பயணம் துவங்கும் முன் பதிவர் கிரி கண்ணில் பட்டார்.எனக்கு ரஜனி சாரிடம் நிறைய ஆன்மீகம்,தனி மனித எளிமை,அரசியல் குழப்பங்கள் பற்றி நிறைய சந்தேகங்களை கேட்க வேண்டியுள்ளது.
பதிவுப்பக்கம் வருபவர்களே பதிவுக்கு வருவதில்லைங்கிறபோது அவருக்கெல்லாம் நமது பதிவுப்பக்கம் வருவதற்கான நேர,கால அவகாசங்களோ அல்லது இருந்தாலும் பதிவு பற்றி சொல்வதற்கு யார் இருப்பார்கள் என்ற சந்தேகத்திலும் அவர் வராவிட்டாலும் நம்ம சின்ன ரஜனி கிரி நம்ம பதிவுப் பக்கம் எட்டிப் பார்க்கிறாரே என்ற சந்தேகத்தில் எந்திரன் எப்ப வெளீயீடுங்க என்றேன்.அதற்கு அவர் படைக்கும் சங்கருக்கும் கூட தெரியாத புரியாத புதிர் என்றார்.சரி எனக்கு இன்னொரு சந்தேகமுங்க என்றேன்.கேளுங்க என்றார்.இந்தப் படத்தைக் கொஞ்சம் பாருங்கள் இது எப்படிங்க சாத்தியமென்றேன்.

அதற்கு அவர் இந்த பூமராங் கூட நம்புறீங்க இது பற்றி ஏன் மக்கள் நம்ப மாட்டாங்க அதுவும் ரஜனி ஸ்டைலில் செய்யும் போது என்றார்.இஃகி!இஃகி(பழமைவாசம்)இதை கோளங்கள் பகுதி 4 ல் உள்ள உலக அதிசயப் படஙகளோடு ஒரு அதிசயமாகத்தான் சேர்க்கலாமுன்னு இருந்தேன்.விடுபட்டுப் போனதால் இங்கே இடைச்செறுகலா ட்ரெயிலர் காட்டியாச்சு.இனி பிலிம் காட்டலாமா:)
தட்டச்சும்போது எதையும் யோசித்து வைத்துக்கொண்டு துவங்கவில்லை.எனவே மனம் இழுத்துச் செல்லும் வழியில் நானும் பதிவுப் பக்கம் எட்டிப்பார்ப்பவர்களும்.
Now we are going to dig inside of the matter in an inverse trip...

செடி,கொடி,இலை,இயற்கை வளங்களைப் பற்றி நினைக்கும் போது இன்னொரு கிளிக் மனதில்.ஒரு வார இறுதி கூட்டுக்கும்மாளத்தில் நண்பர்களுக்கிடையில் பலபொருள் பேசி ஒன்றிலும் ஒட்டாத விவாதம்.அதில் ஒன்று இப்பொழுது நினைவுக்கு வருவது நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஒளி அதனூடே விரிந்த ஐம்பூதங்களையும் வணங்குவதே இந்தியக்கலாச்சாரத்தின் துவக்கமாகவும் உருவங்களும் அதனூடே உருவான உருவாக்கங்களுமே இலக்கியம்,இசை,கட்டிடக்கலை,ஓவியம் என்ற மதம் சார்ந்த உருவகங்கள் என்று விவாதங்கள் தொடர்ந்தது.

இயற்கையின் மாற்றங்கள் கொண்டு புல்,பூண்டுகள் முளைத்திருக்க வேண்டும்.அப்படி உருவான புல்,பூண்டுகளின் ஒரு அங்கமான இலைதான் தாவிரவியலுக்கான அணுவை நோக்கிய பாகம் 1.என்னய்யா இலை,தழைன்னு ஒரே சைவமா தெரியுதுன்னு நொந்து கொள்பவர்களுக்கு, நாம் இலை,மரம்,செடி,கொடிகளின் சூரிய வம்சா வழிகள்.உதாரணம் வேண்டுமென்றால் வேப்பிலை அடிப்பது,வாழை இலையில் சாப்பிடுவது,தென்னங்கீற்றிலே வீடு இன்னும் உங்களுக்குத் தெரிந்த இயற்கை சார்ந்த இயல்புகள் பலவும்.

