கல்லூரிக் காலங்களில் பெங்காளி முகர்ஜி,சேட்டன் பிரவின், மதராசி நானும் ஒன்றாக ஓடித் திரிந்து கொண்டிருந்தோம்.அப்படி மும்பாயில் ஒரு நாள்...
சென்னையின் திருவல்லிக்கேணி பிரம்மச்சாரிகளுக்கு எப்படி ஒரு வரப்பிரசாதமோ அப்படி ஒரு பிரம்மச்சாரிகளின் வில்லா ஒன்று விலே பார்லேவில் இருந்தது.அப்போதைய மெட்ராஸையும் பம்பாயையும் இணைக்கும் பாலமாக இருந்தது அந்த பிரம்மச்சாரிகளின் கட்டிடம்.
காலை வேளையில் 11 மணி வாக்கில் பக்கத்திலிருக்கும் உடுப்பி ஓட்டலில் ஏதாவது கொட்டிக்கலாமுன்னு மூவரும் சென்றோம்.மும்பையின் பெரும்பாலான உடுப்பி உணவு விடுதிகளின் மேசைதளம் பளிங்கு மார்பிள் கல்லால் செய்யப்பட்டிருக்கும்.பளிங்கு மார்பிள் விலை குறைவின் காரணமாகவோ அல்லது உண்டு முடித்தவுடன் சுத்தம் செய்வதற்கு வசதியாகவோ அந்தக் கல் பதிக்கப் பட்டிருக்க வேண்டும்.உணவுத் தட்டுகளும்,டம்ளரும் சில்வர் பண்டங்களாகவே இருந்தன.தண்ணீரில் போட்டு முக்கி எடுக்கவும்,உடையாத காரணத்தாலும்,வாடிக்கையாளர்களைக் கவருவதற்கும் ஏற்ற பாத்திரங்கள்.நானும்,முகர்ஜியும் ஒரு பக்கமும் எதிர்த்தார் போல் பிரவினும் உட்கார்ந்து கொண்டான்.உபசரிப்பவரிடம் 3 மசாலா தோசை ஆர்டர் செய்து விட்டு ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தோம்.
அப்பொழுது எங்கள் பார்வையில் படும் படியாக 4 குஜராத்தி குஜிலிகள் வந்து பக்கத்து நாற்காலிகளில் வந்து உட்கார்ந்து கொண்டன.பெண்களை லுக் விடுவதில் முகர்ஜி முதலினம்,நான் இடையினம்,பிரவின் மெல்லினம்.பார்வைகள் சரசமாடிக் கொண்டிருந்தன.
அதற்குள் எங்களது மசாலா தோசை,சட்னி,சாம்பார், சில்வர் முள்கரண்டி,ஸ்பூன் சகிதம் வந்து டேபிளில் உட்கார்ந்து கொண்டது.மூவருமே ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்ளாமல் கரண்டியையும்,ஸ்பூனையும் தோசைக்கு அப்பால் நகர்த்தி விட்டு கையால் மசால் தோசையை சாம்பார் சட்னியுடன் பதம் பார்க்க ஆரம்பித்தோம்.பக்கத்து சீட்டு குஜிலிகளின் களுக்கென்ற சிரிப்பு சத்தம்.முகர்ஜி என்னிடம்" nat! they are laughing at us because we are using fingers" என்று கிசு கிசுத்தான்.பிரவின் ஒன்றும் பேசாமல் எங்கள் இருவரையும் பார்த்து மெல்லிதாய் சிரித்து விட்டு தோசையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டான்.
இந்த நேரத்தில் குஜிலிகளுக்கும் தட்டுக்கள் வந்தது.பார்த்தால் 4 மசாலா தோசைகள்.நானும்,முகர்ஜியும் கைக்கும் வாய்க்கும் வேலை கொடுத்து விட்டு கண்களால் எதிர் மேசையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தோம்.அப்பொழுது ஒரு குஜிலி துவக்கமாக ஸ்டைலாக முள்கரண்டியையும்,ஸ்பூனையும் வைத்துக் கொண்டு மெல்ல மசாலா தோசையை குத்த ஆரம்பித்தது.தோசை சில்வர் தட்டுடன் பளிங்குக் கல்லில் ஒரு சுற்று வட்டம் வந்தது.அதற்குள் இன்னொரு குஜிலியும் தோசை சுற்றலில் இறங்க எனக்கு மனசுக்குள் சிரிப்பும் முகர்ஜி நேரிடையாகவே "Hey look look, watch the fun" என்றான்.மச்சா this is our turn to laugh என்றேன் நான்.குஜிலிகளும் பிடிவாதமாக தோசையை சுத்துவதிலும் சிரமப் பட்டு முள்கரண்டி யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.தாளி ( சரியா?) சாப்பாட்டுத் தட்டென்றால் கமுக்கமாக உட்கார்ந்து கொள்ளும் தட்டு தோசைக்கு மட்டும் செக்குமாடு மாதிரி சுத்தறமாதிரி பாத்திரங்கள் அடிப்பகுதி வட்டம் சற்று மேல் நோக்கிய் வண்ணம் குவிந்து போய் விடுவது பளிங்கு கல்லின் அணைப்புக்கு ஏற்புடையதாயில்லை.நாங்கள் காபி சொல்லி அருந்திவிட்டு பில்லைக் கொடுத்து விட்டு வந்தோம்.(அப்பவெல்லாம் இந்தி தெரியாத காரணத்தால் எனக்கு வாயாடி வேலை எதுவும் இல்லாமல் போய் விட்டது)
மசாலா தோசைக்கு தன் கையே தனக்குதவி திட்டமும் இட்லி வடை க்கு சாம்பார் துணையுடன் கரண்டி உபயோகிப்பதில் தவறில்லை என்பது எங்கள் நண்பர் குழுவின் கூட்டறிக்கை.
