ஒரு கண்டினியுட்டி வரும்.., இல்ல பார்க்கும் மக்கள் என்ன நினைப்பாங்க குசும்பன் கும்மி அடிக்கும் வேலைய கூட ஒழுங்கா செய்வது இல்லை என்று தப்பா நினைக மாட்டாங்கா:((((

மக்களே நான் ஒவ்வொரு மணிக்கும் ஒரு பின்னூட்டம் வீதம் போட்டு வருகிறேன்.

இது இரவு 11 மணிக்கான பின்னூட்டம்

ராஜ நடராஜன் said...

குசும்பரே! ஒரு வாரமா வேர்ட் பேர்ட்ல ஒரு பதிவு தூங்குது.நல்லவேளை பதிவுக்கு வந்தீங்க.இதே சாக்கில உங்க அப்ரூவலயும் வாங்கிட வேண்டியதுதான்.பெரிசா ஒண்ணுமில்ல ச்சின்னப் பையனுக்கும் உங்களுக்குமான ஒரு சந்தேகத்தை தீர்த்துக்க வேண்டியிருக்கு.அவர் சரின்னாட்டார்.நீங்களும் சரி சொல்லிட்டா பதிவ மீள்பார்வை செய்திட்டு ஸ்டார்ட் மீசிக் சொல்லிட வேண்டியதுதான்.என்ன சொல்றீங்க?

பரிசல்காரன் said...

உங்கள் துயர் துடைக்க இதோ ஒரு பின்னூட்டம்!

பரிசல்காரன் said...

உங்கள் துயர் துடைக்க இதோ இரண்டாவது பின்னூட்டம்!

பரிசல்காரன் said...

உங்கள் துயர் துடைக்க இதோ மூன்றாவது பின்னூட்டம்!

பரிசல்காரன் said...

உங்கள் துயர் துடைக்க இதோ நான்காவது பின்னூட்டம்!

பரிசல்காரன் said...

உங்கள் துயர் துடைக்க இதோ ஐந்தாவது பின்னூட்டம்!

குசும்பன் said...

ராஜ நடராஜன் said...
அவ்வ்வ்வ்வ்:) உங்க தல துண்டுப்போட்டுத்தான் விலை பேசிப் பார்த்திருக்கேன்.நீங்க குருவ மிஞ்சிய சிஷ்யனா இருப்பீங்க போலிருக்குது பேண்ட் க்குள்ளும் கணக்கு போடிறீங்க:) என்னமோ பண்ணுங்க நீங்களாச்சு உங்க கணக்காச்சு:)///


குருவை மிஞ்சியா அவ்வ்வ்வ்! அவரு எங்க நான் எங்க!!!

நம்ம குரு சிபியைதானே சொன்னீங்க?

இது இரவு 12 மணிக்கான பின்னூட்டம்

பரிசல்காரன் said...

உங்கள் துயர் துடைக்க இதோ ஆறாவது பின்னூட்டம்!

பரிசல்காரன் said...

உங்கள் துயர் துடைக்க இதோ ஏழாவது பின்னூட்டம்!

பரிசல்காரன் said...

25 ஆச்சான்னு தெரியல! அதுனால இதோ இன்னொரு பின்னூட்டம்!

வர்ட்டா!!!

குசும்பன் said...

ராஜ நடராஜன் said...
குசும்பரே! ஒரு வாரமா வேர்ட் பேர்ட்ல ஒரு பதிவு தூங்குது.நல்லவேளை பதிவுக்கு வந்தீங்க.இதே சாக்கில உங்க அப்ரூவலயும் வாங்கிட வேண்டியதுதான்.பெரிசா ஒண்ணுமில்ல ச்சின்னப் பையனுக்கும் உங்களுக்குமான ஒரு சந்தேகத்தை தீர்த்துக்க வேண்டியிருக்கு.அவர் சரின்னாட்டார்.நீங்களும் சரி சொல்லிட்டா பதிவ மீள்பார்வை செய்திட்டு ஸ்டார்ட் மீசிக் சொல்லிட வேண்டியதுதான்.என்ன சொல்றீங்க?///

இதுல நான் என்னங்க சொல்லவேண்டி இருக்கு நீங்க ஸ்டார்ட் மீயுஜிக் சொல்லிட்டு... ஒரு தகவலை மட்டும் அனுப்பிடுங்க. வந்து கும்மிடலாம்:)

குசும்பன் said...

போன பின்னூட்டத்தை இரவு 2 மணிக்கான பின்னூட்டமாகவும் டிஸ்கி போட மறந்துட்டேன்.

இதை இரவு 3 மணிக்கான பின்னூட்டமாகவும் வைத்துக்கொள்ளவும்.

பரிசல்காரன் said...