வாழை இலை என்றதும் சின்ன வயதில் அப்பா வயிற்றுப்போக்குக்கு தரும் மருத்துவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.வாழை மரத்தை முழங்கால் அளவுக்கு விட்டு வெட்டி அதன் நடுக்குருத்தை குமிழ் கரண்டி வடிவத்தில் வெட்டி எடுத்து விட்டு, சமைக்கிற சீரகம் இருக்குதல்லவா? அதனை சிறிது கொட்டிவிட்டு ஒரு வாழை இலையை மேல் போர்த்தி மூடி விடுவார்.சில மணி நேரம் கழித்தோ அல்லது அடுத்த நாள் காலையிலோ மூடிய வாழை இலையை திறந்து பார்த்தால் வாலைக்குருத்து நீர் சீரக வாசத்துடன் மிதந்து கொண்டிருக்கும்.அந்த நீரை தேநீர் கரண்டி கொண்டோ அவசரத்துக்கு வாழை இலையையே கரண்டியாக குவித்து சீரக குருத்து நீரை குடிப்பதற்கு தருவார்.அப்புறம் என்ன வயிற்றுப் போக்கு போயே போயிந்தி.இந்த வைத்தியம் நல்ல பிள்ளைகளுக்கு ஒரு முறை செய்தாலே போதும்.ஆனால் என்னை மாதிரி ஒரே நாளில் 10 பூவாழ,5 செவ்வாழ,5 பச்ச வாழ,(உண்மைதான்!நம்புங்க)கொய்யப் பழம்,செடியிலேயே பழுத்த தக்காளின்னு சிறு தீனியும் கூடவே கூட்டாளிக கூட கடிக்கும் கமறுகட்டு,கடலைமிட்டாய் போன்ற வாயசைப்பும்,காலையிலே சோளக்கூழும்,மதிய,இரவு சோறும் விழுங்கும் கடோத்கஜனுக்கு மறுபடியும் வயிற்று பேதி வந்து தொலைக்கும்.அப்புறமென்ன இருக்கவே இருக்கு வாழக்குருத்து நீரும் சீரகமும்.
(நாத்திக நம்பிக்கை கொண்டவர்கள் யாரேனும் பதிவுப்பக்கம் எட்டிப்பார்த்தால் மேலே உள்ள படத்தின் அழகை ரசிக்க வேண்டுகிறேன்.நான் ஆத்திகம்,நாத்திகம்,மனிதர்களை மதிக்கும் மனோநிலைக்கு வந்து விட்டதால் இவைகளுக்கும் அப்பாலான பார்வையில் பார்க்கிறேன்.
(படம் Design Flute வலைத்தளத்திலிருந்து சுடப்பட்டது)
இனி பதிவுப் பக்கம் திரும்பினால் கோளங்களை நோக்கிய பதிவின் அதே கணக்குதானுங்க.கணக்கெல்லாம் கன கச்சிதமாக இருக்கும்.சத்யம் மாதிரி பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாத துல்லியமான கணக்கும் அதனைச் சார்ந்த படங்களும் உங்கள் பார்வைக்கு....




இனி வரும் பகுதியில் மேலும் மைக்ரோ உள் கட்டமைப்புகளைக் காணலாம்.
8 comments:
//மைக்ரோ உள் கட்டமைப்புகளைக் காணலாம்.
//
நல்லா இருக்கு....காத்துகிட்டு இருக்கோம்....கால அவகாசம் இருக்கும் போது போட்டுப் படல் எடுங்க!
//நல்லா இருக்கு....காத்துகிட்டு இருக்கோம்....கால அவகாசம் இருக்கும் போது போட்டுப் படல் எடுங்க//
இஃகி!கி!கீ! முதல் போணி.நன்றிங்கண்ணா
ஆஃகா!
இதுவரை உங்கள் பதிவுப் பக்கம் வாராதிருந்தேனே!
பிரமாதம்!!
விட்டா ரஜினிய விட்டு சப் அடாமிக் துகளை(எழுதும்போது போஸ் ஞாபகம் வருது)தகர்த்து ”கடவுள் துகளை” கண்டு பிடித்து விடுவீர்கள் போல உள்ளதே!! சும்மா சிரிப்புக்காக!!இஃகி இஃகி.......
very good approach
deva..
//ஆஃகா!
இதுவரை உங்கள் பதிவுப் பக்கம் வாராதிருந்தேனே!
பிரமாதம்!!
விட்டா ரஜினிய விட்டு சப் அடாமிக் துகளை(எழுதும்போது போஸ் ஞாபகம் வருது)தகர்த்து ”கடவுள் துகளை” கண்டு பிடித்து விடுவீர்கள் போல உள்ளதே!! சும்மா சிரிப்புக்காக!!இஃகி இஃகி.......//
வாங்க தேவா!இப்பவாவது வந்தீங்களே ரொம்ப சந்தோசமுங்க:)
ரெம்ப அருமையா இருக்கு படங்களும் விளக்கங்களும், அடுத்த பாகத்திற்கு காத்து இருக்கிறேன்
வாசனையான அறிவியல் பதிவு, இடையில் அழகாக பிள்ளையார்.
தொடரட்டும் உங்கள் தொண்டு.
thenkodu javascript a remove pannunga
Post a Comment