Followers

Sunday, March 21, 2010

தமிழக பட்ஜெட் 2010-11

முன்பெல்லாம் தமிழக பட்ஜெட் என்றால் அரிசி விலை ஏறிப்போச்சு,மைதா மாவுக்கு இவ்வளவு வரி என்ற சிகை அலங்கார கடைகளில் தினப்பத்திரிகை அலசலும்,சிகரெட் விலை ஏறிப்போச்சுப்பா பீடிதான் சுகம் என்றும்,இந்த மாசம் பையனுக்கு பீஸ் கட்டணும்,பொண்ணுக்கு ஒரு நல்ல வரன் அமைஞ்சிருக்கு பேசி முடிச்சாகனும் என்ற வளமான வாழ்க்கைக்கான செலவுகளும், லைசென்ஸ் ராஜ் காலங்களும்,ஆட்டோ ரிக்க்ஷாக்காரர்கள் மீட்டர் போட்டா கட்டுபடியாகாதுங்க மீட்டருக்கு மேல ரேட் சொல்வதும்,தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய் சமையல் கடலை எண்ணெய் நிரந்தர சமையலாய் தாளிக்கவும் அதே,ரசத்துக்கும் அதே என்றாகிப் போனது.வாழை இலை ஹோட்டல்களை நோக்கி பயணம் செய்ய எவர்சில்வர் பாத்திரங்களும் அதில் பெயர் போடச் சொல்லி அழகு பார்ப்பதும்,செய்திப் பத்திரிகைகளும்,வானொலியும்,வாய்மொழிச் செய்தியும் மட்டுமே தமிழக பட்ஜெட்.

அடுத்த கட்டமாக டூத் பேஸ்ட்,பவுடர் டப்பா போன்ற பொருட்களில் விலை+வரி என்று ஒட்ட வைத்து அதுவும் வரிகள் மாநிலம்,மாநிலத்துக்கு மாறுபடும்.லோடு ஏத்திட்டு போக முடியாதுங்க டீசல்,பெட்ரோல் விலை ஏறிப்போச்சு,நாளை லாரி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக்,நாடு தழுவிய வேலை நிறுத்தம் என்ற கம்யூனிச கொடிகளின் அணிவகுப்பு என இந்திய பட்ஜெட் எட்டிப்பார்க்கும்.

ஊர விட்டு வேற வந்தாச்சு,தொலைக்காட்சியும் நேரடியாக தகவல் தருவதால் 10-11க்கான தமிழக பட்ஜெட் எப்படியிருக்கும்ன்னு பார்த்தால்

அனைத்து தரப்பினரையும் அரவணைக்கும் பட்ஜெட்-தி.மு.க.

ம்!அம்மாவுக்கு புதிய சட்டசபைக்கு முறையா அழைப்பு விடலையே,பட்ஜெட்

திருப்தியில்லை வெளிநடப்பு செய்கிறோம்.அ.தி.மு.க மற்றும் சகலபாடி ம.தி.மு.க

விவசாயிகளுக்கு உரம் சலுகைய குறைச்சிட்டாங்க,விவசாய கடன் உதவி போன்ற சலுகைகள் இருக்குது-பாட்டாளி மக்கள் கட்சி.

கலைஞருக்கு பாராட்டுக்கள்- திருமாவளவன்

இப்படியொரு பட்ஜெட்டை நான் பார்த்ததேயில்லை-கி.வீரமணி

அன்னையின் ஆட்சியல்லவா?பட்ஜெட்டில் எங்களுக்கும் பங்குண்டு-காங்கிரஸ்

வாயே திறக்க மாட்டேன் - பி.ஜே.பி

காலை அலுவலகம் வரும்போது பி.பி.சி யில் ஒபாமா

"If you agree that the system is not working for ordinary families, if you've heard the same stories that I've heard everywhere, all across the country, then help us fix the system," - ஒபாமா.

