Followers

Friday, November 19, 2010

ஆங் சான் சூ கியின் நேர்காணல்

சென்ற பதிவில் திசநாயகம் பற்றி பதிவிட்டதும் உறங்கும் போது ஆங் சான் சூ கியின் பி.பி.சியின் ஜான் சாம்சனுடனான நேர்காணலை சென்ற வாரம் கண்டும் குறிப்பிட மறந்துவிட்டோமே என்ற உறுத்தல் இருந்தது.இன்று  திசநாயகம் பின்னூட்டத்தில் ரதி அவர்களின் பின்னூட்டம் கண்டதும் பதிவிட்டு விடவேண்டுமென்று இணையத்தில் தேடிக் கண்டு பிடித்ததில் ஆங்க் சான் சூ கியின் சென்ற வாரம் கண்ட நேர்காணல் கிடைத்தது.

வெறுமனே குளிர் அறையில் உட்கார்ந்து கொண்டு நேர்காணல் காண்பதும், பதிவு எழுதுவதும் எளிது என்ற சில விமர்சனங்களுக்கு மாறாக பி.பி.சியின் ஜான் சாம்சன் உலகின் பலபகுதிகளின் போர்முனைகள், உரிமைக்குரல்கள், கலவரங்கள் என்று பல இடங்களுக்கும் உயர்ந்த கட்டிங்களையும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை மட்டும் உலகின் முன் காட்டும் பீஜிங்க் நகரத்திற்கும் அப்பால் சீனாவின் குறுநகர் சார்ந்த சாதாரண சீன மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் கூட வீடியோ சகிதம் நேர்காணல் காண்பவர்.எனக்கு பிடித்த ஊடகவியளாளர்களில் ஒருவர் ஜான் சாம்சன்.

இரண்டாம் உலகப்போரின் காலகட்ட சுபாஷ் சந்திர போஸ்,ஆசியாவின் உலகப்போரின் பங்களிப்பு,பினாங்கில் வியாபாரம் மற்றும் போரினால் மக்கள் வெளியேற்றம் என்று தற்கால பர்மிய மியான்மரின் வரலாற்றை துவக்கலாம்.ஒரு புறம் சீனா மறுபுறம் இந்தியா என்ற நிலையில் பூகோள ரீதியாக காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை போன்று பர்மாவும் கூடவே தனது சுதந்திர சிறகுகளை விரித்திரிக்க வேண்டியது.மாறாக சூ கியின் அப்பா ஆங்க் சான் 1947ன் காலகட்டத்தில் ராணுவப் படுகொலையால் மரணிக்க பர்மா ராணுவ ஆட்சிக்குள் புகுந்து கொண்டு உலகம் மறந்து விட்ட ஒரு இருண்ட பகுதியாகவே இதுவரை மியான்மர் காட்சியளித்தது.

 இன்னும் பர்மாவின் நதிமூலமெல்லாம் தேடினால் அசோகரின் புத்தமதம், பொன்னியின் செல்வன் கதைக்கள சோழர்களின் ஆட்சியில் பௌத்தம் என்று கதை நீளும்.ரஷ்யாவின் கம்யூனிச வீழ்ச்சிக்குப்பின் 1990களில் இந்தியா சோசலிஷத்திற்கு வணக்கம் சொல்லிவிட்டு திறந்த பொருளாதாரக் கொள்கைகளை கைகொண்ட காலகட்டத்தில் துவங்குகிறது ஆங்க் சான் சூயின் அரசியல் பிரவேசம்.அப்பா ஆங்க் சான் பர்மாவின் ராணுவத்தை அமைத்து பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து பர்மாவை மீட்டவர்,அம்மா கின் கீ இந்தியா, நேபாள் போன்ற நாடுகளின் பர்மாவுக்கான தூதுவர் போன்ற நிலையில் வளர்க்கப்பட்டவர் ஆங்க் சான் சூ கி.