கமெண்ட்ஸ் செட்டிங்க்ஸ் போய் பாப் அப் விண்டோவை எடுத்து விடுங்க தலைவா! ஃபுல் பேஜ் செலக்ட் பண்ணுங்க! (அட. இதுவும் ஒரு பின்னூடமாய்டுச்சே! பலே! பலே!!)

குசும்பன் said...

//சரி சொல்லிட்டா பதிவ மீள்பார்வை செய்திட்டு ஸ்டார்ட் மீசிக் சொல்லிட வேண்டியதுதான்.என்ன சொல்றீங்க?//

நாளை வெள்ளி கிழமை லீவ் அதுக்கு முன்னாடி சொல்லுங்க இல்லை சனி கிழமை சொல்லுங்க.

இது காலை 4 மணிக்கான பின்னூட்டம்

குசும்பன் said...

//கிரி said...
பதிவுகள் வேகமாம முதல் பக்கத்துல இருந்து காணாம போய்டுது :-(///

வலைப்பக்கத்தில் இருந்தே பல பதிவுகள் காணாமல் போய் கிட்டு இருக்காம் ஜாக்கிரதை!

இது காலை 5 மணிக்கான பின்னூட்டம்

குசும்பன் said...

//பரிசல்காரன் said...
உங்கள் துயர் துடைக்க இதோ ஒரு பின்னூட்டம்!//

துயர் துடைக்க வந்த பரிசல்காரரே வாங்க ஒரு கை குறையுது...தனியா கும்மிட்டு இருக்கேன்...

இது காலை 6 மணிக்கான பின்னூட்டம்

பரிசல்காரன் said...

மிகவும் உயரிய தத்துவக் கருத்துக்கள் பொதிந்த எனது ஆறுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்களை மட்டுறுத்திய உங்களைக் கண்டித்து அரை மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிக்கிறேன்!

(ஆஃபீஸ் பாய்.. எனக்கு அரைமணிநேரம் கழிச்சு ஒரு பீட்சா!!)

குசும்பன் said...

//டிஸ்கி: பதிவுலகத்துல நான் கத்துக்கவேண்டியது ரொம்ப....ரொம்பவே இருக்கும் போல:)///

அவ்வ்வ் மூத்த பதிவர் நீங்களே இப்படி சொன்னா நாங்க எல்லாம் என்ன செய்வது!

குசும்பன் said...

//Leave your comment

தமிழ் வணக்கம்.//

இது என்னா மக்கள் வணக்கம் போல தமிழ் வணக்கம் ஏதும் TV ஆரம்பிக்கிற ஐடியா இருக்கா?

இது காலை 8 மணிக்கான பின்னூட்டம்.

குசும்பன் said...

மெதுவா எல்லாத்தையும் ரில்ஸ் செஞ்சுட்டு , பொருமையா பதில் சொல்லுங்க !


இது காலை 8மணிக்கான பின்னூட்டம்

குசும்பன் said...

ஏதும் விடு பட்டு இருந்தால் அந்த டைத்துக்கான பின்னூட்டமாக இதை வைத்துக்கொள்ளவும்.

குறை இருப்பின் சொல்லுங்க திருத்திக்கிறேன்.


விடுப்பட்ட டைத்துக்கான பின்னூட்டம் இது.

ராஜ நடராஜன் said...

//மிகவும் உயரிய தத்துவக் கருத்துக்கள் பொதிந்த எனது ஆறுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்களை மட்டுறுத்திய உங்களைக் கண்டித்து அரை மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிக்கிறேன்!//

பரிசல்காரரே! உங்களுக்குப் பதில்கூட சொல்ல விடாம குசும்பர் அடிச்சு ஆடிகிட்டு இருக்கார்.எந்தப் பந்து எந்தப் பக்கம் போகுதுன்னே தெரியல.நீங்க போட்ட பந்துகளையெல்லாம் தேடித்தான் கண்டு பிடிக்கணும்:)

ராஜ நடராஜன் said...

இம்புட்டு நல்ல மகராசன்களையெல்லாம் பக்கத்து வீட்டுல வெச்சுக்கிட்டு இனிமேல் நான் ஏன் கவலைப்படணும்:):):))))))

ராஜ நடராஜன் said...

ராப் கவுஜாயினின் வாழ்த்து பழிச்சிருச்சு.ஆனந்தம்....ஆனந்தம்... பேரானந்தம்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ராப் வார்த்தைக்கு இத்தனை சக்தியா.. ?

குசும்பன்கிட்ட ஒரு படம் குடுத்தீங்கன்னா நாலு விதமா அதுல வேலை செய்து உங்கள பெரிய ஹீரோ ஆக்கிடுவாரே.. அதையும்செய்யுங்க.. அப்பறம் நீங்க பெரிய பதிவராகிடுவீங்க..

ராஜ நடராஜன் said...

