Followers

Friday, April 8, 2011

வெல்லும் தமிழக கூட்டணி நாடுகடந்த தமீழீழ அரசை அங்கீகரிக்குமா?

இன்னும் ஒரு வாரத்தில் தமிழக தேர்தலுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலையில் தமிழகத்தின் முன்ணணிக் கட்சிகளான தி.மு.கவும்,அ.தி.மு.கவும் ஓட்டுக்கு ஊறுகாய் தொட்டுக்கொள்ள போர் குறித்தான கவலைகள் இரண்டு வருடமும் இல்லாமல் ஈழத்தமிழர்களின் பாசத்தையும்,துரோகங்களையும்  ஒருவருக்கு ஒருவர் மீது தேர்தல்ப் பிரச்சார வாயிலாக வெளிப்படுத்துகிறார்கள்.புதிய குரல் என்று நம்பிய திருமா சோனியா காந்தியின் மேடையில் கருணாநிதிக்கு ஊதுகுழலாய் கருணாநிதியா அல்லது அந்த அம்மையாரா(ஜெ) என்று மனோகரா வீர வசனம் பேசுகிறார்.ஒவ்வொருவருக்கும் அவரவர் சுயநலம் முன்வந்து நின்று கொள்வதால் தமிழக வாக்கு அரசியலில் தமிழர்கள் தோற்றுப்போய் விடுகிறோம்.

பாராளுமன்றத் தேர்தலின் போது ஈழப்பிரச்சினையை மக்கள் தொலைக்காட்சி மூலம் முன்வைத்த ராமதாஸ் அந்த தேர்தல் முடிவில் எதுவும் போணியாகவில்லையென்றவுடன் தொலைக்காட்சிப்பெட்டியை மூட்டை கட்டிவிட்டு அன்புமணிக்கு ஒரு இடம் கிடைத்தால் அதுவே தனது இறுதி காலத்தின் பிறவிபயனாக இந்த முறை தாவும் கிளையில் 31 பழங்கள் இருப்பது கண்டு தாவி விட்டார்.


வை.கோவும்,சீமானும் மிஞ்சி இருந்தாலும் இவர்கள் தற்போதைக்கு குரல் கொடுத்தாலும் இன்னும் வலுவற்றவர்களாகவே இருக்கிறார்கள்.கம்யூனிஸ்ட்டுகளின் முந்தைய நிலைப்பாட்டுக்கும் இப்போதக்கும் மாற்றம் தெரிகிறது.வீரமணியும் தி.மு.கவுக்கு பிரச்சாரம் செய்யப் போய்விட்டதால் மிஞ்சி இருப்பவர்கள் மொழி உணர்வாளர்களும்,சமூகப்பணியில் அர்ப்பணித்துக்கொண்ட பெ.தி.க இன்னும் ஏனைய தமிழ் உணர்வாளர்களும் இவர்களுக்கும் அப்பால் தமிழீழம் குறித்து ம் மனித நேயம் குறித்தும் சிந்திக்கும் எழுத்தாளர்களும், திரைப்படத் துறையினரும்,பதிவுலக கருத்தாளர்களும் இனி வரும் இளைய தலை முறையும்.

 தமிழர்களாய்  தமிழக காங்கிரஸின் அரசியல் நிலைப்பாடுகள் காரணமாகவும்,தமிழ் உணர்வுக்கு எதிரான சோ,சுப்பரமணிசாமி,என்.ராம் போன்ற சிலர் தவிர  தமிழர்கள் எல்லோருக்கும் கட்சி உணர்வுகளுக்கும் அப்பால் மக்கள் நலன் கருதும் தமிழீழம் குறித்த நோக்குகள் அனைவருக்கும் அடிமனதில் இருக்குமென்றே இன்னும் நம்புகிறேன்.

ஐ.நாவில் அங்கீகரிக்கப்பட்ட புதிதாய் பிறந்த தென்சூடான் நாடு கடந்த தமிழீழ அரசை அங்கீகரித்திருக்கிறது.தென் சூடானும் ஈழத்தமிழர்களுக்கு இணையான துயரங்களை அனுபவித்தவர்கள்.தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதிநிதி ராபர்ட் பிளேக் உடனான குளோபல் தமிழ் அமைப்பின் (Global Tamil Forum) பேச்சு வார்த்தை என அரசியல் நகர்வுகள் உருவாகியுள்ளன.