இவர் அரசியலுக்குள் கால்வைப்பதற்கும் முன்பான இரண்டு ஆண்டுகளில்(1988) ஜுண்டா என்ற ராணுவ அமைப்பு உருவாகிறது.இவரது அரசியல் பிரவேசத்தை விரும்பாத ஜுண்டா ஆங்க் சான் சூ கீயை நாட்டை விட்டு வெளியேற வற்புத்துகிறது.இதனை நம்ம வீராங்கனை மறுக்க சுருக்கமாக சொன்னால் இந்த ராணுவ அமைப்புக்கும் பர்மாவில் ஜனநாயகம் பரவவேண்டுமென்ற ஆங்க் சான் சூயின் சுதந்திர வேட்கைக்குமிடையேயான போரில் ஆங்க் சான் சூயை வீட்டுக்காவலாக கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சிறையில் அடைத்ததும் இப்போது ஜுண்டா ராணுவம் ஒப்புக்கு சப்பாணியா தேர்தல் நிகழ்த்திய பின் ஆங்க் சான் சூயை விடுதலை செய்ததுமே இடுகையின் சுருக்கம்.

நோபல் பரிசு பெற்ற ஆங்க் கி சான் கீ தனது குடும்பத்தவர்கள், கட்சி ஆதரவாளர்கள்,உலக பத்திரிகையாளர்கள் என யாரையும் பார்க்க மறுக்கப்பட்டு கம்பி தொலைபேசி கைபேசியாக மாற்றம் பெற்றதும் கூட ஆங்க் சான் சூ கியின் பார்வையில் கண்களை அகல ஆச்சரியப்படுத்தும் செய்தி.சாம்சனுடனான அவரது நேர்காணல் இங்கே உங்கள் பார்வைக்கு.

5 comments:

ராஜ நடராஜன் said...

பர்மாவின் ராணுவம் ஜுண்டாவா?குண்டாவா?

வர்ணனையாளர் குண்டா என்றே விளிக்கிறார்.

vasu balaji said...

ரொம்ப நன்றி. இன்னொரு அருமையான காணொளிக்கு.

Bibiliobibuli said...

ஆங் சான் சூ கியின் வீட்டுக்காவலிலிருந்து விடுதலையான செய்தியை மட்டும் வேலைத்தளத்தில் படித்து விட்டு வீடியோவை வீட்டில் பார்ப்போம் என்று வழக்கம் போல் நினைத்து கடைசியில் அது ஞாபகத்திலிருந்து மறைந்துவிட்டது. இப்போது உங்கள் தளத்தில் இருந்த இணைப்பில் தான் பார்த்தேன். நன்றி.

பிறகு, நானும் பதிவராகி ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். என்ன தான் எழுதினாலும் அந்த பின்னூட்டம் போடும் சுகம் போல் வருவதில்லை. :)

ராஜ நடராஜன் said...

//ரொம்ப நன்றி. இன்னொரு அருமையான காணொளிக்கு.//

நச் போட அருமையான சந்தர்ப்பங்களை டெல்லி களம் தருது.கோட்டை விடுறீங்க:)

ராஜ நடராஜன் said...

//ஆங் சான் சூ கியின் வீட்டுக்காவலிலிருந்து விடுதலையான செய்தியை மட்டும் வேலைத்தளத்தில் படித்து விட்டு வீடியோவை வீட்டில் பார்ப்போம் என்று வழக்கம் போல் நினைத்து கடைசியில் அது ஞாபகத்திலிருந்து மறைந்துவிட்டது. இப்போது உங்கள் தளத்தில் இருந்த இணைப்பில் தான் பார்த்தேன். நன்றி.

பிறகு, நானும் பதிவராகி ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். என்ன தான் எழுதினாலும் அந்த பின்னூட்டம் போடும் சுகம் போல் வருவதில்லை. :)//

உங்களின் மீள் வருகைக்கு நன்றி ரதி.
நீங்க நம்ம பக்கம்ன்னு நினைக்கிறேன்.எனக்கும் பின்னூட்டம் போடும் சுகம் பதிவுகளில் இருப்பதில்லை.நேரம் கிடைக்கும் போது மொத்த பின்னூட்டங்களையும் கோர்த்து பார்க்க வேண்டும்.

வெறும் சிரிப்பான் மட்டும் போடாமல் குண்டு குண்டா,நீளம் நீளமாவே பெரும்பாலும் ஒவ்வொருவருக்கும் பின்னூட்டமிட்டிருக்கிறேன்.

எங்க ஊரு தமிழில் சொல்லவேண்டுமென்றால் அருவா, லொல்லு,டைமிங்க்,ரைமிங்க்,கோபம்,விவாதம்,கருத்து பரிமாற்றமென்று மனநிலைக்கும்,இடுகையின் பொருளுக்கும் தகுந்த மாதிரியே பின்னூட்டமிட்டு வந்திருக்கிறேன்.

பதிவுகளை தொடருங்கள்.அவ்வப்போது கண்ணில் படும்போது வருகிறேன்.