அமெரிக்கா உலக அரசியலில் எவ்வளவு பேட்டை ரவுடியா நடந்துகிட்டாலும் உள்ளூர் அரசியலில் ஜனநாயக கருத்துக்களுக்கும் ,மக்கள் நலனுக்கும்,லாபியிஸ்டுகளுக்குமே முதலிடம்.மைக்கேல் மூரின் sicko டாகுமெண்டரி படம் பார்த்தவர்களுக்கும்,அமெரிக்கர்களுக்கும் மருத்துவ காப்புறுதி(இன்ஸ்யூரன்ஸ்)எப்படி செயல்படுகிறதென தெரியும்.இப்பொழுது வளைகுடா நாடுகளிலும் அதன் நகலாக அயல்நாட்டவர்கள் தாங்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனை சென்றாலும் செல்லாவிட்டாலும் விசாவை புதுப்பிக்கும் முன் ஒவ்வொரு வருடமும் மருத்துவ காப்புரிமையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஒபாமாவின் அரசு இந்த மருத்துவ காப்புரிமை சட்டத்தில் மாறுதலைக் கொண்டு வருவதற்கு முயல்கிறது.அதற்கு ஆதரவு சேர்க்கும் முகமாகவே இப்பொழுதுள்ள காப்புறுதி செய்யாத சாதாரண மக்கள் மருத்துவ உதவிகளை நாட முடியாது என்றும் அதற்கான மாற்றங்களை கொண்டு வர உதவி செய்யுங்கள் என்றும் கேட்கிறார்.

இப்ப தமிழக பட்ஜெட்டுக்கு திரும்பினால் நிலைமை என்ன?பள்ளி இறுதி வகுப்பு பாஸா?பெயிலா?ரிலிஸானாத்தான் தெரியும்.அந்த மாதிரி நிதியமைச்சர் சொன்னதுக்கப்புறம்தான் இங்கே சிறப்பு அங்கே நொள்ளை தெரியும்.முதலீடுகளின் பங்கீடு,பொருளாதார வளர்ச்சி போன்ற காரணங்களால் முன்பு போல் பற்றாக்குறை பட்ஜெட் இல்லாமல் ஓரளவுக்கு அனைத்து துறைகளையும் திருப்திபடுத்தி விடும் பட்ஜெட்டை நிச்சயம் இப்பொழுது தந்து விடலாம்.அதனால் ஏனைய கட்சிகளின் கருத்துக்களின் பங்களிப்பையும் கேட்டு பட்ஜெட் வெளியிடலாமே?கணக்கு போட்டு செலவு செய்வதற்கு முன் மாற்றுக்கட்சியின் கருத்துக்களையும் கேட்டு பட்ஜெட் வெளியிட்டால் வெளி நடப்பு போன்ற சம்பவங்கள் நிகழாமல் தவிர்க்கலாமே.அதே நேரத்தில் எதிர்க்கட்சியும் மக்களால் தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு வருபவர்களே அவர்களின் ஆக்க பூர்வமான கருத்துக்களையும் கேட்டறியலாமே.(பிரிட்டன் காலத்து சட்டமுறைகள் இதற்கெல்லாம் இடம் தராது போன்ற காரணங்கள் ஏதாவது இருந்தால் அறிந்தவர்கள் சொன்னால் புரிதலுக்கு உதவும்.)சட்டசபையே புதியதாகும் போது சட்டமன்ற உறுப்பினர்களும் புதியதாக.....ஸ்டாலின் அவர்களே!உங்களிடமிருந்தாவது தொடங்கட்டும் புது மாற்றங்கள்.

என்னது தேர்தல் வரப்போகுதா?

(ஒரு சட்டமன்றக் குரல்: ஆமாய்யா!அங்கன உட்கார்ந்துகிட்டு வக்கணையா எழுதிப்புடுவே.இங்க வந்து வெந்து பார்த்தாதானே தெரியும் துண்டை தக்க வைக்கிற தில்லாலங்கடி சிரமம்)

11 comments:

கண்ணா.. said...

//ஒரு சட்டமன்றக் குரல்: ஆமாய்யா!அங்கன உட்கார்ந்துகிட்டு வக்கணையா எழுதிப்புடுவே.இங்க வந்து வெந்து பார்த்தாதானே தெரியும் துண்டை தக்க வைக்கிற தில்லாலங்கடி சிரமம்//

இதுல உங்க நேர்மை பிடிச்சிருக்கு

:))

கபீஷ் said...

//கணக்கு போட்டு செலவு செய்வதற்கு முன் மாற்றுக்கட்சியின் கருத்துக்களையும் கேட்டு பட்ஜெட் வெளியிட்டால் வெளி நடப்பு போன்ற சம்பவங்கள் நிகழாமல் தவிர்க்கலா//

ஹி ஹி. மொதல்ல ஆளும் கட்சியிலேயே எல்லார் கருத்தும் கேப்பாங்கன்னு நினைக்கறீங்க.:-)

ராஜ நடராஜன் said...