//கமெண்ட்ஸ் செட்டிங்க்ஸ் போய் பாப் அப் விண்டோவை எடுத்து விடுங்க தலைவா! ஃபுல் பேஜ் செலக்ட் பண்ணுங்க! (அட. இதுவும் ஒரு பின்னூடமாய்டுச்சே! பலே! பலே!!)//

பரிசல்காரரே! பாப் அப் விண்டோ மொதல்ல இருந்தே மூளியாத்தான் கிடக்கு.புல்பேஜ்க்கு நீங்க சொன்ன மாதிரி பொட்டு வச்சாச்சு.

அப்புறம் நீங்க போடற ஊக்க ஊட்டங்களெல்லாம் கமெண்ட் மாடரேசன்ல போய் உட்கார்ந்துகிச்சு.அத நான் கவனிக்கல.இப்ப எல்லாத்தையும் ரிலிஸ் பண்ணியாச்சு.

இங்கே மணி 3.அப்ப அங்க மணி 4 மூட்டையக் கட்டியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

குசும்பரே! இன்னிக்கு நானும் நியூட்டனுமின்னு பதிவு போடணுமின்னு நெனச்சிகிட்டு இருந்தேன்.கும்முன கும்முல எல்லாமே மறந்து போச்சு:)

ராஜ நடராஜன் said...

// இனி அலாரம் வைத்தாவது ஒவ்வொரு மணிக்கும் ஒவ்வொரு பின்னூட்டம் வீதம் ஒவ்வொருவரும் அண்ணன் ராஜ நாகம் சாரி சாரி ராஜ நடராஜனுக்கு பின்னூட்டம் போடவும்.

இது காலை 9 மணிக்கான பின்னூட்டம்.//

ராஜ நாகம் டப்பாவுக்குள்ள போயிடிச்சு. படம் எடுத்த டைரக்டருக்கோ ரஜனிக்கோ கூட ஞாபகம் இருக்காது.நீங்களாவது ஞாபகம் வச்சிருக்கீங்களே.

rapp said...

//டாக்டர் ராயல் ராம் வழங்கினாரா? அவரு அழகிய தமிழ் மகன் பார்த்ததில் இருந்து விஜய் வெறியர் ஆகி விட்டார். அதானால் அவர் தலைவரை போல அவரும் டாக்டர் ராயல் ராம் ஆகிவிட்டார். அது போல் பட்டங்களும் வழங்கி வருகிறார்.

//


பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில்(அதாவது உலகினில், நீங்களா இஷ்டத்துக்கு கற்பனை பண்ணிக்கக்கூடாது) பெண்கள் நடத்த வந்தோம்.
ஹி ஹி ராஜ நடராஜன் பயந்திடாதீங்க, இப்படித்தான் சம்பந்தா சம்பந்தம் இல்லாம பதில்கள தட்டி விட்டுக்கிட்டே இருக்கணும். இப்போ பாருங்க இன்னும் நாலு பேர் இதை காறித்துப்ப வருவாங்க

ராஜ நடராஜன் said...

// இந்த ”ப்” பெரிய பிரச்சினை இல்லை இந்த இச் இருக்கே அதுதான் பிரச்சினை. இச் சரியாக வைக்கவேண்டும். நான் சொல்வது “ச்”
சரியா.//

புது மாப்பிள்ளை சொல்றீங்க கேட்டுக்க வேண்டியதுதான்:)

நேத்தைக்குத்தான் கல்யாணமாகவர்களுக்கு டிப்ஸ் கொடுத்துகிட்டிருந்தவர்கிட்ட நான் அந்தக் கட்சியில்லையென்றும் சாப்பாடு நல்லாயிருக்குன்னு சொன்னா சந்தோசப் படுற தங்ஸ் குறை சொன்னா "நீ வந்து ஆக்கு"ங்குறதயும் சொல்லி புலம்பிகிட்டிருந்தேன்.

ராஜ நடராஜன் said...

//பொட்டீ கடை என்று ஒரு பதிவர் இருக்கிறார், ஜாக்கிரதை:))//

தெரியுமே:) அவர் பாட் டீ(!!) கடை.அப்படித்தான் இங்கிலிப்பீசு சொல்லுது.நம்முடையது பொட்டிக்கடை.

ராஜ நடராஜன் said...

//பதிவு போட வந்துட்டு பொறவு ஏன் பொட்டியில் படம் போட்டீங்க!!!
என்னா படம் இரவு 12.30 மணிக்கு தனியாக படம் போட்டு பார்த்தன் மர்மம் என்ன?

