முந்தைய அமெரிக்க வெளியுறவுத்துறை சதுரங்கர் கிஸ்ஸிங்கர் காலத்திலிருந்தே பாகிஸ்தான் பூகோளரீதியாக இந்தியா,ரஷ்ய,சீன,ஆப்கானிஸ்தான்,ஈரான் நாடுகளின் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கும் உலகளாவிய அரசியலில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
முந்தைய காலங்களில் இந்தியாவுக்கு தலைவலியாக காஷ்மீர் பிரச்சினையில் நுழைந்து அதில் வெற்றிபெற முடியாமலும்,தற்போதைய காலகட்டத்தில் நீர்வழி மார்க்கமாக பம்பாய் குண்டுவெடிப்புகளில் பெற்ற தாக்கத்தினைக் கருத்தில் கொண்டும் நிலம் வழிக்கு மாற்றாக இப்பொழுது நீர்வழியும் போர்க் கருவியாக உதவும் என்ற நிரூபணத்திலும் பாகிஸ்தான் தனது எதிர்காலக் கனவைக் காண ஆரம்பித்திருக்கிறது.
அதன் பொருளாதார,ராணுவ வளர்ச்சிகளுக்கு இலங்கை தீனி போடக் காத்திருக்கிறது.ஒவ்வொரு நாடும் தமது அயலுறவுக் கொள்கையில் தமக்கு சாதகமான நிலைகளை எடுப்பது நியாயம் என்ற கண்ணோட்டத்தில் தற்போதைய தனது எல்லைக்கு சமீபமாக தமிழ்நாட்டில் ஏற்படும் அரசியல் மாறுதல்களை கவனத்தில் கொண்டும், எதிர்காலத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய இலங்கையின் உறவு நிலைப்பாடுகள் எப்படியிருக்கப் போகிறதோ என்ற மனக்கணக்கிலும், வருங்காலத்தில் தனது தற்காப்பு கருதியும், இந்தியாவிற்கு எதிரான காய்நகர்த்தலாகவோ மாற்று உதவி என்ற கோட்பாட்டில் இலங்கை அரசு பாகிஸ்தானுடனான தமது ராணுவ உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ள விரும்புகிறது.
பாகிஸ்தானும் தனது பொருளாதார வளர்ச்சி கருதியும் இந்தியாவிற்கெதிரான நிலைகொள்வதற்கும் தெற்கு திசையிலிருந்து தனது அரசியல்,போர் சதுரங்கத்தில் காய் நகர்த்தவும் அரிய வாய்ப்பாக அமையப் போகிறது இலங்கை பாகிஸ்தான் ராணுவ உறவு.இந்தியா இலங்கை அரசுக்கு உதவாவிட்டால் பாகிஸ்தான் உதவும் என்ற கூற்றுப் பொய்யாகிப் போகிறது.
மூன்று பக்கமும் நீரினால் சுற்றப்பட்டு இந்தியா மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்ற எண்ணம் மாறும் விதமாக பம்பாய் குண்டுவெடிப்பு,பாகிஸ்தான்-இலங்கை உறவு,இன்னும் எதிர்காலத்தில் இந்தியாவிற்கெதிரான நிலைகள் என வேறு மாற்றங்களும் வரலாம்.
இனி இலங்கையின் டெய்லி மிரர் தளம் தந்த தகவல் கீழே.
Pakistan-Sri Lanka to promote defence coop
ISLAMABAD, Jan 19 (APP): Pakistan and Sri Lanka on Monday underscored the need for maintaining and promoting closer cooperation particularly in the area of defence. This was discussed at a meeting between Secretary Defence, Lt. General ® Syed Athar Ali, and the visiting Sri Lankan Defence Secretary Gotabhaya Rajapakse, who called on him in Ministry of Defence Rawalpindi.
The meeting emphasized the need for developing military to military cooperation at all levels. Secretary Defence told his Sri Lankan counterpart that there existed a wide scope of cooperation between two sides which needed to be further enhanced for the mutual benefits of the two countries.