போரில் சரணடைந்த விடுதலைப்புலிகளின்  ரமேஷ் இலங்கைப் படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டு பின் காணாமல் போயுள்ளார் என தற்போது புதிய காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளது.இலங்கை அரசுக்கான போர்க் குற்றங்களுக்கு வலுவான ஆதாரங்கள்,இனப் படுகொலைகள் என இதற்கும் முன்பே மனித உரிமைக் கழகங்கள் மூலமாகவும் இணைய தளம் ஊடேயும் வெளி வந்திருக்கிறது.ஐ.நாவும் அதன் பங்குக்கு   குற்ற விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.அனைத்து உலக நீதிமன்றம் மூலமாக இலங்கையின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் கட்சிகள் எழுப்பும் குரல்களே தமிழகத்தில் தமிழீழம் என்ற சொல் இனி மறக்கவோ மறுக்கவோ இயலாத ஒன்று என்பதை புரிந்து கொண்டும் இனியும் தமிழக கட்சிகள் கண்மூடிக்கொண்டிருக்க வேண்டியது அவசியமா?

ஈழத்தமிழர்கள் வேண்டுவதெல்லாம் தமிழகம் சார்ந்த தார்மீக ஆதரவே.தமிழகத்தின் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான ஆதரவு மூலம் தமிழகத்தின் போர் காலத்தில் உதவாத பழி நீங்கும் சாத்தியங்கள் உருவாவதோடு போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான  தார்மீக ஆதரவாகவும்  வழி வகுக்கும்.அதிகார ரீதியாக அங்கீகாரத்துடன் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நிகழ்த்தவும் உதவும்.

இன்று நாடுகடந்த தமிழீழ அரசின் சார்பாக உருத்திரகுமாரன், தமிழக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கட்சி தங்கள் ஆதரவை நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.உருத்திரகுமாரனின் குரல் அமெரிக்காவையும், லண்டனையும் தாண்டி தமிழகம் வரை உரத்துக் கேட்குமா?

22 comments:

Thekkikattan|தெகா said...

இவிங்க காதிலயா? ஈயத்தை காய்ச்சி ஊத்துங்க...

இதையும் படிச்சு வைங்க.

http://www.hrw.org/en/news/2011/04/07/sri-lanka-account-wartime-disappearances

Thekkikattan|தெகா said...

ராஜ நட, நான் GM Pollution என்ற தலைப்பின் கீழே ஒரு கட்டுரையும், காணொளியும் வெளியிட்டு இருந்தேனே பார்த்தீங்களா?

நசரேயன் said...

//உருத்திரகுமாரனின் குரல் அமெரிக்காவையும், லண்டனையும் தாண்டி தமிழகம் வரை உரத்துக் கேட்குமா?//

வாய்ப்பே இல்ல

ராஜ நடராஜன் said...

//இவிங்க காதிலயா? ஈயத்தை காய்ச்சி ஊத்துங்க...//

தெகா!நாம் ஊதும் சங்கை ஊதி வைப்போம்.இவர்கள் தேர்தல் நேரத்தில் எழுப்பும் ஒலிகள் தமிழீழம் என்பது இனியும் மறக்க முடியாத சொல்லாகவே தமிழகத்தில் பார்க்கப்படும் என்று நம்புகிறேன்.

உருத்திரகுமாரனின் அறிக்கைக்கு என்ன பதில் கட்சிகள் தேர்தலின் இறுதிக் கட்டத்தில் முன் வைக்கிறார்கள் எனப் பார்ப்போம்.

தொடுப்பை படிக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//ராஜ நட, நான் GM Pollution என்ற தலைப்பின் கீழே ஒரு கட்டுரையும், காணொளியும் வெளியிட்டு இருந்தேனே பார்த்தீங்களா?//

இப்பத்தான் பின்னூட்டம் போட்டு வந்தேன்.கொஞ்சம் தீவிர வாசிப்பு தேவையென்பதால் மறுபார்வைக்கு வருகிறேன்.

ராஜ நடராஜன் said...

////உருத்திரகுமாரனின் குரல் அமெரிக்காவையும், லண்டனையும் தாண்டி தமிழகம் வரை உரத்துக் கேட்குமா?//

வாய்ப்பே இல்ல//

காரணம் சொல்லுங்க நசர்ஜி!

Chitra said...

இன்று நாடுகடந்த தமிழீழ அரசின் சார்பாக உருத்திரகுமாரன், தமிழக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கட்சி தங்கள் ஆதரவை நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.


..... வெற்றி பெறும் கட்சி எடுக்கும் முடிவு என்னவோ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

////உருத்திரகுமாரனின் குரல் அமெரிக்காவையும், லண்டனையும் தாண்டி தமிழகம் வரை உரத்துக் கேட்குமா?//


ஊகூம்.. கேட்காது..
ஏன்னா.. இவர்கள் மக்களுக்கு உழைப்பதற்க்காக பிஸியா இருப்பதால்.. சான்ஸே இல்லை சார்..

ஆ.ஞானசேகரன் said...