இது 12 மணிக்கான பின்னூட்டம்.//

பின்ன படம் போட காமிராப் பெட்டியத் திறக்க வேணாமா?
நீங்க நினைக்கிற மாதிரி படம் பார்க்கறதுக்கு மனமும் இல்லை நேரமும் இல்லை.வீட்டுக்கு வந்தா முன்னமெல்லாம் தங்ஸ் ஆனந்தம் சீரியல அம்புட்டு ருசியாப் பாக்கும்.கூடவே உச் கொட்டறதுக்கு தங்ஸோட தம்பியோட தங்ஸ் :)
வேற வழி? நாமலும் பேன்னு அதுகளோட ஜோதில ஐக்கியமாயிடறது.இப்ப கலைஞர்ல உங்க தலயோட சிரிக்கலாம் வாங்க,10மணிப் பாட்டு.மக்கள் டிவி அம்புட்டுதேன்.

ராஜ நடராஜன் said...

//அமீரக மக்கள் அனைவரும் கடமை வீரர்கள்...5 மணிக்கு மேல் கோடி ரூபா கொடுத்தாலும் கும்மி அடிக்க மாட்டார்கள் ஆபிசில் இருந்து.
கும்மி அடிக்க ஓவர் டைம் கொடுத்தால் உங்களது கோரிக்கை பரிசீலனை செய்யபடும்//

என்னத்த சொல்றது? :)))))) ச் பிடிக்குது ப் பிடிப்பதில்லை.

ராஜ நடராஜன் said...

//குத்துமதிப்பாக இது மதியம் 1 மணிக்கான பின்னூட்டமாக வெச்சுக்குங்க.//

ஆமா குத்துன்னாலும் குத்து கும்மாங்குத்து:)

ராஜ நடராஜன் said...

//இப்படி 3.17 போட்ட பின்னூட்டத்தை 3.18 ஆகும் முன்பே ரிலீஸ் செஞ்சா, உங்க பதிவு முதல் பக்கத்தில் இருந்து காணாம போகாம, சிலை மாதிரி நட்டுக்காவா நிற்க்கும்?//

இல்லியே நான் 3.19க்குத்தானே ரிலிஸ் செய்தேன். சிலை மாதிரி நட்டுவைக்க கமல்சார்கிட்டதான் இனி ஆலோசனை கேட்கணும்.

ராஜ நடராஜன் said...

// அப்ப அவருக்கு போலியா நீங்க?:)))

அதுக்கெல்லாம் பயந்துதானே நான் கூட ஒரு வருசமா பம்மிப் பம்மி பதிவுக்கு வந்தேன்.

நம்ம பொட்டிக்கடை காத்து வாங்குனதாலேயும் இதுவரைக்கும் யாருக்குமே அனானிப் பின்னூட்டம் போடாததாலேயும் இப்ப அந்த பயம் இல்ல.

ராஜ நடராஜன் said...

// rapp said...
சீக்கிரமா உங்க பிரச்சினை குறைஞ்சு, நீங்க விரும்பினபடி உங்க பதிவுகள் தெரிய வாழ்த்துக்கள் :):):)///

அப்ப என் பதிவு எல்லாம் என்னா ஆவது?:))) இருந்தாலும் நானும் வாழ்த்திக்கிறேன்.//

வாழ்த்துக்கள் பலிக்கும் போலதான் தெரியுது:)

ராஜ நடராஜன் said...

//கவுத்துப்புட்டீங்களே....அவ்வ்வ்வ்வ்வ்வ்
தமிழ்ப்பிரியன் என்ற பெயரில் வேற ஒரு பதிவர் இருக்கார்... அந்த பெயரை உபயோகித்தால் உரிமைப் பிரச்சினை வரும்ண்ணே.... இரண்டையும் தனியா வாசிங்க சரியாயிடும்.... :))//

தமிழ் (ப்) பிரியன்.இதுவும் தருமி அய்யா உங்களுக்கு அப்ப சிபாரிசு செஞ்ச பேருதான்.

ராஜ நடராஜன் said...

// தருமி அய்யா மிகப்பெரியவர் அவரு துண்டு சீட்டு எல்லாம் அனுப்ப கூடாது...பெரிய பெட்சீட் தான் அனுப்பனும்.//

தருமி அய்யா உங்க காதுல விழுந்திச்சா?இந்த மாதிரி லொல்லு மனசன வச்சுகிட்டு தமிழ்மணமும் இத்தனை நாள் காலந்தள்ளிருச்சு:)

ராஜ நடராஜன் said...

// டாக்டர் ராயல் ராம் வழங்கினாரா? அவரு அழகிய தமிழ் மகன் பார்த்ததில் இருந்து விஜய் வெறியர் ஆகி விட்டார். அதானால் அவர் தலைவரை போல அவரும் டாக்டர் ராயல் ராம் ஆகிவிட்டார். அது போல் பட்டங்களும் வழங்கி வருகிறார்.//

இதுக்குப் பதில் ராப் கவிஜாயினிதான் சொல்லணும்:)

ராஜ நடராஜன் said...

// உங்கள் துயர் துடைக்க இதோ ஐந்தாவது பின்னூட்டம்!//

பரிசல்காரரே துயர் துடைப்பது படத்தில் நல்லாவே தெரியுது.இப்ப பதிவிலும் தெரியுது.நன்றி.