நீங்க எப்படி?
பின் குறிப்பு: கல்லூரி என்றதும் நான் பதிவுப் பக்கம் வந்ததே வெட்டிப்பயலின் கல்லூரிக் கலாட்டா கோழி பிடிக்கிறப் பதிவைப் பார்த்துத்தான்:)வெட்டிப்பயலுக்கு மீண்டும் ஒரு நன்றி.
8 comments:
ஹைய்யோ ஹைய்யோ:-)))))
எனக்கு தெரிந்த வரையில் பெண்கள் விரல்களை பயன்படுத்த கூச்சப்படுவார்கள். ஆண்கள் பயன்படுத்தினால் சந்தோஷப்படுவார்கள்.
சப்பாடை பத்திதான் சொன்னேன்.. :)))))))))
//ஹைய்யோ ஹைய்யோ:-)))))//
டீச்சர் போணிக்கு நன்றி:)
/*மசாலா தோசைக்கு தன் கையே தனக்குதவி திட்டமும் இட்லி வடை க்கு சாம்பார் துணையுடன் கரண்டி உபயோகிப்பதில் தவறில்லை என்பது எங்கள் நண்பர் குழுவின் கூட்டறிக்கை.
*/
உண்மைதான் நானும் வழி மொழிகிறேன்
சூப்பரு, இங்கே ஒரு எத்தியோப்பியன் ரெஸ்டாரண்டல no fork, no spoon கையாலதான் சாப்பிடனும்.
குஜிலி அப்படின்னோட வேற மசாலா இருக்கும்னு ஆசையா வந்தேன்.பரவாயில்லை தோசையே போதும் நமக்கு
//சூப்பரு, இங்கே ஒரு எத்தியோப்பியன் ரெஸ்டாரண்டல no fork, no spoon கையாலதான் சாப்பிடனும்.
குஜிலி அப்படின்னோட வேற மசாலா இருக்கும்னு ஆசையா வந்தேன்.பரவாயில்லை தோசையே போதும் நமக்கு//
வாங்க குடுகுடுப்பையாரே!வேற மசாலா எதுவும் மண்டைக்குள்ள இப்போதைக்கு நுழையல.மாட்டுனா விட்டுடுவேனா என்னா:)பதிவு வந்துருமில்ல!
மசாலா தோசைக்கு தன் கையே தனக்குதவி திட்டமும் இட்லி வடை க்கு சாம்பார் துணையுடன் கரண்டி உபயோகிப்பதில் தவறில்லை என்பது எங்கள் நண்பர் குழுவின் கூட்டறிக்கை.
///
எங்க மக்கள் எங்கே போனாலும் கைதான்!
யார் பார்த்தாலும் பார்க்காட்டியும்!
கையேந்தியிலிருந்து 5நட்சத்திரம்வரை!!
குஜிலிங்க சிரிச்சும் டாக் உடலயா நீங்க...
//எங்க மக்கள் எங்கே போனாலும் கைதான்!
யார் பார்த்தாலும் பார்க்காட்டியும்!
கையேந்தியிலிருந்து 5நட்சத்திரம்வரை!!
குஜிலிங்க சிரிச்சும் டாக் உடலயா நீங்க...//
தேவா!குஜிலிக சிரிச்சும் இந்தி வாயால நுழையாத காலமது.இப்பவெல்லாம் மாட்டுனா ஸ்லொனக்(How are you) ன்னு அரபியுலும்,கொமஸ்தக்கா ( அதே ஹவ் ஆர் யூ) பிலிப்பைன்ஸ் பாசையிலும் ஹைசே கே ன்னும் முக்கியமா தோசா ஆத் மே காவோன்னா ன்னும் சொல்லி போட்டு தாளிச்சிருக்க மாட்டேன்:)
Post a Comment