////ஒரு சட்டமன்றக் குரல்: ஆமாய்யா!அங்கன உட்கார்ந்துகிட்டு வக்கணையா எழுதிப்புடுவே.இங்க வந்து வெந்து பார்த்தாதானே தெரியும் துண்டை தக்க வைக்கிற தில்லாலங்கடி சிரமம்//

இதுல உங்க நேர்மை பிடிச்சிருக்கு

:))//

அண்ணா என்றழைக்கவா?கண்ணா என்றைழைக்கவா:)

ராஜ நடராஜன் said...

////கணக்கு போட்டு செலவு செய்வதற்கு முன் மாற்றுக்கட்சியின் கருத்துக்களையும் கேட்டு பட்ஜெட் வெளியிட்டால் வெளி நடப்பு போன்ற சம்பவங்கள் நிகழாமல் தவிர்க்கலா//

ஹி ஹி. மொதல்ல ஆளும் கட்சியிலேயே எல்லார் கருத்தும் கேப்பாங்கன்னு நினைக்கறீங்க.:-)//

கபிஷ்!இதென்ன புதுக்கதை சொல்றீங்க:)எந்த பிரச்சினையின்னாலும் மாநாடு கூட்டித்தான் ஜனநாயக முறையில் செய்வாங்கன்னு ஆளும் கட்சிக்கு ஒரு நல்ல பெயர் இருக்குதே!பென்னாகரம் ஓட்டுக்கு காசு கிடைக்கலன்னு நீங்க ஏதோ புரளிய கிளப்பி விடுறீங்க.நான் நம்பமாட்டேன்.

ராஜ நடராஜன் said...

கபிஷ்!நீங்க கபிஷா?சஞ்சயா?

கடைக்கு ஒரு ஹல்ல்ல்ல்ல்லோ சொல்லலாம்ன்னு வந்தா சஞ்சய் நெஞ்சை நிமிர்த்துகிட்டு வந்து நிற்கிறார்.

என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே:)

கபீஷ் said...

நான் கபீஷ், கபிஷ், கபீஷ்.:-)

சஞ்செயோட ஒரு ப்ளாகுல மொக்கை போடுவேன், இனிமேல்.

ஹல்லோஓஓஓஓஓ பதிலுக்கு சொல்லிட்டேன். நான் எழுதுற பதிவுல கமெண்ட் நாட் அலவ்டு.:-)

ராஜ நடராஜன் said...

//நான் கபீஷ், கபிஷ், கபீஷ்.:-)//

மூணு தடவ வாக்குமூலம் கொடுத்திட்டீங்க!நம்புறேன்.

என்னது?கமெண்ட விடறதில்லையா?அப்ப வடை ருசியா இருக்குதுன்னு சொல்லணும்ன்னா என்ன செய்றதுன்னு தெரியலையே.

கபீஷ் said...

வடை நல்லாருந்தா எதுவும் சொல்லவேண்டாம். இல்லேன்ற பட்சத்தில் மெயில் அனுப்பலாம். நாகரீகமானதா இருந்துச்சுன்னா எதிர்/மாற்று கருத்துகள் மட்டும் வெளியிடப்படும்

vasu balaji said...

ஸ்டாலின் மேல நிறைய எதிர்பார்ப்பு இருக்கு. நல்ல ஆதங்கம்தான். மாறுதல் கட்டாயம் அவசியம்.

ராஜ நடராஜன் said...

//வடை நல்லாருந்தா எதுவும் சொல்லவேண்டாம். இல்லேன்ற பட்சத்தில் மெயில் அனுப்பலாம். நாகரீகமானதா இருந்துச்சுன்னா எதிர்/மாற்று கருத்துகள் மட்டும் வெளியிடப்படும்//

அப்படிங்கீறீங்க!இந்த டீல் கொஞ்சம் வித்தியாசமா இருக்கே!எதையாவது வந்து சொல்லிட்டுப் போங்க,ஒரு ஓட்டாவது போடுங்கன்னு சொல்ற அண்ணாத்தைகள் மத்தியில் நீங்கள் வித்தியாசம்.அப்ப நீங்க ஹிட் லிஸ்ட்ல இல்ல:)

ராஜ நடராஜன் said...

//ஸ்டாலின் மேல நிறைய எதிர்பார்ப்பு இருக்கு. நல்ல ஆதங்கம்தான். மாறுதல் கட்டாயம் அவசியம்.//

பாலாண்ணா!கல்லூரிக் கால கலாட்டக்கள் தவிர ஸ்டாலின் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறாரு.பார்க்கலாம் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுதான்னு.