ராஜ நடராஜன் said...

// நான் பதிவு போட்டு விட்டு திரும்பி வந்து தமிழ்மணம் முதல் பக்கத்தை பார்த்தா டக்கு டக்குன்னு எங்கிருந்துதான் பதிவு போடுவாங்களோ தெரியாது பதிவு போட்டு என்னை கீழே தள்ளி விட்டு விடுவார்கள். ஒருத்தரும் பார்க்க மாட்டாங்க:((( அந்த குறை எனக்கு இருக்கு !!!//

இதுக்குப் பதில் கடைசியில சொல்றேன்.

ராஜ நடராஜன் said...

// குசும்பன் கும்மி அடிக்கும் வேலைய கூட ஒழுங்கா செய்வது இல்லை என்று தப்பா நினைக மாட்டாங்கா:(((( //

அதென்னமோ உண்மைதான். கும்மி வேலை ஒழுங்கா இல்லதான். கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த கெத்து இப்ப இல்ல:((((

ராஜ நடராஜன் said...

// 25 ஆச்சான்னு தெரியல! அதுனால இதோ இன்னொரு பின்னூட்டம்!

வர்ட்டா!!! //

ஹி...ஹி அரைசதம் தாண்டும் போல பரிசில்காரரே:)

ராஜ நடராஜன் said...

// குருவை மிஞ்சியா அவ்வ்வ்வ்! //

வருது வருது பதிவு வருது:):):)

ராஜ நடராஜன் said...

//நாளை வெள்ளி கிழமை லீவ் அதுக்கு முன்னாடி சொல்லுங்க இல்லை சனி கிழமை சொல்லுங்க.//

இங்க சனிக்கிழமையும் லீவுதான்.படத்த எப்ப ரிலீஸ் செய்யறது மட்டும் சொன்னாப் போதும்.ஞாயிறு மக்களுக்கெல்லாம் தூங்குற நாள்.பொட்டியத் திறப்பாங்களோ என்னமோ?

டிஸ்கி: ஒரு பதிவ ரிலிஸ்ப் பண்ணவே நம்ம இத்தனை யோசனை பண்ணுறோமே! தசாவதாரம் ரிலிஸ் செய்ய எவ்வளவு யோசனைப் பண்ணியிருப்பாங்க:)?

ராஜ நடராஜன் said...

// குறை இருப்பின் சொல்லுங்க திருத்திக்கிறேன். //

அதான் சொன்னேனே "ச்" தெரியுது "ப்" தெரியலன்னு.

ராஜ நடராஜன் said...

பின்னூட்டக் களத்தின் பதிலடியின் இறுதிக்கு வந்தாச்சு.இனி குசும்பரே கடைசியில சொல்றேன்ல.

மெகா ஹிட் 75 அக்காட்டுது.ஆனா ஆன்லைன்ல விண்ணப்பிக்கும் "மத்திய கிழக்கு நாடுகளின் வேலை வாய்ப்புக்கள்" ன்னு ஒரு பதிவப் போட்டேன்.இகுவேட் (அங்க இருக்கான்னு தெரியல) நம்ம பெருசு ஜார்ஜ் புஷ் பங்குதாரர்ன்னு அரசல் புரசலா கேள்வி.யாருக்காவது வேலை வாய்ப்பு அமைந்தால் இந்தக்கும்மியெல்லாம் ஜுஜிபி.ஒரு ஆளக் காணோம் ஒரு சந்தேகம் கேட்கக் கூட.விளங்கிடும்.

பிரேம்ஜி said...

இதோ நானும் வந்துட்டேன்...

:-))

பிரேம்ஜி said...

வலது புறம் மட்டும் என்ன வாழுது? ரெண்டு மடக்கு டீ சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள பார்த்தா வலது புற மறுமொழியை காணோம்.

பிரேம்ஜி said...

நண்பர் பரிசல்காரன் செஞ்சுரி போட போறார்னு நினைக்கிறேன்.

பிரேம்ஜி said...

ஒரு அனானி வந்தாரு உங்க பதிவுக்கு.நீங்க தான் பேரோட வந்தா வா, இல்லைன்னா வராதேன்னு விரட்டி விட்டுடீங்க :-))))

தாமிரா said...

