Followers

Tuesday, July 8, 2008

சோளம்,கம்பு,கேழ்வரகு

கிரியண்ணன் ரொம்ப வருத்தப்பபட்டுகிட்டாரு முந்தைய பதிவு ரொம்ப சின்னதா இருக்குன்னு.அவருடைய ஆதங்கத்த தீர்க்கிறதுக்கு இந்த பதிவு.

குழந்தைகளுக்கு தரும் சத்துணவின் பலன் அவர்களின் பருவ வயதுக்குப் பின்னே தெரிகிறதாம்.இந்த தலிபான்களை புடிச்சி அடைச்சு வைச்சாரே ஜார்ஜ்
புஷ் கொத்மலான்னோ என்னவோ ஊர்ப் பேரு.அந்த ஊருல ஒரு முப்பது வருசத்துக்கு முன்னாடி சோளக்கஞ்சிய ரெண்டு மூணு கிராமத்து
குழந்தைகளுக்கும் சத்தில்லாத ஒரு இனிப்பு உணவை ஒரு கிராமத்துக் குழந்தைகளுக்கும் கொடுத்துகிட்டு வந்தாங்களாம். ஒரு முப்பது வருசத்துக்குப்
பின்னாடி பார்த்தா சோளக்கஞ்சியில் வளர்ந்த குழந்தைகள் ரொம்ப புத்திசாலிகளாகவும் வயித்துக்கு கொட்டிகிட்ட குழந்தைகள் சாதாரண மனநிலை
கொண்டவர்களாகவும் இருந்தார்களாம்.


முன்னாடியெல்லாம் நம்ம ஊர் பக்கமெல்லாம் சோளம்,ராகி(கேழ்வரகு),கம்புன்னு அரிசிக்குப் போட்டியா நிறைய தானியங்களின் வளர்ப்பும்,வளர்த்த
தானியத்தை வக்கணையா கொளம்பு வச்சி சாப்டற பழக்கமும் இருந்தது.சாப்பிட்டு மிச்சமிருக்குறதை தண்ணிர் ஊற்றி பானைக்குள்ள மூடி வச்சிட்டு அடுத்த நாளைக்கு சூட்டு காலத்துக்கு சும்மாவோ அல்லது கொஞ்சம் மோரையோ விட்டுக் கலந்து குடிக்கிற சுகம் தனிதான். கடிச்சுக்க ஒரு
வெங்காயம்,ஒரு மொளகா.

கம்பு மட்டும் தாராபுரத்துல ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கும் போது பசங்களுக்கு அப்பாமார்கள் முளைவிட்ட கம்பு,வெல்லம்ன்னு கொண்டு
வருவாங்க,கூட்டாளிக எனக்கும் கொஞ்சம் பங்கு தருவாங்க.

இப்ப கம்பக்காணோம்,ராகியக் காணோம்,சோளத்தை மட்டும் வெளிநாட்டுக்காரன் ஓட்ஸ்ன்னு பேர் சொல்லிகிட்டு திரியறான்.அதையும் யாரும் பெரிசா சாப்டறதாக் காணோம்.ஏதோ கார்ன்பிளேக்ஸுன்னு கொஞ்சம் ஓடுது.

கோயம்புத்தூர்ல மாவட்டக் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிர்த்தாப்ல அந்தக் காலத்து பொட்டி தட்டுற மக்கள் வேகாத வெயில்ல உட்கார்ந்து
பெயர்,தகப்பனார் பெயர்ன்னு விண்ணப்ப படிவம் தட்டச்சிகிட்டு இருந்தாங்க.கொஞ்சம் நேராப் போனா ஆனந்தபவன் சைவ உணவகம்.வாழை இலையில தோசையோ ரவா தோசையோ சாப்பிட்டு விட்டு ஒரு ராகிமால்ட்.அதுதான் ராகிமால்ட் கடைசியா குடிச்ச அனுபவம்.
(யாராவது ராகிமால்ட் குடிச்சவங்க இருக்குறீங்களா?


