Followers

Monday, June 1, 2009

நானும் பின்னூட்ட வாத்தியார்தான்

நானும் ரவுடிதான் பேட்டைல நிறைய பேரு திரியறதால நானும் வாத்தியார்தான் பேட்டைக்கு முண்டாசு கட்டிகிட்டு வந்திருக்கேன்:).இது எங்க ஏரியா!யாரும் உள்ளே வரலாம்.

விசயம் என்னன்னா இந்த பதிவு(இடுகைன்னு சொல்லணுமாம்!தமிழ் அண்ணா பழமை சொல்லிக் கொடுத்தாரு) எழுதறதெல்லாம் நமக்கு சைடு பிசினஸ்ங்க.இடுகை வாசிப்பதும் மனசுக்குள்ள குதிச்சுகிட்ட வர்ற வார்த்தைகளுக்கு பின்னூட்ட உருவம் கொடுக்கறதுதான் மெயின் பிசினஸ்ங்க.இடுகையெல்லாம் நல்லாத்தான் சொல்றாங்க.ஆனா பின்னூட்டம் பக்கம் போனா சில உஸ்தாதுகள் ஆங்கிலம் சொல்லுன்னு(word verification) பேஜார் செய்யுறாங்கோ.

மொக்கை போடணுமின்னா comment moderation எடுத்துறுங்கன்னு ஒரு தபா வருங்கால முதல்வர் குடு குடுப்பையார் சொல்லப் போக உள்ளே நுழைஞ்சப்பத்தான் ஆங்கிலம் சொல்லு கண்ணுல பட்டுச்சு.அதே மாதிரி சில வூட்டுக்குப் போனாலும் இந்த word verification கேட்கிறாங்க.அதனால இங்கே coding kings & queens ஆணி கட்டமைப்பாளர்கள்,பழம் தின்னு கொட்டை போட்ட பதிவுப் பெருசுகள்,customization அப் புடிச்சு நோண்டிகிட்டு இருக்குறவங்களைத் தவிர புதுசா ஜோதில கலந்துகிட்ட அண்ணாத்த யாராவது இருந்தீங்கன்னா word verification எடுக்கணுமுன்னு ஆசைப்படறவங்களுக்கும் அது எங்க உட்கார்ந்துகிட்டு இருக்குன்னு கண்ண உருட்டாம இடுகையே கண் என நினைப்பவர்களுக்கும் இன்னைலருந்து நான் தான் வாத்தியார்.(அதுக்குன்னு அதிகமா சந்தேகமெல்லாம் கேக்கப்படாது!வாத்தியார் முண்டாசெல்லாம் சும்மா ஒரு பந்தா)

இனி பாடத்துக்குப் போவோமா? log in செஞ்சதும் காஞ்ச மாடு கம்புல பூந்தமாதிரி நேரே new post ல போய் உட்கார்ந்துக்காம அதுக்கு பக்கத்தில customize இருக்கும்.அங்க இருந்துதான் ஆங்கிலத்துக்கு நோ சொல்றது எப்படின்னு ஆரம்பம்.

1.)Customize
2.)Settings
3.)Comments
4.)Show word verification for comments - No

டிஸ்கி: வீடு வீடா போய் மாஞ்சு மாஞ்சு வோர்ட் வெரிபிகேசன் எடுத்துறுங்க,எடுத்துறுங்கன்னு சொல்லிகிட்டே இருக்கேன்.அதுக்கான குறுக்கு வழிதான் இந்த பதிவு.

30 comments:

பழமைபேசி said...

//விசயம் என்னன்னா இந்த பதிவு(இடுகைன்னு சொல்லணுமாம்!தமிழ் அண்ணா பழமை சொல்லிக் கொடுத்தாரு)//

கூடவே, பொறுப்பி --> பொறுப்பு அறிவித்தல் -->டிஸ்கி

இதுவும் சொன்னோம்...ஆனா, அண்ணன் கண்டுகிடலை....

ரங்குடு said...

மன்னிச்சுரு தலைவா. உன் பேச்சக் கேட்டு பின்னூட்ட வெரிபிகேசனை எடுத்துட்டேன்.

நசரேயன் said...

வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்..
வாத்தியார் தமிலிஷ்யையும் இணைச்சுகோங்க, அங்கேயும் நிறைய கும்மிகள் இருக்கு

அது சரி(18185106603874041862) said...

நீங்க சொல்லி தான் நானும் வேர்ட் வெரிஃபிகேஷன் எடுத்தேன்...உபயோகமான பதிவு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பின்னீட்ட வாத்தியாருக்கு நானும் போடுறேன் ஒரு பின்னூட்டம்..,

மதிபாலா said...