//உருத்திரகுமாரனின் குரல் அமெரிக்காவையும், லண்டனையும் தாண்டி தமிழகம் வரை உரத்துக் கேட்குமா?//

ம்ம்ம்ம்.... சுயநலம் தடுக்குமே!

Unknown said...

அல்லக்கைகள் இருக்கும்வரைக்கும் தலைவனுக அடிச்சு புடுங்கதான் தயாரா இருப்பானுக..

சக்தி கல்வி மையம் said...

உங்களுடைய விருப்பம்தான் எனக்கும்..

ராஜ நடராஜன் said...

//
..... வெற்றி பெறும் கட்சி எடுக்கும் முடிவு என்னவோ?//

பார்க்கலாம் மேடம்!என்ன முடிவு எடுக்குறாங்கன்னு.நாம் பொதுவில் வைக்கும் விவாதங்கள் பலராலும் கவனிக்கப்படுகின்றதென நினக்கின்றேன்.அதோடு கருணாநிதியும்,ஜெயலலிதாவும் தேர்தல் நேரத்தில் எழுப்பும் ஈழக்குரல் தமிழக அரசியலில் ஓட்டு வங்கிக்கான தேவை என்பதை இவர்கள் உணர்ந்திருப்பது நல்லதுதான்.

ராஜ நடராஜன் said...

//ஊகூம்.. கேட்காது..
ஏன்னா.. இவர்கள் மக்களுக்கு உழைப்பதற்க்காக பிஸியா இருப்பதால்.. சான்ஸே இல்லை சார்..//

வாங்க பட்டு!மேடம் சித்ராவுக்கு இட்ட மறுமொழியேதான் உங்களுக்கும்.நீங்கள் பட்டையைக் கிளப்புவதெல்லாம் புலனாய்வு குறுக்கு சந்து வழியாகவாவது இவர்களுக்குப் போய்ச் சேருகிறது.5 வருடம் முழுதும் கல்லுளி மங்கன் மாதிரி அமைதியா இருந்து விட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் வாய் திறக்கிறார்கள்.பதிவுலகம் நமது குரலை தொடர்ந்து பதிவு செய்வதன் மூலமும்,தமிழர்கள் அனைவரும் ஆதரவு தருவதன் மூலமாகவே இலங்கைக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலமாகவும்,நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பில் ஈழத்தமிழ் மக்களுக்கான விடியலைக் காண இயலும்.

முதல் வழி அமர்ந்து பேசிப்பார்ப்பது.
இரண்டாவது வழி பட்டாபட்டியைக் கழற்றி விடுவது:)

ராஜ நடராஜன் said...

//ம்ம்ம்ம்.... சுயநலம் தடுக்குமே!//

ஞானசேகரன்!நலமா இருக்கீங்களா?அதிகம் பதிவுகளைக் காணோமே!பிரச்சினையே நீங்க சொல்லும் சுயநலம்தானுங்க.வயதானாலும் ஹசாரே மக்கள் நலனுக்கு குரல் கொடுக்கிறார்.நம்ம ஊர்ல தம் மக்கள் நலன்களுக்கு குரல் கொடுக்கிறார்கள்:(

http://thavaru.blogspot.com/ said...

100 கோடி உருத்திரகுமாரன் கொடுக்கறார் அப்படீன்னு சொன்னீங்கன்னா தமிழ்நாட்டு
அரசியல் தலைகளுக்கு கேட்கும் ராஜநட இதெல்லாம் கேட் (காது).

ராஜ நடராஜன் said...

//அல்லக்கைகள் இருக்கும்வரைக்கும் தலைவனுக அடிச்சு புடுங்கதான் தயாரா இருப்பானுக..//

உங்க இடுகையின் உள்கருத்தின் நியாயமான கோபத்தைப் புரிந்து கொள்ளாமல் தனிமனித தாக்குதல்களுக்குப் பின்னூட்டம் மாறிவிட்டதை மீண்டுமொரு முறை பார்வையிடும்போது கண்டேன்.

எனக்கு ஒரு வியப்பு என்னன்னா பதிவுலகில் இவ்வளவு மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டும் ஒரு கட்சி சார்ந்த அடிமைத்தன வெளிப்பாடு எப்படி படித்தவர்களுக்கு வருகிறது?யாரும் யாரையும் இங்கே வாக்குவங்கியை சேர்ப்பதில்லை.எதுவும் பொதுவில் எப்பொருள் யார் யார் பதிவில் காண்பினும் என்பதே நிலவுகிறது.இவர்களையே மாற்ற இயலாத போது தொலைக்காட்சிப் பெட்டிகளையே கட்டி அணைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்படி மாறி விடுவார்கள்.

கட்சிகளின் காட்டில் எப்போதும் மழையே:)

ராஜ நடராஜன் said...