சோளம்,கம்பு,ராகியோட இடத்தையெல்லாத்தையும் அரிசி குத்தகைக்கு எடுத்துகிட்டமாதிரி அந்த ராகிமால்ட் இடத்தை இப்ப பூஸ்ட்டும்
போன்விட்டாவும் புடிச்சிகிச்சு.

கிரியண்ணா.இந்தப் பதிவக்கூட கொஞ்சம் விவரமா சொல்லலாம்தான்.அலுவலக வேலை வா வான்னு கூப்பிடுது.வர்றேன்.

8 comments:

கிரி said...

//கிரியண்ணன் ரொம்ப வருத்தப்பபட்டுகிட்டாரு //

//கிரியண்ணா.இந்தப் பதிவக்கூட கொஞ்சம் விவரமா சொல்லலாம்தான்//

என்னது அண்ணனா!!! அது சரி

//ஒரு முப்பது வருசத்துக்குப்
பின்னாடி பார்த்தா சோளக்கஞ்சியில் வளர்ந்த குழந்தைகள் ரொம்ப புத்திசாலிகளாகவும் வயித்துக்கு கொட்டிகிட்ட குழந்தைகள் சாதாரண மனநிலை
கொண்டவர்களாகவும் இருந்தார்களாம்.//

இவனுக ஆராய்ச்சிக்கு அளவே இல்லாம போச்சு

ராஜ நடராஜன் said...

//என்னது அண்ணனா!!! அது சரி //

எல்லாம் டவுன் பஸ்ல நடத்துனர் " அண்ணா! முன்னுக்குப் போங்கண்ணா" கேட்டு கேட்டு பழக்கதோசந்தான்.

கிரி said...

நீங்க கோவை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லையா?

DHANS said...

கம்மன்சோரும் கேழ்வரகு களியும் இப்போதெலாம் கிடப்பதில்லை, எங்களது தோட்டத்தில் முதலில் ஆண்டுக்கு ஒரு பருவம் கேழ்வரகு பயிரிடுவோம் இப்போது பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் அவற்றை நிறுத்தியாயிற்று.

அடுத்த வருடங்களில் மீண்டும் கம்பு மற்றும் கேழ்வரகு பயிரிடலாம் என்று நினைத்துக்கொண்டுள்ளேன்.(கொஞ்சம் கட்னமான காரியம்தான்,இருந்தாலும் ஆள் துணைகொண்டு செய்யலாம் என்று நம்பிக்கை)

Unknown said...

விதி வலியது...
வாழ்த்துக்கள்...

தொடர்ந்து எழுதுங்க...

ராஜ நடராஜன் said...

//நீங்க கோவை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லையா?//

கலந்துக்க ஆசைதானுங்க.ஆனா இப்ப லீவு கிடைக்காது.அடுத்த முறை பதிவர் சந்திப்புக்கு தகுந்தமாதிரி லீவ் விடச்சொல்லக் கேட்கணும்.

ராஜ நடராஜன் said...

//கம்மன்சோரும் கேழ்வரகு களியும் இப்போதெலாம் கிடப்பதில்லை, எங்களது தோட்டத்தில் முதலில் ஆண்டுக்கு ஒரு பருவம் கேழ்வரகு பயிரிடுவோம் இப்போது பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் அவற்றை நிறுத்தியாயிற்று.//

கலாச்சாரம் இழப்பதின் இன்னொரு அடையாளம் விவசாயத்தின் மாற்றங்கள்.தமிழக அரசு இதற்கெல்லாம் சாகுபடி முன்னுரிமை,உதவிகள் தரவேண்டும்.

ராஜ நடராஜன் said...

//விதி வலியது...
வாழ்த்துக்கள்...

தொடர்ந்து எழுதுங்க...//

எழுத்து ஊக்குவிப்பிற்கு வாழ்த்துக்கள்.ஆனா என்னாது அது விதி வலியது?