நீங்க சொல்லிதான் பின்னூட்ட வேர்டு வெரிபிகேசன் எடுத்தேன். ஆனா இப்ப இல்ல , 2008 ல் தலைவரே.

நன்றி.

ராஜ நடராஜன் said...

//கூடவே, பொறுப்பி --> பொறுப்பு அறிவித்தல் -->டிஸ்கி

இதுவும் சொன்னோம்...ஆனா, அண்ணன் கண்டுகிடலை....//

நம்புங்கண்ணா!நேத்து இடுகைய அனுப்புன பிற்பாடுதான் பொறுப்பி நினப்பு வந்தது.அடுத்த இடுகையிலருந்து கவனிச்சுக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//நீங்க சொல்லி தான் நானும் வேர்ட் வெரிஃபிகேஷன் எடுத்தேன்...உபயோகமான பதிவு//

அதுசரி அண்ணோவ்!உங்க இடுகைக்கு பின்னூட்டமிடும்போது ஆங்கிலம் தட்டுன மாதிரி எனக்கு நினைவு இல்லையே!

ராஜ நடராஜன் said...

//மன்னிச்சுரு தலைவா. உன் பேச்சக் கேட்டு பின்னூட்ட வெரிபிகேசனை எடுத்துட்டேன்.//

வாங்க ரங்குடு!சொல்லப்போனா உங்களுக்கு இட்ட பின்னூட்டத்திற்கு பிறகே எனக்கு இந்த இடுகையிடும் எண்ணம் தோன்றியது.எத்தனை பேருகிட்டதான் தனித்தனியா சொல்றதுன்னு.

ராஜ நடராஜன் said...

//பின்னீட்ட வாத்தியாருக்கு நானும் போடுறேன் ஒரு பின்னூட்டம்..,//

மருத்துவரே!இந்த ஓட்டு செல்லாது.உங்க இடுகையில ஜேம்ஸ்பாண்டுக்கு முன்னால ஒரே செவப்பா டெம்ளட் வச்சிருந்தீங்களே அப்பத்தான் உங்கள் இடுகைகள் பிரச்சினையா இருந்தது.இப்ப இடுகை,டெம்ளட் எல்லாமே நன்றாகவே இருக்கிறது.

ராஜ நடராஜன் said...

//வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்..
வாத்தியார் தமிலிஷ்யையும் இணைச்சுகோங்க, அங்கேயும் நிறைய கும்மிகள் இருக்கு//

அதையேன் கேட்கிறீங்க!நானும் இன்னைக்கு இணைக்கணும் நாளைக்கு இணைக்கணுமுன்னு நினக்கிறதோட சரி.நினப்போட சரி.நல்லவேளை நினைவுபடுத்தினீங்க.

ராஜ நடராஜன் said...

//நீங்க சொல்லிதான் பின்னூட்ட வேர்டு வெரிபிகேசன் எடுத்தேன். ஆனா இப்ப இல்ல , 2008 ல் தலைவரே.

நன்றி.//

வாங்க மதிபாலா!அசத்தலான நினைவு உங்களுக்கு.நான் தான் வீடு வீடா போய் வந்துகிட்டும் சொல்லிகிட்டும் இருப்பதால் எனக்கு நினைவில்லை:)வருகைக்கு நன்றி.

முரளிகண்ணன் said...

உள்ளேன் ஐயா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாங்க இது பெரிய கஷ்டமான வேலை..ஃபாண்ட் மாறி மாறி பின்னூட்டம் போடறது..
வேர்ட் வெரிபிகேசன் எடுங்க எடுங்கன்னு சொல்வதை நானும் வழக்கமாக்கிவச்சிருக்கேன்.
நல்ல வேலை செய்யறீங்க.. கீப் இட் அப்.

அது ஒரு கனாக் காலம் said...

நன்றி வாத்தியாரே .... எங்கிட்ட தான் உங்க பாடத்தை ( பாடம் சொல்லிகொடுப்பதை ) ஆரம்பித்தீர்கள் என நினைக்கறேன்

ராஜ நடராஜன் said...

//உள்ளேன் ஐயா//

வாங்க முரளிகண்ணன்.நீங்க படவரலாற்றுப் பாடம் படிக்காம இங்க என்னெ செய்யறீங்க:)

ராஜ நடராஜன் said...

//ஆமாங்க இது பெரிய கஷ்டமான வேலை..ஃபாண்ட் மாறி மாறி பின்னூட்டம் போடறது..
வேர்ட் வெரிபிகேசன் எடுங்க எடுங்கன்னு சொல்வதை நானும் வழக்கமாக்கிவச்சிருக்கேன்.
நல்ல வேலை செய்யறீங்க.. கீப் இட் அப்.//

உங்கள் வருகைக்கு நன்றி பதிவர் முத்துலட்சுமி!

