Followers

Tuesday, January 20, 2009

கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்

பழமை சரமாரிப் பொழியும்படி பாடல்கள் எடுத்து விடுகிறார்.தமிழும்,இலக்கியமும்,பாடல்களும் புகுந்து விளையாடும் படியான பதிவுகள்.இலக்கியவாதி ன்னு பெயர் வைக்க வேண்டியவர் பழமைவாதின்னு வைத்துக்கொண்டார். அவரோடப் பாடல்களைப் படிக்கும் போது நாமளும் நம்ம அனுபவத்துக்கு ஒரு சினிமா பாடலை எடுத்து விடலாமேன்னுதான் இஃகி!இஃகி! இந்தப் பதிவு.


கோவை வாழ்நாட்களில் ஒரு நாள்....

நானோ இளமை எட்டிப்பார்க்காத வயதுக்காரன்.கலப்புத் திருமணம் செய்து கொண்ட நண்பர் ஒருவர் இரண்டு மகன்களுக்கு தகப்பனார்.வயது வித்தியாச நட்பாக இருந்தாலும் ஓசிப் புத்தகம் கொடுக்கல் வாங்கல்,சினிமாவுக்கு ஒண்ணாப் போவது,டீ குடிப்பது,பொது விசயங்களை என்னிடம் பேசுவது ,சில சமயம் அவரது சொந்த விசயங்களைக் கூடப் பகிர்ந்து கொள்ளும் நண்பர் சின்னசாமி.ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போது

பாடல்கள் என்றால் கண்ணதாசன் பாடல்கள் மாதிரி இருக்கவேண்டும் என்றார்.

கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்.

இந்த சரணத்தில் துவங்கும் பாடலின் வரிகளான

அவனை அழைத்து வந்து
ஆடடா ஆடு என்று
ஆடவிட்டு பார்த்திருப்பேன்
படுவான்!பாடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவி மகன் பெண்குலத்தை
படைப்பதையே நிறுத்தி வைப்பான்.

என்ன ஒரு அனுபவசாலிடா கண்ணதாசன் என்றார்.எனக்கு இந்தப் பாடல் எந்தப் படமென்று கூட இன்று வரை தெரியவில்லை.ஆனால் அந்தப் பாடல் வரிகளை அவர் ரசித்து சொன்னவிதம் இன்று வரை மனதில் நங்கூரமிட்டு உட்கார்ந்து கொண்டது.

முன்பெல்லாம் பாடல் என்றால் அதன் அழகிலே மனம் மயக்கம் போட்டுவிடும்.இப்ப தொட்ட தொண்ணூறுக்கும் காரண காரியங்கள் ஆராய்வதால் பாடலின் வரிகளில் முரண்படுவதோடு பெண்ணியம் கவுரவப்படுத்தவேண்டும் என்ற நிலைக்கு மனம் வந்து விட்டதாலும் பெண்குலத்தை நிறுத்தவேண்டும் என்று கள்ளிப்பால் கலாச்சாரம் புகுந்துவிட்டதாலும் பாடல் வரிகள் உலக இயங்குதலுக்கு மாறானது.எனவே கவிதைக்குப் பொய் அழகு மட்டுமே.

நண்பர் பாடலை அனுபவித்து சொன்னதற்கும் சில காரணங்கள் உண்டு.அதனை சொல்வதற்கு அவர் முன் அனுமதியும் தேவையென்ற காரணத்தால் கண்ணதாசன் பாடலின் ரசனை மட்டும் உங்கள் பார்வைக்கு.

6 comments:

SP.VR. SUBBIAH said...

முழுப்பாடலையும் கீழே கொடுத்துள்ளேன்


"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்!

(கடவுள்)

எத்தனை பெண் படைத்தான்
எல்லோர்க்கும் கண் படைத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசையெனும் விஷம் கொடுத்தான் - அதை

ஊரெங்கும் தூவி விட்டான்
உள்ளத்திலே பூச விட்டான்
ஊஞ்சலை ஆட விட்டு
உயரத்திலே தங்கி விட்டான்....

அவனை அழைத்துவந்து
ஆசையில் மிதக்க விட்டு
ஆடடா ஆடு என்று
ஆட வைத்துப் பார்த்திருப்பேன்!

படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண்குலத்தைப்
படைக்காமல் நிறுத்தி வைப்பான்!

(கடவுள்)

படம் வானம்பாடி (வருடம் 1962)
---------------------------------------------------------------------

ராஜ நடராஜன் said...

வாங்கய்யா வாத்யாரய்யா!முழுப்பாடலும் மனப்பாடம் போல இருக்குது உங்களுக்கு.இதுதான் ஆசிரியருக்கும் என்னைப் போன்ற கத்துக்குட்டிக்கும் உள்ள தூரம்:)

//எத்தனை பெண் படைத்தான்
எல்லோர்க்கும் கண் படைத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசையெனும் விஷம் கொடுத்தான்//

கொல்லுதே.ஆஹா!ஆஹா!

நசரேயன் said...

அவர் நிரந்தரமானவர், எந்த நிலையிலும் அவருக்கு மரணம் இல்லை

ராஜ நடராஜன் said...

//அவர் நிரந்தரமானவர், எந்த நிலையிலும் அவருக்கு மரணம் இல்லை//

கண்ணதாசன் தீர்க்கதரிசனமாத்தான் பாடி வச்சிட்டுப் போயிருக்கார் எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லையென்று.

நாத்திகம்,ஆத்திகம்,வாழ்வியல் ரசித்த ஒரே கவிஞன் கண்ணதாசனாகத்தான் இருக்க முடியும்.

குடுகுடுப்பை said...

கொடுத்து வச்ச மவராசன்.
என்சாய் பண்ணிட்டு போயிட்டாரு

ராஜ நடராஜன் said...

//கொடுத்து வச்ச மவராசன்.
என்சாய் பண்ணிட்டு போயிட்டாரு//

வாங்க முதல்வரே!