என்ன சொல்லி பாராட்டுறதுன்னே புரியலை. உங்களது ஒவ்வொரு ஆதங்கமும் அருமை. யாராவது படிக்கணுமே பாராட்டணுமே என்றுதானே 'திங்க்' பண்ணி எழுதுகிறோம். பதிவைப் போட்ட அடுத்த நிமிடமே காணாமல் போனால் எப்படியிருக்கும்.? எனக்கும் முதலில் அழாத குறைதான். இப்போ கொஞ்சம் பரவாயில்லை. (ஹிட்ஸ் 1000 தாண்டிவிட்டது.‍ ஆயிரத்துக்கே எப்படி சந்தோஷப்படுறேன் பாத்தீங்களா?, நிலைமை அப்படி!)பதிவு அவ்வளவு பிரமாதம். குசும்பன் பின்னிட்டாரு. பரிசலைப் பற்றி இப்போ விளங்கியிருக்கும்னு நினைக்கிறேன் (ஒருனா இப்பிடிதான்.. தெரியாம கேட்டுப்புட்டேன். வந்து கும்மு கும்முனு கும்மிட்டாரு)
//ஒரு ஆளக் காணோம் ஒரு சந்தேகம் கேட்கக் கூட.விளங்கிடும்.// விழுந்து விழுந்து சிரித்தேன்.

வாழ்த்துக‌ள் ந‌ட‌ராஜ‌ன். க‌ன்டென்ட் ம‌ட்டுமில்லாது உங்க‌ள் ந‌டையும் மிக‌ச்சிற‌ப்பு!

rapp said...

அடடே ரொம்ப நேரம் ஆகிடுச்சி, நான் திரும்பவும் ஒரு பிரசன்ட் சார் சொல்லிக்கறேன்

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

இப்போ பொட்டிக்கடை கேரிஃபோர் ஆயிருச்சு போல...எகப்பட்ட கூட்டம்

பரிசல்காரன் said...

75ஆ?

ஏய்ய்.. யாரது அங்கே... இவரே 75வது கமெண்ட் போடும்வரை என்ன செய்து கொண்டிருந்தாய்?

பரிசல்காரன் said...

//குசும்பன் said

துயர் துடைக்க வந்த பரிசல்காரரே வாங்க ஒரு கை குறையுது...தனியா கும்மிட்டு இருக்கேன்...
//

ஆளனுப்பிருந்தா இவரு அழறவரைக்கும் வந்து கும்மீருப்போம்ல! (இப்பவே அழுதுட்டுதான் இருக்காரு!!)

பரிசல்காரன் said...

//
பரிசல்காரரே! உங்களுக்குப் பதில்கூட சொல்ல விடாம குசும்பர் அடிச்சு ஆடிகிட்டு இருக்கார்.எந்தப் பந்து எந்தப் பக்கம் போகுதுன்னே தெரியல.நீங்க போட்ட பந்துகளையெல்லாம் தேடித்தான் கண்டு பிடிக்கணும்:)//

குசும்பன் இருந்தார்ன்னா நான் எப்பவுமே ரன்னர் சைடுலதான் இருப்பேன்! அவர்தான் மாஸ்டர் பேட்ஸ்மேன்!

பரிசல்காரன் said...

//யாருக்காவது வேலை வாய்ப்பு அமைந்தால் இந்தக்கும்மியெல்லாம் ஜுஜிபி.ஒரு ஆளக் காணோம் ஒரு சந்தேகம் கேட்கக் கூட.விளங்கிடும்.//

அது அப்படித்தான். இன்னைக்கு விஜை அவார்ட்ஸ் பாத்தேன். மொழி, பருத்திவீரன்ன்னு நாமினீஸ் இருக்க போக்கிரி ப்ரைஸ் வாங்குது!! என்னாத்த சொல்ல!

பரிசல்காரன் said...

//தாமிரா...

பரிசலைப் பற்றி இப்போ விளங்கியிருக்கும்னு நினைக்கிறேன் ஒருனா இப்பிடிதான்.. தெரியாம கேட்டுப்புட்டேன். வந்து கும்மு கும்முனு கும்மிட்டாரு)//

ரொம்பப் புகழாதீங்க! புல்லரிக்குது!

பரிசல்காரன் said...

//பின்னூட்டக் களத்தின் பதிலடியின் இறுதிக்கு வந்தாச்சு//


இறுதி-ன்னு நீங்களா எப்படி முடிவு பண்ணலாம்???

பரிசல்காரன் said...

//
ஹி...ஹி அரைசதம் தாண்டும் போல பரிசில்காரரே:)//


சதமடிக்காம விடறதில்ல இன்னைக்கு!

பரிசல்காரன் said...

//பரிசல்காரரே துயர் துடைப்பது படத்தில் நல்லாவே தெரியுது.இப்ப பதிவிலும் தெரியுது.நன்றி.//

இப்போ பின்னூட்டத்திலயும் தெரியுதா?

Anonymous said...

//நம்ம பொட்டிக்கடை காத்து வாங்குனதாலேயும் இதுவரைக்கும் யாருக்குமே அனானிப் பின்னூட்டம் போடாததாலேயும் இப்ப அந்த பயம் இல்ல.///

இப்போ போட்டாச்சுல்ல!!

ராஜ நடராஜன் said...