ராஜ நடராஜன் said...

//நன்றி வாத்தியாரே .... எங்கிட்ட தான் உங்க பாடத்தை ( பாடம் சொல்லிகொடுப்பதை ) ஆரம்பித்தீர்கள் என நினைக்கறேன்//

வாங்க கனாக்காலம்.நீங்க Late comer:)

Anonymous said...

நீங்க சொல்லிக்கூட எனக்குப் புரியவில்லை! இப்போது தான் பின்னூட்ட வெரிபிகேசனை எடுத்தேன்
நன்றி.

ராஜ நடராஜன் said...

//நீங்க சொல்லிக்கூட எனக்குப் புரியவில்லை! இப்போது தான் பின்னூட்ட வெரிபிகேசனை எடுத்தேன்
நன்றி.//

வாங்க தர்சன்!வாத்தியார் சரியில்லைங்கிறீங்க போல இருக்குது:)

Anonymous said...

அப்படியே திவ்யான்ற பேர்ல நீங்க எழுதற இன்னொரு டுபாக்கூர் ப்ளாக்லையும் பண்ணலாமே?

தீப்பெட்டி said...

நல்ல வாத்தியார் தான் நீங்க..

ராஜ நடராஜன் said...

//நல்ல வாத்தியார் தான் நீங்க..//

வாங்க தீப்பெட்டி!உங்களுக்கு முன்னால ஒரு அனானி வரிசைல நின்னுகிட்டிருந்தாரா,அவருக்கு பதில் சொல்லணுமேன்னு ஒரு இடுகையிடப் போய் உங்களை கவனிக்காம விட்டுட்டேன்.

கிரி said...

புதிய பதிவர்கள் மட்டுமே பெரும்பாலும் இதை வைத்து இருப்பார்கள்

ராஜ நடராஜன் said...

//புதிய பதிவர்கள் மட்டுமே பெரும்பாலும் இதை வைத்து இருப்பார்கள்//

சிலபேர் உள்ள போய் நோண்டாம இடுகையில் மட்டும் ஆர்வமா இருப்பாங்க!அப்படி யாருக்காவது உதவுமே என்ற எண்ணம்தானுங்க.

கோவி.கண்ணன் said...

//டிஸ்கி: வீடு வீடா போய் மாஞ்சு மாஞ்சு வோர்ட் வெரிபிகேசன் எடுத்துறுங்க,எடுத்துறுங்கன்னு சொல்லிகிட்டே இருக்கேன்.அதுக்கான குறுக்கு வழிதான் இந்த பதிவு.//

நல்ல சேவை ! தொடருங்கள் !

க. தங்கமணி பிரபு said...

நான் அதைய எப்பவே எடுத்தாச்சுங்க! தமிழ்மணத்துல புது இடுகைய உள்ளே அனுப்பியபின் தமிமணத்தில் உள்ள என்க்கான சுட்டியில் பேரு வருது, ஆனா போட்டோ வரலை. என்ன பண்ணலாங்க?

ராஜ நடராஜன் said...

//நல்ல சேவை ! தொடருங்கள் !//

வாங்க கோவியாரே!லேட்டா வந்து பின்பெஞ்சுல உட்கார்ந்திட்டீங்க போல இருக்குது.நான் கவனிக்கலை.

ராஜ நடராஜன் said...

//நான் அதைய எப்பவே எடுத்தாச்சுங்க! தமிழ்மணத்துல புது இடுகைய உள்ளே அனுப்பியபின் தமிமணத்தில் உள்ள என்க்கான சுட்டியில் பேரு வருது, ஆனா போட்டோ வரலை. என்ன பண்ணலாங்க?//

உங்களைத்தான் தேடிகிட்டு இருக்கேன்.
1.தமிழ்மணத்தில் இணைக்க பகுதிக்கு போங்க!
2.அதில் தமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றம் செய்யும் முறைக்கு போங்க.படியுங்க.

3.நீங்கள் இணைக்க வேண்டிய புகைப்படத்தை உங்கள் கணினியின் டெஸ்க்டாப் (Desktop) பகுதி அல்லது மை டாக்குமெண்ட்(My Document) சேமிக்கவும்.

3 httl://en.gravatar.com தளத்திற்கு போய் நீங்கள் சேமித்த புகைப்படத்தை இணைத்தால் தமிழ்மணம் அடுத்த இடுகையிடும் போது தானாகவே திரட்டிக்கொள்ளும்.

மேலும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.

rapp said...

நானும் கூட இந்த வேர்ட் வெரிபிகேஷனை ஆரம்பத்துல வெச்சிருந்தே, குட்டும் வாங்கினேன்:):):)