He said Pakistan would continue to provide support to Sri Lanka in all fields. The meeting agreed to enhance cooperation in the area of military training, exercises and intelligence sharing so as to contain and counter the growing threat of terrorism.
Sri Lankan Defence Secretary stressed the need for closer interaction between the Armed Forces of the two countries.
He thanked the government of Pakistan for its continued support to Sri Lankan Armed Forces.
The visiting dignitary also called on Secretary Defence Production, Lt. General ® Shahid Tirmizey and discussed with him matters of mutual interest.
The Secretary briefed him about the potential of defence industry of Pakistan.
Refered From daily mirror.lk
10 comments:
Thanks for sharing the info! Will get back again later!
நல்ல அலசல், தகவலுக்கு நன்றி
//நல்ல அலசல், தகவலுக்கு நன்றி//
வாங்க நசரேயன்.தூரத்திலிருந்து பார்ப்பதாலோ என்னவோ எல்லாமே துல்லியமாக தெரிகிறது.அயல்நாட்டு விபரமும் விவகாரமும் தமது பணி என இருக்கும் வெளியுறவுத்துறையும்,அரசும் நமது கவலையை மனதில் கொள்ளுமா?
எப்படியோ மனதில் பட்டதை சொல்லி விட்டுப் போவோம்.
இந்த இரண்டு நாட்டுக்கும் உறவு 10-20 ஆண்டுகள் முன்னால் எப்படி இருந்தது?
இலங்கைக்கு உதவி செய்யும் அளவுக்கு பாக்கிஸ்தான் இருக்கிறதா?
அவர்களுக்கே 1000 பிரச்சினைகள் இல்லையா?
//இந்த இரண்டு நாட்டுக்கும் உறவு 10-20 ஆண்டுகள் முன்னால் எப்படி இருந்தது?//
வாங்க வருண்!10-20 வருட இடைக்காலத்தில் காஷ்மீரில் கலக்கி விட்டு மீன் பிடிக்கப் பார்த்தார்கள்.இயலவில்லை.எனவே கவனம் முழுதும் சண்டைக்கு இழுக்கும் நேரடி முயற்சிதான்.புதிய ஸ்ட்ரேடஜியெல்லாம் இப்பொழுதுதான்.
மத்திய அரசு விழித்துக்கொள்ளவேண்டும்.
//இலங்கைக்கு உதவி செய்யும் அளவுக்கு பாக்கிஸ்தான் இருக்கிறதா?//
ஏன் இப்பவே இலங்கைக்கு ராணுவ உதவி செய்வதாக தகவல்.பாகிஸ்தான் கடைத்தெருவில் துப்பாக்கிகள் விற்பதாகக் கேள்வி.
//அவர்களுக்கே 1000 பிரச்சினைகள் இல்லையா?//
தனக்கு ரெண்டு கண்ணு போனாலும் அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போகணும் பாலிசில 1000 த்தோட இது 1001
I really dont understand why should India and Pakistan (they hate each other) try pretending helping Srilanka!
It is unfortunate, everybody uses "tamiz eezam issue"for their political benefits! :(
எனக்கு ரொம்ப புதிரா இருக்கு இது. இந்தியாவும், பாகிஸ்தானும் சேர்ந்து இலங்கைக்கு உதவுறாங்களா?
அதாவது ஈழத்தமிழருக்கு எதிராக செயல்படுறாங்களா?
என்ன கொடுமை ராஜராஜன் இது?
என்னை கேட்டால் அவர்கள் இருவரும் எதிரணியில் இருக்கனும்! Otherwise it does not make any sense!
//I really dont understand why should India and Pakistan (they hate each other) try pretending helping Srilanka!//
Varun!Both have different strategy on Srilanka.
India strategy is simple and transparent.
1.Srilanka soverignty should exist
2.Rajiv Ghandi
3.Different foreign policy and a little bit of dumbness.
Pakistan Strategy is Proxy war
1.Sofar Kashmir is their agenda which do not yield the fruit they expected.
2.Srilanka is another opportunity checkmate to India.
3.New exploration of proxy through srilanka.
Post a Comment