// ஏய்ய்.. யாரது அங்கே... இவரே 75வது கமெண்ட் போடும்வரை என்ன செய்து கொண்டிருந்தாய்? //

பரிசு:)படத்துல குப்பை கூட்டுறீங்களா!!!

(ஏதாவது புரியுதா?)

கப்பல்காரன் said...

இது ஒரு பதிவு, இதுக்கு இத்தனை பின்னூட்டம்.. இறைவா இந்த பதிவர்களை நீதான் காப்பாத்தணும்!!

கப்பல்காரி W/o கப்பல்காரன் said...

எனது கணவரின் பெயரில் பின்னூட்டம் போட்ட பரிசல்காரனைக் கண்டிக்கிறேன்!

பரிசல்காரன் said...

//
பரிசு:)படத்துல குப்பை கூட்டுறீங்களா!!!

(ஏதாவது புரியுதா?)//

என்ன இடையூறு வரினும், எள்ளி நகையாடினாலும் சதமடிக்கும் லட்சியத்தை கைவிடோம்!

பரிசல்காரன் said...

கமெண்ட்ஸை சீக்கிரமா ரிலீஸ் பண்ணுங்கய்யா.. எத்தனையாச்சுன்னே தெரியல..

சீக்கிரம் முடிச்சுட்டு வேற பதிவுக்கு போகணுமில்ல..

ராஜ நடராஜன் said...

// இப்போ பொட்டிக்கடை கேரிஃபோர் ஆயிருச்சு போல...எகப்பட்ட கூட்டம்//

அண்ணா அங்கேயும் கேரிஃபோர் தானா?
இங்கேயும்(குவைத்) மற்றும் இங்கேயும்(நம்ம பொட்டிக்கடை) ஏகப்பட்ட கூட்டம்.அதுல பாதிக்கூட்டம் குசும்பு & கும்மி குழு.

பரிசல்காரன் said...

//வாழ்த்துக‌ள் ந‌ட‌ராஜ‌ன். க‌ன்டென்ட் ம‌ட்டுமில்லாது உங்க‌ள் ந‌டையும் மிக‌ச்சிற‌ப்பு!//

இவரு பாருங்க.. ரொம்ப சீரியஸா பதிவப் படிச்சிருக்காரு போல.. ஹையோ.. ஹையோ!!

பரிசல்காரன் said...

//அதுல பாதிக்கூட்டம் குசும்பு & கும்மி குழு.//


இது சேத்தின கூட்டம் இல்ல. தானா சேர்ந்த கூட்டம்!

பரிசல்காரன் said...

//ஒரு பதிவ ரிலிஸ்ப் பண்ணவே நம்ம இத்தனை யோசனை பண்ணுறோமே! //

யாரு.. நீங்களா.. நம்ம பக்கமெல்லாம் யோசனையே இல்ல!!

பரிசல்காரன் said...

ஏன் இப்போ கமெண்ட் பாக்ஸ் ரைட் சைடுல வராம கீழ வருது???

(ஆஹா.. பரிசல் உருப்படியா கேள்வி கேகுறியே?? தப்பு.. தப்பு.. !!)

ராஜ நடராஜன் said...

தாமிரா! உங்க கல்யாணமாகதவர்களுக்கு கன்சல்டன்சி எப்படி நடக்குது?

(கன்சல்டன்சி எப்படி நடக்குமுன்னு குசும்பன் பின்னூட்டம் போடறதுக்கு முன்னாடி நான் முந்திக்கிறேன்:):):)

பரிசல்காரன் said...

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//

அதத்தான் கொஞ்சம் சீக்கிரம் பண்ணித் தொலைங்களேன்...

பரிசல்காரன் said...

ஹலோ.. இங்க அவனவன் பொழப்பு கெட்டு உக்கார்ந்துட்டு சதமடிக்க ட்ரை பண்ணீட்டிருக்கான்.. என் கமெண்ட்ஸையெல்லாம் போடாம, என்னென்னவோ கேட்டுட்டிருக்கீங்க??

குசும்பன்கிட்ட கம்ப்ளெய்ண்ட் குடுக்கவா?

ராஜ நடராஜன் said...

// இதோ நானும் வந்துட்டேன்...

:-)) //

உங்கள் வருகை மாதிரி சந்தோசம்தான் எனக்குப் பிடிச்சிருக்கு.

ராஜ நடராஜன் said...

// பதிவுகள் வேகமாம முதல் பக்கத்துல இருந்து காணாம போய்டுது :-(//

நேத்து கடை காத்து வாங்குதேன்னு கவலைப்பட்டா இன்னிக்கு கும்மில பதிவு வேகமா காணாமப் போறதும் கூட நல்லது மாதிரிதான் தெரியுது.எல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பழமொழிதான்:)

ராஜ நடராஜன் said...