//உங்களுடைய விருப்பம்தான் எனக்கும்..//

கருன்!நமது விருப்பம் என்பதை விட கருணாநிதி,ஜெயலலிதாவின் விருப்பம் என்பது தமிழகத்தின் தற்போதைய நிலை.

ஓட்டுக்கு தேவையாக வேண்டி கடைசி நேர அஸ்திரமாக தமிழீழத்தைப் பயன்படுத்துவார்களா?

பிருந்தன் said...

ரெண்டு பேருமே கள்ளபயலுக, யாரு சொல்ல போற பொய்யை நம்பி முதலில இருந்து வர போறீக.

ராஜ நடராஜன் said...

//ரெண்டு பேருமே கள்ளபயலுக, யாரு சொல்ல போற பொய்யை நம்பி முதலில இருந்து வர போறீக.//

வாங்க பிருந்தன்!களவாணியாக இருந்தாலும் வாய் மொழி வார்த்தையே பொய்யாக இருந்தாலும் வழக்காட வலு சேர்க்கும்.

நாம் விரும்பியோ,விரும்பாமலோ தமிழகம் தமிழீழம் குறித்த வெற்றி தோல்விகளில் பங்கு கொள்ளும் மொழி,பூகோள அரசியலைத் தாங்கியிருக்கிறது.

ராஜ நடராஜன் said...

//100 கோடி உருத்திரகுமாரன் கொடுக்கறார் அப்படீன்னு சொன்னீங்கன்னா தமிழ்நாட்டு
அரசியல் தலைகளுக்கு கேட்கும் ராஜநட இதெல்லாம் கேட் (காது).//

தவறுன்னு பேர் வச்சிகிட்டு சரியா சொல்றீங்க:)

Bibiliobibuli said...

உங்கள் பதிவின் தொடராய் ஓர் பதிவு போடலாம் போல. :) தமிழர் பேரவையுடன் Blake சந்திப்பு பற்றிய பேச்சு வார்த்தையும், அது குறித்த Island பத்திரிகையில் பிளேக் எழுதிய பதில் கடிதத்தையும் படித்துப்பாருங்கள். அதே போல் கனேடிய தமிழ் வானொலியில் உலக தமிழர் பேரவை தலைவர் சொன்ன கருத்தையும் பார்த்தால் அவ்வளவு நம்பிக்கை தருவதாக இல்லை அமெரிக்காவின் பிளேக் அவர்களின் கருத்து. உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை பிளேக் மீது என் போன்றோருக்கு இல்லை என்பதே யதார்த்தம். இனி மே மாதம் கடந்து போகும் வரை இப்படி நிறைய நடக்கும்.

பார்க்கலாம், தமிழக அரசியல் மாற்றங்கள் எங்களுக்கு ஏதாவது மாற்றத்தை கொடுக்குமா என்று.

ராஜ நடராஜன் said...

//உங்கள் பதிவின் தொடராய் ஓர் பதிவு போடலாம் போல. :) தமிழர் பேரவையுடன் Blake சந்திப்பு பற்றிய பேச்சு வார்த்தையும், அது குறித்த Island பத்திரிகையில் பிளேக் எழுதிய பதில் கடிதத்தையும் படித்துப்பாருங்கள். அதே போல் கனேடிய தமிழ் வானொலியில் உலக தமிழர் பேரவை தலைவர் சொன்ன கருத்தையும் பார்த்தால் அவ்வளவு நம்பிக்கை தருவதாக இல்லை அமெரிக்காவின் பிளேக் அவர்களின் கருத்து. உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை பிளேக் மீது என் போன்றோருக்கு இல்லை என்பதே யதார்த்தம். இனி மே மாதம் கடந்து போகும் வரை இப்படி நிறைய நடக்கும்.

பார்க்கலாம், தமிழக அரசியல் மாற்றங்கள் எங்களுக்கு ஏதாவது மாற்றத்தை கொடுக்குமா என்று.//

ரதி!ராபர்ட் பிளேக்கின் கருத்தைப் படித்தேன்.அமெரிக்கா சார்ந்த நிலையும் ஒரு முயற்சியே.பக்கத்து வீட்டுக்கார தமிழகமே காப்பாத்து நெருப்பு புடிச்சுடிச்சுன்னு கூப்பிட்டாலும் அவரவர் வீட்டில் தேர்தல் பொங்கல் சாப்பிடுவதில் ஈடுபாட்டுடன் இருக்கும் போது வழியில் போகும் பிளேக் காதுலயாவது விழட்டுமேன்னு கூப்பாடுதான்.கூடவே அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை நாம் அறிந்தவர்கள் என்பதால் பிளேக்கின் அறிக்கையில் ஏமாற்றமும் இல்லை.