Followers

Saturday, July 26, 2008

உண்மையிலே மெய்சிலிர்ப்பு

நேற்றைய காலை சோகத்துக்கும் மாலை அனுபவத்துக்கும் பின்னாடி இரவு நம்பிக்கை தரும்போல் இருந்தது தொலைகாட்சி நிகழ்வு.

பொதுவாக ஒரு விழாவில் கலந்துகொள்ளும் வி.ஐ.பி க்கள் பாதுகாப்பு கருதியும், தங்களது தரத்தினை மனதில் கொண்டும் மேடைக்கு அருகிலுள்ள பக்கக் கதவுகளிலிருந்து வெளிப்படுவார்கள்.

ஆனால் கண்ணுக்கு மாற்றமாக அரங்கின் கடைசிக்கோட்டிலிருந்து வெளிப்பட்டு மெல்ல மெல்லப் பள்ளி மாணவர்களின் முகங்களையே நோக்கிக்கொண்டு இரண்டு வரிசைக்கு இடைவெளியாக ஒரு மாணவ,மாணவிக்கு கரம் கொடுத்து குசலம் விசாரித்துக்கொண்டே வந்தார்.

இறுதியாக அவரதுப் பேச்சின் சில வார்த்தைத் தொகுப்புகளுடன் தொலைக்காட்சியின் காமிரா வேறு கோணத்திற்கு மாறுகிறது.ஒரு மெல்லிய புன்முறுவலுடன் அவருக்கே உரித்தான முடி அலங்காரத்தின் முடிக்கற்று நெற்றியில் விழ அவர் இந்தியாவைக் காப்போம்,தன்னம்பிக்கை கொள்வோம் போன்ற சில வார்த்தை மந்திரங்களை உச்சரிக்க தொடர்ந்து பள்ளிக்கூட மாணவ மாணவியர்கள் எழுப்பிய கோஷம் இருக்கிறதே மெய்சிலிர்ப்பு என்ன என்பதை அந்தக்கணத்தில் உணர்ந்தேன்.

இன்னும் சில வருடங்களுக்கு ஜனாதிபதி சிம்மாசனத்தில் டாக்டர் அப்துல்கலாமை உட்கார வைத்துக் கவுரவப்படுத்தியிருக்கலாம்.கலைஞர் தொலைக்காட்சியில் படம் " அரண் " முடிந்து நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மறக்கமுடியுமா? துவங்கி விட்டது.வருகிறேன்.

8 comments:

கிரி said...

பதிவா போட்டு தாக்குறீங்க :-)

Darren said...

உண்மையில் எதைப்பார்த்து மெய்சிலிர்தீர்களோ...hahahaa..

ராஜ நடராஜன் said...

// பதிவா போட்டு தாக்குறீங்க :-)//

பின்ன உங்க கூடயெல்லாம் சேர்ந்தா எப்படியிருக்கும்:)

ராஜ நடராஜன் said...

// உண்மையில் எதைப்பார்த்து மெய்சிலிர்தீர்களோ...hahahaa..//

காலையில் குண்டுவெடிப்புப் பார்த்துட்டு மாலையில் டாக்டர் அப்துல்கலாமையும் பள்ளி மாணவர்களையும் பாருங்க.சில உணர்ச்சிகள் சொல்லிப்புரியாது தருண்.அனுபவிக்கணும்.ஆராயனும்.

(பக்கத்துல வெட்டிப்பயல் இருந்தா சொல்லிடாதீங்க)

சின்னப் பையன் said...

முதல் ரெண்டு கமெண்ட்க்கும் நான் ஒரு ரிப்பீட்ட் போட்டுக்கறேன்...

Darren said...

//ராஜ நடராஜன் said...
காலையில் குண்டுவெடிப்புப் பார்த்துட்டு மாலையில் டாக்டர் அப்துல்கலாமையும் பள்ளி மாணவர்களையும் பாருங்க.சில உணர்ச்சிகள் சொல்லிப்புரியாது தருண்.அனுபவிக்கணும்.ஆராயனும்.//

//Dharan said...
உண்மையில் எதைப்பார்த்து மெய்சிலிர்தீர்களோ...hahahaa..

July 27, 2008 3:48 AM//


ஜோக் னு சொன்னா(அது ஜோக்கா இல்லனாலும்) சிரிக்கனும்.. ஆராயப்பிடாது..சரியா..haa

rapp said...

அவருக்கு விருப்பமில்லைன்னு முதலிலேயே அவர் சொல்லியப் பிறகு வேண்டுமென்றே சந்திரபாபு நாய்டு கோஷ்டி பண்ணிய அழிச்சாட்டியத்துக்கு யார் என்னங்க பண்ண முடியும். அவர்தான் தெளிவா பின்னர் விளக்கினாரே, அந்தப் பதவி ரொம்ப தர்மசங்கடமா இருக்கு, அதால தனக்கு கொஞ்சமும் தொடர பிடிக்கவில்லை என்று

ராஜ நடராஜன் said...

//அவருக்கு விருப்பமில்லைன்னு முதலிலேயே அவர் சொல்லியப் பிறகு வேண்டுமென்றே சந்திரபாபு நாய்டு கோஷ்டி பண்ணிய அழிச்சாட்டியத்துக்கு யார் என்னங்க பண்ண முடியும். அவர்தான் தெளிவா பின்னர் விளக்கினாரே, அந்தப் பதவி ரொம்ப தர்மசங்கடமா இருக்கு, அதால தனக்கு கொஞ்சமும் தொடர பிடிக்கவில்லை என்று//

கவிதாயினி ராப்! அவர் முதலில் அனைத்துக்கட்சிகளுக்கும் எந்த ஆட்சேபமுமில்லையென்றால் மீண்டும் பதவியில் அமர்வது பற்றி யோசிப்பதாகத்தான் சொன்னார்.அப்புறம்தான் நீங்கள் சொன்ன நிகழ்வுகளுக்குப் பிறகான மாற்றங்கள்.

எங்கோ யாருடைய பதிவிலோ அவர் அணு ஒப்பந்தம் பற்றிக் கருத்து கூட சொல்லவில்லையென்று.அவரது துறை சார்ந்தவர்களுடன் கேரளாவில் பேசினார்.அதுவும் எப்படி? எல்லோரும் மலையாளத்திலேயே பேசி முடித்தபின் அவர்களெல்லாம் தங்களது தாய்மொழியிலேயே பேசும்போது தனக்கும் தமிழில் பேசவேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது என்று ஆங்கிலத்தில் சொல்லித் தொடர்ந்தார்.