// அது அப்படித்தான். இன்னைக்கு விஜை அவார்ட்ஸ் பாத்தேன். மொழி, பருத்திவீரன்ன்னு நாமினீஸ் இருக்க போக்கிரி ப்ரைஸ் வாங்குது!! என்னாத்த சொல்ல! //

பரிசு இது மட்டும்தான் உங்களது பின்னூட்டம்.மற்றதெல்லாம் உங்களது படம் என்பதால் பரிசு இதுக்கு மட்டுமே:)

ராஜ நடராஜன் said...

// இப்போ போட்டாச்சுல்ல!!//

அனானி! நாகரீகமாகவேப் பின்னூட்டமிட்டாலும் இந்தப்பதிவர்களின் சண்டைகளுக்கு முதற்படி இந்த முகமூடிதான்.நம்ம கடைக்கு கூட்டம்தான் தேறுலேயே தவிர அனைத்துக் கலாட்டாக்களையும் நன்கு கவனித்தே வந்து இருக்கிறோம்.எனவே முகமூடியெல்லாம் கழட்டி வச்சிட்டு நல்ல பிள்ளையா வாங்க பார்க்கலாம்.இத்துடன் அனானிகளின் படலாம் நின்று விட்டால் மகிழ்ச்சி.இல்லையெனில் பதிவுதான் விடிவு.

ராஜ நடராஜன் said...

//அடடே ரொம்ப நேரம் ஆகிடுச்சி, நான் திரும்பவும் ஒரு பிரசன்ட் சார் சொல்லிக்கறேன்//

புண்ணியவதி வாழ்த்து கும்மி கும்மின்னு கும்மியடிக்குது:)

துளசி கோபால் said...

என்னங்க இது.....கடையிலே கூட்டம் இப்படி அம்முது......

சரியான 'தலை'ப்பைப் புடிச்சீங்க பாருங்க....அது:-))))

உங்களுக்கும் எங்களுக்கும் 9 மணி தூரம்.

நீங்க தூங்கப்போகும்போது நான் தூங்கி எந்திரிச்சு, காலை எழுந்தவுடன் படிப்புன்னு பாரதியார் சொன்னதைக் கடைப்பிடிச்சுக்கிட்டு இருப்பென்லெ:-)))

பரிசல்காரன் said...

//ராஜ நடராஜன் said...

// இப்போ போட்டாச்சுல்ல!!//

அனானி! நாகரீகமாகவேப் பின்னூட்டமிட்டாலும் இந்தப்பதிவர்களின் சண்டைகளுக்கு முதற்படி இந்த முகமூடிதான்.நம்ம கடைக்கு கூட்டம்தான் தேறுலேயே தவிர அனைத்துக் கலாட்டாக்களையும் நன்கு கவனித்தே வந்து இருக்கிறோம்.எனவே முகமூடியெல்லாம் கழட்டி வச்சிட்டு நல்ல பிள்ளையா வாங்க பார்க்கலாம்.இத்துடன் அனானிகளின் படலாம் நின்று விட்டால் மகிழ்ச்சி.இல்லையெனில் பதிவுதான் விடிவு.//

என்ன முகமூடியக் கழட்டறது? கண்டினியூசா கும்மறப்பவே தெரியவேண்டாமா, அது நாந்தான்னு? ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே?

என்ப்படியோ என்னோட ஒரு கமெண்டுக்காவது சீரியஸா மறுபின்னூட்டம் போட்டிருக்கீங்களே...

பரிசல்காரன் said...

110ஆ? ம்ம்ம்ம்ம்...

அப்படியே ரிவர்ஸில போய் கவுண்ட் பண்ணினா, நூறுல நாந்தான் இருக்கேன்!

ஒக்கே! ஒக்கே!

தாமிரா said...

நானும் தேன்கூடு, தமிழ்வெளி‍‍‍-ன்னு என்னென்னவோ முயற்சி பண்றேன். ம்ஹூம், ஒண்ணும் பெயர மாட்டேங்குது.

//தாமிரா! உங்க கல்யாணமாகதவர்களுக்கு கன்சல்டன்சி எப்படி நடக்குது?//

பாருங்க‌, எச்ச‌ரிக்கை-2 ஐ த‌ட்டிவுட்டேன்.. கொஞ்ச‌ நேர‌த்திலேயே அம்பேல். உங்க‌ளுக்கு பின்னூட்ட‌மிட்டா அத‌ப் பாத்துட்டு யாராவ‌து ந‌ம்ப‌ க‌டைக்கு வ‌ருவாங்க‌ன்னு பாத்தா, இங்கே ப‌ரிச‌லைத்த‌விர‌ யாரையுமே காண‌லை.(யாருமில்லாத‌ க‌டையில யாருக்காக இவ்வ‌ள‌வு சின்ஸிய‌ராக‌ டீ ஆத்திக்கிட்டு இருக்காரோ?) என்ன‌ ப‌ண்ற‌து சொல்லுங்க‌?